நிறைய எழுத விருப்பம்.....திடீரென்று தோன்றியது மீண்டும் தொடங்கலாமென்று....இவ்வருடம் முன்பு சொன்ன சிலவற்றை பூர்த்தி செய்யவும்,இடைவெளியின் குறைகளை நிவர்த்தி செய்யவும்,பாதியில் விட்ட திரைக்கதை,கட்டுரை,கதைகளை எழுதுவோமென....கூடவே....ஒரு பின்னோட்டம்:
இடைச்செருகல் # 4:
உறைந்த காலம்...
சென்ற ஆண்டு ஆரூடங்கள் கணித்தவற்றை பொய்த்து இந்த மீனராசிக்காரனுக்கு நிறைய கஷ்ட நஷ்டங்கள்.இளைஞன் ஆனதன் விளைவோ என்னவோ சிறுவனின் அணுகுமுறையிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள்...இது பக்குவமா அதிகப்பிரசங்கித்தனமா என்று கூட விளங்கவில்லை.நிறையவே கேலி,நிலா பார்த்தலிலிருந்து நிலாக்கள் பார்த்தல்,வெறித்தனமாக ஊர்பவனி,நடை உடை பாவனை எல்லாம் மாறிப்போய்;சரிதான் சரிதான்:மாற்றம் ஒன்றுதானே இங்கே மாறாதது....
சரி விருதுகள் அளிப்போமா?என்னடா என கேட்க வேண்டாம்....சும்மா நம்ம மனதை தேற்றிக்கொள்ள தான்...ஆண்டொன்றை அசைபோட இன்னுமோர் வழி...
1.இணையமும் இலக்கியமும்:
சிறந்த வலைமனைகள்:
தமிழ்த்திரைப்படங்கள்:www.behindwoods.com
செய்திகள்:www.thatstamil.com
பிற:www.sinekithan.com
வலைப்பூ:www.asifmeeran.blogspot.com
சிறந்த சிறுகதை:
நினைவெல்லாம் நித்யா...
(http://nilaraseegansirukathaigal.blogspot.com/)
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி இது! வானத்து தேவதைகளே எங்கே
சென்றீர்கள்? உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல் பரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?மேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.
என் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்...
"டேய் என்னடா அமைதியாகிட்ட?" உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு அழைத்துவந்தான்.
"மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே?" ஆர்வமுடன் கேட்டான் நண்பன்.அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே! யார் அனுப்பி இருப்பார்கள்?
"நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு....யார் அனுப்பி இருப்பாங்க?"
"என்னது நீ அனுப்பலையா? அப்போ யாரா இருக்கும்...ம்ம்...டேய் அவளாதான் இருக்கும்டா" கண்ணடித்தான்
நண்பன்.
நித்யாதான் அந்த "அவள்". என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.
அவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே
கல்லூரிக்கு சென்றேன்.
"கங்கிராட்ஸ் டா" கைகுடுத்தாள் நித்யா.
"ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா" செல்லக்கோபத்துடன் கேட்டேன்.
"என்னடா சொல்ற,நான் அனுப்பலையே" குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.
"என்னது நீ அனுப்பலையா? அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன?"
"நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்"
"என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது?"
"நான் தான்" பின்னாலிருந்து குரல்கேட்டது...
அங்கே...
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்....மின்விசிறி நின்றிருந்தது...அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர
வேறு எதுவும் இல்லை...
அடடா எல்லாம் கனவா? சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே.... என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.
நித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்.... "இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா"
தெரியும்டி செல்லம்...ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும் முடியலை...
அப்படியா எப்படி டா சொல்ற?
அதுவந்துடி....
இறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த என்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.
சிறந்த write-up:வார்த்தைகளுடன் வாழ்தல் @ http://tamilnathy.blogspot.com/
சிறந்த கவிதை:
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!
- ப்ரியன்.
மைய திரி:Movie of the week(Selvakumar-Films),Hubbers' drama(Shakthiprabha-Lounge),Yorker07(Sanguine Sridhar)
மைய அன்பர்:m23_bayarea,navin,leosimha போன்ற விடாப்படியான இரசிகர்கள் தவிர்த்து ரோஷன்(பேச்சில் தெளிவும் துணிவும்),சக்திப்பிரபா(வியக்கவைக்கும் படைப்பறிவு),ஆனா(ஆனாலும் கொஞ்சம் தொலைக்காட்சியிலிருந்து வெளியே வாங்க)
சிறந்த வெட்டிக்கதை:[மொக்கசீனோ காபி]மாஸ்டர்-அனீஷா,(ஐயோ பாவம்)தேவா-பூஜா [CC திரிகள்]
சிறந்த நகைச்சுவை:அர்ஷிதா(எ)விபா.....emoticons திரி,எம்.ஜி.பி கணேஷ்(c.c திரியில்)
avatars:{திராட்சைக் கண்ணும் முத்தமிடத் தோன்றும் கன்னங்களுடைய.....!}மது(பாப்பா...:kiki: :glux:)
signatures:பிரபு ராம்.
சிறந்த காணாமல் போனவர்கள்:ராக்கி (எ) சூர்யா.
சிறந்த நிகழ்வு:நிறைய மைய சகா-சந்திப்புகள்(ஹப்பர்ஸ் மீட்கள்)
வாராந்திர தொடர்:உலக சினிமா(செழியன்;ஆனந்த விகடன்)
மறுபதிப்பு:மெர்க்குரிப்பூக்கள்(பாலகுமாரன்,விசா பதிப்பகம்-17ம் பதிப்பு)
வயிற்றெரிச்சல்:பா.விஜய் கலைஞரை வைத்து நி(பு)கழ்த்திய வெளியீட்டுவிழா.
புத்தகம்:மல்லிகைக்கிழமைகள்(ஜெ.பிரான்சிஸ் கிருபா)
ஓவியம்:ம.செ(குமுதம் திருவேங்கிமலை சரவணன் தொடரில்)
வாரப்பத்திரிக்கை:குமுதம்
அட்டைப்படம்:எல்லா பெண்கள் பத்திரிக்கை(அழகான மங்கைகளை புடவை-தாவணியில் காட்டியதற்காக)
புகைப்படம்:கண்ணதாசனின் வாழ்க்கைக்குறிப்புகளுடன் வெளிவந்த அவரது அரிய புகைப்படங்கள்(விகடன் சிறப்பிதழ்)
வெளியீடு:ராஜு/கோபுலு/மதன் கார்ட்டூஙள்(விகடன் பதிப்பகம்)
2.தொலைக்காட்சி:
தலைசொறிதல்:செய்தி அலைவரிசைகளின் பூதக்கண்ணாடித்தனம்,கலைஞர்><சன் தொலைக்காட்சி மோதல்கள்....விதவிதப்பெயர் இணைப்பு இத்தியாதி குழப்படி,எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒரே சிறப்பு(சலிப்பு) நிகழ்ச்சிகள்,சிரிப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள்.
பாடல்:காதலிக்க நேரமில்லை(ஸ்டார் விஜய்)
யோசனை:8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்(தீர்வு தவிர-ஸ்டார் விஜய்)
குழந்தைகள் நிகழ்ச்சி:டோரா(உதவி செய்தல்,நன்றி கூறுதல்,தனியாக பயணித்தல்,சுயமாய் செய்தல்,எளிய ஆங்கிலம் என பழைய நிக்கலோடியன் தொலைக்காட்சி கார்ட்டூனின் தமிழ்ப்பிரதி),ஐன்ஸ்டீன் அங்கிள்(பொம்மை,அழகுப்பொருட்கள் என்று உற்சாக பொழுதுபோக்கு)
அசம்பாவிதங்கள்:ஜோடி நம்பர் 1-ல் சிம்புவின் கூத்து,ரொம்பவே நகைச்சுவையாகிவிட்ட தமிழ்த்தொலைக்காட்சி "செய்திகள்",நடிகர் அஜித்தின் பாடல்களை கேட்டும் காட்டாத குறிப்பிட்ட தொலைக்காட்சிகள்.
ஆறுதல்:அவ்வபோது ந(ல்லி)ள்ளிரவில் பழைய பாடல்களைப் பாடும் தமிழிசை அலைவரிசைகள்,உலக இலக்கியம்/பங்குச்சந்தை/தமிழறிவு/குறும்படங்கள் பற்றி பேசும் மக்கள் தொலைக்காட்சி,குழந்தைகளுக்கு தமிழில் சுட்டி டி.வி,வெகுநாளாய் ஒளிபரப்பாகும் "இன்று" எனும் வரலாற்றுரை(ஜெயா செய்திகள்)
வி.ஜே:பூஜா(எஸ்.எஸ்.மியூசிக்)
தொகுப்பாளர்:விஜய் ஆனந்த்(கே டி.வி),பாலாஜி(விஜய்,ஜெயா டி.வி),ரம்யா(விஜய் டி.வி)
நடிகர்:மிர்ச்சி சிவா,அகில உலக பேமஸ் ப்ளாக் பாண்டி.(ஸ்டார் விஜய்)
நடிகை:எல்லாம் சப்ப பிகர் மச்சி!
தொடர்:கனா கானும் காலங்கள்(வெறும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் இருந்தவரை)
நிகழ்ச்சி:நீயா நானா(கோபிநாத்,என்.டி.டி.வி யின் முந்நாள் ரிப்போர்டர்;ஸ்டார் விஜய்)
தொலைக்காட்சி:மக்கள் தொலைக்காட்சி(தமிழ் பேசும் தொகுப்பாளர்கள்,சினிமா வாடையற்ற நேர்த்தியான திறம்பட நடையிடும் தொழில்நுட்பம்)
3.இசையும் திரைப்படங்களும்:
படமாக்கப்பட்ட விதம்:பேசுகிறேன்(சத்தம் போடாதே),அக்கம் பக்கம்(கிரீடம்)
நடனம்:எல்லாப்புகழும்(அழகிய தமிழ் மகன்),படிச்சு பார்த்தேன்(பொல்லாதவன்)
தீம் பாடல்:யுவன் ஷங்கர் ராஜா(பில்லா)
ரீமிக்ஸ்:பாட்டும் நானே(உன்னிகிருஷ்ணன்.....ப்ளுடூத் புண்ணியம்,ஆல்பம்கூட தெரியாது)
தனிப்பாடல்:காதல் ஒன்றல்லவா(ஏ.ஆர்.ரஹ்மான்)
ஜுகல்பந்தி:அருணா சாய்ராம்(சங்கித ஞானம் கம்மிதான்...தொடையெல்லாம் தட்டாமல்தான் கேட்பேன்)
வரிகள்:நா.முத்துக்குமார்(கல்லூரி,பருத்திவீரன்,கற்றது தமிழ் ஏனைய),வைரமுத்து(சிவாஜி,மொழி,ஏனைய),யுகபாரதி(பேருந்த ில் நீ:பொறி)
பாடகர்:ஹரிசரண்(சரியா இது தவறா,அரபு நாடே,இன்னும் சில)
பாடகி:பாம்பே ஜயஸ்ரீ(உனக்குள் நானே,உப்புத்தண்ணி,இன்னும் சில)
ஆல்பம்:சென்னை 600028(யுவன் ஷங்கர் ராஜா)
பாடல்:சஹானா சாரல் தூவுதோ(சிவாஜி),டோலு டோலு(போக்கிரி),காற்றின் மொழி(மொழி)
பெருமூச்சு:நல்லவேளை இந்த ஆண்டு பேரரசுவிடமிருந்து தப்பிச்சாச்சு!
இடதுகை விருது:பொம்மைக்கல்யான கோஷ்டிகள்.
சிறப்பு விருது:தமிழக அரசு,பெரியாரை ஊக்குவிதமைகாக+சத்யராஜ்-காசின்றி நடித்ததற்காக+இளையராஜா கொள்கைப்பிடிப்பிற்காக....ஆகமொத்தம் பெரியாருக்காக!
உடைகள்:அனுவர்தன்(பில்லா)
நகைச்சுவை:பிரேம்ஜி/ஷிவா/மற்றும் பலர்(சென்னை 600028),பிரகாஷ்ராஜ்/பாஸ்கர்(மொழி)
கலை:தோட்டா தரணி(சிவாஜி)
குணச்சித்ர நடிகர்/நடிகை:சரவணன்(பருத்திவீரன்),கல்லூரியில் 'கலை'யாக நடித்த பெண்.
ஐயோ பாவம்:விக்ரம்(காரணம் தேவையில்லை.....சரி பொது அறிவு இல்லாதவர்களுக்கு:2ம் ஆண்டாக படமேதும் இல்லாததால்)
சண்டை:ராம்போ ராஜ்குமார்(பொல்லாதவன்)
படத்தொகுப்பு:அந்தோனி(பில்லா)
திரைக்கதை:வெங்கட்பிரபு(cஎன்னை 600028)
போஸ்டர்:கல்லூரி(டிபன் டப்பிகள் மழையில் நனைந்த பழுப்பு நிற நிழற்படம்.....தேனாம்பேட்டையருகே பார்த்தது)
ஒளிப்பதிவு:நீரவ் ஷா(போக்கிரி,பில்லா)
தயாரிப்பு:பிரமிட் சாய்மீரா(ஒன்பது ரூபாய் நோட்டை இலவசமாக காட்டியதற்காக)
தலைப்பு:எவனோ ஒருவன்
அநாயகன்:டேனியல் பாலாஜி(பொல்லாதவன்)
இயக்குநர்:அமீர்(பருத்திவீரன்)
நடிகை:ஜோ(மாற்றுக்கருத்தே இல்லை)
நடிகர்:அஜித்குமார்(எனக்கு பிடித்தவர்,மட்டுமின்றி நல்ல நடிப்புக்காகக்கூட)