Originally Posted by
venkkiram
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மறைவு மையத்தை அதுவும் மக்கள் மற்றும் நடிகர் திலக ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. முக்கியமான பதிவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் கூட, சொற்பமான அளவிலேயே அஞ்சலி பதிவுகள் வந்திருக்கின்றன. குறைந்தது ஒருவாரத்திற்காவது இரு நடிகர்களது ரசிகர்களும் எம்.எஸ்.விக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதத்தில் தங்களக்கு பிடித்த பாடல்கள் மற்றும் சுவையான நிகழ்வுகளை பகிரவேண்டாமோ! ஆச்சர்யமாக இருக்கு. நீங்கள் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது?