அனைத்து நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Printable View
அனைத்து நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நடிகர்திலகத்தின் பக்தகோடிகளுக்கும்
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
இதயம் நிறைந்த புத்தாண்டு (2009) நல்வாழ்த்துக்கள்
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
சாரதா அருமை அருமை
திருவருட்செல்வர் திரைப்படத்தை கண் முன்னே கொண்டுவந்துள்ளீர்கள்
மிகவும் அருமை மிக்க நன்றி
WISHING
A VERY HAPPY
AND
PROSPEROUS NEW YEAR
2009
TO ALL HUBBERS AND FRIENDS.
Regards
:) அழகான உண்மை. நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு இதில் பெருமையோ பெருமை!!!Quote:
Originally Posted by saradhaa_sn
நிறைய புராண படங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புராணம் இதிஹாசப் படங்கள் ஏ.பி.என் பிறகு எவர் எடுத்தாலும் திருப்தி தரவில்லை. (என்னைப் பொருத்த வரை). இது போன்ற திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொணர்ந்து, பக்தியூட்டவே அவர் பிறவி எடுத்தார் போலும். பலருக்கு சிவன் என்றாலே சிவாஜி தான். அதன் பிறகு கந்தன் கருணையில் ஜெமினோ ஏனையோரோ அந்த வேடத்தை இட்டு நிரப்பினாலும், சிவாஜி அழுத்தமாய் அமர்ந்தது போல் ஒருவராலும் அமர முடியவில்லை.
ஆயிரம் படங்கள் சிவாஜியை வைத்து இயக்கியிருந்தாலும், "திருவிளையாடல்" க்கு மிகச் சிறந்த இடம் என் மனதில் உண்டு. அந்த இடத்தை எந்த படத்தாலும் நெருங்கக்கூட முடியவில்லை.
சாரதா, மனக்கண்முன் மீண்டும் கொணர்ந்துவிட்டீர்களே!!!! :)Quote:
Originally Posted by saradhaa_sn
:D பத்மினியின் நாட்டியத்தை இவரின் நடையும், பார்வையும், குறுஞ்சிரிப்புமே வென்று விடும். யார் பத்மினியைப் பார்த்தார்கள்!!!!Quote:
"மன்னவன் வந்தானடி தோழி' பாடல் ஒலிக்க, அந்த ‘தோழி’ என்ற வார்த்தை எப்போது முடியுமென்று காத்திருக்கும் ரசிகர்களின் அபார எதிர்பார்ப்பான அந்த கம்பீர நடையுடன் 'நடிகர்திலகம்' (நடையிலும் திலகம்) நட்ந்துவர, மீண்டும் திரையரங்கின் சுவர்களின் விரிசல் விழும் அளவுக்கு கைதட்டல் எழும்ப, 'சே... இது மாதிரி நடக்க இனி ஒருவன் பொறந்து வரணும்யா' என்று ஆங்காங்கே குரல்கள்
:bow:Quote:
அதைப்பலமடங்காகப்பெருக்கும் வண்ணம் நாட்டியப்பேரொளி தன் நடத்தால் உயர்த்திப்பிடிக்க, அம்ர்ந்திருக்கும் நிலையிலேயே ஒவ்வொரு அசைவுக்கும் நடிகதிலகம் முகபாவம் காட்ட...
Quote:
"உண்மை தாயே, அந்த கேள்விக்கும் விடை தெரிந்தால்தான் உறங்கிக்கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கும் விழிப்பு வரும்". (ஏ.பி.என்.ன்னின் என்ன ஒரு சொல்விளையாட்டு)
:bow:
நெகிழ்ச்சியாய் இருக்கிறது சாரதா, மீண்டும் அந்தக் காட்சிகளை நினைத்த மாத்திரமே....
பாடல் கோடி பெறும் :bow: :bow: :bow:Quote:
Originally Posted by saradhaa_sn
இந்த இடத்தில் பரம்பரைப் பணக்காரனுக்கே உள்ள அலட்சியம், குறுகுறுப்பு, கொள்ளை கொள்ளும் முகம், பாவம், நடிப்பு! :D :D :D :DQuote:
‘யாரிவன் பித்தன்?. பாட்டனாம், பரம்பரையாம், அடிமையாம், சாசனமாம்….. தள்ளாத கிழவனுக்கு பொல்லாத வேளை வந்துவிட்டது’ என சுடு சொற்களால் அர்ச்சிக்க, கிழவரோ, வழக்குரை மன்றம் செல்கிறார்.
இதிஹாசப்படங்களில் சிவாஜி பாடும்படியான பாடல்கள் (உயிரூட்டம் டி.எம்.எஸ்) வரும்பொழுதெல்லாம்ம் ஊன் உயிர் உருகும் என்றால் அது மிகையல்ல.Quote:
….. பெரிய புராணச்செய்யுளான “பித்தா, பிறைசூடிப்பெருமானே” என்ற பாடல், சௌந்தர் ராஜன் என்ற கலைவாணியின் மகனின் கம்பீரக்குடலில் துவங்க, தொடர்ந்து கண்னதாசன் என்ற சரஸ்வதியின் புத்திரனின்… ‘சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற ஊனையும் உயிரையும் ஒருசேர உருக வைக்கும் பாடல்…
:bow:Quote:
பக்திப்பெருக்கில் எந்த ஊன் உருக – அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடி பணிய – இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே
I had goose bumps watching it and I have it while reading it too :bow:
:thumbsup:Quote:
எல்லோரும் பக்தியுடன் சுற்றிவரும் வண்ணம், திருவெண்னை நல்லூர் கோயிலை அப்படியே சாரதா ஸ்டுடியோவில் கொண்டு வந்து வைத்த கலை இயக்குனர் கங்காவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கங்கா அமைத்த சிறந்த அரங்குகளில் இது ஒன்று என்றால் அது மிகையில்லை.
எப்படி ஒரே ஒருவர் சிவனாகவும், அப்பராகவும், சுந்தரராகவும் தன்னை மற்றவர் மனத்தில் நிலைநிற்கச் செய்கிறார்?????Quote:
Originally Posted by saradhaa_sn
சிவாஜி என்பவர் இங்கு நடிகன் கலைஞன் என்ற அட்டைகளைத் தாண்டி, இறையம்சமாகவே நம் ஒவ்வொருவருக்கும் மாறிவிடுகிறார் என்றால்...இப்படிப்பட்ட அற்புதத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை உண்டா?
Quote:
(திருவிளையாடலிலும், சரஸ்வதி சபதத்திலும் பிரமாண்டமும், கலைஞர்களின் திறமையும் தான் நம்மை அதிகமாக ஆக்ரமித்ததே தவிர, இந்த அளவு பக்திப்பரவசத்தை நம் உயிரில் பாய்ச்சவில்லை என்பதை சற்று ஒப்புக்கொள்ளவே வேண்டும்).
என்னைப் பொருத்தவரை திருவிளையாடலில் ஒவ்வொரு காட்சியிலும் என்னால் பக்திப் பரவசத்தை உணர முடிந்தது. சரஸ்வதி சபதம் வெறும் கதை என்ற பட்சத்தில் தான் மனதில் நின்றது.
:) உண்மை.Quote:
திண்ணையில், வலது கையைச்சுருட்டி நெற்றிப்பொட்டில் வைத்தவாறு, மறைந்த காஞ்சிமுனிவரைப்போல அவர் அமர்ந்திருக்கும் அந்தக்கோலம்….. மெய் சிலிர்த்துப்போகும்.
அருமையான புன்னாகவராளி :bow:Quote:
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே – உனக்கு
நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே
ஆதி சிவன் தலையமர்ந்த ஆணவமா - அவன்
அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
இந்த இடத்திலும் நடிகர்திலகத்தின் நடிப்பு நெஞ்சைப் பிசையும்.Quote:
அதற்குமேல் தன்னால் ஒரு அடி கூட நகரமுடியாத நிலையில் 'திருக்காளத்தி நாதனைக்காணமுடியவில்லையே' என மூர்ச்சையாகி விழ, காளத்திநாதன் கைலாயத்திலிருந்து தமபதி சமேதராய் நடனமாடி காட்சி தருவதோடு படம் நிறைவடைகிறது.
சாரதா, வழக்கம் போல் உங்கள் எழுத்தில் நான் மறுமுறை படத்தை பார்த்துவிட்டேன் :bow:
21-12-08 தினத்தந்தி ஞாயிறு மலர் சினிமா கேள்வி பதில்:
கேள்வி : தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளியான பக்தி படங்களில் அதிக வசூலான படம் எது ?
பதில் : "திருவிளையாடல்"