Shankar..
Here is all the rest.
http://www.ziddu.com/download/485533...adhi2.zip.html
Love and Light.
Printable View
Shankar..
Here is all the rest.
http://www.ziddu.com/download/485533...adhi2.zip.html
Love and Light.
thanks :D
வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
அபிராமி தாயே!, உன்னையன்றி வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையை அன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும், உன் திருமேனிப் ப்ரகாசததை தவிர வேறொன்றும் காண மாட்டேன்.
veeNE pali kavar theyvankaLpaal chenRu, mikka anbu
pooNEn; unakku anbu pooNdukoNdEn; ninpukazhchchi anRip
pENEn, oru pozhuthum; thirumEni prakaacham anRik
kaaNEn, iru nilamum thichai naankum kakanamumE.
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?-வல்லி, நீ செய்த வல்லபமே.
ஆனந்தவல்லி அபிராமி தாயெ! உனது கணவராகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அவருக்கு, ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனான முருகனை சக்தியாய் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!.
kakanamum vaanum puvanamum kaaNa, viR kaaman ankam
thakanam mun cheytha thavamperumaaRku, thadakkaiyum chem
mukanum, munNnNaaNnku irumoonRu enath thOnRiya moothaRivin
makanum uNdaayathu anRO?--valli! nee cheytha vallabamE!
வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
அபிராமி தாயே! பசுமையான் பொன்மலையை வில்லாக உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே, நான் அறிவே இன்னதென்று அறியாதவன், மிகவும் சிறியவன். நின் மலர்பாதத் துணையன்றி வேறு பற்றுமில்லாதவன். எனவே, பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. அவை யாவும் உன்னை பாடிய தோத்திரங்களேயாகும்.
vallabam onRu aRiyEn; chiRiyEn; nNin malaradich chey
pallavam allathu paRRu onRu ilEn; pachum poR poruppu--
villavar thammudan veeRRiruppaay! vinaiyEn thoduththa
chol avamaayinum, nNin thiru naamankaL thOththiramE.
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்-வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம் குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.
அபிராமி தாயே! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின் போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை நினையாத பேர்கள், கொடைகுணம், கல்வி குணம், இவையெல்லாம் குன்றி வருந்தி திரிவர்.
thOththiram cheythu, thozhuthu, min pOlum nNin thORRam oru
maaththiraip pOthum manaththil vaiyaathavar--vaNmai, kulam,
kOththiram, kalvi, kuNam, kunRi, naaLum kudilkaL thoRum
paaththiram koNdu palikku uzhalaanNiRpar--paar enkumE.
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
அபிராமி தாயே! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஒசை ஆகியவற்றின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சிவகாம சுந்தரியே!. உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தை பெறுவர். அவர்கள் அடையாத செல்வமே இல்லை.
paarum, punalum, kanalum, veNG kaalum, padar vichumbum,
oorum muruku chuvai oLi ooRu oli onRupadach
chErum thalaivi, chivakaama sundhari, cheeRadikkE
chaarum thavam, udaiyaar padaiyaatha thanam illaiyE.
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி, கடைக்கண்களே.
அபிராமி தாயே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும், அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தை தரும், நல்ல கல்வி தரும், சோர்வடையாத மனத்தை தரும், தெய்வீக அழகைத் தரும், நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும், நல்லன எல்லாம் தரும்.
thanam tharum, kalvi tharum, orunNaaLum thaLarvu aRiyaa
manam tharum, theyva vadivum tharum, nenchil vancham illaa
inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkkE--
kanam tharum pooNG kuzhalaaL, abiraami, kadaikkaNkaLE,
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
அபிராமி தாயே! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அன்னையே, மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னை கண்குளிர கண்டு கொண்டேன்.
kaNkaLikkumpadi kaNdukoNdEn; kadampaadaviyil
paN kaLikkum kural veeNaiyum, kaiyum payOtharamum,
maN kaLikkum pachchai vaNNamum aaki, mathankarkulap
peNkaLil thOnRiya emperumaattithan pErazhakE.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-
இழவுற்று நின்ற நெஞ்சே-இரங்கேல், உனக்கு என் குறையே?
அபிராமி தேவி எவருக்கும் இணையில்லத அழுகுடையவள். வேதப் பொருளில் திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி. இனிமையான கொம்பாக தேவி இருக்க, நெஞ்சே, ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்றுகோலாக அன்னை இருக்க உனக்கு என்ன குறை?
azhakukku oruvarum ovvaatha valli, aru maRaikaL
pazhakich chivantha padhaampuyaththaaL, pani maa madhiyin
kuzhavith thirumudik kOmaLa yaamaLaik kombu irukka--
izhavuRRu nNinRa nNenchE!-irankEl, unakku en kuRaiyE?