Anna..
hmm.. Among songs from "Thangai" till now I hv seen video of "kEttavarellAm pAdalAm" only. If ne 1 hv other songs plz share the link.
Printable View
Anna..
hmm.. Among songs from "Thangai" till now I hv seen video of "kEttavarellAm pAdalAm" only. If ne 1 hv other songs plz share the link.
அன்பின் நண்பர்களே,
இந்த இழையை அலங்கரிக்க வரும் அடுத்த பாடல்...70 களில் வந்த அசத்தலான நகைச்சுவை பாடல். எளிதில் கிட்டாத பாடல் இது.
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: புத்திசாலிகள் காதலித்தார்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?119zh6483q60t6h
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Hi Jack..
I cant write thanks again and again. So I am depositing one crore thanks now itself. ( But I feel thats not enough sometimes for a single song )
thangathile vairam songs ellame jolly-a irukkum.
hmm.. athirshtasaaligaL indha thread-ukku vandhu songs kEttu rasippargaL. matravarellaam... ???
அன்பு நண்பர் மது,
நீங்கள் தரும் தொடர் உற்சாகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். "தங்கத்திலே வைரம்" படத்தின் பாடல்கள் அனைத்தும் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். முன்பே 2 பாடல்களை (அந்தப்பக்கம்தானா காதல் மயக்கம் / பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு) இதே இழையில் கொடுத்துள்ளேன். அதிலும், "பெண்களுக்கென்றொரு பெருமை" நீங்கள் விரும்பி கேட்டு விண்ணப்பமிட்ட பாடல். இன்னுமொரு பாடல் இதே படத்திலிருந்து...மிகவும் பிரபல்யமான பாடல். இன்னும் சொல்லப்போனால்..."சங்கர்-கணேஷ்" இசை இரட்டையர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த ஒன்றை மட்டும் ஏன்? மிச்சம் வைக்க வேண்டும். அதையும் தந்து விடுகிறேன். நீங்கள் சொல்லுவதுபோல், இந்த இழைக்குள் "அதிர்ஷ்டசாலிகள்" வந்தால் அருமையான நல்முத்துக்களை அள்ளி செல்லலாம்.
நண்பருக்கு உரிமையுடன் ஒரு சிறு விண்ணப்பம்...தவறாக எண்ணவேண்டாம். உங்கள் பின்னூட்டங்களை நீங்கள் தமிழில் எழுதலாமே? தமிழர்களாகிய நாம், நம் தாய் மொழியில் எழுதுவது நம் மொழிக்கு நாம் செய்யும் மரியாதைதானே? முயற்சியுங்கள்... முடியாதது எதுவும் இல்லை.
இனி பாடலுக்கு.....
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி..யார் சொல்லவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?rcfa48lfqo94tfs
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
நண்பர் ஜாக் அவர்களுக்கு
இல்லத்தில் இருந்து இணையத்தை தொடர்பு கொள்வதானால் தமிழில் எழுதி பதிவு செய்ய இயலும். ஆனால் சில நேரங்களில் நண்பர்களின் மடிக்கணினி மூலம் பதியும்போது தமிழ் எழுத்துக்கள் அதில் இல்லாமல் போனால் அப்படியே ஆங்கில அரிச்சுவடியை எடுத்து தமிழ் வார்த்தைளைப் போட வேண்டியதுதான். !!
இது தமிழ் எழுத்துதான் என்று உறுதி செய்கிறேன். :)
அன்பு நண்பர் மது,
ஆஹா...எவ்வளவு தெளிவாக தமிழ் எழுதுகிறீர்கள்?!!! வாழ்த்துக்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த சிறுவனின் விண்ணப்பத்தை மதித்ததர்க்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என்றும் நட்புடன்,
ஜாக்
பாடல்: என் உள்ளம் அழகான வெள்ளி திரை
திரைப்படம்: சினிமா பைத்தியம்
பாடியவர்: வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், ஜெயசித்ரா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1975
http://www.youtube.com/watch?v=5NajO1PrVUw
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=518606
இசைரசிகன்,
"என் உள்ளம் அழகான வெள்ளித்திரை" பாடல் என் மனம் கவர்ந்த பாடல். அருமையான அந்த பாடலை ஒளி,ஒலி வடிவில் தந்து இன்புறவைத்துவிட்டீர்கள். நன்றிகள் கோடி நண்பரே.
நட்புடன்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
இன்று "தைபூசம்". இந்த நன்னாளை நினைவுகூறும் வண்ணம், அந்த தலைப்பில் இனிமையான பாடல் ஒன்று.
படம்: C .I .D சங்கர்
பாடல்: தைப்பூச திருநாளிலே ராஜா
பாடியவர்: பி.சுசீலா குழுவினர்
இசை: வேதா
http://www.mediafire.com/?ijrwi5oteqay15m
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
நண்பர் ஜாக், எத்தனையோ அரிய பாடல்களை தந்திருக்கிறீர்கள். உங்கள் மனம் கவர்ந்த ஒரு பாடலை என்னால் கொடுக்க முடிந்தது மகிழ்ச்சியே.