சிறுத்தை சிவாவின் சிட்டி ஆக்சன் திரைப்படம்
IndiaGlitz [Wednesday, February 18, 2015] 0 Comments
Ajith Kumar GalleryClick here for Ajith Kumar Gallery
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டாவது வாரமாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.
அஜீத்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. வித்யாபாலன், ஹன்சிகா, சமந்தா ஆகியோர் பரிசீலனையில் இருக்கும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஸ்ருதிஹாசனும் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து சிறுத்தை சிவா சமீபத்தில் கூறியபோது, 'அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்த இறுதி முடிவு என்னும் எடுக்கப்படவில்லை என்றும், இன்னும் ஒரு வாரத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் அஜீத்தை வைத்து தான் இயக்கிய முந்தைய படம் கிராமத்து பின்னணியில் இருந்த நிலையில் இந்த படம் சிட்டியை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்றும் கூறினார்.
மேலும் தனது புதிய படத்தில் அஜீத்தின் கெட்டப் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பா? என்று பலரும் கேட்டு வருவதாகவும் ஆனால் இந்த படத்தின் அஜீத், தனது ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதிய கெட்டப்பில் தோன்றுவார் என்றும் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் அஜீத்தின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.