http://i64.tinypic.com/dc4kyc.jpg
Printable View
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...47&oe=57AEBC0B
14.04.2007 அன்று தொடங்கப்பட்ட நமது நடிகர் திலகம் இணையதளம் www.nadigarthilagam.com இன்று 14.04.2016 அன்று 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உலக அளவில் தமிழனின் கலாச்சார அடையாளமாக விளங்கும் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் இவ்விணையதளத்திற்கு ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து தருமாறு வேண்டிக் கொண்டு உளமார்ந்த நன்றியினை இணையதளம் சார்பில் கூறிக்கொள்கிறேன்.
அனைத்து உயிர் நண்பர்களுக்கும் ,எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ராகவேந்தர் என்ற எங்களது பிதா மகரின் இணைவு தளத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வியட்நாம் வீடு - 1970 46th Tamil New Year for this classic.
எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.
அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.
இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.
சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.
இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)
ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.
இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.
இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.
காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?
Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?
சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )
அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.
இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
http://i1028.photobucket.com/albums/...ps90tkkptm.jpg
வணங்கி வாழ்த்துகிறேன்...
உத்தமரின் புகழ் பாடும்
இணையத்தையும்,
புகழ் பாடவே
துடிக்கின்ற இதயத்தையும்.
"வியட்நாம் வீடு"- அற்புதமான
பதிவு... கோபால் சார்.
நன்றி.
இன்னும் பல நூறு ஆண்டுகள்
ஆனாலும் தனது ஒட்டுதலான,
ஈடு இணையற்ற, அர்ப்பணிப்பு
மிகுந்த நடிப்பை, ஒன்று விடாமல் சொல்லிச் சொல்லி
சிலாகிக்கும் அற்புதமான
ரசிகர்களைக் கொண்டவர்,
நம் நடிகர் திலகம் மட்டுமே.
வேலையிலிருந்து ஓய்வு
பெறப் போகிற முதியவராக
அச்சு அசலாக ஒப்பனை செய்து
விடலாம்.
கவனமாய் தரையில் கால் பதித்து, ஐம்பத்தைந்து வயதுத்
தளர்வு காட்டி நடக்கும் நடை?
"நெஞ்சு வலிக்கிறது..மாத்திரை
விழுங்குகிறீர்கள்.. வலி மட்டுப்
படுகிறது.." என்று அவர் நடிக்க
வேண்டிய காட்சியை படத்தின்
இயக்குநர் விளக்கி விடலாம்.
அதிர்ச்சி தாக்கிய நெஞ்சிலிருந்து கிளம்பும்
அசுர வலி பொறுக்காத உடல்
துடிப்பும், தள்ளாடலும், நடுக்கமும், சிரமப்பட்டு எட்டி
எடுத்த மாத்திரை
டப்பாவிலிருந்து மாத்திரை
தேர்ந்து, அவசரமாய் விழுங்கி,
விழுங்கிய பின் முகத்தில்
காட்டும் பாவனையில், தனக்கு
அதிர்ச்சி தந்த விஷயத்தின்
கசப்பையும், மாத்திரையின்
கசப்பையும் குறிப்பிடுவது...?
நடிகர் திலகம், காலகாலத்திற்கும் அதிசயம்.
ஒருவரைப் பற்றி, அவரது உயர்வான திறமைகளைப் பற்றி, அவரை மிக விரும்பும்,
அவரை நன்கறிந்த கூட்டத்திடமே சொல்லப்படும்
போது, "இது, தெரிந்ததுதானே?"
என்றொரு உணர்வு வருவதே
இயல்பு.
ஆனால், தாங்கள் குறிப்பிட்ட
உடலும்,மனமும் ஒடுங்கிய
ஊஞ்சல் துயில் நீங்கி, சம்பந்தியை உபசரிக்கும்
காட்சி கண்களை ஈரப்படுத்தியதே... அது, நடிகர்
திலகம்- சாதாரணமல்ல..
சரித்திரம் என்பதற்கு
உதாரணம்.
------------------------------
"உன் கண்ணில் நீர் வழிந்தால்"
பாடல் குறித்து ஏற்கனவே
நான் எழுதியது...
---------------------
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".
-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி
மனைவியின் கண்ணீர் குறித்த
எனது பழைய கவிதை,அது.
---------
இதோ..
நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.
மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.
அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.
இந்தப் பாடலின் நாயகி சிந்தும்
கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------
நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத்
தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த
கணவனும்,மனைவியும்
தோன்றுமிந்தப் பாடல்..
ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------
"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"
-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா
எழுப்ப,
அதிர்ந்து போகும்அந்தக்
கிழவியின் முகத்தில்
தோன்றும் சோகக் குறிகள்
துடைத்து..
"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"
-என்று அவரே பாடி
முடிக்கையில், ஒரு நிம்மதிப்
பெருமூச்சுடன் அந்தக் கிழவி
சிந்தும் கண்ணீரை,
நம் இதயப் பாத்திரங்கள் இன்னும் சேமித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
https://www.youtube.com/watch?v=NC3Q...e_gdata_player
http://i1028.photobucket.com/albums/...pszbfap0kx.jpg
மாண்பு மிக்க தமிழினமே...!
மலர்ச்சியை விரும்பி
மடமை தாண்டு.
மனிதம் விரும்பி
மதங்கள் தாண்டு.
ஒற்றுமை விரும்பி
வன்முறை தாண்டு.
ஒழுக்கம் விரும்பி
போதைகள் தாண்டு.
உழைப்பை விரும்பி
சோம்பல் தாண்டு.
உண்மையை விரும்பி
கனவுகள் தாண்டு.
வெற்றிகள் விரும்பி
தடைகள் தாண்டு.
நம்பிக்கை விரும்பி
பயங்கள் தாண்டு.
சிங்கத் தமிழனின்
ஆசிகளோடு
உன்னைத் தாங்கும்
துர்முகிப் புத்தாண்டு.
வியட்நாம் வீடு ...
கோபால் உங்களுடைய அணுகுமுறையில் உங்களுடைய பார்வையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதியுள்ளீர்கள்.
ஒரு சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு.
முழுதும் நடிகர் திலகம் என்கிிற ஒற்றைத்தூணின் பலத்திலே இந்த வீடு எழுப்பப் பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
பிரெஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்திலேயே கதாசிரியர் தன் முழு கவனத்தையும் செலுத்தி மற்றவற்றைக் கோட்டை விட்டு விட்டாரோ என்பதாக எனக்குத் தோன்றுகிறது. முரளி கதாபாத்திரத்தை அவ்வளவு பலகீனமாக சித்தரித்தது மிகவும் செயற்கையாகத் தோன்றுகிறது. லஞ்சம் வாங்குவது தப்பில்லையோ எனக் கேட்பது கூட ஒரு சம்பிரதாயத்திற்காக கேட்பது போலத்தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிரெஸ்டீஸ் பத்மனாபனின் குழந்தைகள் அவ்வளவு பலகீனமானவர்களாகவா வளர்க்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்குள் தோன்றும் கேள்வி. அதே போல ஒரு ஜட்ஜின் மகளும் அவ்வளவு பலகீனமானவளாக சித்தரித்திருப்பதும் கூட சற்று செயற்கையாகத தான் தோன்றுகிறது. பொதுவாக ஆண் பிள்ளைகள் தாயாரின் குணத்தையும் பெண் பிள்ளைகள் தந்தையாரின் குணத்தையும் பெற்றிருப்பார்கள் என சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் முரளியே லஞ்சம் வாங்கத் துடிப்பவனாக இருந்தாலும் ஜட்ஜின் மகள் அதைத் தடுக்கத்தான் செய்திருப்பாள். அவளுடைய குணாதிசயம் இயற்கையாக அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த ஜட்ஜின் பாத்திரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக மகளை இப்படி சித்தரித்து விட்டார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது. இதே போலத்தான் பத்மநாப ஐயரின் மற்ற பிள்ளைகளும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். மனம் போன போக்கில் கடன் வாங்குவதாக மகனைக் காட்டுவதும், சுலபத்தில் காதல் வயப்படக்கூடியவளாக மகளைக் காட்டுவதும், ஒரு புரோகிதர் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா என அந்தணரல்லாதார்க்கே தோன்றக் கூடிய அளவிற்கு அந்தப் பாத்திரத்தை சித்தரித்திருப்பதும் சற்று யதார்த்தத்தை விட்டு விலகிய சினிமாத்தனங்களே.
நாடகத்தைப் பொறுத்த வரையில் எனக்கு ஞாபகம் இருக்கிற படி பார்த்தால், இது போன்ற பல காட்சிகள் இல்லை. நாடகம் இன்னும் இயல்பாக இருக்கும். ஜி.சகுந்தலாவின் நடிப்பில் சாவித்திரி பாத்திரம் சரியான பரிமாணத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு பத்மினி சற்று குறைவுதான். பாலக்காட்டுப் பக்கத்திலே பாடல் இன்னும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கலாம். முதலிரவில் இது போன்ற நடன அசைவுகள் சினிமாத்தனமாகத் தான் உள்ளன. நடிகர் திலகம் என்கிற அந்த ஒரு மனிதரின் தயவால் இவையனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளனவே தவிர வேறில்லை. உன் கண்ணில் பாடலைப் படமாக்கியதில் இருந்த இயல்பான மனநிலையிலேயே பாலக்காட்டுப் பக்கத்திலே பாடலும் அணுகப்பட்டு படமாக்கப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்தப் படத்திற்கு நடிகர் திலகத்திற்கு அடுத்து மிகப் பெரிய பலம் கே.வி.எம். அவர்கள் தான். குறிப்பாக என்றும் புதிதாக பாடல் அவருடைய முத்திரை. ஆனால் நாகேஷின் குழுப்பாட்டு மிகப் பெரிய திருஷ்டி. மாமாவுக்கு இப்படியெல்லாம் பாட்டுப் போடும் எண்ணம் வந்திருக்க வேண்டாம். தீவிரமான கே.வி.எம். ரசிகரே கூட அந்தப் பாட்டை வீட்டில் போட்டு கேட்கமாட்டார் என்பது திண்ணம். எனக்குத் தெரிந்து இதுவரையில் எந்த ரசிகரும் எந்த நேயர் விருப்பத்திலும் விரும்பிக் கேட்காத பாடல் மை லேடி பாடல்.
எது எப்படியோ, நடிகர் திலகம் என்கிற ஒற்றைத் தூண் இவ்வளவு பெரிய வியட்நாம் வீட்டைத் தாங்கி நிற்கிறது என்பது தான் யதார்த்தம்.
அனைவருக்கும் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
மணிவிழா மலரில் சில பக்கங்கள் http://i1039.photobucket.com/albums/...pspplbbgrk.jpg
பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம் இணைய தளத்திற்கும், அருமை ராகவேந்திரன் சாருக்கும் என் எண்ணிலடங்காத வாழ்த்துக்கள்.
http://www.iflickz.com/wp-content/up...-ganesan-2.jpg
நாட்டின் பெரும் தலைவரும் அவருடைய பிரதம புதல்வியும் பாராட்டிய ஒரே நடிகர் http://i1039.photobucket.com/albums/...pses1x39xx.jpg
http://i1039.photobucket.com/albums/...pscfax4zal.jpg
வள்ளல் கர்ணன்
திரையில் நடித்ததில் மட்டுமல்ல
நிஜத்திலும்...
http://i1039.photobucket.com/albums/...psop8tmqeg.jpg
முதல் (டைரக்டர்களின்) மரியாதை
http://i1039.photobucket.com/albums/...pswj5ge7jp.jpg
From Mr.Sudhangan's FB.
செலுலாய்ட் சோழன் – 117
இப்படியாக நூல்களைப் புரட்டிப் பார்க்கப்ப் பார்க்க ஆஸ்தான வித்துவானுக்கே ஐயங்கள் அதிகரித்தன!
தெளிவு அவருக்கே பிறக்கவில்லை.
அதனால் உள்ளம் தளர்ந்து அமர்ந்துவிட்டார்!
சிறிது நேரம் சென்றது!
அரசரின் இரண்டாவது கேள்விக்காவது விடை கண்டுபிடிப்போம் எனு ஆராயப்புகுந்தார்.
`கடவுள் எந்தத் திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்பது இரண்டாவது கேள்வி!
பழனியில் மேற்குப் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
திருச்செந்தூரில் கிழக்குப் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
திருவரங்கத்திலும், சிதம்பரத்திலும் தெற்கு நோக்கியிருக்கிறார்.
ஆக, கடவுள் எந்தத் திசையை ஆராய்ச்சி செய்தும் ஆஸ்தான வித்துவானுக்குச் சந்தேகங்களாக அதிகரித்தனவேயறித் தெளிவு பிறக்கவில்லை.
இரண்டாவது கேள்வியை விட்டு மூன்றவது கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
`கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் ?’ என்பது மூன்றாவது கேள்வி.
ஸ்ரீரங்கத்தில் கடவுள் சயனித்து கொண்டிருக்கிறார்.
சிதம்பரத்தில் நடனமாடிக்கொண்டிருக்கிறார். ஒரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
மற்றோரிடத்தில் அவர் நின்றுகொண்டிருக்கிறார்.
ஒரிடத்தில் சம்ஹாரம்!
மற்றோரிடத்தில் அநுக்கிரகம்!
ஒரிடத்தில் திருமணம்,
மற்றோரிடத்தில் சந்நியாசம்!
ஆக, கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கப் பெரும் குழப்பம் தான்.
இப்படியே அன்றிரவு கழிந்தது!
அவர் கவலையோடு இருப்பதை அவரது பேத்தி கவனித்துவிட்டாள்!
தாத்தாவின் கவலைக்கு காரணத்தைக் கேட்டாள்.
அவரும் நிலைமையை விளக்கினார்!
அதற்கு அந்த பேத்தி தானே அரசவைக்குச் சென்று மன்னரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகச் சொன்னாள்!
இதுதான் பெரிய புராணத்தின் ஆரம்பம்!
இதையே ஏ.பி.நாகராஜன் திருவருட் செல்வரின் ஆரம்பக காட்சியில் பயன்படுத்தினார்!
மன்னனாக சிவாஜி!
குழந்தையாக குட்டி பத்மினி!
வித்துவானாக நாகையாவும் நடித்திருப்பார்கள்!
அந்தக் குழந்தை என்ன பதில் சொன்னாள்!
அடுத்த நாள் அரசவையில் மன்னன் புலவருக்காக காத்திருக்க, புலவரின் பேத்தி வந்திருப்பதாக சொல்வார்கள்!
அந்த சிறுமி சபைக்குள் நுழையும்போதே ` வாழ்க மன்னா!’ `வளர்க உன் ஆட்சி! ஒங்குக நின் புகழ்! உயர்க உனது செங்கோல்! தழைக்கட்டும் தர்மம்! வாழட்டும் மக்கள்! செழிக்கட்டும் நாடு! புலவரின் பேத்தி! பொன்னி என் பெயர்! வணக்கம்!
குழந்தையின் இந்தப் பேச்சை கண்டு மிரண்டு போவான் மன்ன!
`மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை! புலிக்கு பிறந்தது பூனையாவதுமில்லை! அதே போல் புலவfரின் பேத்தியின் பேச்சிலே அழகுக்கு பஞ்சமில்லை!
`கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே! அப்படியிருக்க புலவர் பேத்தி நான் பேசுவதா உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது ?’
இல்லை! அதிசயமாக இருக்கிறது! கண்முன்னே நடப்பது கனவா நினைவா என்று சந்தேகம் கூட தோன்றுகிறது!
`சந்தேகமே வேண்டாம்! நடக்கும் சம்பவம் கனவல்ல! நினைவுதான்!
என்றபடி அந்த சிறுமி மன்னன் உட்கார்ந்திருக்கும் அந்த ஆசனத்தின் படிக்கட்டுகளில் ஏறி மேலே வருவாள்!
இந்தக் காட்சியில் ஒவ்வொரு அங்குலமாக அந்தக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பார் ஏ.பி.என்!
`எங்கு வந்தாய் ?’ இப்போது மன்னன் அந்தக் குழந்தையைப் பார்த்து கேள்வி கேட்பான்!
`தாத்தாவிடம் மூன்று கேள்விகள் கேட்டீர்களாம்! அதற்கு பதில் சொல்ல நானே வந்திருக்கிறேன்’ என்பாள் அந்தச் சிறுமி!
என்ன இது! மேலும் மேலும் வியப்பை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறாய்?’ உன் தாத்தாவிடம் நான் கேட்டது பெரும் பிரச்னை! அதற்கு பதில் சொல்ல அவரே திணறிக்கொண்டிருந்தார்!
`இது அத்தனை பெரிய பிரச்னையில்லை! சிறு பிரச்னை! அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்!’
`ஒரே திகைப்பில் ஆழ்த்துகிறாய் என்னை!’
`அதற்குள் திகைத்து விட வேண்டாம்! உங்கள் முதல் கேள்வி என்ன ?’
அதை சபையிலேயே சொல்லுங்கள்!’
`இறைவன் எங்கே இருக்கிறான்?’ அதுதான் என் முதல் கேள்வி!’
சிறுமி அருகிலிருக்கும் மேஜையருக்கே சென்று அங்கிருக்கும் ஒரு பெரிய கிண்ணத்தின் மூடியை திறப்பாள், ` மன்னா! இந்தப் பொற்கிண்ணத்தில் என்ன இருக்கிறது ?’
அந்தக் கிண்ணத்துக்குள்ளே பசுவின் பால் இருக்கிறது!
`அந்தப் பாலுக்குள்ளே என்னன்ன இருக்கிறது ?’
`அந்த பாலுக்குள்ளே மோர், தயிர், வெண்ணெய், நெய் என்று இருக்கிறது !’
அது எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள்!’
`அது……. அது…. சபையை சுற்றிமுற்றி பார்ப்பான் மன்னன், ` அது அதற்குள்ளே இருக்கிறது!’
`அப்படிச் சொன்னால் போதாது! இந்தப் பாலுக்குள்ளே தயிர், மோர், வெண்ணெய், நெய் எங்கே இருக்கிறது என்று தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டும்’
`இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி! அதற்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது!
`அப்படித்தானே ! இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறான்! இது புரியாமல் தாத்தாவிடம் இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டிர்களாமே இதற்கு எப்படி பதில் சொல்வது ?’
மன்னர் இப்போது ஆசனத்தில் இருந்து எழுந்து இரண்டடி முன்னால் வைத்து, ` கண் முன்னே நிற்பது குழந்தையா ? அல்லது குழந்தை வடிவத்தில் வந்திருக்கும் பெண் குலத்தின் தெய்வமா ? இல்லை தெய்வத்தின் நாடகமா ? அல்லது அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா ?’
`அதற்குள் அதிசயப்பட்டு விட வேண்டாம்! மன்னா ! உங்கள் அடுத்த கேள்வியைக் கேட்கலாம்!’
`இறைவன் எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்?’ இதுதான் என்னுடைய இரண்டாவது கேள்வி குழந்தாய் ?’
குழந்தை இப்போது பக்கத்திலிருக்கும் ஒரு எரியும் விளக்கைக் காட்டும், ` இது என்ன?’
`இது தூங்கா விளக்கும்!’ மன்னன் பதில் சொல்வான்!
`இதில் இருப்பது என்ன ?’
`அணையா விளக்கு !’
`இந்த தீபம் எந்தத் திசையை நோக்கி ஒளியை வீசிக்கொண்டிருக்கிறது ! என்று தங்களால் சொல்ல முடியுமா ?’
அது எப்படி முடியும்! எரியும் விளக்கிலிருக்கும் தீபம் நாற்புறமும் ஒளி வீசி பிரகாசித்துக்கொண்டு தானே இருக்கும்! அது எந்தத் திசையை நோக்கி பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்று கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?’
`அப்படித்தானே இறைவன் எல்லா திசையையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்!’ இது புரியாமல் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது?’
மன்னன் அசந்து போய் இரண்டடி முன்னால் வைத்து, ` ஆண்டவா! அரசனை குழந்தையாக்கி1 குழந்தையை தெய்வமாக்கிக் கொண்டிருக்கிறாய்! இச்சிறு பெண்ணுள்ளிருந்து கேள்வியை நீ கேட்பது உண்மையானால், என்னுள்ளிருந்து இந்த கேள்விகளை கேட்க வைத்ததும் நீ தானே! இப்படியும் உனக்கு ஒரு விளையாட்டா ?
`வேந்தே! மூன்றாவது கேள்வியையும் கேட்டு விடுங்கள்’ என்று சொல்லும் குழந்தை!