-
இந்த ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடும் திரைப்படங்களின் வெற்றி, வசூல், நாட்கள் யாவும் மீண்டும் மீண்டும் பல விநியோகஸ்தர்களையும்*
பல திரையரங்குகள் வெளியீட்டை அதிகபடுத்தியுள்ளது.*
"கலங்கரை விளக்கம்" திரைக்காவியம் மாபெரும் வெற்றியை படைத்த மூன்றாவது காவியமாகும்.* இத்திரைப்படம் அடுத்தடுத்து வெளியீட்டில்.....சாதனைகள்* சென்னையில் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு வரை பகல் காட்சியே இந்த திரைப்படம் திரையிட்ட சரித்திரம் கிடையாது. எப்பொழுதும்* 3 காட்சியில் தான் திரையிடப் பட்டுள்ளது என்பது இத்திரைப் படத்தின் சாதனையாகும்.*
கலங்கரை விளக்கம் திரைக்காவியம் பலமுறை தொடர் வெளியீட்டில் சென்னையில் மட்டும் 100 நாட்களை இணைந்த நாட்களாக கடந்த 50 வருடங்களாக சாதித்துக் காட்டியிருக்கிறது.
1990 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கில்* திரையிடப்பட்டு*
14 காட்சிகள் அரங்கு நிறைந்து அப்பொழுது 77 ஆயிரத்தை வசூலாக கொடுத்த வெற்றி காவியமாக..... கருப்பு வெள்ளை திரைப்படமாக..... கலங்கரை விளக்கம் திகழ்கின்றது.
இப்படி வெற்றிக்கு மேல் வெற்றியை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதித்துள்ளது.
வரலாறு படைத்த கருப்பு வெள்ளை திரைப்படங்களின் சாதனைகள் மகத்தானது... ...
குலேபகாவலி*
சக்கரவர்த்தி திருமகள் , புதுமைப்பித்தன் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் நாடோடி மன்னன் மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன் விக்கிரமாதித்தன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளது.
எந்த நடிகரின் சரித்திரப் படங்களும் இப்படி தொடர் சாதனை புரிந்தது இல்லை.*
1950 லிருந்து 60 காலகட்டம் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் தென்னக திரை உலகில் பல வெளியீடுகளை சந்தித்து சரித்திரம் படைத்த உள்ளது. ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது .
ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது என்பது நமக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் புதிய சாதனையை படைத்துள்ளது. ஒவ்வொரு திரையரங்கிலும் விதவிதமான சாதனைகளையும் கணித்து வந்துள்ளது.*
மக்கள் திலகம் திரைப்படங்களை வைத்தே பல திரையரங்குகள் வாழ்ந்த காலங்கள் பல...*
1995 முதல் 2019 வரை ...சென்னை மகாலட்சுமி, மேகலா, அகஸ்தியா, சரவணா பாலாஜி காமதேனு, பிராட்வே, ஸ்டார் சீனிவாசா , பாட்சா, கிருஷ்ணவேணி என பல அரங்கில் பல திரைப்படங்கள் சாதனை ஆகும்.....* *
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை நம்பியே கடந்த பல ஆண்டுகளாக திரையரங்குகள் வாழ்வு பெற்று வந்துள்ளது.
1988 முதல் 2019 வரை....
31 ஆண்டுகளில்.....*
சென்னையில் மட்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே
1988 முதல் 1995 வரையிலான காலத்தில்....* ஆண்டு தோறும்*
40 முதல் 50 திரையரங்கு வரை ...
75 படம் முதல் 90 படம் வரை வந்ததுள்ளது....
அடுத்து....
1996 முதல் 2005 வரை..
10 ஆண்டில் ....20 முதல் 30 திரையரங்கு வரை....
60 முதல் 70 படம் வரை*
திரையிடப்பட்டுள்ளது.
அடுத்து....
2006 முதல் 2018 வரை...
15 திரையரங்கில் இருந்து 20 திரையரங்கு வரை .....
50 திரைப்படம் முதல் 60 திரைப்படம் வரை திரையிடப்பட்டுள்ளது.
2019.....
அகஸ்தியா சரவணா பாலாஜி
மாறி... மாறி திரையிட்ட படங்கள்...
42 ஆகும்.
அலிபாபா, குலேபகாவலி,
தா.பின் தாரம், தா.சொ.தட்டாதே
பா.திருடன், த.தலை.காக்கும் , பெ.இ.பெண், தனிப்பிறவி
கா.காரன், வே.காரன், நீ.பின் பாசம்
எ.வீ.பிள்ளை,* ப.படைத்தவன் தொழிலாளி, ப.குடும்பம் ஆ.ஒருவன்,* க. விளக்கம்,* முகராசி
நான் ஆணையிட்டால், ப.பாவை
அ.கட்டளை,* விவசாயி, கு.கோயில்
ஒ.விளக்கு, தே.வ.மாப்பிள்ளை,
அடிமைப்பெண் , ரி.காரன்,*
நீ.நெருப்பும், ரா.தே.சீதை
ச.முழங்கு,* ந.நேரம்,* இ.வீணை,
நே.இ.நாளை, உ.குரல், சி.வா.வேண்டும்,* நி.முடிப்பவன்
நா.நமதே, ப.வாழ்க,* நீ.த.வணங்கு
உ.கரங்கள்,* ஊ.உழைப்பவன்
இ.போ.எ.வாழ்க.....
2020 ல் மார்ச் வரை
14 படங்கள் ..... திரைக்கு வந்துள்ளது.
தொடரும்.............
-
எம்ஜிஆர் ஒரு கிங் மேக்கர்
எம்ஜிஆர் எங்கோ அங்கே வெற்றி
சுதந்திரம் காண காங்கிரஸ்வாதியாக எம்ஜிஆர் சதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் எம்ஜிஆர் அப்போது காங்கிரஸில்
மேல்வர்க்கத்தின் கைபாவையாக காங்கிரஸ் பாமரன் கஷடத்தில் நாடு பஞ்சத்தில் எம்ஜிஆர் மனம் விடியலை காண ஏங்க
அண்ணாவின் எழுத்து கொள்கை கவர்ந்ததால் எம்ஜிஆர் தி மு க கட்சியில் சேர வெற்றி தி மு க வை நாடியது அண்ணாவை முதல்வர் ஆக்கினார் எம்ஜிஆர்
அண்ணாவுக்கு பின் கருணாநிதியை முதல்வர் ஆக்குகிறார் எம்ஜிஆர்
ஊழலில் முங்கிய கட்சியை காக்க கணக்கு கேட்க வெளியேற்ற பட்டார் எம்ஜிஆர்
அதிமுக உதயம் வெற்றி தேவதை எம்ஜிஆரை முதல்வர் ஆக்கியது
பின் எம்ஜிஆர் புகழால் ஜெயலலிதா பன்னீர்செல்வம் எடப்பாடி என வெற்றி எம்ஜிஆரால் தொடர்கிறது
எம்ஜிஆர் எங்கோ வெற்றி அங்கே
காமராஜ் காங்கிரஸ் ஆட்சியை விட எம்ஜிஆர் ஆட்சி சிறப்பானது
பாமரனுக்கு
காமராஜ் ஆட்சியில் கம்புகழியும் பஞ்சமும் அரசி விலை வானளவு
எம்ஜிஆர் ஆட்சியில் அரசி ரேஷனில் குறைந்த விலையில் தரமாக நிரந்தரமாக வழங்க பட்டது
போக்குவரத்து பஸ் வசதி எல்லா கிராமத்துக்கும் கிடைக்க வைத்தார் எம்ஜிஆர்
சத்துணவு ஒரு விழக்கு மேற்கல்வி எட்ட ு அரசுபல்கலைகழகங்கள்
தொழில் பயிற்சி கூடங்கள்
என பலதிட்டங்கள் எம்ஜிஆரால் தமிழகம் சிறப்படைந்தது
எம்ஜிஆர் ஆட்சியில் தான் போராடாங்கள் அதிகம் நடந்தது அரசுக்கு பல இடையூறுகள் கொடுத்தார்கள் அதையும் வென்று பொற்க்கால ஆட்சி தந்தார் எம்ஜிஆர்
எம்ஜிஆரை மற்றவர்களை விட சிறந்தவர்என கூற காரணம்
தன் உழைப்பால் ஈட்டிய பணத்தை மக்களுக்கு அளவில்லாமல் அள்ளி கொடுத்த்தால்
தனஷ்கோடி புயல் மக்கள் துயர் போக்க முதல் ஆளாக ஒரு லட்சம் ரூபா இன்றைய மதிப்பு பலகோடி கொடுத்தது எம்ஜிஆர்
சைனா யுத்த நிதியாக முதல் ஆளாக எழபத்தி ஐந்தாயிரம் கொடுத்தது எம்ஜிஆர்
இலங்கையில் தமிழ் படைக்கு பலகோடிகள் கொடுத்து போராட வைத்தது எம்ஜிஆர்
தன் சொத்துக்கள் எல்லாம் மக்களுக்கு என வாழ்ந்த எம்ஜிஆர் எவரை விடவும் சிறந்தவர் நிகரற்ற தலைவர் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ்.........
-
ஒருமுறை இரண்டு நாட்கள் பயணம் ஆக மதுரை சென்ற தலைவர் பாண்டியன் ஹோட்டலில் தங்குகிறார்.
ஹோட்டலை சுற்றி ஒரே பரபரப்பு..கூட்டம்.. அதே ஹோட்டலில் லிப்ட் பாய் ஆக வேலை செய்யும் ஒரு வாலிபருக்கு தலைவர் மீது மிகுந்த அன்பு பாசம் இருந்தது.
அவன் தன்னுடன் வேலை செய்யும் சக நண்பர்களுடன் தலைவர் பற்றி பெருமையா பேசுவது வழக்கம்...அவரே தன் கண் முன்னே அந்த ஹோட்டலில் தங்கி இருப்பது அவருக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்க..
அன்று இரவு வெளியில் சென்று வந்த தலைவர் ஹோட்டல் வந்து லிப்ட் வழியாக மேலே ஏற போகும் போது அந்த வாலிபன் தலைவர் அருகே ஓடி சென்று அண்ணா உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல சுற்றி இருந்தவர் தடுக்க தலைவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் மேலே சென்றுவிட்டார்.
விடுதி மேலாளர் என்னடா இது இப்படி செய்துவிட்டாய் என்று கோவம் கொள்ள உடன் வேலை செய்தவர்கள் என்னப்பா உன் எம்ஜிஆர் பதில் கூட சொல்லாமல் போய் விட்டாரே என்று கேலி செய்ய அன்று இரவு முழுவதும் கண்ணீரில் குளித்தான் அந்த ரசிகன்..
மறுநாள் மதியம் சாப்பாடு வேளை முடிந்து தான் அங்கு இருந்து கிளம்பும் பயண ஏற்பாடுகளை தலைவர் செய்ய் மீண்டும் ஹோட்டல் பரபரப்பு கொண்டது.
தன் அறை பெல்லை அடித்து கீழே இருந்த மேலாளராக இருந்தவரை வர சொல்லி உங்கள் ஹோட்டலில் பணி புரியும் அனைத்து லிப்ட் பாய்கள் மற்றும் அறை சர்விஸ் பணியாளர்களை உடனே என் அறைக்கு வர சொல்லுங்கள் என்றவுடன் ஆடி போன அவர் அதன் படி செய்ய.
அனைவரும் மேலே வர நேற்று யார் என்னுடன் படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று உங்களில் கேட்டது என்று கேட்க தயங்கிய படி மேற்கண்ட வாலிபர் வர தலைவர் சிரித்து கொண்டே அவனை அருகில் அழைத்து அவன் தோள் மீது கையை போட்டு கொண்டு..... தயார் ஆக காத்து இருந்த புகைப்பட நிபுணரை அழைத்து தம்பி அவரை பார் சிரி அப்போதான் படம் நல்லா வரும் என்று சொல்ல அவனுக்கு எல்லை இல்லா மகிழ்வுடன் நான் எம்ஜிஆர் ரசிகன்டா என்ற திமிருடன் போஸ் கொடுத்து புகை படம் எடுத்து கொண்டான்.
அதன் பின் அங்கு அறையில் இருந்த மற்ற பணியாளர்கள் அணைவருடன் தலைவர் நடுவில் நின்று கேமரா பளிச் பளிச் என்று தன் கண்களை வெட்ட துவங்கியது..
அதோடு இல்லாமல் தன் ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணம் எடுத்து அந்த வாலிபன் கையில் திணித்து அனைவரும் சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி நான் புறப்படுகிறேன் வரவா என்று கேட்டார் எம்ஜிஆர்..
இவர் புகழ் பாடாமல் வேறு எவர் புகழை பாட நாம் போய் தேட.
நன்றி... தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி...
படத்தில் நீ தானே அந்த பையன் என்று கேட்பது போல தலைவர் நன்றி.........
-
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..
57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.
இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...
1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..
2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)
3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)
4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)
5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)
6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)
7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)
8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )
9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)
10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.
12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..
13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..
14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.
15...பரமபிதா.
16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..
17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..
18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.
19...பாகன் மகள்..
20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.
22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.
23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.
24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.
25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.
27...புரட்சி பித்தன்.
28....வேலுத்தேவன்..
29...ஏசுநாதர்..
30....மண்ணில் தெரியுது வானம்.
31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.
32..உன்னை விட மாட்டேன்.
33...எல்லை காவலன்.
35...கேப்டன் ராஜு.
36....தியாகத்தின் வெற்றி..
37...இதுதான் பதில்.
38.....வேலு தம்பி...
39.. ஊரே என் உறவு.
40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..
41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...
43...இன்ப நிலா.
44.. வாழ்வே வா..
45...காணிக்கை.
46....அண்ணா பிறந்தநாடு.
47....அண்ணா நீ என் தெய்வம்..
48...நல்லதை நாடு கேட்கும்..
49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.
50....மரகத சிலை.
51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..
52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..
53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..
54....உங்களுக்காக நான்...
55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.
56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..
57.....இமயத்தின் உச்சியிலே..
வாழ்க எம்ஜிஆர் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.
பின் குறிப்பு.
வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... விரைவில் வெளியிடப்படும்............
-
கஷ்டப்பட்டதை மறக்காதவர்!
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
“தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.
நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்..............
-
இன்று தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர் .படங்கள் ஒளி பரப்பு விபரங்கள்... (11/09/2020)...
_______________________
ராஜ் டிஜிட்டல் பிளஸ் - காலை 9.30 மணி- "மாட்டுக்கார வேலன்"
சன் லைஃப்- காலை 11 மணி- "இதயக்கனி"
மெகா24- பிற்பகல் 2.30 மணி- "வேட்டைக்காரன்"
ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- "ஊருக்கு உழைப்பவன்".........
-
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_என்_இனிய #புதன்கிழமை_காலை_வணக்கங்கள்..
புரட்சி தலைவர் போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்.
நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.
படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.
டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை வைத்து எடுக்க இருந்த படம் தான் அன்று சிந்திய ரத்தம்
ஆனால் அந்த படம் தொடக்கத்திலேயே மநின்று விட்டது பிறகு அந்த படத்தை சிவந்த மண் என்று நடிகர் சிவாஜி கணேசனை வைத்து எடுத்தார் ஸ்ரீதர்..
ஸ்ரீதருக்கும் தலைவருக்கும் அதன் பின் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது... சில காலங்கள் கழிந்தது ஸ்ரீதர் அவர்கள் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனதால் மிகவும் கடனில் சிக்கி கொண்டார் அவர் நிலை அறிந்து அவருக்கு உதவ வேண்டும் என்று ஆரம்பித்த படம் தான் ‘உரிமைக்குரல்’..
படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம்.
அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.
பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.
‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.
ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது.
‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று
ஸ்ரீதர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர்.
‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது.
போட்டி என்றால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்...
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…
‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும்போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை’
‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.
படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது...
அன்புடன்
படப்பை rtb.,.........
-
42வது நினைவு நாள்:
எம்.ஜி.ஆர். - ஜானகி திருமணத்தை நடத்திய சின்னப்பா தேவர்.........
சண்டை கலைஞர், சிலம்ப கலைஞர், வாள் வீச்சு வீரர் என்று பெயர் பெற்ற சாண்டா சின்னப்பா தேவருக்கு படம் தயாரிக்கும் ஆசை வந்தது. படத் தயாரிப்புக்கான பணத்தை தயார் செய்து விட்டார் யாரை ஹீரோவாக போடுவது என்று யோசித்தவருக்கு உதித்தவர் எம்.ஜி.ஆர். அவர் மீது கொண்ட நட்பு காரணமாக அவரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித்தார். தேவர் பிலிம்ஸ் உருவானது. முதல் படம் தாய்க்குப்பின் தாரம். பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து அந்த காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். அதனால் தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், ஆண்டவனே..! என்றும், எம்.ஜி. ஆர், தேவரை, முதலாளி... என்றும் அழைத்துக் கொள்வார்கள். சில பிரச்சினைகளுக்கு இடையே நடந்த எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்தை நடத்தி வைத்து, சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உயிர் நண்பருக்கு நேற்று 42வது நினைவு நாள்..........
-
மக்கள் திலகத்தின் இந்த சொக்கவைக்கும் போஸ் "கண்ணன் என் காதலன் "படத்தில். இந்தப் படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அந்தக் காலத்திலேயே இப்போதைய இளைஞர்கள் அணிந்திருப்பதுபோல கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின். பூ டிசைன் போட்ட பிரிண்டட் சட்டை. அந்த சட்டை கையில் நுனியில் கத்தரித்து உள்ளது. அதன் மேலே சிறிய பட்டனும் இருக்கிறது. 52 ஆண்டுகளுக்கு முன் 1968லேயே இந்த பேஷன்களை எல்லாம் மக்கள் திலகம் அறிமுகப்படுத்தி விட்டார். அதனால்தான் இன்றும் இளைஞர்கள் இவரை விரும்புகிறார்கள். இந்த அழகும் ஸ்டைலும் கலரும் கவர்ச்சியான புன்னகையும் உலகத்திலேயே அவர் ஒருத்தருக்குத்தான் வரும்..........
-
மக்கள் திலகம் அவர்களின் தோற்றத்தை கண்டேன் பரவசம் அடைந்தேன் மக்கள் திலகம் சிறந்த உடற்பயிற்சி வீரர் மிகச் சிறந்த கலைஞன் அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மிகச் சிறந்த சிந்தனை வளம் கொண்ட கலை ஞானம் கொண்ட ஒரு படைப்பாளி ஒரு தெய்வீக பேரழகு ஒரு தெய்வீக கவர்ச்சி மக்களை காந்தம் போல் ஈர்க்கக்கூடிய ஒருவிதமான முக அமைப்பு செதுக்கி வைத்த சந்தனச் சிலை போல அழகிய தோற்றம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே உரியவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர் போன்ற ஒரு மனிதன் தோன்றுவது அரிது அவர் முகம் மட்டுமல்ல அவருடைய குணமும் அழகானதே ஈவு இரக்கம் உள்ள ஒரு மனிதர் சினிமா ஷூட்டிங் களிலும் மற்றும் அரசியல் பொது நிகழ்ச்சிகளிலும் யாரேனும் பசியுடன் இருந்தால் அவரால் தாங்கவே முடியாது அந்த நல்ல இதயத்திற்கு தான் அவர் இன்னமும் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் என் இதயத்திலும் கூட.........
-
அதிகம் படிக்காதவர் என்று சொல்லப்பட்ட
இவர்தான் மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை அதிகம் போதித்தவர்....
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பர்த்தவுடன் முதல் வணக்கம் வைப்பதுடன்
வணங்கி அன்போடு பேசக்கூடியவர்....
அடுக்கு மொழியில் பேசமாட்டார் ஆனால்
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அடக்கமாக பேசி நெஞ்சத்தை அள்ளுவார்....
நீதிபதியிடமும் வக்கீலிடமும் என் மகன் எம்.ஜி.ஆர் ரசிகன் தவறுசெய்திருக்கமாட்டான் என்று தாயே
வாதாடி ஜெயித்த வரலாறு இவருக்கு
மட்டுமே உண்டு...
அந்த பாரதரத்னா எம்.ஜி.ஆருடைய ரசிகர் என்று சொல்வதைவிட எங்களுக்கு பெரிய
கௌரவம் இல்லை.....
அவரைத் தவிர வேறு எவரையும் நாங்கள்
நினைப்பதுகூட இல்லை.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ் .............
-
"பணம் படைத்தவன்' R R பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்த படம். ஒரு மாபெரும் வெற்றிப் படமான "எங்க வீட்டு பிள்ளை" (all time block buster)
க்கு அடுத்து வந்த படம். "பணம் படைத்தவன்" வெளிவந்த பின்னும் "எங்க வீட்டு பிள்ளை"யின் ஓட்டம் சற்றும் தளர்வடையாமல் ஓடிக்கொண்டிருந்த கால கட்டம்.
1965 மார்ச் 27 ம் தேதி வெளியான படம். நல்ல கதை, அருமையான பாடல்கள்,மக்கள் திலகத்தின் அருமையான பங்களிப்பு அனைத்தும் இருந்தும் படம் பெரிய வெற்றியை பெறாமல் போனதற்கு காரணம் அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பார்த்தா பிடிக்காது என்று சொல்வார்கள்.
ஒரு மிகப் பெரிய வெற்றி படத்துக்கு அடுத்து வரும் படங்கள் அதே மாதிரி பெரிய வெற்றியை பொதுவாக பெறுவதில்லை.
ஆனாலும் "பணம் படைத்தவன்" ஓரளவு நல்ல வெற்றியை பதிவு செய்தது எனலாம்.
அந்த காலகட்டத்தில் படத்தில் காபரே காட்சிகள் இடம் பெற்றதை அடுத்து பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு காபரே காட்சிகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்யப்பட்டது. அதை பார்த்தால் காபரே மாதிரியே தெரியாது.
சிவாஜியின் 'மெளனம் கலைகிறது' பாடலின் நடனம் காபரே காட்சிகளையும் மிஞ்சும் விதத்தில் அமைந்திருக்கும். 'கண் போன போக்கிலே' போன்ற எவர்கிரீன் பாடல்கள் நிறைந்த படம். மேலும் 'பவளக்கொடியிலே" 'மாணிக்கத் தொட்டில்' போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.'எனக்கொரு மகன் பிறப்பான்' எம்ஜிஆரின் துள்ளல் நடையுடன் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று பாடும்போது நமக்கே ஆட வேண்டும் போலிருக்கும்.
'பருவத்தில் கொஞ்சம்' பாடலில் செளகாரும் K R விஜயாவும் மாறி மாறி தோன்றும் காட்சியில் ஒளிப்பதிவு சிறப்பு. 'தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை' பாடலிலும் கேமரா கோணங்கள் ரசிக்கும்படி இருக்கும். MSV இசை பலா பழத்தை தேனிலே குழைத்தது போலிருக்கும். பாலையாவின் நடிப்பு நாகேஷின் நகைச்சுவை குணசித்திர நடிப்பு நன்றாக இருக்கும்.
நாகரீகத்தால், நவநாகரீக நங்கைகள் சீரழிவதை காட்டும் சமுதாய சீர்திருத்த கருத்தை
பொழுது போக்கு அம்சங்களுடன் சேர்த்து கொடுத்திருந்தார்கள். R R
பிக்சர்ஸிக்கு மிதமான வெற்றியை பதிவு செய்த படம். பிந்தைய வெளியீடுகளில் முந்தைய வசூலையும் சேர்த்து பணமழை கொட்டிய படம் என்று சொல்லலாம்.
தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி 5 வாரங்கள் நடைபெற்றது. முதல்முறை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தடுத்த வெளியீடுகளில் பார்த்துக் கொண்டே இருந்தேன். சென்னையில் பிளாசா, கிரவுன், மகாலட்சுமியில் வெளியாகி 11 வாரங்கள் ஓடியது. அநேக ஊர்களில் 50 நாட்களை கடந்து வெற்றியை பதிவு செய்தது..........
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 25/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
கொரியா நாட்டை சார்ந்த ஒரு பெண் எங்க வீட்டு பிள்ளை படத்தின் நான் ஆணையிட்டால் என்ற பாடலுக்கு அதே உடல் மொழி ,பாவனைகளுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தது போல நடித்து அசத்தியுள்ளது* வாட்ஸ் அப் வீடியோக்களில் வைரலாகி வருகிறது .
சக்கரவர்த்தி திருமகள் படத்திற்காக எம்.ஜி.ஆரும், அவர் மனைவி வி .என்.ஜானகியும், கதாசிரியர் ரவீந்திரனும் மைசூரில் ஒரு விடுதியில் தங்குகின்றனர் .அந்த பகுதியில் கொஞ்சம் விலையுர்ந்த வாடகை விடுதி. அதற்குண்டான தொகையை பட தயாரிப்பாளர் ராமநாதன் செட்டியார் கொடுக்க முன்வரும்போது ,விடுதி உரிமையாளர் வாங்க மறுத்து ,ஏற்கனவே எம்.ஜி.ஆர். அவர்கள் பணத்தை செலுத்தி விட்டார் என்று கூறுகிறார் .* பதறிப்போய் பட தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் என்னுடைய படத்தில் நடிக்க வந்துவிட்டு எதற்காக விடுதி வாடகை பணத்தை செலுத்த வேண்டும் என்று கேட்கிறார் .உங்கள் படத்தில் நடிப்பதற்கான ஊதியத்தை நீங்கள் அளித்து விட்டீர்கள். அது உங்கள் நிர்வாகம் சம்பந்தப்பட்டது .நான் அழைத்து வந்திருக்கும் என் மனைவி, கதாசிரியர் ஆகியோர் என் சொந்த வேலைக்காக வந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு நீங்கள் செலவு செய்வது முறையாகாது . மேலும் உங்கள் மூலமாக திரு.பி. நீலகண்டன் எனும் ஒரு நல்ல இயக்குனர் எனக்கு அறிமுகம் ஆகியுள்ளது மகிழ்ச்சியான விஷயம் என்று எம்.ஜி.ஆர். கூறினார் .
நான் ஒரு காலத்தில் பட வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கும்போது, நியூடோன் ஸ்டூடியோ திறந்த வெளியில்* நின்று கொண்டிருந்தேன் .கடுமையான வெயில் நேரம் .ஒரு மர நிழலில் ஒரு நாற்காலி இருந்தது .அதில் உட்காருவதற்கு தயக்கம் இருந்தது .அங்கு வந்து என்னை கண்ட பட தயாரிப்பாளர் ராமநாதன் செட்டியார் ,ஏன் வெகுநேரம் நிற்கிறீர்கள் அந்த நாற்காலியில் அமருங்கள் என கேட்டு கொண்டதன் பேரில் ஒரு* மணி நேரம்*இளைப்பாற அனுமதித்ததற்காக அந்த தயாரிப்பாளருக்கு பிற்காலத்தில் மறக்காமல்* உதவி செய்திருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர். கதாசிரியர் ரவீந்தரிடம் கூறினார் .*.
திரைப்படங்களில் வெற்றியை குவித்து வரும் நேரத்தில் ,ஒவ்வொரு படத்திலும் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள், காட்சிகள் அமைக்க எம்.ஜி.ஆர். தவறவில்லை .சின்னப்பா தேவரின் தாய்க்கு பின் தாரம் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் முதல் படமாக நட்பின் அடிப்படையில் எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கப்பட்டது . இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு காளையை அடக்கும் காட்சி ஒன்று உள்ளது . அது வெறும் காட்சியாகத்தான் மக்களால் பார்க்கப்பட்டது .ஆனால் ரசிகர்கள் /பக்தர்கள் அன்றைக்கு காங்கிரசின் சின்னம் காளையாக இருந்த காரணத்தால் எம்.ஜி.ஆர். காளையை (காங்கிரசை ) அடக்குவதாகத்தான் எடுத்து கொண்டார்கள் . 1957 தேர்தலில் உதயசூரியன் சின்னம் தி.மு.க.விற்கு*கிடைக்குமா என்கிற ஒரு கேள்வி இருந்தபோது சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். தன் கதாபாத்திரத்தின் பெயரை உதயசூரியன் என்று*அறிமுகம் செய்து மக்களிடம் பிரபலமடைய* செய்தார் .**
1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமருவதற்கு மிக முக்கிய காரணமாக எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் சுடப்பட்டு மருத்துவமனையில் கழுத்தில் மாவு கட்டுடன் அமர்ந்து மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தி.மு.க. வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்**என்கிற வாசகத்துடன் கூடிய* தோற்றத்தின் சுவரொட்டியே அமைந்தது .இந்த சுவரொட்டிதான் தி.மு.க.விற்கு*மிக பெரிய வாக்கு வங்கியை எம்.ஜி.ஆர். பெற்று தந்தார் என்று பேசப்பட்டது .அதனால்தான் தி.மு.க.வின் வெற்றி செய்தி அறிவித்ததும்,பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க வந்த தி.மு.க. தலைவர்கள், தொண்டர்களிடம் இந்த சரித்திர வெற்றிக்கு காரணமானவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் . அவருக்குத்தான் நீங்கள் மாலையிட்டு மரியாதை செய்ய வேண்டும்*என்று உணர்வுபூர்வமாக பேரறிஞர் அண்ணா தெரிவித்தார் . அது மட்டுமல்லாமல் அமைச்சரவை பட்டியல் தயாரானதும், அதனை எம்.ஜி.ஆருக்கு*அனுப்பி அவரது யோசனை, கருத்து, முடிவு ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருந்தார் பேரறிஞர் அண்ணா. அந்த அளவிற்கு அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர். மீது அளவற்ற அன்பும், மதிப்பும் , மரியாதையும் இருந்தது . பதிலுக்கு எம்.ஜி.ஆரும்* அண்ணாவை**தன உயிரினும் மேலாக மதித்தார் .தி .மு.க.விற்காக எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட வாக்கு வங்கி எனும் அரசியல் வரலாறு* அ .தி.மு.க. வின் இந்த காலம் வரை இன்னும் நீண்டு கொண்டு தானிருக்கிறது .
நினைத்ததை முடிப்பவன் படத்தில் வரும் கண்ணை நம்பாதே பாடலில் கவிஞர் மருதகாசி ஒரு சரணத்தில் பொன்பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே என்று எழுதினார் . அதை கண்ட* எம்.ஜி.ஆர். இந்த வரிகளின் அர்த்தம் சரியில்லை. அதை கண்மூடி போகிறவர் போகட்டுமே என்று மாற்றி எழுதி தாருங்கள் என்று கேட்டு கொண்டார் .அதாவது ஒரு கவிஞரின் பாடலையே திருத்தும் அளவிற்கு பள்ளி படிப்பை சரியாக தொடரமுடியாவிட்டாலும்* தமிழில் அறிவுத்திறமை, புலமை பெற்றிருந்தார் என்பது மட்டுமல்ல,எம்.ஜி.ஆர்.மொழி அறிவிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் .மேலும் கூடுதலாக ஒரு சரணம் எழுதி தர சொன்னார் .அதாவது என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன் ,ஏதுவானபோதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்லமனம் போதும் .என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்பது .. அதனால்தான் பலரும் அவரை* வாத்தியார் என்று அழைக்கின்றனர் .கண்ணை நம்பாதே பாடல் மட்டும் யூ ட்யூப் மூலம் லட்சக்கணக்கான நபர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன காரணம் இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு ,பாடியவரின் குரல் ,அனைத்திற்கும் மேலாக எம்.ஜி.ஆரின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, நடன அசைவுகள்,அழகான* அபிநயங்கள்,வசீகரம்* ஆகியன .கவிஞர்கள் மற்ற எல்லா நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார்கள், பாடகர்களும் பாடுகிறார்கள் .அனைத்தும் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதில்லை* ஆனால் எம்.ஜி.ஆர்.*என்கிற மாபெரும் கலைஞன்* முகம்**வாயிலிருந்து வெளிப்படுவதனால்**அந்த பாடல் பன்மடங்கு பிரபலம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
கவிஞர்கள் எழுதும் பாடல்களில் அவர் பெரும்பாலும் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு .* அப்படி தலையிட்டதால்தான் ஒவ்வொரு பாடலும் இன்று படிப்பினையாக உள்ளது . ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் சூழலுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதற்கு காரணம் அந்த அளவிற்கு* ஒவ்வொரு வார்த்தைக்கும் ,மிகுந்த அக்கறை எடுத்து கொண்டதோடு ஒரு பல்கலை கழகமாகவே திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர்.-அஞ்சலிதேவி உரையாடல் -சக்கரவர்த்தி திருமகள்*
2.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர்.-சங்கே முழங்கு*
3.எம்.ஜி.ஆர்.-காக்கா ராதாகிருஷ்ணன் உரையாடல் -தாய்க்கு பின் தாரம்*
4.எம்.ஜி.ஆர். -அசோகன் உரையாடல் - நல்ல நேரம்*
5.கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன்*
6.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது -அடிமை பெண்*
-
தலைவரின் 100 வது படம் ஒளிவிளக்கு..
இந்த ஒளிவிளக்கு..
அவரச விளக்காகி..
அலாவுதீன் விளக்கு ஆக மாறிய உண்மை சம்பவம்..
ஒளிவிளக்கு படம் தயார் ஆகி முடிந்து ஜெமினி அரங்கில் படத்தின் அறிமுக காட்சி நடந்தது...100 வது படத்தில் வாசன் தயாரிப்பில் சாணக்கியா அவர்கள் இயக்கத்தில் தலைவர் மிகவும் அற்புதமாக நடித்த படம்.
சிறப்பு காட்சி முடிந்தவுடன் தலைவர் சௌகார் ஜானகி அவர்களை அழைத்து அருமையாக வந்து இருக்கிறது உங்கள் நடிப்பு...அதுவும் நான் தீக்காயங்கள் உடன் படுத்து இருக்கும் நேரத்தில் நீங்கள் இறைவனை வேண்டி பாடும் பாடல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள் என்கிறார்.
ஆம் அதில் என்ன சந்தேகம்...பின் அந்த பாடல் காட்சி தலைவர் உடல் நலம் குன்றி இருந்த போது அப்போது தமிழக கீதமாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்ததை நாம் மறக்க முடியுமா..
அந்த சிறப்பு காட்சி முடிந்தவுடன் தான் வெளிநாட்டில் இருந்து வாங்கி வைத்து இருந்த ஒரு எமெர்ஜென்சி விளக்கை வரவழைத்து இது என் பரிசு உங்களுக்கு என்று கொடுக்கிறார் வள்ளல் சவ்கார் அவர்களிடம்.
அவரும் பல ஆண்டுகள் ஆக அதை பராமரித்து உபயோகித்து வந்த நிலையில் ஒரு நாள் அந்த அவரச விளக்கு பழுதாகி விட தன் வீட்டில் எப்போதும் எலெட்ரிக் வேலை செய்யும் ஒருவரை அழைத்து அவர் இது எம்ஜிஆர் எனக்கு பரிசாக கொடுத்த விளக்கு...சரி செய்து கொடுங்கள் என்று சொல்ல...
விளக்குடன் அன்று போன அவர் போனதுதான்... சவுக்கார் ஜானகி அம்மா மனதில் ஏதோ ஒன்றை வாழ்க்கையில் இழந்து விட்டதை போல துடிக்கிறார் அவர்..எங்கு தேடியும் அந்த நபர் கண்ணில் படவில்லை..
7 ஆண்டுகளுக்கு பின் ஒரு நாள் பாண்டி பஜாரில் காரில் சென்று கொண்டு இருக்கும் போது அந்த நபரை பார்த்து விடுகிறார் அவர்...உடனே காரை விட்டு இறங்கி என்ன இப்படி செய்து விட்டீர்கள் ...எங்கே அந்த அவசர விளக்கு என்று கேட்க அவர் கை கால் நடுங்கி அம்மா என்னை மன்னித்து விடுங்கள்....வீட்டில் ஒரு அவசர சிகிச்சை செலவுக்கு அதை 300 ரூபாய்க்கு ஒருவரிடம் அதை விற்று விட்டேன் என்று சொல்ல.
அவரோ பதறி ஐய்யோ என்னிடம் வந்து அந்த பணத்தை கேட்டு இருந்தால் நானே கொடுத்து இருப்பேனே அது அவர் விளக்கு என்று உன்னிடம் சொல்லியும் இப்படி செய்து விட்டாயே...சரி விடு என்னுடன் காவல் நிலையம் வா...உனக்கு ஒரு ஆபத்தும் வராது நான் பொறுப்பு அந்த விளக்கை யாருக்கு விற்றாய் என்று விவரத்தை மட்டும் சொல்...என்று சொல்ல.
அவரும் மறுக்க முடியாமல் சைதை காவல் நிலையத்தில் விவரம் சொல்லி முடிக்க....மறுநாள் காவல் நிலையத்தில் இருந்து தகவல் சவுக்கார் ஜானகி அம்மா அவர்களுக்கு நீங்க உடன் காவல் நிலையம் வாருங்கள் அந்த ஒளிவிளக்கு கிடைத்து விட்டது என்று சொல்ல.
ஆயிரம் மின்சாரம் ஒரே நேரத்தில் உடலில் செலுத்த பட்டத்தை போல உணர்ந்து காவல் நிலையம் நோக்கி பறக்கிறார் சவுக்கார் ஜானகி அம்மா.
அங்கே அந்த விளக்குடன் ஒரு நபர் இருக்க அதிகாரி இதுவா உங்கள் விளக்கு என்று கேட்க ஆமாம் ஆமாம் என்று அவர் மகிழ்ச்சியில் துடிக்க...
அவரச ஒளிவிளக்கை வாங்கிய அந்த நபரிடம் மிக்க நன்றி இதோ நீங்கள் கொடுத்த விலை 300 க்கு பதில் எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்....ஐயா அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் எனக்கு அந்த ஒளிவிளக்கு மட்டும் போதும் அவரை விட்டு விடுங்கள் என்று சொல்ல.
அந்த நபர் அம்மா ஆயிரம் ஆயிரம் இருள் சூழ்ந்த இல்லங்களில் தன் கரங்கள் கொண்டு ஒளிவிளக்கை ஏற்றி வைத்த அந்த மனித புனிதர் அவர் உங்களுக்கு பரிசாக கொடுத்த இந்த விளக்கு என்னிடம் இவ்வளவு ஆண்டுகள் இருந்தது நான் செய்த புண்ணியம்... எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்..இதை எடுத்து செல்லுங்கள் என்று சொல்ல..
காவல் ஆய்வாளரும் அம்மா சவுக்கார் ஜானகி அவர்களும் என்ன ஒரு விந்தை இது என்று அதிசயித்து பார்க்க..
அந்த தலைவரின் அவசர ஒளிவிளக்கு அலாவுதீன் கண்ட அதிசய விளக்காக மாறி மீண்டு ஆண்டுகள் பல சென்று மீண்டும் அவரை தேடி சென்று அடைந்த அற்புதம் வேறு இனி எங்கு காண முடியும்.
இறுதியில் தன் தலைவர் நினைவுகளை சொல்லி முடிக்கும் போது சவுக்கார் ஜானகி அம்மா சொல்கிறார் அந்த அபூர்வ அவரச ஒளிவிளக்கு தன்னிடம் வேலை செய்ய வந்த ஒருவருக்கும் அன்று அவர் அவசர அவசிய தேவைக்கும் உதவி இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறார்.
ஒளிவிளக்கின் புகழ் என்றும் அணையாமல் கண் என காப்பது நமது கடமை...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.....
உங்களில் ஒருவன் ...நன்றி.
அந்த விளக்கை மீண்டும் திருப்பி கொடுத்த அந்த நல்ல உள்ளதுக்கு நன்றி..நன்றி..நன்றி..
இன்றும் நடிகை சவுக்கார் அம்மா வீட்டு பூஜை அறையில் அந்த விளக்கு உள்ளது...
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு....தலைவா உங்கள் காலடியில் எங்கள் நம்பிக்கையின் ஒளிவிளக்கு... என்ன ஒரு பொருத்தம் வரிகளில்..இல்லையா..........
-
தமிழ் திரைப்பட உலகம்*
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் தான் கடந்த ஆண்டுகளில் சிறப்பு பெற்றது. அவர் நடிக்கின்ற திரைப்படங்கள் மேலும் அதிகமாக வந்து திரையரங்குகளை வாழவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..
இப்படி ஒரு கட்டுரை 1976 ஆம் ஆண்டு 'பிலிமாலயா' பத்திரிக்கையில் வெளிவந்தது.*
1974, 75, 76 ஆண்டுகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மூலம் தான் சினிமா உலகமும்* திரையரங்களும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது பழைய திரைப்படங்கள் பல்வேறு திரையரங்குகளில் பல பிரிண்டுகள் போடப்பட்டு அதிகமாக விற்பனைக்கு வந்து அதிகமான திரையரங்குகளில் வாரம்தோறும் திரையிடப்பட்டு வருவது விநியோகஸ்தர் மற்றும் திரையரங்குகள், தயாரித்த தயாரிப்பாளர்கள் என பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
"உரிமைக்குரல்", " இதயக்கனி", "நினைத்ததை முடிப்பவன்", "பல்லாண்டு வாழ்க" , "நீதிக்குத் தலைவணங்கு", " உழைக்கும் கரங்கள்" திரைப்படங்களே அதிகமாக விற்பனையாகி விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர் களுக்கும் லாபம் ஈட்டித் தந்துள்ளது.*
அதுமட்டுமல்லாது கடந்த காலத்தில் மக்கள் திலகம்*
எம்.ஜி.ஆரி.ன் திரைப்படங்களே
ஏ, பி ,சி , (a,b,c,) என்று சொல்லும் அத்தனை சென்டர்களிலும் அவரது பழைய திரைப்படங்களே மீண்டும்,மீண்டும் திரையிடப்பட்டு மேலும் வசூலை வாரி குவித்து திரையரங்குகளை வாழவைத்து வந்துள்ளார்.
3000 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகள் கொண்ட தமிழ்நாட்டில் 1000 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் படங்களே திரையிடப்படுகிறது.
குறிப்பாக அரசுக்கு அதிக பணம் செலுத்தும் திரைப்படமாகவும் மக்கள் அதிகமாக வந்து படம் பார்க்கும் திரைப்படமாகவும் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் திரைப்படங்களே திகழ்ந்து வருகின்றன.**
1976 ல் 70 படங்களில் 65 படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. இருந்த
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மகத்தான வெற்றியை படைத்து சாதனை பெறுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து அனைத்து நடிகர்களின் படங்களும் வெற்றி அடைய வேண்டும். தமிழ் சினிமா உலகம்
இந்தி, ஆங்கில படங்களை விட அதிகமாக மக்கள் பார்க்க முன் வரவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களின் படமும் ஆண்டிற்கு 5,6படங்கள் கண்டிப்பாக வரவேண்டும்...
அரசியலிலும் அவரின் வேகம் மக்களிடமே அதிகமாக செல்கிறது..
தமிழ்ப்பட உலகை காக்க மக்கள்திலகமே
முன்நிற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்....
நன்றி 1976 பிலிமாலயா
சுறுக்கமாக.....
(2 பக்க கட்டுரை இது).........
-
ஒருபடம் தான் நடித்தார்.
மேட்டா ரூங்ரூட்டா
இன்றும் இவர் எம்ஜிஆர் ரசிகை
தாய்லாந்து நகரில்
ks.,.
உ.சு.வாலிபன் படத்தின்
சிறப்புகள் கணக்கில் அடங்கா.
வசூல் வாரிக்குவித்த படம் 4.5கோடி.
1973 ல் வந்த படம்.
இப்படம் வெளிவந்தால்
சேலை கட்டிக்கொள்கிறேன்
என்றார் மதுரை முத்து.
கருணாநிதி அப்போது
முதல்வர்.
போஸ்டர் ஒட்டக்கூடாது.
வரி அதிகம் கட்டணும்
என்றார்.
பலதடகளைமீறி வெற்றி
வாகை சூடினார்.எம் ஜி ஆர்.
தண்ணீருக்கடியில் காமிராஷாட்.
அவள் ஒரு நவரச நாடகம் பாடல்.
உலகம் அழகு கலைகளில்பாடலில்
எக்ஸ்போ70 இவ்வளவு
அழகாக எந்த படமும்
எடுக்கவில்லை.
தங்கத்தோணியிலே பாடலும் அப்படித்தான்.சந்திரகலா வாழ்நாளிலே இத்தனை ஊர்களை
பார்த்ததில்லை என்றார்.புற்றுநோயால்
அவர் இறந்தார்.
இசை எம்.எஸ்.வி.
இதுவரையில் எதற்கும்
இந்த சம்பளம் பெற்றதில்லை எனக்கூறினார்........
-
"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க...?" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்!
நடிகர் ராஜேஷ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்வு குறித்து பேசுகையில் அதில் முக்கிய சம்பவமான எம்.ஜி.ஆர். மீதான துப்பாக்கிச்சூடு குறித்து பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம்.
"திராவிடர் கழக தொண்டர்கள், நெருங்கிய நண்பர்கள் என யார் பண உதவி கேட்டு கடிதம் எழுதினாலும் தயங்காமல் மணி ஆர்டர் அனுப்புவார் எம்.ஆர்.ராதா உதவி என்று வீட்டிற்கு தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறவே மாட்டார்.
அவருடைய தோட்டம் ராமாவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டிற்கு எதிரே இருந்தது. அங்கே மாமரம், தென்னை மரம் நிறைய இருக்கும். அங்கே காய் பறிக்கிற நாளில் பறித்து முடித்தவுடன் வேலை பார்த்தவர்களை எல்லாம் அழைத்து பை நிறைய காய்களை அள்ளிக் கொடுப்பார்.
அந்த அளவிற்கு நல்ல மனிதர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கெல்லாம் தனித்தனியே ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எம்.ஆர்.ராதாவுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அனைவரையுமே நையாண்டி செய்வார். பக்திமான், பணக்காரன் என பாரபட்சமே பார்க்க மாட்டார்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுடக்கூடிய மனப்பான்மை எப்படி வந்தது என்பதை அறிய அவரது வாழ்க்கையை நான் பல்வேறு கோணங்களில் ஆய்வுபடுத்தி பார்த்தேன். இந்த சம்பவத்துக்கு முன்பே ஒரு முறை கிட்டு என்ற ஒரு நாடக நடிகருடன் எம்.ஆர்.ராதாவுக்கு முரண் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரின் உடைகள் இருந்த பெட்டியினுள் ஆசிட்டை ஊற்றி விட்டார்.
அன்று அவரால் நாடகத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்த முறை அவருடன் பிரச்சனை வந்தவுடன் அவரது முகத்திலேயே ஆசிட்டை ஊற்றி விட்டார். அதைப் பிரதிபலிப்பது போலத்தான் பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.
இதே போல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு உளுந்தூர்பேட்டையில் சென்று துப்பாக்கி வாங்கி வந்து அவரை சுடச் சென்றார். 'நீ சுட்டால் நல்லது தான்.. வாடா..' என என்.எஸ்.கிருஷ்ணன் நெஞ்சை நிமிர்த்தி காட்டினார்.
பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர். நடிப்புக்கும், வாழ்வுக்கும் வித்தியாசம் உண்டு. பலர் அதை புரிந்துகொள்வார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் பாத்திரத்திலிருந்து வெளியே வராமல் ஊறிப்போய்விடுவார்கள்.
எம்.ஆர்.ராதா அண்ணன் நடித்த பல பாத்திரங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்து அவரை இது போன்ற செயல்களைச் செய்யத் தூண்டியிருக்கலாம்.
'நமக்கு எதிராக ஒருவன் இருக்கிறான். அவனால்தான் நம் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது' என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் கண்களுக்கு அவர் எதிரியாகத்தான் தெரிவார். அதைத்தான் காமாலைக்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் மஞ்சள் என்பார்கள்.
தன்னுடைய மன உலகத்திலும், சினிமா உலகத்திலும் எம்.ஜி.ஆரை ஒரு வில்லனாக நினைத்து கொண்டதால் அவரை சுடும் அளவுக்கு செல்லும் நிலை வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
'பெற்றால் தான் பிள்ளையா' படம் தொடர்பான பண விஷயங்களும் காரணம் என சொல்வார்கள். ஆனால் உளவியல் அடிப்படையான காரணம் இதுதான்.
எம்.ஜி.ஆர். வீட்டிற்கு எதிரேதான் இவரது தோட்டம் இருக்கும். துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அங்கேயே காத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். கார் வீட்டிற்குள் போனதும் சிறிது நேரம் கழித்து இவர் போயிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். யார் வந்தாலும் நான் இல்லையென்று சொல்... நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனதால் காவலாளி அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். 'இப்போது உள்ளே போனதை நான் பார்த்தேனே... ஒரு முக்கியமான விஷயம்' என்று கூறி விட்டு உள்ளே சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து சுட முயலும் போது சுதாரித்து விலகி விடுகிறார். அதனால் அது காயத்தோடு போனது.
திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகளில் நடித்திருந்ததால் அது எம்.ஜி.ஆருக்கு ஒரு அனிச்சை செயலாகவே பழகிப்போனது. அவர் சுட்டவுடன் எம்.ஜி.ஆர் வழியும் ரத்தத்தை கையில் பிடித்துக்கொண்டே
"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க?" என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்பு அந்த வழக்கு நீண்ட நாள் நடந்தது.
எம்.ஆர்.ராதாவிற்காக என்.டி.வானமாமலை என்ற வழக்கறிஞர்தான் வழக்கு நடத்தினார்.
ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவரை தன்னுடைய ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்று இது போன்றுதான் எம்.ஆர்.ராதா என்னை சுட்டார் என தத்ரூபமாக விளக்கி இருக்கிறார். ஒரு விழாவில் என்.டி.வானமாமலை அவர்களை நான் சந்திக்க நேர்ந்த போது அவர் இதை என்னிடம் கூறினார்..........
-
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
m g rமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய
தகப்பனார் வழி பூர்வீகம்
மக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனுர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
Mgrகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
Mgrஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் mgr தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று mgrரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
Mgrஇந்த நிலையில் mgr அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்.
பத்து வயதில் கணக்கு கேட்டார்!
Mgrஎம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் “1925” 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.
அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.
நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,
இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.
அண்ணனிடம் கோபம் கொண்டார்
mgrஇது ஒரு பொதுவான விஷயம். இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்க சென்று இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்து விட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை எல்லாம்துவைத்து காயபோட்டுவிட்டு, ஆற்றில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடும் குளித்துவிட்டு கரை ஏறும் போது அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய். ராமச்சந்திரா என் கோமணம் தண்ணீர்ல் போயிடுச்சி என்று சொல்லி உன்னுடைய கோமணத்தை கொடுடா என்று தம்பியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளி குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார்.
கோமணம் இல்லாமல் அறிந்த mgr உடன் துவைத்து போட்ட டவுசரே போட்டுகிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணன் வசம் கோமணத்தை கொடுக்க, வேறுவழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவிசரை எடுத்து மாட்டிக் கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் என் கோமணம் தண்ணீரில் போய்விட்டது. தம்பியின் கோமணத்தை கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காயிந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னை பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொல்லுகிறார் இதை கேட்ட அம்மா mgrரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோபப்படுகிறார்.
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே mgr பதில் சொல்கிறார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை எங்களை போல் எவ்வளோ பையன்கள் குளிக்கின்றார்கள் அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிக்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை, அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்ற வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடும்கும்படி கேட்டார். நான் தண்ணீர்லிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமசந்திரா என் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார். நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்து விட்டேன். அம்மனகுண்டியோடு துணி காயிக்கின்ற இடத்திற்கு எப்படி போவேன். அதனாலே நான் காயும் என்னுடைய டவுசரை தண்ணீரில் நிற்கும் அண்ணன்கிட்டே கொடுத்தேன். நான் அதை கட்டிகொண்டு தான் கரைக்கு வந்தார். இது அவரோட தவறு இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம். சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து இந்த நியாத்தை கேட்கும்போது அந்த தாயினுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்? இப்படி இருக்கும் காலத்தில் மகன்கள் இருவரும் நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் தன்னுடைய குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட தன் ஒரு மகன்களுக்கும் மூன்று நேரமும் வயிறார சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று அந்த தாய் மனம் வேதனை படுவதை அறிந்து இவர்களோட மன வேதனையே தன் தாயிடம் சொல்லாமல் நாங்கள் இருவரும் படித்தது போதும் என்று கெஞ்சி கேட்கின்றார்கள். இந்த வார்த்தையை கேட்ட தாய் மகன்களிடம் என்ன பதிலை சொல்லுவார்? ஆனாலும் தன் தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகன்கள் தன்படும் கஷ்டத்தை அறிந்து அவர்களே வேலைக்கு போவதாக சொல்லுகின்றார்களே என்று நினைத்து வேதனை படுகிறார்.
பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்
இந்த கால கட்டத்தில் சத்தியபாமா அவர்களின் குடும்ப நண்பர் (கேரளா) திரு. நாராயணன் என்பவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் முக்கியஸ்தராக பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சத்தியபாமா அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்கள் நாராயணனிடம் தன்னுடைய பையன்களை பற்றி விபரமாக சொல்லுகிறார். எல்லா விபரத்தையும் கேட்ட நாராயணன் இவ்வளவு கஷ்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. அதனாலே பையன்கள் இருவரும் நல்லா அழகாக இருக்கின்றார்கள். இவர்களை நாடக கம்பெனியில் நான் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி செல்கின்றார். ஒரு வாரம் கழித்து பையன்களை கம்பெனியில் சேர்க்க அழைத்து செல்ல வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்களிடம் கம்பெனியின் விதிமுறைகளை விளக்கமாக எடுத்து செல்லுகிறார். கம்பெனியின் விதிமுறை யார் எந்த வேலைக்கு சேர்ந்தாலும் கம்பெனியிலே அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிக்ள, தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சம்பளம் உடனே போடமாட்டார்கள். பையன்களுடைய திறமையை அறிந்து அவர்கள் நடப்புக்கு உள்ளவர்களா, அல்லது எடுபடி வேலைக்கு தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடிவுக்கு வருவார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்காமல் பையன்களை உடனே என்னுடன் அனுப்புங்கள், இப்போது அவர்கள் நல்லா சாப்பிட்டு உடல் வளர்ச்சி அடைய கூடியவர்கள் அவர்களுக்கு இப்போது முக்கியம் உணவு தான் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நாராயணன் பையன்கள் இருவரையும் அழைத்து இந்த விவரத்தை சொல்லுகிறார். இதை கேட்ட பையன்கள் இருவரும் அம்மாவுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறார்கள்.
உடனே நாராயணன் சத்தியபாமா அவர்களை அழைத்து அம்மா உங்கள் பையன்களை அழைத்து உங்க சம்மதத்தை சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்ட சத்தியபாமா அவர்கள் பையன்களை அழைத்து மகன்களே நீங்கள் வேலைக்கு போவதாக சொன்னீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உங்களோட அபிப்ராயம் என்ன மகன்களே என்று கேட்கின்றார்கள். அம்மா நாங்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றோம். நாராயணன் மாமா சொன்ன விவரங்களை நாங்கள் நன்றாக கேட்டு கொண்டோ ம். ஆனால் நாங்கள் உங்களை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது. இந்த வார்த்தையை கேட்ட தாய் இரு மகன்களையும் கட்டி கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். எதுவுமே சொல்லாமல் பிள்ளைகளும் அம்மாவை கட்டி பிடித்து அழுகின்றார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த நாராயணன் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்து செல்கின்றார். பாண்டிச்சேரியை சேர்ந்த காரைக்கால் என்ற ஊரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்த கம்பெனியால் நடத்தும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பகுதி சிறுவர்கள்தான் இந்நிலையில் நாராயணன் அழைத்துச் சென்ற இந்த இரு சிறுவர்களையும் கம்பெனி முதலாளி பார்த்து விட்டு பையன்கள் நன்றாக நல்ல நிறமாக, அழகாக இருக்கின்றார்கள் இவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி நடிகர்களுக்கான பயிற்சி கூடத்திற்கு அனுப்புகிறார்.
குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்
mgrஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கிறார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி mgrக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.
என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் mgr அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது mgrக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.
உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்கிறார்
mgrஇதில் mgr அவர்கள் அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்கிறார். இப்படி இருக்கும் போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு mgr அவருக்கு என்ன கற்று கொள்ள வருகின்றதோ அதை கற்று கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள். முதலாளி mgrக்கு உடற்பயிற்சி செய்வதும், அடுத்து சண்டை பயிற்சியையும் செய்வதிலும் மிக வேகமாக, கவனமாகவும் வாத்தியார் அவர்களிடம் பிரம்பு அடி வாங்காமல் செய்வார், நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதை விடாமல் செய்து கொண்டுவந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வலம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டு கொண்டார்.
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாட வரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அண்ணன் சொல்கிறார் தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவைகளை விடாமல் ஒழுங்காக கற்று கொள். அதோடு அவர் நிறுத்தாமல் இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை அதை பற்றி நான் என்ன கவலைபட்டு கொண்டா இருக்கின்றேன். காலைக்காலில் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்து கொண்டு வரும், ஒரு நாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காலுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக mgrக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு இது தினமும் mgr அவருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.
7வது மகனாக நாடகத்தில்
இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யபட்டு வந்தது. அந்த காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள். சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும்போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது, மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணென்யை லைட்களும் தான் எங்கும் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும் நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொள்ளும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்து விட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்து போய்விடுமா என்று கிணற்றை நோக்கி பார்க்கிறார்.
கதையில் அமைப்பின் படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார் அதன் படி தன்னுடைய குழந்தைகளை கட்டி அழுகிறார். இந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற பொது மக்களிடமிருந்து ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள், இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார். 7வது குழந்தையாக mgr தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியை பார்த்த mgr தன்னிடம் அந்த தாய் வரும் போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கம் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார் இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவதும் அழ வைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள். அந்த அடியில் பலி தாங்க முடியாமல் mgr அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.
பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார்
இந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் மிக ஆரவாரத்தோடு கை தட்டினார்கள். அதில் சில பெண்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு இந்த பையனை கொன்றுவிடாதேடி என்று உணர்ச்சிவசபட்டு கதறினார்கள். பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார் உடனே mgrரை அழைத்து கொண்டு உள்ளே சென்று செல்லமாக கட்டி அனைத்து கொண்டு ராமசந்திரா நீ ரொம்ப நன்றாக நடித்து விட்டாய் என்று தான் பிரம்பால் அடித்த இடத்தை கையில் தடவி கொண்டு மிக மிக சந்தோஷபடுகின்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் மிக அற்புதமாக நடித்து பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற்று கம்பெனிக்கு ஒரு நல்ல பெயரை எடுத்தது கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.
இலங்கை சிங்கள நாட்டிலே பிறந்து இந்திய நாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி பயின்று (ஆங்கிலேயர் காலத்தில்) பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாண்டிச்சேரி, காரைக்காலில் மிக அருமையாக நடித்த எம்.ஜி.ஆருக்கு பொதுமக்களின் கைதட்டலும், ஆசியும் கிடைத்தது. அதோடு மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியாரின் பாராட்டும் கிடைத்தது. இந்த செய்தியை கேட்ட தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகனின் வளர்ச்சியை பார்த்து அளவற்ற அளவுக்கு சந்தோஷப்பட்டு தான் 10 மாதம் சுமந்த பெற்ற தாய் அந்த மகனின் வளர்ச்சி நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மிக பெருமைபடுகிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் நாராயணன் வழியாக தான் இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைக்கின்றார். வீட்டிற்கு வந்த மகன்களை பார்த்து சத்திய தாய் மகன்களை அனைத்து கட்டி பிடித்து ஆனந்தப்படுகிறார். அடுத்த நாள் தன் இளைய மகன் ராமச்சந்திரனை பார்த்து ஏன் அப்பா இன்னும் மெலிந்து போய் இருக்கிறாய் என்று சொல்லி கவலைப்படுகிறார், இதை எம்.ஜி.ஆர் பொருட்படுத்தவில்லை.
ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்
இந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.
சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.
பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.
முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.
போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும்
இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார்.
உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட mgr அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை mgr அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை mgr கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே mgr அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார்.
இருந்தாலும் mgrக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு mgr அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட mgr அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட mgr சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை mgr சில நேரங்களில் கேட்டு இருக்கிறார்.
அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட mgr அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது.
மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற mgrரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.
அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கிறார். உடனே mgr ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு mgr அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கிடைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள்.
நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் p.u. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் t.s. பாலையா, m.கந்தசாமிபிள்ளை, mgr, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், mgrக்கும் mgcக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் mgrக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், mgr மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு mgr இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார்.
முதன் முதலில் பேசிய வசனம்
இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் mgr மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் mgrக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். Mgrக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. Mgr சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை mgrக்கு உண்டு. என்ன செய்வது mgr சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் “மகாபாரதம்” முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. Mgrக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.
Mgrக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். Mgrக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் p.u. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு mgr தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் mgr மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் mgr, p.u. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் mgrக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.
ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் p.u. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக mgrரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, mgrக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து mgr அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை mgr பார்த்துவிட்டார். Mgrக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று mgr முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். Mgr நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு p.u. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே p.u. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த mgr மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார்.
தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் p.u. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா mgrரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் mgr தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் mgr ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் mgrரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு mgrருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் mgr அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் mgrரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் mgrக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் m.k. ராதா அவர்களும் mgrக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள்.
முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் mgr அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் mgr நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது mgrக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது.
Mgr அவர்களும் p.u. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த mgr, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, p.u. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.
P.u.c. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.
நாடக கம்பெனி சென்னை விஜயம்
பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க mgr, mgcக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் mgrக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது.
17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் mgr மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. Mgr 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் p.u. சின்னப்பா, m.k. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார்.
மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100அனுப்பிவைகொடுத்து வழி அனுப்பிவைக்கிறார்.( தொடரும்).........
-
மதுவிலக்கு - தமிழ்நாட்டுக்குப் பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் பிரதாப் சந்திர சுந்தர் - அவர்கள் , நான்கு ஆண்டுகளில் , பூரண மதுவிலக்கை அமல் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.
மூன்று நாள் "மதுவிலக்கு"' கருத்தரங்கு ஒன்றினைத் துவக்கி வைத்துப் பேசுகையில் , மதுவிலக்கை அமல் செய்ததற்குத் தமிழ் நாட்டைப் பாராட்டியதோடு , ஏனைய மாநிலங் களும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டு மென்று வலியுறுத்தினார்.
மதுவிலக்கினை அமல்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல் வருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி கூற - தாம் கடமைப்பட்டிருப்பதாகவும் மத்திய கல்வி - அமைச்சர் குறிப்பிட்டார்.
சில புதிய சட்டங்களைத் தமிழக முதல்வர் ' நிறைவேற்றியிருப்பதன் மூலம் மதுவிலக்கு அமல் செய்யப்படுவதை மேலும் தீவிரப்படுத்தி -யிருப்பதை மத்திய கல்வி அமைச்சர் சுட்டிக் கொட்டினார்.
நன்றி : ' வெஸ்கோஸ்ட் டைம்ஸ் ' 30.03.1979.........
-
அரசு ஊழியர்க்குப் புதிய சலுகைகள்!
அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 28 ஆக உயர்த்தப்படுகிறது.
வருங்கால சேமிப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் - ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அரசு ஊழியர்களின் வருங்கால சேமிப்பு நிதிக்கு இப்போது ஏழரை சதவீதம் வட்டி தரப்படுகிறது. இப்போது முதல், 25 ஆயிரம் ரூபாய் வரையில் இந்தப் பணத்திற்கு 8 சதவீத வட்டி அளிக்கப்படும்.
தானாக ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் இன்றி அவர்களுக்குச் சேர வேண்டிய ஓய்வு ஊதியத்தின் மொத்தத் தொகைபில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை உடனடியாக அளிப்பது என்றும் அரசு முடிவு செய்திருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட வீடுகள் வாங்கு வதற்காக இருந்தால் தான் கடன் கொடுக்கப்படும் என்பது மாற்றப்படுகிறது . இனி, முப்பது ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட முதல் தரமான வீடுகளுக்கும் கடன் கொடுக்கப்படும்.
மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவர்
(20-09-1979- ல் , தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசியது.).........
-
நம்பிக்கை விடியல் கீதம்
ஏழையரின் இதய வானில் ஒளி
ஏற்றி வைத்த சூரியன் நீ !
வாழையென வைத்திழந்தும் நானும்
வளர் பிறை தான் ; சந்திரன் நீ !
காளையரின் வழிப்பயணம் ; திசை
காட்டுவதால் துருவ விண்மீன் !
நாளையவர் வாழ்வினுக்கோர் நல்ல
நாள்; நம்பிக்கை விடியல் கீதம்!
விதைத்தவன் ; அறுத்துச் சேர்த்தே
விளைச்சலால் உள்ளம் சோர்ந்தோன்
சிதைத்திடும் கடனின் பின்னல்
சிக்கலைத் தீர்த்தாய் வாழி !
கதைப்பவர் கதைத்துப் பார்த்தார்;
கலகமும் மூட்டிப் பார்த்தார்!
நினைத்ததை முடிப்பவன் நீ!
பெரு நெருப்பினைச் சருகா மூடும்?
நடை பயிலக் காலிரண்டு. உலகை
நலம் பார்க்கக் கண்ணிரண்டு!
உடை கூட அணிகையிலே இரண்;
உழைப்பதற்கோ கையிரண்டு!
தடையெதற்கு சைக்கிளிலே இருவருக்கு?
தக்க வழிப் பயண மன்றோ ஏழையர்க்கு?
விடை யெதற்கு ? கேள்விக்கே;
ஆட்சி வினாக்குறிகள் நிமிர்வதற்கே ! ....
குளிருக்குப் போர்வை யானாய், விழி
குருடர்க்குப் பார்வை யானாய்!
நலிவிற்குச் செல்வ மானாய்; இந்நாட்டிற்கே
முதல்வனானாய் ! பொலிவுக்குப் புதையலானாய் ; உயர்
புரட்சிக்கோ தலைவனானாய்!
அழிவிற்கோர் ஆக்கமானாய்;
நல்ஆட்சிக் கோ வாழி ! வாழி ! ...
---கவிஞர் முத்துலிங்கம் .........
-
"எம்.ஜி.ஆரின் அக்கறை"
m.g.r. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.
1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:
‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.
மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’
ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்..........
-
எம்.ஜி.ஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்..........
-
எம்ஜிஆரின் வெற்றியை சகிக்க முடியாத ஒரு சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது என்ற விஷத்தை பலருக்கும் விதைத்து கொண்டிருந்த காலத்தில் என்னிடமும் அதை சொன்ன போது அருகிலிருந்த ஒரு பெரியவர் அவருக்கா நடிக்க தெரியாது போடா! போய் "பாசம்" படத்தை பார்த்து விட்டு சொல்! என்றார்.
அவர் என்னிடமும் தம்பி "பாசம்" படத்தை பாருங்கள். அவர் நடிப்பின் ஆழத்தை உணர்ந்து
கொள்ளலாம் என்றார்.
எனக்கு அப்போதே "பாசம்" படத்தின் மீது ஒரு வித லயிப்பு உண்டாகி விட்டது. ஆனால் அச்சமயம் "பாசம்" சிறிது காலமாக திரையிடாமல் இருந்தார்கள். திடீரென்று 1967 வாக்கில் மேளம் அடித்து கொண்டு ஒரு விளம்பர வண்டி வருவதை பார்த்தவுடன் ஏதோ புதிய படம் வெளியாகிறது போலும் என்று நினைத்து வாசலுக்கு ஓடினேன்.
வாசலை பார்த்தால் ஜோஸப் தியேட்டர் விளம்பர வண்டி மேள தாள சத்தத்துடன் நோட்டீஸையும் விநியோகித்துக் கொண்டு சென்றதை கண்டவுடன் என்ன படம் என்று பார்த்தால் "பாசம்".
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டேன். உடனே பார்த்து விடலாம் என நினைத்து நண்பர்களை அழைத்தேன். அவர்கள் இரவுக் காட்சிக்கு போகலாம் என்றனர்.
அன்று சனிக்கிழமை என்னடா புதுப்படத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சிரமப்பட்டு டிக்கெட்டை எடுத்து தியேட்டருக்குள் அமர்ந்து படத்தை பார்த்தோம். எந்தப் படத்திற்கும் கலங்காத நான் முதன்முதலாக "பாசத்தை" பார்த்து மனம் கனத்து வெளி வந்தேன். அப்படியொரு படம்
வேறு எந்த நடிகனாயிருந்தாலும் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த இயலாது.
சில நடிகர்கள் கத்தி கதறி மிகை நடிப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்து சென்று எல்லையில்லா தொல்லை கொடுத்திருப்பார்கள். மிகை நடிப்புக்கு வாய்ப்பிருந்தும் இயற்கையான நடிப்பின் மூலம் நம்மை கசக்கி பிழிந்திருப்பார் புரட்சி நடிகர். எம்ஜிஆரின் சோகத்தை நம்மால் சகிக்க முடியுமா? அதுவும் எம்ஜிஆர் பெண் கேட்டு அசோகன் மறுக்கும் போது நமக்குள் இனம் புரியாத வேதனை புகுந்து விடும்.
ஆனால் மற்றவர்களுக்கு
குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு அனாதைகளுக்கு அவர் உதவும் பாங்கு, சொன்ன சொல்லை காப்பாறுவது இது போன்ற அவரின் நற்குணங்கள் நமக்கும் சற்று ஊடுருவ ஆரம்பித்து விடுகின்றன. பாடல்களில் அப்படியொரு இனிமை. அதிலும் "ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி". பாடல் "சிங்கார வேலனுக்கு" அடுத்தபடியாக என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
"உறவு சொல்ல ஒருவனின்றி வாழ்பவன்" சுசீலா குரலில் ஜொலித்தது. தேர் ஏது! சிலை ஏது! பாடல் சோகமயமாக தொடங்கினாலும் தலைவரைக் கண்டதும் வருகின்ற உற்சாகம் நாயகிக்கு மட்டுமல்ல நமக்கும் தொற்றிக் கொள்கிறது. "பால் வண்ணம்" பாடல் இன்று வரை எவர்கிரீன் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பாடலின் இனிமையை பறை சாற்றுகிறது.
"உலகம் பிறந்தது எனக்காக" பாடல் ஒரு புதிய உற்சாகத்தை நமக்குள் விதைத்ததை கண்டேன். அந்த அருமையான பாடலுக்கு தலைவரின்
முகபாபம் அற்புதமாக இருக்கும். "மாலையும் இரவும்" பாடல் இப்ப கேட்டாலும் அனைத்தையும் மறந்து பாடலின் இனிமையில் மூழ்கி விடுவேன். கிளைமாக்ஸ் காட்சியில்
எம்ஜிஆர் உயிர் பிரிவது தாளாத சோகத்தை நமக்குள் ஊன்றி விடுகிறது. அதனால் மீண்டும் பார்க்கும் எண்ணம் வராவிட்டாலும் முதலில் பார்த்த காட்சியே இன்று வரை கண்களை விட்டு அகல மறுக்கிறது.
"பாசம்" படத்தின் கதையை எம்ஜிஆரிடம். ராமண்ணா சொன்னதும் எம்ஜிஆர் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை படத்தின் கதை அற்புதமாக இருந்தாலும் இறுதி காட்சியில் நான் இறப்பது போல நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஆனால் ராமண்ணா விடவில்லை எனக்கு நம்பிக்கை இருக்கிறது கதையின் மேல் என்றார். உடனே தலைவர் உங்களுக்காக நடித்து கொடுக்கிறேன் ஆனால் படத்தின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி நடித்தார்.
வேறு சில நடிகர்களின் மரண காட்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் எம்ஜிஆர் படத்தில் மட்டும் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் படத்தையே கை விட்டு விடுகிறார்கள். இருப்பினும் ஒரு தடவை அவர்கள் பார்த்ததே படத்தின் சுமாரான வெற்றிக்கு வித்திட்டது. மறு வெளியீட்டிலும் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்கள் மனதிலும் நிரந்தரமான இடம் பிடித்தது எனலாம்.
1962 ஆக 31 ம் தேதி வெளியான படம். பெண்களை மிகவும் ஈர்த்த படம் என்றுதான் சொல்ல வேண்டும்.படத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகம் வந்ததாக சொன்னார்கள். படம் சென்னையில் பாரகன் மகாராணி மகாலட்சுமியில்
வெளியாகி 84 நாட்கள் ஓடியது. தமிழகத்தின் மற்ற ஊர்களிலும்
அதிகபட்சமாக 84 நாட்கள் வரை ஓடி மிதமான வெற்றியை பதிவு செய்தது..........
-
கேரளாவின் சூப்பர் ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆர்.! -பிரபல ஒளிப்பதிவாளர் புகழாரம் !
மணிரத்தினம் இயக்கிய ரோஜா, இருவர், ராவணன், உயிரே (இந்தியில்
'தில்சே') மற்றும் விஜய் நடித்த 'துப்பாக்கி', ரஜினி நடித்த 'தர்பார்' உட்பட
தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்தவர், சில படங்களை இயக்கியவர் என்று பன்முகம் கொண்டவராய் தேசிய அளவில் புகழ் பெற்ற, விருதுகள் பல பெற்றவர் சந்தோஷ் சிவன்.
இன்று (13 -09 -2020) சந்தோஷ் சிவனின் பேட்டி 'டைம்ஸ் ஆப் இந்தியா' (Times of India) நாளிதழில் இடம் பெற்றுள்ளது. அதில் எம்.ஜி.ஆர். படங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
"நான் 70' களில் எம்.ஜி.ஆரது பல படங்களை பார்த்து ரசித்தது இன்றும் நினைவில் இருக்கின்றது.
அன்றைக்கு மலையாளத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் கிடையாது. அன்றைய மலையாளத்தின் பெரும்பகுதி ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே"
Ithayakkani S Vijayan.........
-
#புரட்சி_தலைவர்
#ஏழைகளின்_இதயம்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா
#டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுகிழமை_காலை_வணக்கம்...
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.
‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.
எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’
‘‘இதோ இங்கே நிக்கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண்பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.
கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.
புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங்களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்தவர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.
அப்போது, சட்டப்பேரவை நடந்து
கொண்டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீயரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.
முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப்பட்ட உதவியாளரை நேற்றே பணியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.
தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.
சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.
உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந்தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை.
பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…
‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.
#பதவி_வரும்போது_பணிவும்
#வரவேண்டும்_துணிவும்_வரவேண்டும்.. #பாதை_தவறாமல்_பண்பு_குறையாமல் #என்ற_வரிகள்_மூலம்_வாழ்ந்து #காட்டியவர்_நம்_தலைவர்...
அன்புடன்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*26/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது ,ஒரு முறை தனது பழைய நாடக துறை நண்பரான டி.வி.நாராயணசாமியை இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கிறார் . எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்தபோது ,அவரது நாடகங்களில் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா என்பவர் தி.மு.க.வின் தீவிரமான தொண்டர் அதனால் .அவர் அ தி.மு.க.வில் சேரவில்லை . ஆனாலும் அவர் நலிந்து போய் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். இயல் இசை நாடக மன்ற தலைவரான டி.வி.நாராயணசாமியிடம் ,கிருஷ்ணாவிற்கு தமிழக அரசின் குடும்ப கட்டுப்பாடுபிரச்சார* விளம்பர நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்க சொல்லி அவரது குடும்பத்தை வாழ வைத்தார் .* அது மட்டுமல்ல திரு.கிருஷ்ணா அவர்கள் சேலம் அருகே ஒரு நாடகத்தில் நடிக்கும்போது மாரடைப்பால் காலமானார் . இந்த செய்தியை அப்போது மதுரையில் இருந்த எம்.ஜி.ஆர். அறிந்து டி.வி.நாராயணசாமியை தொடர்பு கொண்டு அவர்* உடலை**நல்லபடியாக* அடக்கம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டு கொண்டார் .அதன்பின் திரு.கிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு* எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறியதோடு ,அவரது மகனுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை கூட டெக்னீஷியன் வேலை ஒதுக்கி தந்தார்* என்பதுதான் மாற்று கட்சி தோழராக இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை மதித்து மரியாதை செய்ததோடு ,அவர் குடும்பத்தை வாழ வைத்து வழிகாட்டிய தெய்வமானார் .
ஒரு நாள் எம்.ஜி.ஆர். காரில் கிண்டி பகுதியில் செல்லும்போது கார் டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது . காரை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் பஞ்சர் ஓட்டும் கடையை தேடும் சமயம் , தானாகவே ஒரு நபர் வந்து பஞ்சர் ஆனா டயரை மாற்றிவிட்டு பழுது பார்த்து சரி செய்கிறார் . வேலை முடிந்ததும் எம்.ஜி.ஆர். அவரை பற்றி விசாரிக்கிறார் .நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள். உங்கள் கடை எங்குள்ளது என்று கேட்க ,அவர் நான் இந்த பகுதியில்* சைக்கிள் பஞ்சர்* கடை வைத்துள்ளேன்.உங்கள் காரை கண்டதும் உங்கள் அவசரத்தை கருதி பழுது பார்க்க உடனே வந்துவிட்டேன் என்றார் . .நாளை என்னை ராமாவரம் தோட்டத்தில் வந்து பார் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்.*.அந்த நபர் மறுநாள் தோட்டத்தில் சென்று எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . அவருக்கு 20 சைக்கிள்கள் வாங்கி தந்து உதவுகிறார் எம்.ஜி.ஆர். அந்த நபர் எம்.ஜி.ஆரிடம் உங்கள் பெயரில் எம்.ஜி.ஆர். சைக்கிள் மார்ட் என்று ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்ல ,அதற்கு எம்.ஜி.ஆர். மறுப்பு தெரிவித்து என் பெயரில் கடை நடத்த கூடாது,அப்படியானால் தான் உங்களுக்கு இந்த உதவி கிடைக்கும் என்று*திட்டவட்டமாக சொல்லி அனுப்பி வைத்தார்*
எம்.ஜி.ஆர். மலையாளி, தமிழனல்ல என்றும், இந்தி திணிப்பு பற்றியும் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் போன்ற செய்திகள் தலை தூக்கிய காலம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் . இந்தி படங்களில் நடித்த நடிகர் நடிகைகள் சென்னைக்கு வரும்போதெல்லாம் நல்ல வரவேற்பு*அளிக்க தயங்கவில்லை .இந்தி பட நடிகர் நடிகைகள் நடிப்பை பெரிதும் மதித்தார் இப்படி பல சம்பவங்கள் உண்டு . எம்.ஜி.ஆர்.* ஒரு மொழி திணிப்பைத்தான் எதிர்த்தாரே தவிர மொழியை எதிர்க்கவில்லை என்பதற்கு சாட்சியாக நவரத்தினம் படத்தில் அவரே நடிகை ஜெரினா வகாப்புடன்* ஒரு இந்தி மொழி பாடலில் நடித்துள்ளார் .* .
புதிய பாடகர்கள், வேற்று மொழி பாடகர்களுக்கு எம்.ஜி.ஆர். எளிதில் வாய்ப்பு கொடுக்கமாட்டார் .அதற்கு பல காரணங்கள் உண்டு .குரல் ஒத்துபோகவேண்டும் .ரசிகர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்று பல விஷயங்கள் . ஒருமுறை ஒரு இசை அமைப்பாளர் ஒரு பாடகரை அறிமுகப்படுத்தி ,இவரை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ,உங்கள் படங்களில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார் .* அவரை பற்றி நன்கு விசாரித்துவிட்டு,அந்த இசை அமைப்பாளர் சென்ற பிறகு* எம்.ஜி.ஆர். ஒப்பனை அறைக்கு செல்கிறார் .*பின் தொடர்ந்து சென்ற அந்த பாடகர் ,எம்.ஜி.ஆரிடம், நான் ஒரு மலையாளி, நீங்கள் தயவுசெய்து என்னை ஆதரிக்க வேண்டும் .எனக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று சொன்னதும் , உடனே இந்த இடத்தை விட்டு ஓடி போய்விடுங்கள் .திரும்பி இந்த பக்கம் வந்துவிடாதீர்கள் .என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர். . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*
2.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*
3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*
4.எம்.ஜி.ஆர்.- மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
5.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -ரிக்ஷாக்காரன்*
6. எம்.ஜி.ஆர்.-ஜெரினா வஹாப்* - நவரத்தினம்*
7.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
-
தெரியுமா உங்களுக்கு தலைவர் நெஞ்சங்களே......
தலைவர் குண்டடி பட்டு கழுத்தில் கட்டுடன் படம் தமிழகம் முழுவதும் ஒட்ட பட....
வறண்டு கிடந்த திமுக அரசியல் களத்தில் வசந்தம் வீச காரணம் ஆன படம் இது.
அந்த படத்துக்கு அந்த பிரஸ் வாசலில் காத்து இருந்து 2000 படம் வாங்கி முதல் முதலாக தமிழகத்தில் தான் போட்டி இட்ட தொகுதி முழுவதும் ஒட்டி ஐய்யோ பாருங்கள் என்று அனுதாபம் தேடி கொண்ட முதல் நபர் வேறு யாரோ இல்லை அவர்தான்.
அன்று இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர்... இது என்ன படம் ஏதோ பாகிஸ்தான் நாட்டு போரில் ஈடுபட்டு ஏற்பட்ட குண்டு காயமா இது என்று கேலி செய்ய.
அமரர் அண்ணா அவர்கள் பதிலடியாக ஆமாம் இதுக்கு முன் எம்ஜிஆர் அவர்களை தெரியாதா... இந்த படம் மூலம் தான் விளம்பரம் எங்களுக்கு அவசியமா.
நீங்கள் சொன்ன படி ஒருவேளை அப்படி ஒரு யுத்தத்தில் அவர் இருந்து இருந்தால் அவர் கையில் துப்பாக்கி கொடுக்க பட்டு இருந்தால் அப்போதும் அவரே வெற்றி பெற்று இருப்பார் என்றார்.
ராதா அவர்கள் சுட்ட வழக்கில் அவர் சார்பில் ஆஜர் ஆனவர் என்.டி வானமாமலை என்ற அக்காலத்தில் புகழ் பெற்ற வக்கீல் ஆவார்.
அவர் என்ன சமுதாயம் ஜாதி என்று தேடமாட்டோம்.
தெரியுமா தலைவர் நெஞ்சங்களே...அரசு தரப்பு வக்கீல் ராதா அவர்கள் உபயோகித்து லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்ல.
ராதா அவரே குறுக்கிட்டு ஆமாம் சுட்ட நானும் சுடப்பட்ட அவரும் சாகாத போது இந்த மானம் கெட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் ஒரு கேடா என்றார்..
வழக்கு முடிந்து 7 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பில்...
அப்போது இருந்த ஒரு யாரிடம் நிருபர்கள் என்ன இப்படி ஒரு சம்பவம் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார்.
கூத்தாடியை கூத்தாடி ஒருவன் சுட்டு இருக்கான்..இதில் என் கருத்து என்ன வேண்டி கிடக்குது என்றார்..
அந்த கருத்தில் சுட்ட அவருக்கு மிகவும் வருத்தம்...அட இவரும் இப்படியா என்று சிறையில் இருந்த போது சிந்தனைகள் என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வருத்த படுகிறார்.
தெரியுமா உங்களுக்கு
இன்னும் தொடரும்.நன்றி..
அவர் துப்பாக்கி கொண்டு தலைவரை மட்டும் அல்ல அதற்கு முன்னால் என்.எஸ்.கே அவர்களிடமும் துப்பாக்கி காட்டி மிரட்ட அவர் சுதாகரித்து சமாதானம் ஆக அது ஒரு தனி சம்பவம்...........
-
பாவங்க கருணா நிதி!!
-----------------------------------
எம்.ஜி.ஆரிடம் அப்படியென்ன ஜோக்கடித்தார் கண்ணதாசன?
கருணா நிதிக்காக அப்படியென்ன பரிந்து பேசினார் எம்.ஜி.ஆர்??
பதிவுக்குள்ளே போனால் தெரிஞ்சுடப் போகுது--
கலைமாமணி வலம்புரி சோமனாதன்!
அந்த காலத்தில் பல படங்களுக்கு வசனம் எழுதியவர்!
துணையிருப்பாள் மீனாட்சி--லலிதா--சிகப்புக் கல் மூக்குத்தி--இப்படிப் பல படங்களுக்கு எழுதியவர் நாடகங்களும் எழுதியிருக்கிறார்--
அது எம்.ஜி.ஆர்,,தி.மு.கவில் சேர்ந்த காலக் கட்டம்!
அரசியலும்--திரையும் ஆரத் தழுவியிருந்த அக் காலக் கட்டத்தில்--
எம்.ஜி.ஆர்,,கருணா நிதி ,,கண்ணதாசன் மூவரும் ஒன்றாக இருந்த பீரியட்!
வலம்புரி சோமனாதனின் புதுமனைப் புகு விழாவுக்கு மூவரும் செல்வதாகப் பேசிக் கொண்டனர்.!
வலம்புரி சோமனாதனின் பொருளாதார நிலை அறிந்து,,ஆளுக்கு இரண்டாயிரம் என போட்டு,,மூவரும் ஒன்றாக அவரிடம் அளிக்க முடிவு செய்தனர்!
கவிஞர் கண்ணதாசன் முன்னாலேயே வந்துவிட,,எம்.ஜி.ஆரும் கருணா நிதியும் ஒன்றாக வருகின்றனர்!
கவரில் தன் பங்கு பரிசாக 2000 ரூபாயைப் போட்டுக் கொண்டே,,மற்ற இருவரிடமும் கவிஞர் கேட்க--
கருணா நிதிக்கும்,,தமக்குமாகச் சேர்த்து 4000 ரூவை எம்.ஜி.ஆர் நீட்ட--
விஷயத்தைப் புரிந்து கொண்ட கண்ணதாசன்,,நறுக்கென்றும் சுருக்கென்றும் கருணாவிடம் கேட்கிறார்--
ஏய்யா? தன் கையிலிருந்து ஒத்த ரூபா தவறிக் கூடக் கொடுத்துடக் கூடாதுன்னு,,வேலை மெனக்கெட்டு தோட்டத்துக்குப் போய் இவரோட ஒட்டிக் கொண்டு வந்தியா??
தன்னை மறந்து எம்.ஜி.ஆர் சிரித்து விடுகிறார்!
அப்போது இவர்களை வரவேற்க வந்த நம் சோமனாதன்,,எம்.ஜி.ஆரைப் பார்த்து--
காலையில் பெரியவர் சக்கரபாணி வந்து,,உங்க சார்புல பரிசு கொடுத்துட்டு வாழ்த்திட்டுப் போனதாலே நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன் என்று கூற--
இது வேறயா? என்று அடிக்குரலில் எம்.ஜி.ஆரிடம் கண்ணதாசன் கேட்கவும்--
சங்கடத்தில் தவிக்கிறார் எம்.ஜி.ஆர்??
அதாவது,,காலையிலேயே தன் அண்ணா மூலம் 10000 பரிசுப் பணம் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்!!
தனிமையில் எம்.ஜி.ஆர்,,கண்ணதாசனிடம்--
என்னதான் காமெடி என்றாலும்,,முகத்துக்கு நேராக இப்படி சொல்லிட்டீங்களே,,கலைஞருக்கு வருத்தமாக இருக்காதா என்று கேட்க--
அதற்குக் கவிஞர் சொன்ன பதிலால் மீண்டும் பலமாக சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்---
அட அப்படி வருத்தப்பட்டு,,ரோஷம் வந்து அவரு கொடுக்கற புத்திய வளர்த்துக்க மாட்டாரு.,,நீங்க பயப்பாடாதீங்க????
எனக்குத் தெரிந்து ஒரு பிச்சைக்காரனுக்கு நாலணா கூட தர்மம் செஞ்சதில்லை கருணா நிதி--
இது,,பின்னால்--1976இல் கவிஞர் ,,கருணா நிதி பற்றி பகிரங்கமாக உரைத்தது
மற்றபடி--
கருணா நிதி மாற மாட்டார் என்று கவிஞர் அடித்துச் சொல்லிவிட்டதால்--
நகைச்சுவை--அதற்கு-
நகைச்சு---வை!!!.........
-
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.
ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
MGR's Anbe Vaa Tamil Review 4
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.
என்றும் அன்புடன்
N.H. Narasimma Prasad
Thava:
@@ கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி @@
நல்ல பார்வை....
இந்த படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல், சில வருடங்களுக்கு முன்பு பாடல்களை கேட்ட போதே உருவாகியது..படத்தை டவுன்லோடு போட்டு இதுவரை ஏறக்குறைய 4 முறை பார்த்திருப்பேன்.அதுவரை என்னக்கவர்ந்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துவிட்டேன்..ரொம்ப அழகான படம்..நான் பார்த்த சிறந்த ரொமாண்டிக் காமெடி படங்களில் இதற்கும் ஒரு இடம் உண்டு.அருமையான விமர்சனம்.மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன்:
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல்களும் அப்படியே... அறியாத தகவல்களுக்கும் நன்றி...
Good citizen:
விமர்சனம் அருமை, சில தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டோம்,, ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நான் மட்டுமல்ல மற்றவர்களும் உள்ளே உள்ள லிங்கில் அதன் ஒரிஜினலை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்
http://www.youtube.com/watch?v=Cb_xsOGMtiE
ராஜ்:
மற்றும் ஒரு வித்தியாசமான பதிவு உங்களிடம் இருந்தது. அதற்கு என் நன்றி....நீங்கள் ஏற்கனவே "Come Septembe" படத்தை பற்றி வேறு எழுதி உள்ளீர்கள். அதையும் படித்து உள்ளேன்.
"அன்பே வா" எவர்கிரீன் மூவி. எனக்கு நினைவு தெரிந்து உடன் எனது அப்பாவுடன் பார்த்த முதல் திரைப்படம். மறக்க முடியாத படம்..
நீங்கள் தீவிர எம்.ஜி.யார் ரசிகர் போல் தெரிகிறது. படத்தை அனுபவித்தது எழுதி உள்ளீர்கள். அந்த காலத்தில் தலைவர் ஆடிய டான்ஸ் ரசித்து பார்த்தேன்.
வருண்:
To me, the movie was dragged after 80% completion. The last "anbe vaa" repeated song in a "fast tune" was intolerable to me. And the climax was boring. Other than that that was a good entertainer, great songs and comedy was good. I could not appreciate the fights in this movie as this movie supposed to be a love story
@ராஜ்:
எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும்.
அன்றைய கதாநாயகர்கள் யாருக்குமே சரியாக நடனம் ஆட வராது. அந்த வகையில் புரட்சித் தலைவர் ஆடும் நடனம் எவ்வளவோ தேவல.
@வருண்:
Thanking for Visiting my Blog Varun. Whatever it is, MGR's Anbe vaa Movie is a Best Romantic Comedy Movie Which i ever seen.
sajirathan:
தலைவர் பற்றிய ஒரு பதிவு எழுதி எங்களை(தலைவரின் இக்கால இளம் ரசிகர்களை) சந்தோசப்படுத்திட்டீங்க.. நன்றி பிரசாத். எத்தனை தடவை வேணும்னாலும் இந்த படத்தை பார்க்கலாம்.. எல்லா பாடல்களுமே அருமை.. இதில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலை மிகுந்த கஷ்டப்பட்டு இசையமைத்ததாக ஒருமுறை எம்.எஸ்.வி சொன்னாராம்..........
-
டாக்டர் எம்.ஜி.ஆர் அறக் கட்டளை -1
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி கலை அறக்கட்டளைத் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 7.09.1984 அன்று காலை நாதசுர இசையுடன் தொடங்கியது.
சங்கர்-கணேஷ் இசை அமைக்கவும், அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், எம்.எல்.சி., ஆகியோர் மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து எழுதிய "புரட்சித்தலைவர் புகழ்மாலைப் பாடல்களை" திரு. மலேசியா வாசுதேவன், திருமதி வாணிஜெயராம் ஆகியோர் பாடினார்கள்.
மாண்புமிகு சட்டமன்றப்பேரவைத் தலைவர் திரு க.இராசாராம் அவர்கள் வரவேற்றுப் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக் கட்டளை சார்பில்,கல்வி,கலை, விஞ்ஞானம் பற்றிய சொற்பொழிவுகள் தாயகத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தேர்வு செய்யபட்ட அறிஞர்களால் நடத்தப்படும், பட்ட மேற்படிப்பில் முதல் இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு இதிலிருந்து நான்கு பேருக்குப் பரிசுகள் வழங் கப்படும் , எம்.ஜி.ஆரின் கொள்கைகளைப் பரப்புவது இந்த கட்டளையின் நோக்கமாகும். தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் . ஆட்சியில் தான் கல்வி மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
"ரூபாய் 35 ஆயிரத்தில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட் டுள்ளது” என்று கூறினார் . மேதகு ஆளுநர் திரு.எஸ்.எல்.குரானா அவர்கள் தலைமை தாங்கிப் பேசுகையில் கூறியதாவது:
"தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறுவயதிலேயே கலைத் துறைக்கு வந்தவர் . ஏழை எளியவர்கட்கு உதவி செய்துக்கூடிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர் . பசி என்றால் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவர் முதல்வரானதும் பசிப்பிணி தீர்க்க, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
"தேசிய ஒருமைப்பாட்டிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் மகத்தானவை. சீனப் போரின்போது அண்ணா எந்த நிலையை ஏற்றுக் கொண்டாரோ அந்த நிலையை எம்.ஜி.ஆர் . பின் பற்றுகிறார் . இந்த அறக்கட்டளை அவரது நோக்கங்களைப் பூர்த்தி செய்யும்"
தொடரும் ...............
-
அண்ணா மாவட்டம் - வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்
மக்களுக்கும், அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைப் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும். அதற்கு முதல்படியாக நிர்வாக நிலையங்கள் மக்களுக்கு எளிதில் எட்டக்கூடியதாக இருக் திடுவது தேவை. அதைக் கருத்தில் கொண்டே பெரிய மாவட்டங்களைச் சீரமைத்து, புதிய மாவட்டங்களை உருவாக்கிடவும். உருவாக்குகிற புதிய மாவட்டங்களுக்கு தமிழகச் சான்றோர் பெயர் சூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் - திண்டுக்கல்லைத் தலைாகராகக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரைத் தாங்கிய வண்ணம் அண்ணா மாவட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி[15/9/1985] அன்று உருவாகிறது.
திண்டுக்கல் பகுதி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 1884 வரை நூறாண்டுக் காலத் திற்குத் தனி மாவட்டமாகவே இருந்து வந்தது. 1885 ஆம் ஆண்டு முதல் கொண்டுதான் மதுரையும், திண்டுக்கல் பகுதியும் ஒன்றாக இணைக்கப்பட்டன.
சரியாக 100 ஆண்டுகள் கழித்து 1985 ல் மீண்டும் திண்டுக்கல் பகுதி தனி நிர்வாக மாவட்டமாக அமைவது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும்.
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் செயல்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு பணியாற்றி வரும் எங்களுக்கு, மக்கள் தங்கள் மகத்தான ஆதரவை உறுதி செய்து போறிஞர் அண்ணாவின் வழியில் உண்மையாக நடை போடுகிறவர்கள் அங்கீகரித்து உலகறியச் செய்த பெருலம திண்டுக்கல் பகுதிக்கு உண்டு என்பதால் திண்டுக்கல்லைத் தலைநகராகக் கொண்டு அண்ணா மாவட்டம் அமைவதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணாவின் பெயரால் அமைந்திடும் இந்தப் புதிய மாவட்டம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட என் இனிய நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவர்
[அன்று தமிழகத்தின் 19-வது மாவட்டம் "அண்ணா மாவட்டம்"].........
-
அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016
24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........
-
சிவாஜி ரசிகர்களின் புலனாய்வுக்கு. நமது தீர்க்கமான பதில்
-------------------------------------------------------------
எம்ஜிஆர் படங்களை போல சிவாஜி படங்களும் வசூல் செய்ய சிவாஜி ரசிகர்கள் பேராசை
பட்டால் போதுமா? அதற்கான முயற்சியை சிவாஜி செய்ய வேண்டாமா?
எம்ஜிஆரை பொறுத்த வரை சிறு
வயதிலிருந்தே சினிமாவுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டார். குதிரை ஏற்றம், சிலம்பாட்டம், வாள் பயிற்சி, உடல் கட்டமைப்பு அது போக திரைத்துரை சம்பந்தப்பட்ட அத்தனை நுணுக்கங்களையும், கலைகளையும் தன் வாழ்நாளில் பெரும்பகுதி செலவு செய்து கற்றுக் கொண்டார்.
ஹாலிவுட் படங்களுக்கு கதாநாயகனாக நடிக்க உள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றதோடு ஹாலிவுட் கலைஞர்களைப் போல இயல்பான நடிப்பிலும் சிறந்து விளங்கினார். உதாரணம் "சர்வாதிகாரி".
இவற்றில் எந்த தகுதியும் இல்லாமல் இவர் காட்டும் அஷ்ட கோணல் நடிப்புக்கு உள்ளூரிலே கூட படம் பார்க்க ஆளில்லாமல் முதல் நாளே வாய்பிளந்து நின்ற காட்சிகள் அநேகம்.
யானையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் தானும் ஒரு யானையாக இருக்க வேண்டும். சிறு பூனையாய் இருந்து கொண்டு யானையை திருமணம் செய்ய முடியாது என்ற அடிப்படை உண்மை கூட புரியவில்லையா?அந்த மிகை நடிப்பை மட்டும் வைத்துக் கொண்டு நடிகப் பேரரசரிடம் மோத முடியுமா? சிவாஜிபோல் நடிப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் எம்ஜிஆர் போல் நடிப்பதற்கோ நடனம் ஆடுவதற்கோ அவரைப்போல் சண்டை காட்சிகளில் வேகமான மூவ்மென்ட் கொடுப்பதற்கோ யாராலும் முடியாது.
சிவாஜியை விட சிறப்பாக இயல்பாக நடித்த நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தோம்.
ஆனால் இன்று வரை அவருக்கு மாற்று கிடையாது. ஆனால் சிவாஜியின் மிகை நடிப்பை ஒரு சிறு பெண் நடிகை ஜோதிகா நடித்ததால்
அவருக்கு "பொம்பள சிவாஜி" என்று பெயர் வைத்து சிவாஜியை அசிங்கப் படுத்தினார்கள் இந்தக்கால ரசிகர்கள்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக மிகையாக நடித்து விட்டால் டேய்! இவன் சிவாஜி மாதிரி
நடிக்கிறாண்டா? என்று சிவாஜி நடிப்பை இழிவு படுத்துவதை கண்டிருக்கிறோம். எம்ஜிஆர் மாதிரி குதிரை ஏறத் தெரியாது. அப்படி ஏற்றி விட்டாலும் லாவகமாக அமர தெரியாமல் சற்று நேரத்திலேயே குதிரை வலி தாங்காமல் நெளிவதை "திருமால் பெருமை", "ராஜ ராஜ சோழன்", "சித்ரா பெளர்ணமி." போன்ற படங்களில் கண்டோம்.
நடிகர் 'விவேக்' ஒவ்வொரு படங்களிலும் கோபால்! கோபால்! என்று சரோஜாதேவியின் பேச்சை கிண்டல் செய்வதாக நினைத்து
சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்வாரே! பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில் நடிக்க வந்த புதுமுகங்களிடம் "பராசக்தி" வசனத்தை கொடுத்து பேசச் சொல்லுவது அவர்கள் திக்கு வாயா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளத்தான்.
சிவாஜி சிலம்பம் சுற்றினால் பருவப் பெண்கள் கோலாட்டம் போடுவதை நினைவு படுத்துவது போல இருக்கும். சிவாஜி வாளை பிடித்துக் கொண்டு சண்டை போடுவது ஒரு பெண் நடன அசைவு கொடுப்பதை போல உணரலாம். பாட்டும் பரதத்தில் அவருடைய நாட்டியத்தை சகிக்காமல் படம் தோற்றதோடு நில்லாமல் அதை தயாரித்த கம்பெனியையும இழுத்து மூடி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டதை நாடறியும். அதிலும் ஒரு சிவாஜி ரசிகர் சிவாஜி 1966 வரை குண்டாக இருந்தும் அவரது நடிப்புக்காக மக்கள் பார்த்தார்களாம். ஆனாலும் சிவாஜி ரசிகர்களுக்கு இந்த காமெடி ஆகாதுப்பா. அவருடைய வெற்றி படங்களில் நடித்த ஜெமினி கணேசன் "காதல் மன்னன்" என்று பெயரெடுத்தவர். அவருக்காகவே பெண்கள் கூட்டம் அலைமோதும்.
மூவேந்தர்களில் ஒருவரான ஜெமினி மற்றும் ssr இவர்களை காண வந்த கூட்டத்தை சிவாஜிக்கு வந்த கூட்டமாக நினைத்தால் இந்த காமெடியை என்னவென்று நினைப்பது. அவ்வளவு மூடர்களா? சிவாஜி ரசிகர்கள். ஜெமினி தனியாக நடித்த பல படங்கள் வெள்ளிவிழா ஓடியதும் சிவாஜியோடு நடித்த படங்கள் வெற்றி பெற்றதும் அவரால்தான் என்று ஜெமினி ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் சிவாஜி தனியாக நடித்த பல படங்கள் படுதோல்வி அடைந்தததையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெமினி தனியாக நடித்த வெள்ளி விழா படங்கள் 'கல்யாண பரிசு' 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' 'கணவனே கண் கண்ட தெய்வம்' 'பணமா பாசமா' என்று சொல்லிக்கொண்டே போகலாம். சிவாஜியுடன் நடித்து ஓரளவு ஓடிய படங்கள் 'பாச மலர்'
'பாவ மன்னிப்பு' 'பார்த்தால் பசி தீரும்' 'திருவிளையாடல்' 'சரஸ்வதி சபதம்' இது போன்ற சில படங்களை சொல்லலாம்.
ஆனால் சிவாஜி தனியாக நடித்து தோற்ற படங்கள் நூற்றுக்கணக்கில்
உண்டு. பாலாடை, வளர்பிறை, பாதுகாப்பு, புனர் ஜன்மம் , இரு துருவம் சாரங்க தாரா, சித்தூர் ராணி பத்மினி, அவள் யார், மனிதனும் மிருகமும். இது
போன்ற எண்ணற்ற படங்களை சொல்லிக்கொண்டே போனால் இந்த பதிவு பத்தாது. ஆனால் பாவம் யாரையோ பார்க்க வந்தவர்களை
சிவாஜிக்குத்தான் என்று யாரை ஏமாற்றுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள். அடுத்தபடியாக சிவாஜி ரசிகர்கள் குறிப்பட்டது "தங்கப்பதக்கத்தி"ன் வசூல். அரளி விதையில் உள்ள விஷத்தை விட சிவாஜி ரசிகன் -ரளி -------- டம் அதிக
விஷமிருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர்களின் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. இதே பதிவில் "தங்கப்பதக்கத்தி"ன் வசூலுடன் தலைவர் படத்தின் வசூலையும் பதிவு செய்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடியில் சிவந்த மண்ணை 101 நாட்கள் வடக்கயிறை போட்டு இழுத்தவர்களால் தங்கப்பதக்கத்தை
41 நாளிலே வடக்கயிறு அறுந்து படம் படுத்து விட்டது. "தங்கப்பதக்க"த்தை ஓட்டியதே 41 நாட்கள்தான்.
"தங்கப்பதக்கம்" 51 நாட்கள் விளம்பரத்தில் பாருங்கள் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பெயர் இருக்காது. இப்பேர்ப்பட்ட சுமாரான படத்தை வைத்துக் கொண்டு 104 நாட்கள் ஓடிய "வாலிபனிடம்" மோதலாமா? அதுவும் 50 நாட்கள் ஓட்டியே தீர வேண்டும் என்று வெறியில் இருந்தவர்களுடன் தியேட்டர் கேன்டீன் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து நடத்தியவர்கள்
தியேட்டரில் கூட்டமே இல்லாத காரணத்தால் குத்தகை பணத்தை திருப்பி கேட்டதால். வேறு வழியில்லாமல் 41 நாட்களோடு நிறுத்தினார்கள்.
50 நாட்கள் கூட ஓட்ட முடியாத "தங்கப்பதக்கம்" எங்கே? 100 நாட்களை தாண்டி ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" எங்கே? ஆனாலும் ஓவர் குசும்பு இந்த சிவாஜி ரசிகர்களுக்கு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நான் பதம் பார்க்க அவர்களுக்கு சோற்றுப் பானையையே வைத்து விட்டேன். இனிமேலும் இது போன்ற காமெடி காட்சிகள் வேண்டாம். தெரியாமலா சிவாஜிக்கு 1 லட்சமும் எம்ஜிஆருக்கு 8 மடங்கு அதிகமாக 8 லட்சமும் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் பட அதிபர்கள்.
சரக்கு முறுக்காக இருந்தால் விலையும் ரொம்ப அதிகம்தான். நடிக்கும் காலத்திலேயே மக்களால் வெறுக்கப்பட்டு மூலையில் முக்காடுடன் அமர்ந்த நடிகருக்கு கொடி பிடிக்கும் கொடியவர்களே, சிவாஜி ரசிகர்கள். அரசியலில் புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியிருந்தவரை மீட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் அவரை தனி அறையில் அடைத்து வைத்ததை மறந்து கணேசனின் புறமுதுகு புண்ணுக்கு ஒத்தடம் கொடுப்பதாக நினைத்து 'மன்னாதி மன்னனை' மீண்டும் சீண்ட வேண்டாம் என உபதேசம் செய்கிறேன். (கோழைகளுக்கு எச்சரிக்கை தேவையில்லை)
ஆசிய, ஆப்பிரிக்கா விருது அமெரிக்க நல்லெண்ண தூதர் பயணம், ஒரு நாள் மேயர் பதவி இது போன்ற அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்ட பயணங்களுக்கு நடிப்பு முத்திரை பூசும் நயவஞ்சகர்கள் நம் நாட்டையே முட்டாளாக்கும் திறன் படைத்தவர்கள். அன்று இந்தியா சார்பில் "லூஸ் மோகனை" அனுப்பியிருந்தால் கூட அவருக்கும் இத்தனை கவுரமும் கிடைத்திருக்கும்.
அது நாட்டுக்காக கொடுத்த மரியாதை. அதை கூட தனக்கு என்று திருட நினைக்கும் "திருடன்" ரசிகர்களை 'ஐயோ பாவம்' பைத்தியம் முற்றி விட்டது என்று நினைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?..........
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
================================================== =====================
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு ,லட்சோப*லட்சம் குழந்தைகள் பசி தீர வேண்டும் , அவர்கள் படிக்கிற*காலத்தில் பசி கொடுமை*, இளமையில் வறுமை எவ்வளவு கொடியது என்பதை*உணர்ந்தே*குழந்தைகள் சத்துணவு திட்டத்தை அமுல்படுத்தினார் .**
முந்தைய ஆட்சியில் யார் யாரோ ,பேரனுக்கு, பேத்திக்கு,மகளுக்கு, மகனுக்கு ,எல்லாம் பதவிக்காக*டெல்லியில் தங்கி இருந்து வீடு வீடாக* அலைந்து*திரிந்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். டெல்லியில் தங்கவுமில்லை. யாருக்காகவும் பதவி கேட்டு அலையவுமில்லை .அனால்*தமிழகத்தில் சத்துணவு திட்டம் அமுல்படுத்த வேண்டி, டெல்லிக்கு சென்று*முறைப்படி,பிரதம மந்திரியை*சந்திப்பதற்கு முன் ,அவரது*உதவியாளர் யார் இருக்கிறார் ,அவருக்கு செயலாளர் யார், அவரை*சந்திக்க வேண்டும் என்று ,அப்போது சென்னையை*சேர்ந்த*திரு.பி.எஸ்.ராகவன்(தற்போது ,94 வயது )*அடையாறில்*வாழ்ந்து வந்தவரை போய் சந்தித்து*பேசினார் .அதாவது தமிழகத்தில் உள்ள* பள்ளி**குழந்தைகளுக்கு தினசரி ஒரு வேளை* சாப்பாடாவது போடும்*திட்டம் உள்ளது . அதற்கு*தேவையான அரிசி மத்திய தொகுப்பில்*இருந்து பெற்று தருவதற்கு தாங்கள் உதவ*வேண்டும் .நீங்கள் தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் என்றார் .இதை கேட்ட*அந்த செயலாளர் வியந்து போனார் . காரணம்*பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வர் நேரடியாக*பிரதமரை*அணுகி,அதன்பின் அவர் தன் உதவியாளரிடம் செய்தியை*பகிர்ந்து அதன்*பின்னர்தான்*செயலாளருக்கு தகவல்கள்*கிடைக்கும் .ஆனால் எம்.ஜி.ஆர். முறைப்படி* மத்திய உணவு துறையின்*ஆணிவேராக*உள்ள செயலாளரை முதலில் அணுகி*கோரிக்கையை வைத்தார்*. செயலாளரின் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர். விவரங்கள் அறிந்து*பிரதமரின்*உதவியாளரை*தொடர்பு கொண்டு*பேசி ,அதன்பின் நேரடியாக*பிரதமரிடம் தனது*கோரிக்கை*மனுவை சமர்ப்பித்தார் .* பிரதமரின் அலுவலகம் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை*ஏற்று* போதிய அளவில் அரிசி வழங்க சம்மதித்தது .* அதன்பின் ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர். டெல்லிக்கு*செல்லும்போதெல்லாம்* தன் ஜிப்பா பாக்கெட்டில் சில*அரிசி பொட்டலங்கள் வைத்திருப்பாராம் .அவற்றை*உணவுத்துறை செயலாளரிடம் காண்பித்து*இந்த மாதிரியான அரிசியை*அனுப்பினால் எங்கள் குழந்தைகள்*வளர்ச்சிக்கும், கல்வி அறிவை*பெருக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று ஒரு அரிசி வியாபாரி போல நடந்து கொள்வாராம் .அந்த அளவிற்கு*குழந்தைகள் வளர்ச்சியில், அறிவு திறமை, கல்வி அறிவு போன்றவற்றில் அக்கறை கொண்டவராக எம்.ஜி.ஆர். திகழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .
1980ல் மக்களால்* எம்.ஜி.ஆரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்படுகிறது .பின்னர் சட்டமன்ற பொது தேர்தல் பற்றி அறிவிப்பு வந்ததும்*தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய*பின் ஒருநாள்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். வருகிறார் .அப்போது செய்தியாளர்கள் கூட்டம்*நடைபெறுகிறது . அதில்*பிரபல*செய்தியாளர்* திரு.நூருல்லா*கலந்து கொள்கிறார் .* நிருபர்களுக்கு அளித்த*பேட்டியில்*எம்.ஜி.ஆர். பேசும்போது* இந்த முறை நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதை*சரியாக*கணிக்க முடியாது*என்பது*போல சற்று*நம்பிக்கையற்றவராக பேசினார் .* நான் நாள் முழுக்க மக்களை*சந்தித்து*பேசி வருகிறேன். நியாயம் கேட்கிறேன். அண்ணாவின் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, நீதி, நேர்மை,நியாயம்* மிகுந்த ஆட்சி, என்கிற*கேள்விகளை மக்கள்முன்*வைத்துள்ளேன் . மக்களிடம்*என் உடம்பில்*உள்ள ரத்தம் சொட்ட*சொட்ட* ஆட்சியின் செயல்பாடுகள், மக்கள் பணி ஆற்றியது குறித்து விவரமாக தெரிவித்துள்ளேன் .இதற்கு*மக்களாகிய நீங்கள்தான் முறையான நீதியை*வரும் பொது தேர்தலில்*வாக்களித்து வழங்க வேண்டும் என்று பேசியுள்ளேன் .என்றவாறு சட்டையை*மடித்து கைகளில் உள்ள கீரல்கள் , ரத்த கறைகள்*செய்தியாளர்களுக்கு காண்பித்தாராம் . அவர்கள் இது எப்படி நடந்தது என*கேட்டபோது ,என்னை*பார்க்க, சந்திக்க*ஓடி வரும், முண்டியடித்து வரும்,ரசிகர்கள் கூட்டத்தை என்னால்*சில சமயங்களில் கட்டு படுத்த முடியவில்லை. அவர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட முடிவதில்லை* .சிலர் என் கைகளை*பிடித்து கொள்கிறார்கள். தடவுகிறார்கள். கொஞ்சம்*அழுத்தமாக தொட்டு பார்க்கிறார்கள் .அதனால்*ஏற்பட்ட*கீறல்கள், ரத்த கறைகள் ,சிறு*காயங்கள் எனசிவந்த, புண்பட்டுப்போன**இரு கைகளையும் நிருபர்களிடம் காண்பித்தாராம் .என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளிடம் நான் ரத்தம் சிந்தி*வாக்குகள்*கேட்டுள்ளேன் .எங்களுக்கு வெற்றி கிடைக்குமா*இல்லையா*என்பதை அவர்கள்தான்*தீர்மானிக்க வேண்டும் என்றார் .ஆனால் செய்தியாளர்கள்,கவலைப்படாதீர்கள். உங்கள் அணிக்கு, கூட்டணிக்கு இந்தமுறை*வெற்றி நிச்சயம் என்று அவரை*ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி* அடித்து சொன்னார்களாம் .அதாவது தன்னை ஒரு தொண்டனாக*நிலைநிறுத்தி*மக்களிடம் தனது ஆட்சியின் நிறைகளை*தெரிவித்து, தான்**சொல்ல வேண்டியதை*வேண்டிய அளவில் மக்களுக்கு**எடுத்துரைத்து.*மீன்டும்*அண்ணாவின் ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் தான் நல்லமுடிவெடுத்து எங்களை*தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முறைப்படி*வேண்டுகோள் வைத்தார் ..
அ.தி.மு.க. துவங்கிய*பின்னர்* சத்யா ஸ்டுடியோவில்**சில*காலத்திற்கு வெளியூரில்*இருந்து வரும் பக்தர்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு**மதிய*உணவு ஒரு திருமண வீட்டில்*நடைபெறுவது*போல தடபுடலாக* ஏற்பாடு செய்து வழங்கப்பட்டு வந்தது*அதை கண்காணித்து , முறைப்படி*நடைபெறுவதை*பார்த்து கொள்வதற்கு சில*வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பணிகள்*நடைபெற்று வந்தன .ஒருநாள்*மதிய உணவு வழங்கப்படும்நேரத்தில் எம்.ஜி.ஆர். விஜயம் செய்து ,உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா, அனைவருக்கும் சரிசமமாக*பரிமாறப்படுகிறதா என்று விசாரித்த வண்ணம் இருக்க ,மதுரையில் இருந்து சுமார்*100 நபர்கள் உணவருந்த வந்திருந்தனர் .அவர்களில் ஒருவர் முன்னாள் மதுரை மேயர்*முத்துவை*பற்றி தர குறைவாக*பேசியபடி இருந்தார் .அதை கவனித்த எம்.ஜி.ஆர். அப்படியெல்லாம் பேச கூடாது என்று அந்த தொண்டரிடம்*கூறினார் .என்னை*பொறுத்தவரை*அவர் தி.மு.க. வில் இருந்தாலும் எனக்கு*முத்தண்ணன் தான் .என்றார் . அதாவது தன்னுடன் சேராதவர்கள் ,எதிரிகள்,மாற்று கட்சியில் உள்ளவர்களையும் மதிக்கும்*மாண்பை,மரியாதையாக நடத்தும் அரசியல்*, பண்பை*தொண்டர்கள் மத்தியில் விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*.
ராமாவரம் தோட்டத்தில் தினசரி எம்.ஜி.ஆரை சந்திக்க வெளியூரில்*இருந்து ரசிகர்கள், பக்தர்கள்*வருவது வழக்கம் . ஒருநாள்*லுங்கி, பனியனுடன், ஒரு நபர் கரை*வேட்டி கட்டிய பக்தர்கள் நடுவில் வந்து நிற்கிறார் .எம்.ஜி.ஆர். அவரை*மட்டும் தனியே அழைத்து, என்ன விஷயமாக*சந்திக்க வந்தீர்கள் என்று கேட்க .ஒன்றுமில்லை,உங்களை*பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது*. அதனால் வந்தேன் என்றுஎம்.ஜி.ஆர். கையில்*ஒரு எலுமிச்சை பழத்தை*கொடுத்தவாறு* முகமலர*பலமாக சிரித்தார் .அதுசரி,எனக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்று கேட்க, லுங்கியை*மடித்து , அரை ட்ரவுசரில் , பாக்கெட்டில் உள்ள இரண்டு கடலை மிட்டாயை*எம்.ஜி.ஆரிடம் தருகிறார் .,அதைக்கண்ட அனைவரும் பதற்றமாய் இருக்க*அனைவரின்*முன்னிலையில் அதை ருசி பார்த்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவர் பெயர், ஊர், என்னவாக இருக்கிறார் .என்ன தொழில் செய்கிறார்,குடும்ப நிலை என்ன* என்ற விவரங்கள் குறிப்பு*எடுக்க சொல்கிறார் .அதன் பின்னர் தன்சொந்த செலவில்*அவருக்கு*ஒரு சைக்கிள்*ரிக்ஷா வாங்கி*பரிசளித்தார் . அதாவது ஒருவர் தனக்கு*உதவி செய்ய வேண்டும் என்று கேட்காமலேயே உதவும் வள்ளல் தன்மை படைத்தவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று .
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று ஒரு பாடல் இருக்கிறது .அதை உறுதி படுத்துவது*போல இன்றைக்கும்*கள்ளக்குறிச்சியில் ஒய்வு* பெற்ற தலைமை ஆசிரியர்கள் படித்தவர்கள், அவரை நினைத்து கொண்டாடுகிறார்கள் . திருச்சி*மிளகுபாறையில்* உள்ள மஜீத் என்பவர்* நமது சகாப்தம் நிகழ்ச்சியின்*100 வது*தொடருக்கு*எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மகிழ்ச்சி அடைகிறார் . என்றால் இன்றைக்கும் பலரை வழி நடத்துகிற பல்கலை*கழகமாக எம்.ஜி.ஆர். திகழ்கிறார் .அந்த பல்கலை கழகத்தின் வரலாறை அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.காலத்தை வென்றவன் நீ* - அடிமைப்பெண்*
2. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.
3.இந்த பச்சைக்கிளிக்கு*ஒரு செவ்வந்தி பூவில்*-நீதிக்கு தலைவணங்கு*
4.தேர் திருவிழா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.
5.எம்.ஜி.ஆர்.-பத்மினி உரையாடல் -ரிக்ஷாக்காரன்*
6.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
7.ஒன்றே குலம் என்று பாடுவோம்*- பல்லாண்டு வாழ்க .
-
Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.
01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .
02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .
03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை
04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்
05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்
06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க
07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி
09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .
10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்
11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை
12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்
13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்
14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா
15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி
16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை
17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்
18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்.........
-
பொன்மனத்திலகத்தின் "ஒளிவிளக்கு "திரைக்காவியம் பல திரையரங்குகளில் இரண்டு மூன்று நான்கு வாரங்கள் கடந்து வெற்றிக் கொடியை பறக்க விட்டுள்ளது.. குறிப்பாக பெரிய திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த காவியத்தின் உச்சமாக ஒளிவிளக்கு திகழ்கிறது.
சென்னையில்....
1988....
நாகேஷ் 21 நாள்
நடராஜ் 21 நாள்
பிளாசா 14 நாள்
ஜெயராஜ் 14 நாள்
2013 மகாலட்சுமி
ஒளி விளக்கு 28 நாள்
2015....ல் 14 நாள்
சாதனைக்கு மேல் சாதனையை விதைத்த காவியம்...
கமலா
எம்.எம்.தியேட்டர்
பிருந்தா
கணபதிராம்
வாணி
கோபிகிருஷ்ணா
முரளிகிருஷ்ணா
ராதா
கிராண்ட்
ஸ்டார்
அண்ணா
புவனேஸ்வரி
சைதை ராஜ்
கணபதிராம்
இப்படி பல குளிர் சாதன அரங்குகளில் சாதனை..
6 மாத இடைவெளியில் பல அரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
மகாலட்சுமியில் மட்டும்
12 வருடத்தில்
9 முறை திரையீட்டு...
15 வாரங்கள் ஒடியுள்ளது...
50 க்கும் மேற்பட்ட அரங்கில் சாதனை..
கோடிகளை வார வெளியீட்டில் பெற்று... லட்சங்களை விநியோகஸ்தர் களுக்கும்...திரையரங்கு உரிமையாளர்களுக்கும்
தந்த ஒரே 100 வது காவியம்..இந்திய சினிமா உலகில் மக்கள்திலகத்தின்
ஒளி விளக்கு மட்டுமே! வெல்க திரையுலக வசூல் சக்கரவர்த்தி...புரட்சி நடிகர்...
அழியாத வெள்ளித்திரையின் திலகமே...
நம் மக்கள் திலகமாவார்...
மேலே சாதனையை எந்த படமாவது தாண்டியதுண்டா...
முடிந்தால்....
துணிந்தால்...
திரையிட்டால்...
பதிவிட முடியுமா!
தொடரும் ....
வள்ளல் திலகத்தின்
காவிய வரலாற்று சிறப்புகள்.........
-
2012 ல் உட்லண்ட்ஸ்*...
ஒரு வார வசூல் :*
1,45 ஆயிரம் ஆகும்.
1995 எம்.எம்.தியேட்டர்
ஒரு வார வசூல்
ரூ. 95, 160.00 ஆகும்.
2019 அகஸ்தியா 70mm.,
ஒரு வார வசூல் ( 2 காட்சி)
ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
காலம் கடந்தும் வசூலை அள்ளி தரும் திரையுலகின் அட்சயதிலகம்
மக்கள் திலகமே... திரையுலகை வாழ வைத்த அன்பு திலகமாவார்.
அடுத்து... ஒளிவிளக்கு திரைப்படம்...
குறிப்பு...
**********
தில்லானா,என் தம்பி,
க.கல்யாணம், உ.மனிதன்,
எ.ஊர்.ராஜா, தி.பெருமை
ல.கல்யாணம், அரிசந்திரா..
இதில் எந்த படம் எத்தனை திரையில் வெளிவந்தது....
தெரிந்தால் சொல்லவும்
பதிவிடவும்.............
-
மக்கள் திலகத்தின் மதுரைவீரன்
திரைக்காவியம்....
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர் ஆகிய*
9 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த ஒரே திரைப்படமாக இன்று வரை திகழ்கிறது.
வண்ணப்பட வரிசையில்*
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கரூர்* உட்பட*
6 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை ஆகும்.
மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் அதிக அளவில் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் திரையிடப்பட்டு*
6, 7, 8 திரையரங்குகளில்*
50 நாட்களை, 75 நாட்களை கடந்த சாதனையில்...* 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்* ஒடியுள்ளது கடந்துள்ளது.
திருச்சியிலும், தஞ்சாவூரிலும்*
வெள்ளிவிழாக் கண்ட திரை காவியமாக எங்கவீட்டுப்பிள்ளை திகழ்கின்றது.
திருச்சி தஞ்சை மாவட்டங்களில்
ஏ பி சி சென்டர் என சொல்லப்படும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.இதுப்போன்ற சாதனையை இதுவரை எந்த நடிகர் படமும் பெற்றதில்லை..........*
-
இதையெல்லாம் விட ரிக்க்ஷாக்காரன் வீசிய வசூல் அணுகுண்டு, உலகம் சுற்றும் வாலிபன் வரும் வரை எல்லா படங்களையும் தகர்த்தெறிந்தது. 51 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வசூல் செய்து, அரசுக்கு வரியாக மட்டும் 20 லட்சம் கொடுத்துள்ளார் ரிக்க்ஷாக்காரன். விநியோகஸ்தர் தரப்பு அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் 50 நாட்களில் ராஜா திரைப்படம் பெற்ற மொத்த வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ விளம்பரத்துடன் சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்களா? 50 நாளிலேயே தமிழகம் முழுவதும் 50 லட்சம் வசூல் என்றால் நூறாவது நாளில் ரிக்க்ஷாக்காரன் பெற்ற வசூல் பற்றி சொல்ல வேண்டுமா? ரிக்க்ஷாக்காரன் வசூல் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன்தான் முறியடித்தார். இதை நாம் சொல்லவில்லை. தேவி பாரடைஸ் தியேட்டர் முதலாளி வரதராஜன் ஆனந்த விகடன் இதழுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் சொன்னார். அப்போது வாலிபன் படத்துக்கு பத்திரிகையாளர் காட்சியின்போது கரண்ட் கட் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜெனரேட்டர் வைத்து ஓட்டினோம் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி இருந்தார். அந்தப் பேட்டியின் பகுதியையும் இணைக்கிறேன். இறுதியாக ஒன்று.. தமிழ்நாட்டில் ரிக்க்ஷாக்காரன் 12 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. இதற்கும் விநியோகஸ்தர் விளம்பர ஆதாரம் இணைக்கிறேன். வாலிபன் வரும்வரை ரிக்க்ஷாக்காரனை எந்த ராஜா-வும் அசைக்க முடியவில்லை. ஏனென்றால் மக்கள் திலகம் ராஜா என்ன... சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி என்பது தெரிந்ததுதானே!.........