:)Quote:
Originally Posted by Aalavanthan
Printable View
:)Quote:
Originally Posted by Aalavanthan
U mean PrashanthIQuote:
Originally Posted by hattori_hanzo
:rotfl2:
:lol:Quote:
Originally Posted by P_R
avare ippa top star out of action-nu status signature pottutu poyittaru
prasanthuukku fansa.....enakku thala suthuthu...."i like it i like it very much"... :banghead: :banghead: :omg:Quote:
Originally Posted by Raikkonen
Quote:
Originally Posted by Raikkonen
aama, Asan engE ipodhu
:rotfl:
adhuthan kuduthuttangalE.. kEtta.. thirumbhavum vaangi kuduppangalaQuote:
Originally Posted by joe
:rotfl2:Quote:
Originally Posted by Aalavanthan
வைகாசி பொறந்தாச்சி மிகப்பெரிய வெற்றிப்படம் சார். இன்னும் நினைவில் இருக்கிறது. தேவாவின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி வரை பட்டைய கிளப்புன படம். பிரஷாந்த்-காவிரி இருவருமே புதுமுகம். மிகப்பெரிய ரத்தினக்கம்பளத்தை அவர்களுக்கு இந்தப் படம் அளித்தது. கரகாட்டக்காரன் வாழைப்பழ நகைச்சுவை போல, இந்தப் படத்தில் இருக்கும் நகைச்சுவை அப்போது பெரிதாக பேசப்பட்டது.Quote:
His intial movie was not that successful - PARAMASIVAN in another thread
Janakaraj... right?Quote:
Originally Posted by venkkiram
nanum kelvipatturukken..
oh, enaku theriyavilaiye, Naan antha padam parkavilai, must watch it....Quote:
Originally Posted by venkkiram
என் தங்கச்சி சினேகா - பிய்த்து உதறும் பிரசாந்த்
அந்த காலத்து டபரா செட்டாகட்டும், இந்த காலத்து கப் அண் சாசர் ஆகட்டும்... தனித்தனியாக பிரித்து வைத்தால் அழகு அம்பேல்தான். அதிலும் ஜோடியை மாற்றினால் எப்படியிருக்கும்? ஐயே....
ஆனால் அப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். முதல் படத்தில் பிரசாந்துடன் ஜோடி போட்ட சினேகா, காலம் உருட்டிய உருட்டலில் அவருக்கே தங்கையாக நடிக்கிறாராம். இடையில் யார் யாருடனோ ஜோடியாக நடித்தவருக்கு மீண்டும் பிரசாந்துடன் டூயட் பாடுகிற யோகம் அமையவேயில்லை. ஒருநாள் திடீரென்று கலைஞரின் 'பொன்னர் சங்கர்' படத்தில் நடிக்க சினேகாவை அழைத்தாராம் படத்தின் இயக்குனரும், பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன்.
ஆவலாக வந்த சினேகாவுக்கு நாவலாக ஒரு கேரக்டர் சொன்னார் மம்பட்டியான், பிரசாந்துக்கு தங்கை என்று. ஆனாலும் கதையும், அதில் இவருக்கு இருக்கிற முக்கியத்துவமும் சினேகாவை கரைத்துவிட, ஆன் தி ஸ்பாட்டிலேயே அட்வான்சை வாங்கிக் கொண்டாராம்.
இது ஒருபுறம் இருக்கட்டும். உலக அழகி ஐஸ்வர்யாராயோடு ஜோடி சேர்ந்தபோதுகூட இத்தனை பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை அந்தப்படம். பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை நாற்பது கோடி செலவில் எடுத்துக் கொண்டிருக்கிறார் தியாகராஜன். அரண்மனை செட், ஆள் அம்பு படைகள் என்று சரித்திர சம்பவங்களுக்கே துட்டு தண்ணீராக செலவாகிறதாம்.
இறைக்கிறதே அள்ளுறதுக்குதானே சார்?
http://www.tamilcinema.com/CINENEWS/...il/070410a.asp
thanni kodam eduththu thangam nee nadandhu vandhaaQuote:
Originally Posted by venkkiram
thavikkudhu manasu thavikkudhu :happydance:
chinna ponnudhaan vekkappadudhaam :musicsmile:
அட பாவிகளா என்ன கொடுமை SIR இதுQuote:
Originally Posted by P_R
Quote:
Originally Posted by PARAMASHIVAN
Vanthutomla
prashanth-ey thaan
Romba arivaliQuote:
Originally Posted by Ramakrishna
:frightened:
:lol:Quote:
Originally Posted by Ramakrishna
malayoor mammottyan eppa sar release?
Next Century la :lol2:Quote:
Originally Posted by Raikkonen
எதுக்கு இந்த பொல்லாப்பு நான் பிரசாந்த் இல்லையா ! வடிவேல் ரேஞ்சுக்கு கெஞ்ச விட்டுட்டாங்களே :cry:Quote:
Originally Posted by PARAMASHIVAN
I yaam jaaking Birathar, you carry on :DQuote:
Originally Posted by asan
what happened to Pulan Visaranai-II
Run Way
.. matrum pala
yes, what happened to Pulan Visaranai II :roll:Quote:
Originally Posted by HonestRaj
Prasanth kitta kettale ithuku avarta pathil irukkumany theriyala ennanda vanthu intha kelviya kekria naina?Quote:
Originally Posted by PARAMASHIVAN
Well films like Petrol, Runway, Arun Weds Harini etc were all dropped after initial production.Quote:
Originally Posted by PARAMASHIVAN
Pulan Visaranai II is completed and was rumored to be a straight to Tv release a few years ago but still hasn't made it. Not surprised though as it's director, R. K. Selvamani's last film - Kuttrapathrikai took 14 years to release after completion!
He's working on Malaiyoor Mambattiyan (again completed, release next year)
Also on Ponnar Shankar - still in production.
This was the first post to this thread.Quote:
Originally Posted by mirattalji
From this Thagapansamy, Jambhavan and Asaikalam released in 2006.
and the rest...
:roll:
rest in peace
runway police , petrol sakkarai..
per ellam nallathan irukku.
ponnar sangar is kalaingar's right?
hiku kavidhai madhiri irukkuQuote:
Originally Posted by Raikkonen
I think Sakkarai got changed to Choklet and released.Quote:
Originally Posted by Raikkonen
No, Sakkarai was a village based action film directed by Susi Ganesan. So, both films are different.Quote:
Originally Posted by VJerry
Mambattiyan is partly taken over Nasaka Okaya power releasing on first week of february, music releasing after pongalQuote:
Originally Posted by PARAMASHIVAN
Ponnar Shankar partly acquired by SS martin of SS Music. Still heroine not decided. Music by A.R
Pulan visaranai resting in cans because of prodeucer . Music already released.
Run way, sakkarai dropped at initial stage. petrol, kattan started and then shelved. Arun weds harini, taxi driver by morgan, police all dropped because of various reasons but will have possibility of reviving in the future.
welcome back asan :)Quote:
Originally Posted by asan
Even I believed (and still believe) that the hubber 'asan' is Pr'asan'th himself. (Cut off the first and last couple of letters from the actor's name and you will know) 8-)
You have to feel it for an actor like him, making rubbish films is one thing but having 10 consecutive films cancelled must be incredibly harsh. (and MM, Ponnar Shankar look miles away).
Analysis of films that never were for him since 2005 (more or less after the controversial marriage)
1) Pulan Visaranai 2....by Selvamani and a sequel to the film that made Vijayakanth and Sarath the action stars that they are. Was shot in locations including Ladakh, Mumbai and had three heroines - Karthika, Aswini and Adim Khan and RK (actor from Azhagar Malai) for company. Facing post-production troubles - took time to get censored and rumoured to be a straight to video release.
2) Kattan.......police story by Suresh of Gambheeram fame and produced by his daddy. The film was more than half shot with only song sequences to go before his marital problems set in and the film was left to remain.
3) Enna Vilae Azhagae ................film was with Amisha Patel by Rajkapoor based around a large family. The film was a bit earlier than these lot, more around the Majnu/Star period but he mentioned a revival in 2006 which never happened.
4) Sakkarai.................film by Susi Ganesan and was launched along with Godfather, Thambi, Mumbai Xpress also had Nassar and Vadivelu. But soon after Susi moved on to thiruttu Payale.
5) Police......................film directed by Thyagarajan with Lara dutta in the lead role, and a remake of the Hindi film, 'Khaki'. As ususal, film started, hit brakes, delayed, ceased.
6) Petrol...................film by A. Venkatesh launched in late 2005, scenes canned with Prashanth and Seema. Laila was initially heroine but dropped out and Reema, Asin, Namitha and Trisha then also refused the film before Renuka Menon was signed. In 2008, Venkatesh said he was set to revive the project - but he also has several other films in the cans inc Bharath's Killadi.
7) Runway................by S. D. Ramesh who did Ulavuthurai, started with heavy promotions and several press meets. Asin was also approached for this one but then backed off. After the hip start, things went quiter and his marital problems probly killed this one too.
8) Arun Weds Harini...........a rom com by Mukil, which also failed to take off despite interest from Prashanth.
9) Taxi Driver...........a film by Gautham's assitant Margan, produced by Cee I TV, which was briefly mentioned and dropped
10) Vithagan.............by Cheyyaru Ravi and featured him in 7 roles, never got to start filming
So Prasanth is using multiple profiles in the hub :clap:
this guy is rich and has enough money to live out his life peacefully.. avan avan saapida soru illaama irukkaan..
Movie review by chennai online
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இதுவரை சரித்திரத்தின் பக்கம் ஒதுங்கவில்லையென்றாலும், சர்வசாதாரணமாக ஒரு சரித்திரக்கதையை படமாக்கியிருக்கும் தியாகராஜன் ஷங்கரையே மிஞ்சும் அளவுக்கு தனது இயக்குநர் முகத்தை அழுத்தமாக பதியவைத்திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கைவண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்.
ஜெயராமை காதலித்ததால் தனது தந்தையின் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, நாட்டை விட்டே வெளியேற்றப்படுகிறார். வெளியேறும் இந்த காதல் தம்பதிகளுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள்தான் பொன்னர்-சங்கர். குஷ்பூ-ஜெயராம் காதலுக்கு எதிரியான பிரகாஷ்ராஜ், நெப்போலியன், விஜயகுமார் ஆகியோருக்கு இந்த குழந்தைகளும் எதிரியாக, இவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதை அறியும் ராஜ்கிரண், யாருக்கும் தெரியாமல் இந்த குழந்தைகளை காப்பாற்றி போர் பயிற்சி அளித்து வளர்த்துவருகிறார்.
இப்படி, தங்களது பெற்றொர்களுக்குக் கூட தெரியாமல் வளர்ந்து வரும் பொன்னரும், சங்கரும் தங்களை அழிக்க நினைத்த எதிரிகளை கொன்று, தனது தாயின் சபதமான மாமன் மகள்களை கை பிடிப்பதுதான் கதை.
இதுபோன்ற சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெறும் வர்ணனைகளை நம்பும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் தியாகராஜன். பொன்னர்-சங்கர் என்ற வீரர்களாக பிராஷந்த் இரட்டை வேடத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். காதலிக்காக முதலையுடன் சண்டைப்போடுவதும், மலைப்பாம்பை வளைப்பதும் என அசரவைத்திருக்கிறது அவருடைய ஆளுமை. போர்கள காட்சிகளில் பிரஷாந்தின் ஆக்ரோஷமும், தியாகராஜனின் இயக்கமும் இணைந்து நம்மை பிரமிக்க வைத்திருக்கிறது. அதுவும் கோட்டை மதில்சுவரின் மீது ஏறும் பிரஷாந்த், எதிரிகளின் அம்புகளுக்கு மறைந்துகொண்டு கோட்டையினுள் முன்னேறும் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா என்ற இரண்டு கதாநாயகிகள். மாடலிங்கில் இருந்து இரக்குமதியான இந்த மாடல் மங்கைகளை அரச குமரிகளாக்கியிருக்கிறார்கள். இவர்களது முதல் படம் என்பதாலோ என்னவோ,நிஜமான அரச அழகிகளை பார்த்ததுபோல நம்மை அசரவைத்திருக்கிறார்கள்.
ராக்கி அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் போர் பயிற்சியாளராக நடித்திருக்கும் ராஜ்கிரணின் தோற்றமும், முகபாவனையும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நரைத்த முடியும், நரைக்காத பலமும் என மாயவர் என்ற வேடத்தில் நம்மை
மலைக்கவைத்திருக்கிறார் நாசர். அரசராக நடிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல இருக்கும் நெப்போலியனின் கதாபாத்திரம், வலிமை இருந்தும் சுற்றியிருக்கும் சூட்சியாளர்களின் சூட்சியால் மதியை இழந்த அரசர்களை நியாபகப்படுத்துகிறது.
பிராஷ்ந்துக்கு தங்கையாக நடித்திருக்கும் சினேகா, தனது அழகுடன் ஆக்ரோஷத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியிருக்கிறார்.படை வீரர்களை பந்தாடும் இந்த அருக்கானியை, ஜான்சி ராணி கதாபாத்திரத்திலும் வைத்து பார்க்கலாம் போல!
குஷ்பூ, ஜெயராம்,பொன்வன்னன், விஜயகுமார் ஆகிய கதாபாத்திரங்கள் கதையின் உருவாக்கத்திற்கு பக்கபலமாக இருப்பதோடு சரி. மற்ற கதாபாத்திரங்களான பிரபு, ரியாஸ்கான், போஸ் வெங்கட், சீதா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் காட்சிகளை நிரப்ப பயன்பட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட படத்திற்கு இசை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தியாகராஜன் உணர்ந்திருக்கிறார். ஆனால், இசையமைப்பாளர் இளையராஜா தான் மறந்திருக்கிறார். படத்தின் டைடில் காட்டிலையே இது சரித்திரப் படம் என்பதை காட்டவேண்டிய இளையராஜா, படம் முழுக்கவும் அதை காண்பிக்கவில்லை என்பதுதான் வருத்தம். பின்னணி இசையில் ராஜா பின்னியிருப்பான் என்று நினைத்தால், அதை என்னி வருந்த வைத்துவிட்டார்.
கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை மிகவும் நுட்பமாக கையாண்டு இருக்கிறார்கள். இந்த துரையை கையாண்டு இருப்பவர் பிரஷாந்த், இரண்டு பிரஷாந்த் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநர். ஓளிப்பதிவாளர் ஷாஜிகுமாரின் ஒளிப்பதிவும் நம்மை மிரட்டியிருக்கிறது.
கமர்ஷியல் ஃபார்மூலாவில் பயணித்துகொண்டிருக்கும் நம்ம தமிழ் சினிமாவின் வரலாற்றை புத்தமாக எழுதும் இந்த நேரத்தில், இப்படிப்பட்ட வரலாற்று கதையை படமாக்கியிருக்கும் தியாகராஜன், பிரஷாந்த் ஆகியோருக்காகவே ஒரு வரலாற்று புத்தகதை எழுதாலாம்.
http://chennaionline.com/tamil/cinem...GORYNAME=Rview
பொன்னர் சங்கர் விமர்சனம்!
http://www.tamilcinema.com/CINENEWS/...nnarsankar.asp
மம்பட்டியான் படம்தானே என்ற அலட்சிய பார்வையோடு தியேட்டருக்குள் போனால், அந்த பார்வையை 'சம்மட்டி' அடி கொடுத்து தகர்க்கிறார் தியாகராஜன். விளையாட்டாக இழுக்க இது பொம்மை தேர் அல்ல. திருவாரூர் தேர் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் இந்த பிரமாண்ட டைரக்டர். படம் நகரும் ஒவ்வொரு நிமிஷமும் கோடிகள் ஸ்வாகா ஆகியிருக்கிறது சர்வ சாதாரணமாக! கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இந்த அண்ணன்மார்கள், மார்தட்ட வைக்கிறார்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே!
பொதுவாக சரித்திரக் கதையில் இடம் பெறும் வர்ணனைகளை காட்சி படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அதை மிக சரியாக செய்திருக்கிறார் தியாகராஜன். மலையளவு தோள் வலிமை கொண்டவன் என்ற வர்ணனையை வரி மாறாமல் சுமந்திருக்கிறார் பிரஷாந்த்தும்.
நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.
துக்கடா கதையில் கூட ஹீரோவின் அறிமுக பில்டப்புக்காக ஒரு ஊரையே அடித்து நாசமாக்குதெல்லாம் நடக்கும். இங்கே ஒரு அணைக்கட்டையே உடைத்து துவம்சமாக்குகிறார்கள் பிரஷாந்த் பிரதர்ஸ்! நான் ஊர் போய் சேர்வதற்குள் மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் என் கால்களை நனைக்க வேண்டும் என்கிறார் ஆசான். அம்பெய்கிறார்கள் பொன்னரும் ஷங்கரும். ஆசான் நினைத்ததுதான் நடக்கிறது. இந்த காட்சியில் கதையாசிரியரின் கற்பனையுடன், வெள்ளமென கலக்கிறது விஷ§வல் கிராபிக்ஸ்சும்!
காதலிக்காக முதலையை பிளப்பதும், மலைப்பாம்பை வளைப்பதும் கூட பிரஷாந்தின் புஜ வலிமையை பிரமிப்புடன் நோக்க வைக்கிறது. இதுதான் இப்படி என்றால் போர்க்கள காட்சிகளில் இவரது ஆக்ரோஷம் அவ்வளவு தத்ரூபம்!
பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் என்ற இரண்டு கதாநாயகிகள். அல்ட்ரா மாடர்ன் பெண்களான இவர்கள் அரசிளங் குமரிகளாகியிருக்கிறார்கள். ஹைட் லுக்கும் கண்ணசர வைக்கும் லோ ஹிப்புமாக இவர்களை பார்க்கும் போதெல்லாம் தியேட்டரே டபுள் ஏசி யாகி குளிர வைக்கிறது.
பிரஷாந்தின் தங்கையாக சினேகா. பெயர் அருக்காணி. வாளெடுத்து சுற்றுகிறார். அசகாய சூரன்களையெல்லாம் அடித்து து£க்கி எறிகிறார். அந்த புன்னகை மட்டும் போவேனா என்கிறது.
நரைத்த தாடி, நரைக்காத கம்பீரம் என்று நாசருக்கு பொருத்தமான கேரக்டர். பொன்னரும் ஷங்கரும் யார் என்று போட்டு உடைக்கிற வேலை இவருக்கு. அது மட்டுமல்ல, போர்களத்தில் வாள் சுழற்றும் வீரனும் கூட! ஜமாய்த்திருக்கிறார் மனுஷன். மற்றொரு கம்பீரன் நெப்போலியன். கேட்பார் பேச்சை கேட்கிற அரசன். சுய சிந்தனையற்றவன் எப்படி அரசரானான் என்ற கேள்வியை இத்தனை வருடங்கள் கழித்தும் எழுப்ப வைக்கிறது இந்த கேரக்டர். பிரபு, விஜயகுமார், பொன்வண்ணன், ரியாஸ்கான் என்று மற்றவர்கள் கூட்டம் சேர்க்க பயன்பட்டிருக்கிறார்கள்.
திரையில் தோன்றிய கலைஞர்களுக்கு இணையாக முகம் காட்டாத தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பும் இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு விருதுகள் காத்திருக்கிறது. இவர் மட்டுமா? நடனம் அமைத்த ஷோபி, சாந்தி கபூருக்கு கூட பாராட்டுகள் குவியும்!
இசைஞானி இளையராஜாவின் எல்லையற்ற சுதந்திரம், நம் காதுகளை மயங்க வைத்த மந்திரம்! பின்னணி இசையோ காட்சிக்கு காட்சி பேசுகிறது. 'கண்ணை படித்தேன்...' பாடலில் பழனி பாரதியின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்த சாரதி ஷ்ரேயா கோஷலின் குரல்களும், ராஜாவின் பிரசன்ட்டேஷனும் கலந்து சொர்க்கத்தின் கதவுகளை விரிய திறக்கிறது.
கொங்கு மண்டல கதையில் கோவை பாஷை இல்லையே என்ற குறையும், சட்டென்று படம் முடிந்துவிட்டதே என்ற உணர்வும் லேசான வருத்தத்தை கொடுத்தாலும், பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
'மம்பட்டி' கைபட்டால் மண் கூட பொன்னாகும் என்பார்கள். இங்கே பிலிம் கூட அப்படியாகியிருக்கிறது!
முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்த்தார் ரஜினி!
முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள பொன்னர் சங்கர் வரலாற்றுப் படத்தை, முதல்வருடன் சேர்ந்து பார்த்தார் ரஜினிகாந்த்.
தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ அரங்கில் திரையிடப்பட்டது.
இந்த திரைப்படத்தை திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தார். படம் பிரமாண்டமாகவும், நேர்த்தியுடனும் வந்திருப்பதாகப் பாராட்டினார் ரஜினி. நாயகன் பிரசாந்த் மற்றும் இயக்குநர் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த காட்சிக்கு நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், பிரபு, பாக்யராஜ், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழும அதிபர் கலாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் வந்திருந்தனர்.
நேற்று இந்த படத்தை கலைஞருடன் நடிகர் கமல்ஹாசன், நிதி அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் முதல்வர் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/movies...i-aid0136.html