மிக்க நன்றி ராகவேந்திரன் சார். அற்புதமான படம். ஆனால்... நடிகர் திலகமும் இளைய திலகமும் பின்னிஎடுத்திருப்பார்கள். எம்.எஸ். வி யின் அசத்தல் இசையமைப்பு கேட்க கேட்க திகட்டாதது. நடிகர் திலகம் அடக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாசித்து சீற வேண்டிய நேரத்தில் சீறி மிக அழகாக பேலன்ஸ் செய்திருப்பார். தெலுங்கு வாடை சற்று தூக்கலாகப் போய் விட்டதாலும், சாரதாவின் மிகை நடிப்பு மற்றும் அவருக்கான டப்பிங் வாய்ஸ் ஆகிய காரணங்களினால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வில்லை. ஆனால் நடிகர் திலகத்தின் வேறெந்தப் படங்களிலும் காண முடியாத அவருடைய வேறொரு தனி பரிமாணம் இப்படத்தில் பரிமளிப்பதைக் காணலாம். என்ன ஒரு மேனரிசம்! முள் மேல் நடப்பது போன்ற சிரமமான ஒரு ரோல். தெய்வத்தைத் தவிர அவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும் எவரால் செய்ய இயலும்?