தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் சோ-வின் 'அதிர்ஷம் தந்த அனுபவங்கள் ' புத்தகத்தில் நடிகர் திலகம் பற்றி சோ குறிப்பிடுவதின் ஒரு பகுதி..
Quote:
Originally Posted by Cho Ramasamy
Printable View
தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் சோ-வின் 'அதிர்ஷம் தந்த அனுபவங்கள் ' புத்தகத்தில் நடிகர் திலகம் பற்றி சோ குறிப்பிடுவதின் ஒரு பகுதி..
Quote:
Originally Posted by Cho Ramasamy
Thanks for sharing Joe.
Saradha, mdm. I've still not gone through your posts yet. A bit tight here. Need to go through it on a more relaxed pace. Till then....
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
ரொம்ப நன்றி. நான் போஸ்ட் பண்னும்போதே நினைத்தேன், இப்படம் சம்மந்தமான வரலாற்றுப் பதிவுகளுடன் வந்து அசத்துவீர்கள் என்று. அதேபோல அசத்தி விட்டீர்கள். படத்தின் பின்னணித்தகவல்கள் அனைத்தும் அருமை. கட்டபொம்மன் சிலைதிறப்புவிழாவில் பேசிய நடிகர்திலகத்தின் பேச்சைக் கேலி செய்த அதே முதல்வர், நடிகர்திலகத்துக்கே சிலை வைக்கும் அளவுக்கு நடிகர்திலகம் தன் நட்பால் மாற்றி விட்டார். படத்தில் இடம்பெற்றிருந்த சத்ரபதி சிவாஜி வசனங்கள் இசைத்தட்டில் பாடல்களோடு சேர்ந்து இடம் பெற்றது. நீங்கள் குறிப்பிட்டதுபோல, அந்த காட்சி இணைக்கப்பட்டது, படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து, ரிபீட்டட் ஆடியன்ஸைக் கொண்டு வந்தது.
மதுரை நடிகர்திலகத்தின் கோட்டை என்பதை நானும் பலமுறை ஆதாரங்களோடு சொல்லி வந்திருக்கிறேன். நடிகர்திலகத்தின் பல படங்களை 100வது நாள் பட்டியலில் இடம் பெற வைத்தது மதுரை என்றால் அது மிகையில்லை. ராமன் எத்தனை ராமனடி, என் மகன், வாணி ராணி,உத்தமன் படங்களின் நூறாவது நாள் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும் (நான்குமே மதுரையில், அதுவும் 'நியூ சினிமா'வில்தான் 100 நாட்களைக்கடந்தது). உத்தமன் பின்னர் இலங்கையில் ஓடித்தான் வெள்ளிவிழாப்பட பட்டியலில் இடம் பெற்றது.
ராமன் எத்தனை ராமனடி- 15.08.1970 நியூசினிமா - 104 நாட்கள்
வாணி ராணி - 12.04.1974 நியூசினிமா - 112 நாட்கள்
என் மகன் - 21.08.1974 - நியூசினிமா - 101 நாட்கள்
உத்தமன் – 25.06.1976 நியூசினிமா - 105 நாட்கள்
ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் படங்களின் பெயர்கள் மாற்றப்படாமலிருந்தால், 'திருடன்' என்ற பெயரில் படம் வந்தது போல 'சாப்பாட்டுராமன்' மற்றும் 'பைத்தியக்காரன்' என்ற பெயரிலேயே இப்படங்கள் வெளியாகியிருக்கும். (இன்னும் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள், சொர்க்கம் படத்தின் பெயரும் முதலில் 'பேராசைக்காரன்' என்று பெயரிடப்பட்டிருக்கக்கூடும்).
'சாப்பாட்டு ராமன்' படப்பெயர் ரசிகர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியது போல, நிறைய ரசிகர்களுக்கு அதிருப்தியைத்தந்த பெயர் 'பட்டிக்காடா பட்டணமா'. அந்தப்படம் அபார வெற்றியடைந்துவிட்ட நிலையில் அப்பெயர் நமக்கு இப்போது நெருடலாக இல்லை. ஆனால் படமாகிக்கொண்டிருந்த நேரத்தில் ரசிகர்களுக்கு அந்தப்பெயர் பிடிக்கவில்லை. காரணம், அதற்கு முந்தைய வருடம் இவரது போட்டியாளரின் படமாக வந்து அபார வெற்றியடைந்த படத்தில் இடம்பெற்று மிகவும் பாப்புலரான பாடலின் முதலடி அது. 'இந்த தயாரிப்பாளருக்கு வேறு பெயர் கிடைக்கவில்லையா?. இதைத்தான் வைக்கணுமா?.ஏன் அண்ணனும் இதையெல்லாம் கண்டுக்காம இருக்கார்?' என்ற முணுமுணுப்பு ரசிகர்கள் மத்தியில். அதே ச்மயம் ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், இப்போது தயாரிப்பில் உள்ள 'அன்னமிட்ட கை' படப்பெயர் கூட அண்ணனின் இருமலர்கள் படத்தில் இடம்பெற்ற பாடதானே என்று. (உண்மையில் போட்டின்னா அன்னைக்கு இருந்ததுதாங்க போட்டி. அன்றைய போட்டிக்கு முன் கமல்-ரஜினி, அஜித்-விஜய் போட்டியெல்லாம் எம்மாத்திரம்?)
-- Reserved for 'Galatta Kalyanam' --
[html:29290364ec]
http://nadigarthilagamsivaji.com/Pho...00days/004.jpg[/html:29290364ec]
-- reserved --
-- reserved --
-- reserved --
சாரதா மேடம்,
'அன்னமிட்ட கை' இரு மலர்கள் பட பாடல்?
"Annamitta kaigalukku anbu thantha kanngalukku unnai vittu povadarku ullamillai magale" ... from Iru Malargal.Quote:
Originally Posted by HARISH2619
A quote from galatta.com today's page:
"The earlier title of Deiva Magan was objected to by Sivaji Films, who have plans to remake the 1970 hit (which featured thespian Sivaji Ganesan in three roles)."
http://tamil.galatta.com/entertainme...ase_29324.html
I don't know is this a really serious info or just a gossip. If it is gossip, the best. If it's true, god save us!
We can't imagine any body donning NT's roles (exception of course for some characters, YGM, since NT is in his blood).
Saradha Madam,
Your posting on Raman Ethanai Ramanadi has kindled my memories. I saw the film first day, at the Shanthi Theatre. A roaring applause greeted the title scene. And it continued ... Repeat the same during transformation of Raman into Nadigar Thilagam Vijayakumar. Again repeat, this time it was more ... whole theatre went beserk and the fans were uncontrollable .. the scene, "enakka arasiyal theriyadhu..". Then repeat .. even more ... Style to the chore, pronouncing "enkittayada stylai pathi pesareengannu sollamal sollum scene" in the song, "Ammadi Ponnukku Thanga Manasu" pathos version, ... soga katchiyil theatril aaravaram vaangakkoodiya orey nadigar ulagathilaeye NT mattum dhan. Sila per soga katchiyil vandhal enda idhaiyellam pakkaromnu theatrae sogamaayidum. adhu vera vishayam. Then again the same roaring sound .. this time for the English pronouncing scene to Master Prabhakar. And then again .. this time for the Sera Sozha Pandiyargal Vazndha Thamiz Nadu... He was sitting majestically at the Jail. ... And last speaking English with S.N. Lakshmi ....
Then again I went to the movie on 1st Oct. 1970 after the Procession (43rd Birth Day) .... Again it was Field Day for Fans at the Shanthi.
Eppodhu Mount Road ponalum, Shanthi Theatrekku ponal pazhaiya ninaivugal nammai appadiye meimarakka seigiradhu.
Hmmm .... golden days will not be repeated...
We were lucky to live with NT.
August 15th it got released at Shanthi. On 26th August Thedi Vandha Mappillai was released at Paragon. On October 29 Raman Ethanai Ramandi was shifted to Paragon, replacing TVM. Completed the remaining 25 days at Paragon. The reason, Engirundho Vandhal got released at Shanthi on 29th Oct. 1970.
Raghavendran
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சாரதா. பட்டிக்காடா பட்டணமா படத் தலைப்பை பற்றி நீங்கள் குறிப்பிட்டது உண்மை. எங்கள் பள்ளிக்கூடத்திலேயே என்னிடம் மாற்று முகாமை சேர்ந்த ஒரு ரசிகன் இதை குறிப்பிட்டிருக்கிறான்.
உங்கள் உரை வடிவில் கலாட்டா கல்யாணம் காண காத்திருக்கிறோம்.
ராகவேந்தர் சார்,
ராமன் எத்தனை ராமனடி ஓபனிங் ஷோ அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் போஸ்டில் ஒரு சின்ன திருத்தம். தேடி வந்த மாப்பிளை வெளியானது 1970 ஆகஸ்ட் 28 வெள்ளியன்று.
அன்புடன்
Okay, finished reading the Raman Ethanai Raamanadi review by Saradha madam and additional notes by Murali-sar :D
All I can say is this in one heck of a happening thread. Not only review, but treasure trove of information. Thank you for an excellent review, madam. I had a VCD once, and like an idiot I borrowed it to someone and its gone. I had to get another one. :(
Awaiting Galatta Kalyanam review. One of my favourite comedies.
http://www.hindu.com/2009/08/27/stor...2760080500.htm
Quote:
Sivaji statue to be unveiled in Madurai
Staff Reporter
MADURAI: A life-size bronze statue of actor Sivaji Ganesan will be unveiled in Madurai on October 4 by M. K. Alagiri, Union Minister for Chemicals and Fertilizers, in the presence of actor Kamal Haasan and a galaxy of film stars.
Addressing a press conference here on Wednesday, G. Ramkumar, the actor’s elder son, said that diehard fans of the actor here always wished to install his statue and it had become a reality. The Union Minister, who had recently declared at a function that he was not a Sivaji fan but a “fanatic,” would be part of the event. The statue would be installed just behind the statue of Congress leader P. Kakkan on Dr. Ambedkar Road. The bhoomi puja for the installation was done on Wednesday.
Mr. Ramkumar said that it was because of the efforts of former Chairman, Board of Trustees of Meenakshi Sundareswarar Temple, V. N. Chidambaram, a close friend and associate of the thespian, that the idea materialised. According to Mr. Chidambaram, the eight-and-a-half-foot bronze statue to be installed in Madurai would be different from the bronze statues installed in Puducherry, Chennai and Thanjavur.
Where is Dr.Ambedkar road ? :oops:
நன்றி முரளி, ராகவேந்தர், ராகேஷ்...
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடரில், நேற்றைய எபிசோட்டில் திரு. ராம்குமார் சொன்ன தகவல்கள் ரொம்ப 'டச்சிங்'காகவும், மனதை நெகிழச்செய்வதாகவும் இருந்தன. முதலில், உலகநாயகன், கலைஞானி டாக்டர் கமல், தனது திரையுலக பாதையில் ஐம்பது வருடங்களைத் தொட்டதற்கு வாழ்த்துச்சொன்னவர், கமலுக்கும் சிவாஜிக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றியும் விவரித்துச்சொன்னார். களத்தூர் கண்ணம்மாவைத்தொடர்ந்து, பார்த்தால் பசிதீரும் படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவத்தைச் சொல்லும்போது, அதில் சிவாஜியின் பெர்ஃபாமென்ஸ் பற்றியும் சொன்னார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ஒருகால் ஊனமுற்ற நிலையில் 'காலை நொண்டிக்கொண்டே டூயட் பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்' என்றுபெருமையுடன் குறிப்பிட்டார். (அதே மாதிரி கமல் நடந்து காட்டுவாராம்). கூடவே தேவர் மகன் கதை டிஸ்கஷன் பற்றிக்குறிப்பிட்ட ராம்குமார், பாதிக்கதையை மட்டும் எழுதிய நிலையில், நடிகர்திலகத்திடம் கதை சொன்ன கமல், நீங்கள் நடிப்பதாக இருந்தால் மீதிக்கதையையும் எழுதுகிறேன் என்று சொன்னாராம். முதலில் மறுத்த நடிகர்திலகம், பின்னர் சிறிதுநேரம் கழித்து கன்வின்ஸ் ஆகி, 'சரி நடிக்கிறேன், போய் மீதிக்கதையை ரெடி பண்ணு' என்றாராம்.
தேவர் மகனுக்காக 'சிறந்த நடிகர்' என்ற தேசிய விருது வழங்கப்பட்டபோது, நடிகர்திலகம் அதைப்பெற்றுக்கொள்ள டெல்லிக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும், நடிகர்திலகம் மறுத்ததால், சிறந்த படத்துக்காக தேவர்மகனுக்கு வழங்கப்பட்ட விருதைப்பெற கமலும் டெல்லி செல்லவில்லை என்றும் சொன்னார். (மத்தியில் இருப்பவர்களுக்கு இது உறைத்ததால்தான், 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர்திலகத்தைத் தேடி வந்தது போலும்).
பின்னர், எகிப்து அதிபர் கமால் அப்துல் நாஸர், இந்தியா வந்திருந்தபோது நடிகர்திலகம் அளித்த விருந்தில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தியதையும், அப்போது நடிகர்திலகம் நினைவுப்பரிசாக வழங்கிய பெரிய தஞ்சாவூர் தட்டை மகிழ்ச்சியுடன் நாஸர் ஏற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். (தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடிகர்திலகம் பெருமை சேர்த்த தருணங்கள்).
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரும் அவரது குடும்பத்தினரும், தங்கள் குடும்ப நண்பர்களாக ஆன நிகழ்ச்சியையும் ராம்குமார் சொன்னார். பம்பாயில் 'பாவமன்னிப்பு' படம் பார்த்த லதாவும் அவரது குடும்பத்தாரும், நடிகர்திலகத்தைப் பார்த்தபோது, தங்களின் தந்தை நினைவு வந்ததாகவும், உடனே விமானத்தைப்பிடித்து சென்னை வந்து நேராக நடிகர்திலகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள் அவர் காலில் விழுந்து ஆசிபெற்று, அவர் கையில் ராக்கியைக் கட்டி தங்களின் அண்ணனாக ஏற்றுக்கொண்டார்களாம். முன் அறிமுகம் இல்லாத இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இந்த அன்பில் நடிகர்திலகம் திகைத்துப்போனாராம். அன்றிலிருந்து இன்று வரை தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதுவும் லதா மங்கேஷ்கர் இல்லாமல் நடந்ததில்லையென்றும், அதுபோலவே லதாவின் குடும்ப நிகழ்வுகளும் நடிகர்திலகம் மறையும் வரை அவரில்லாமல் நடந்ததில்லை என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். (லதா மங்கேஷ்கர் ராக்கி கட்டிய அந்தக்கைகளில் நானும் ராக்கி கட்டியிருக்கிறேன் (இதை முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்) என்பதை நினைத்தபோது என் கண்கள் பனித்தன
'வசந்தகாலக்கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்').
ஒவ்வொரு ஆண்டும், நடிகர்திலகம் பிறந்த நாளான அக்டோபர் 1-ம்தேதி, நடிகர்திலகத்துடன் பணியாற்றிய கலைஞர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆண்டுதோறும் தலா ஐம்பதாயிரம் செக்கும், சிவாஜி விருதும் வழங்கும் திட்டம், லதா மங்கேஷ்கர் சொன்ன யோசனைதான் என்றும், அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக தானும் பிரபுவும் அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் இவ்வருடமும் வரும் அக்டோபர் 1 அன்று செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்,
ஆரம்பத்தில் குடும்பத்திற்காக நேரம் செலவிடாமல், படப்பிடிப்புகளிலேயே இருந்த நடிகர்திலகம், 1970-க்குப்பின்னர், குடும்பத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய ஓய்வெடுத்துக்கொள்வாராம். 'அதன்பின்னர்தான் நாங்களெல்லாம் அப்பாவுடன் அதிக நேரம் இருக்க முடிந்தது' என்ற ராம்குமார் ஒரு மகனாக தன் ஆதங்கத்தை வெளியிட்டபோது நம் கண்களில் நீர் கட்டியது. 'அப்பா தன் வாழ்நாளில் ஒருமுறைகூட தன்னையோ பிரபுவையோ கட்டியணைத்துக் கொண்டதில்லை, சித்தப்பா பசங்களையெல்லாம் அணைத்துக்கொள்வார். கேட்டால் அவங்க முன்னால் உங்களை அணைத்துக்கொண்டால் பெரியப்பா தன் பிள்ளைகளை மட்டும் அணைத்துக்கொள்கிறார் என்று நினைப்பார்கள் என்ற எண்ணத்தினால் விலகியே இருப்பாராம். (அதனால்தான் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் குடும்பமாக திகழ்கிறது). அவர் மறைந்த பிறகு, அவர் உடலைக்கட்டிக்கொண்டு அழும் பாக்கியம்தான் தனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னபோது, பாசத்துக்கு ஏங்கிய அந்த முகத்தைப்பார்த்து நம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் மனம் உடைந்துவிடாமல் பேசினார். ராம்குமார் கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் கண்கலங்கியதை நாம் பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் 'தீர்ப்பு' படம் பார்த்தேன். நல்ல கதை ஆனால், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.
வரைப் படங்களோடு தலைப்பு மற்றும் பெயர் பட்டியல் காண்பிக்கப் பட்டது. அதன் மூலம் கதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. (spoiler :cry2:) அந்த படங்கள் போடாமல் இருந்திருந்தால், இன்னும் கதை எனக்கு சுவாரசியமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் M.P. என்று இருந்தது. அது ஏன்??? :roll:
இப்படத்தை பற்றி யாராவது இதற்கு முன் விமர்சித்திருந்தால் 'link' கொடுக்கவும். நன்றி :)
He was nominated to Rajyasabha and so MP :-)Quote:
Originally Posted by Thalafanz
உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது :bow: :bow: :bow:Quote:
Originally Posted by saradhaa_sn
:(Quote:
அவர் மறைந்த பிறகு, அவர் உடலைக்கட்டிக்கொண்டு அழும் பாக்கியம்தான் தனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னபோது, பாசத்துக்கு ஏங்கிய அந்த முகத்தைப்பார்த்து
சாரதா அவர்கள் சொன்னது போல் நேற்றைய சிங்கத் தமிழன் சிவாஜி நிகழ்ச்சி, அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் உணர்வுகள் நம்மை நெகிழ வைத்தது. லதா மங்கேஷ்கர் அவர்கள் மனோகரா ஹிந்திப் பதிப்புக்கான பாடல் பதிவின் போது, அப் படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பையும் மொழி நயத்தையும் கண்டு வியந்தாராம், மொழி தெரியாவிட்டாலும் அவரை உணர்ச்சி வயப்பட வைத்த நடிகர் திலகத்தின் திறமையை என்னென்பது. அந்த மனோகரா திரைப்படம் அவர்களை தம்முடைய தந்தை தீனாநாத் மங்கேஷ்கரின் நினைவுகளை வரவழைத்து அவரிடம் இட்டுச் சென்றதாம். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்க்கும் போது தீனாநாத் உடனே நினைவுக்கு வந்து விட்டாராம். அதற்கேற்றார் போல் சிறிது காலத்தில் பாவ மன்னிப்பு பம்பாய் அரோரா திரையரங்கில் ஞாயிறு காலை காட்சி நடைபெறும் செய்தி யறிந்து, உடனே சகோதரிகள் அப்படத்தைப் பார்த்தார்களாம். மிகவும் ஒன்றி விட்ட நிலையில் அன்று இரவே புறப்பட்டு கைநிறைய ராக்கி கயிறுகளை எடுத்துக் கொண்டு சென்னை வந்து நேராக அண்ணன் நடிகர் திலகத்தை சந்தித்தார்களாம். லதா மங்கேஷ்கரைப் பற்றி ஏற்கெனவே நடிகர் திலகம் அறிந்திருந்தாலும் பரிச்சயமில்லாத நிலையிலும், சகோதரிகள் தாமாக ஓடி வந்து பாவ மன்னிப்பு படம் பார்த்த மறுநாளே, அதாவது திங்கட் கிழமை காலையிலேயே விரைந்து வந்து அவருக்கு ராக்கி கயிறு கட்டி பாசத்தோடு அன்பு மழை பொழிந்த போது, நடிகர் திலகம் திக்கு முக்காடி விட்டாராம். அன்று தொடங்கிய பாசப் பிணைப்பு இன்று வரை தொடர்கிறது என்றால், இதற்கு என்ன பொருள். தேசிய ஒருமைப்பாட்டுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.
இப்படிப்பட்ட கலைஞனை சரியாக கொண்டு செல்ல மறுக்கும் தமிழக மீடியாக்களை என்னென்பது.
ராகவேந்திரன்
டியர் முரளி,
தேடி வந்த மாப்பிள்ளை 28ம் தேதியன்று தான் வெளியானது. நான் தட்டச்சு செய்யும் போது தவறி விட்டிருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு என் உளமார்ந்த நன்றி.
இதை நாம் திரும்பத் திரும்ப சொல்லி அங்கலாய்க்க தேவையில்லை என்பது என் கருத்து.Quote:
Originally Posted by RAGHAVENDRA
இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் ஒருவரை தூக்கிப் பிடிக்க அவர்களுக்கு அதனால் அரசியல் அல்லது நிகழ்கால பொருளாதார லாபம் என்று ஏதாவது இருக்க வேண்டும் .
நடிகர் திலகம் இவற்றையெல்லாம் தாண்டிய சகாப்தக் கலைஞன் என்று பெருவாரியான மக்கள் மனதில் நிறுத்தியிருப்பதே அவரின் தனிச்சிறப்பு .
Joe, the avatar, is that from Raja?
"தாய்"
பராசக்தியில் துவங்கிய நடிகர்திலகத்தின் 'கருப்பு-வெள்ளை' சகாப்தத்தின் கடைசி அத்தியாயம்.
1974-ல் சிவகாமியின் செல்வன், வாணி ராணி படங்களுக்கு மத்தியில் வெளியான, ஜனரஞ்சகமான படம். நடிகர்திலகத்தின் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் காட்சிகள் துண்டு துண்டாகவே நினைவிருக்கிறது. நம்பியாரும் நடித்திருந்ததாக நினைவு. டி. யோகானந்த இயக்கியிருந்தார்.
மெல்லிசை மன்னரின் இசையில், பெருந்தலைவர் புகழ்பாடும் 'நாடாள வந்தாரு' பாடலும், 'நான் பார்த்தாலும் பார்த்தேண்டி மதராஸு பட்டணத்தை' பாடலும் நினைவிருக்கிறது. இப்போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் காண்க்கிடைக்கவில்லை.
முரளி அவர்கள் (அல்லது யாராவது) 'தாய்' படத்துக்கு விரிவான விமர்சனம் எழுதலாமே...
சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொடருக்கு செய்தது போல் இப்போதும் விமர்சனம் செய்யப்படும் படங்களின் அந்நாள் பேப்பர் விளம்பரங்களை விமர்சன பதிவின் ஊடே உள்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜோ.
இந்த அக்டோபர் முதல் வாரம் இரண்டு பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் நான்கு (Oct 4th) அன்று மதுரையில் சிலை திறப்பு விழா. அக்டோபர் ஒன்று (Oct 1st)நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தன்று சென்னையில் விழா. வழக்கம் போல் திரையுலக சாதனையாளர்கள் சிலர் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்த வருடம் இசை துறையினற்கு சிறப்பு செய்யப்படுகிறது. It is going to be a musical tribute.
திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு நினைவு தபால் உறை வெளியிடப்படும் நேரத்தில் சிவாஜி விருது வழங்கி கௌரவிக்கப்பட போகிறவர்கள் பி.சுசீலா, பி.பி.எஸ். மற்றும் எஸ்.பி.பி. அவர்கள். இந்த விழா பற்றிய மேல் விவரங்கள் விரைவில்.
அன்புடன்
உங்கள் பதிவைப்பார்த்தபிறகுதான், நான் மீண்டும் விமர்சனக்கட்டுரையைச்சென்று பார்த்தேன்.Quote:
Originally Posted by Murali Srinivas
மிக்க நன்றி ஜோ.
இப்படி அடிக்கடி நடிகர்திலகத்தின் விழாக்கள் நடப்பது (அவர் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கத்தையும் மீறி) மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் திரு வசந்தகுமார் நடத்திய காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர்திலகத்தின் படத்திறப்புவிழா கொண்டாடப்பட்டது.Quote:
Originally Posted by Murali Srinivas
டி.எம்.எஸ். பெயரைக்காணோமே என்று பார்த்தேன். பின்னர்தான் அவர் ஏற்கெனவே 'சந்திரமுகி' வெள்ளிவிழாவின்போது கௌரவிக்கப்பட்டது நினைவு வந்தது.Quote:
Originally Posted by Murali Srinivas
சரி, 'மெல்லிசை மாமன்னர்' ஏற்கெனவே சிவாஜி விருது விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளாரா?. இல்லையெனில் இது சரியான தருணமல்லவா?. எப்படி விடப்பட்டார்?.
Where ? I read Ambedkar road. Where is that ?Quote:
Originally Posted by Murali Srinivas
Prabhu,Quote:
Originally Posted by Prabhu Ram
This is the road in front of the court at KK Nagar or you can say the road in front of Raja Muthiah mandram. This is what I have been given to understand. My confusion starts when they mention Kakkan's statue is situated nearby. Need to zero on the location.
Regards
Two Good News Murali sir... thanks.Quote:
Originally Posted by Murali Srinivas
Including Madurai, now SIX statues for NT in Tamil Nadu.
Good.... You are always coming with un-noticed and under-rated movies of NT, and it is one among them.Quote:
Originally Posted by saradhaa_sn
Unfortunately I was not able to see this film during release, and it never come for re-release anywhere in Chennai. Not shown in any TV channels (or I might have missed to watch) and CD/DVDs also not available I think.
It was released in (NT-kku rAsiyillAtha) Globe theatre. (Previous releases were Kaval Dheivam, pAlAdai, Sivandha maN. out of them SM only escaped)
It is more welcome if anybody come with review...
என்னுடைய மிகவும் அபிமான நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றான தாய் படத்தை நினைவூட்டிய சாரதா அவர்களுக்கு நன்றி.
07.03.1974 அன்று முதல் நாள் முதல் காட்சி சென்னை குளோப் தியேட்டரில் பார்த்து. படம் எடுக்கப்பட்ட கடைசி நாள் வரை மகளிர் கூட்டம் அலைமோதி, நல்ல வசூலுடன் ஒடிய படத்தை அனாவசியமாக எடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு அப்படம் அங்கிகருந்து கபாலி, ஜெயராஜ், சீனிவாசா என்று சுற்றி அலைந்து பெட்டியில் போய் படுத்துக் கொண்டு விட்டது போலும். அதற்குப் பின் சென்னையில் அப்படத்தைக் காண வாய்ப்புக் கிடைக்கவில்லை. முதல் ரன்னில் மூன்று முறை பார்த்தது. குறிப்பாக நாடாள வந்தாரு, பாடலுக்காகவே பார்த்தேன். கதை கிராமத்து இளைஞன், பிழைப்புக்காக சென்னை வந்து சந்திக்கும் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்தது. எஸ்.வரலஷ்மியின் குரலில் மங்களம் காப்பாள் சிவசக்தி, மாங்கல்யம் காப்பாள் என்ற பாடல், சுசீலாவின் தேன் குரலில் எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் என்ற இனிமையான பாடல்கள். நான் பார்த்தாலும் பார்த்தேன்டி மதராஸுப் பட்டணத்தை பாடலில் நடிகர் திலகத்தின் முகபாவங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.ஆனால் வலுவான திரைக்கதை இல்லாததும், இடைவெளி இன்றி வெளிவந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் அந்தப் பக்கம் சிவகாமியின் செல்வன், பின்னாடியே வாணி ராணி இந்த இரு படங்களும் போட்டி. காங்கிரஸார் இந்தப் படத்தை ஒரு இலக்கணமாகக் கருதி பார்த்திருந்தால் கூட காமராஜரின் அருமை தமிழ்நாட்டில் மேலும் பரவியிருக்கக் கூடும்.
குளோப் தியேட்டரைப் பற்றி இவ்விடம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மற்ற தியேட்டர்களைப் போல் அல்லாமல் இருக்கைகள் சற்று அகலமாக இருக்கும். ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் கணிசமான இடைவெளி, நல்ல ஒலியமைப்பு போன்றவை இத்தியேட்டரின் சிறப்புகள்.
ராகவேந்திரன்
nIrOdum vaigayilE (paar magaLE paar) paadal kaatchchi pOla irukkE...Quote:
Originally Posted by groucho070
No there was one before this. Yeah, this one looked like mid 60s.Quote:
Originally Posted by RC
Kumudham magazine survey done in 1990 - when Sivaji was almost at the end of his career!
[html:8d5b54a228]
http://www.imagetub.com/is.php?i=599...am_survey_.jpg
[/html:8d5b54a228]
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி ஓரங்க நாடகம் இடம் பெற்ற சூழலை விளக்கும் போது கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதை படித்து விட்டு,அந்த நிகழ்ச்சி பற்றிய வர்ணனையையும் புகைப்படங்களையும் பழைய சித்ராலயா வார இதழிலிருந்து எடுத்து ஸ்கேன் செய்து அனுப்பிய ராகவேந்தர் சார் அவர்களுக்கும் அதை பொருத்தமாக அந்த போஸ்டில் [Page 48] உள்படுத்திய ஜோவிற்கும் மனங்கனிந்த நன்றி.
1990-களிலும் கூட நடிகர் திலகமே சாதனை செல்வாக்கில் முன்னணியில் இருந்தார் என்பதை இந்த தலைமுறைக்கு மீண்டும் எடுத்துச் சொன்ன NOV-விற்கும் குமுதத்திற்கும் நன்றிகள் பல.
அன்புடன்
thanks to Vettipayal.com
நடிப்புக் கடவுள்
கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.
பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?
ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.
பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.
ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.
பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...
..........................
ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!
தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி
ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?
தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.
புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.
ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!
தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.
ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.
..................................
பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!
ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரையொன்று.....................
உலக அளவில் விருதுகள்!
சின்னராசு
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
நடிகர் சிவகுமார் ஓரு பேட்டியில் சிவாஜியை பற்றி கூறியது.
என்னுடைய காலகட்டத்துல ஒரு நடிகர். நான் பேர் சொல்ல விரும்பல. ஜுலியஸ் சீசர் வேடத்தில் நடித்தார். ஜுலியஸ் சீசர் உட்பட ரோமாபுரியில் யாரும் மீசை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். புத்தர் என்றால் அவருக்கு ஒரு வடிவம் வைத்திருக்கிறோம்.
அந்த வடிவத்தைப்போல நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசுநாதர் என்றார் ஒரு வடிவம் நம்கண் முன் தோன்றும். தாடி வைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அதை அகற்றிவிட்டு நடிக்கக் கூடாது.
ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு நடிகர், நான் அந்த படத்தில் நடிக்கும்போது.............. திருமங்கை மன்னன் என்று ஒரு அரசர். அவர் தன்னிடம் உள்ள சொத்துக்கள் பணம் எல்லாவற்றையும் போட்டு விஷ்ணுவைக்கு கோயில் கட்டுகிறார். பணம் போதவில்லை. பக்கத்து அரசர்களிடம் போய் கேட்கிறார். யாரும் கொடுப்பாரில்லை. திருடியாவது வந்து கோயில் கட்டலாம் என்று இரவு நேரத்தில் கள்ளர் வேஷம் போட்டு பணம் திருடிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியில் திருமண கோஷ்டி ஒன்று வருகிறது. அந்த கொள்ளைக்கார மன்னன் அவர்களை பாதையில் மடக்கி நிறுத்துகிறான். அத்தனை பேரின் அணிமணிகள் கழற்றப்பட்டு கொள்ளையன் முன்பு குவிக்கப்படுகிறது. மணமகனின் காலில் மெட்டி என்று சொல்லப்படும் ஆழி ஒன்று மட்டும் கழற்றப்படாமல் இருப்பதை மன்னன் பார்த்துவிடுகிறான். மணமகனாக வந்ததோ, மகாவிஷ்ணு. காலில் ஆழி மின்னுகிறது கழற்ற மனம் வரவில்லையோ என்று மன்னன் கேட்கிறான்.
கொள்ளைக்கார ராஜா தன் கையினால் கழற்றப்பார்க்கிறார் முடியவில்லை. அப்போது காலில் தன் வாயை வைத்து பல்லினால் கடித்து கழற்றுவது போல அந்தக் காட்சி வரும். நான் ஒரு சாதாரண நடிகன். அவர் சிவாஜி கணேசன். உலகத்திலேயே மிகப்பெரிய நடிகர்.
திருவடிசூலம்இடம் எப்படி என்றால், மக்கள் காலைக்கடன்களை முடித்து அந்த இடமே அசிங்கமாக இருக்கும். சிவாஜிகணேசனுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் என்ன பண்ணியிருக்கலாம் என்றால்,........... எத்தனை பேர் புராணம் படித்திருப்பார்கள்? திருமங்கை வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? பத்து பேருக்கு தெரிந்திருக்கலாம். அவர்களும் திரைப்படக் கொட்டகைக்கு வரப்போவதில்லை.
காட்சியின் கடைசி கட்டம் படமாக்கப்படவிருந்தது. கேமரா ஓடிக் கொண்டிருந்தது. கொள்ளைக்காரன் வேடத்திலிருந்த சிவாஜி கணேசன் மடார் என்று மண்டியிட்டு அந்த புதுமுக நடிகரின் (எனது) காலை தூக்கி தன் முழங்கால் மீது வைத்து கைகளால் ஆழியைக் கழற்ற முயன்றார். முடியவில்லை. மின்னல் வேகத்தில் பாதத்தை மேலே தூக்கி கால் விரலை வாய்க்குள் விட்டு கடித்து ஆழியைக் கழற்றிவிட்டார்.
தொழிலுக்காக எந்த எல்லைக்கும் இறங்கி அற்புதமாக நடிக்கக்கூடிய மிகப்பெரிய நடிகர் அவர்.
THANKS TO MY NT FANS WHO HELPED IN THIS REGARD :
புத்தகம் முழுக்க திரு. டி.எஸ் என். கேள்விகள் கேட்க அதற்கு நடிகர் திலகம் பதிலளித்திருக்கிறார்.
சிவாஜியின் பூர்வீகம்
டி.எஸ்.என்.: உங்கள் பூர்வீகம மற்றும் பெற்றோர் மூதாதையர் இவர்களைப் பற்றி கூறுங்களேன்.
சிவாஜி: எனது பூர்வீகம் வேட்டைத்திடல் என்ற தஞசாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு வளமான கிராமம். இங்கு தான் எனது தகப்பனாரின் குடும்பம் வசித்து வந்தது. நான் பெரும்பாலும் எனது தாயாரால் வளர்க்கப் பட்டதால் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கறிவேன். எனது தாயார் ராஜாமணி அம்மாள் எனது பாட்டனார் சின்னசாமி கலிங்கராயரின் பதினோராவது குழந்தை. பாட்டனார் இந்திய ரயில்வேயில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மதுரை திருச்சி ஆகிய ரயில்வே லயன்களுக்கு பொறுப்பாளரக இருந்தாரென நினைக்கிறேன்.
டி.எஸ்.என்.: நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதியைக் கூறமுடியுமா?
சிவாஜி: நான் பிறந்த நாளை சரியாகத் தெரியாது. பிறந்த ஆங்கில தேதி அக்டோபர் 1 1928. அன்று எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் கைதானார் அது எனது நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.
டி.எஸ்.என்.: உங்கள் பிறந்த தேதி பத்தாம் மாதமான அக்டோபரின் முதல் தேதி யாக இருப்பதாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியாக இருப்பதாலும் நீங்கள் எல்லா துறைகளிலும் முதலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சிவாஜி: எனக்கு திருமணம் ஆனது மே மாதம் முதல் தேதி என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் வாழ்க்கையில் முதல் இடத்தில் இருக்கிறேனோ இல்லையோ எனது வாழ்க்கையின் மிக முக்கியான நிகழ்வுகள் முதல் தேதியில் நிகழ்ந்துள்ளன.
டி.எஸ்.என்.: உங்களது உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
சிவாஜி: எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. அனைவருக்கும் மூத்தவர் திருஞான சம்பந்த மூர்த்தி இரண்டாமவர் கனக சபா நாதன் மற்றும் மூன்றாமவர் தங்கவேலு. எனக்கு கணேச மூர்த்தி என்று முதல் பெயர் இருந்தது. எனது தந்தையார் கைதானயுடன் எனது பாட்டனார் காலமானார். அதன் பின்னர் நாங்கள் திருச்சி பொன்மலைக்கு அருகிலிருந்த சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திலிருந்த எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம்.
வளர்ந்த பருவம்
டி.எஸ்.என்.: திடீரென்று உங்கள் தந்தை கைதாகி பாட்டனாரும் காலமான பின் எப்படி உங்களது தாயார் ஒருவர் உதவியும் இன்றி குடும்பத்தை சமாளிக்க முடிந்தது?
சிவாஜி: அதைப் பற்றி கேட்காதீர்கள். நான் பட்ட கஷ்டங்களைப் போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது தந்தையார் கைதானவுடன் எனது தாயார் சில பசுக்களை விலைக்கு வாங்கி பாலை விற்று எங்களை வளர்த்தார். எனது தாயாரின் பெயர் ராஜாமணி அம்மாள். ஆனால் அனைவரும் அவரை பால்காரம்மா என்று தான் கூப்பிட்டார்கள்.
எனக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும் போது எங்களது வீட்டின் எதிர் புறம் இருந்த கிருத்தவ மிஷன் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்கு நாலரை வயது இருக்கும்போது எனது தந்தையார் விடுதலை செய்யப் பட்டார். அப்போது தான் எனது தாயார் எனக்கு அவரை அறிமகம் செய்து வைத்தார். நான் எப்படி அந்த நிகழ்ச்சியை வருணிப்பது? அது ஒரு மிக உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.
நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒருவரின் கஷ்டங்களையும் வேதனைகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. தாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று கேட்காமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்ததா? தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை. கண்ணீர் விட்டல்லவா நாம் அதை வளர்த்தோம்? நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனை குடும்பங்கள் கஷ்டப் படடிருக்கின்றன. எங்கள் குடும்பம் ஒரு உதாரணமாக திகழ வில்லையா?
நடிகர் திலகத்தின் முதல் நாடக வேடம்-பெண் வேடம்
டி.எஸ்.என்.: வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நாடக குழுவினரிடம் தான் ஓர் அனாதை என்று சொல்ல எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?
சிவாஜி: என்னைப் பொறுத்தவரை கட்டபொம்மன் நாடகத்தில் மெய் மறந்து விட்டேன். ஏழு வயது முதல் அந்த நாடகம் என் பனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் தான் எனக்கு பெயரையும் புகழையும் ஈட்டி தந்தது. எப்படியாவது நாடக குழுவில் சேர்ந்து விட வேண்டும் என்று தீர்மானித்தால் தான் நான் அனாதை என்று பொய் சொன்னேன். பொய் சொன்னது தவறு தான். ஆனால் சரி எது தவறு எது என்று தீர்மானிக்கும் வயதா அது?. எனது கனவை எப்படியாவது நிறை வேற்ற வேண்டும் அதனால் தான் நான் அவ்வாறு செய்தேன்.
நாடக குழுவில் சேர்ந்து திண்டுக்கல் சென்ற எனக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது ஆர்வமோ அல்லது என்னுள் இருந்த சக்தியோ என்னை ஒரு நடிகனாக்கியது. எனது குருவின் பெயர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்க முடியாத பெயர்.
டி.எஸ்.என்.: நீங்கள் நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி கம்பெனி என்றல்லவா சொன்னீர்கள்?
சிவாஜி: நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி நாடக கம்பெனி. கம்பெனியில் இரண்டு பொன்னுசாமி பிள்ளை இருந்தனர். ஒருவர் முதலாளி பொன்னுசாமி மற்றவர் ஆசிரியர் பொன்னுசாமி. ஆகவே அவர்களை பெரிய பொன்னுசாமி சின்ன பொன்னுசாமி என்று அழைத்தனர். எனது குரு சின்ன பொன்னுசாமி. அவர் தான் என்னை நடிப்புலகில் அடியெடுத்து வைக்க உதவினார். எனக்கு முதலில கற்றுக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரம் எது தெரியுமா? ராமாயணத்தில் வரும் சீதையின் கதாபாத்திரம் தான அது. "யாரென இந்த புருஷன் அறிகிலேன்" என்ற பாட்டை நான் பாட வேண்டும் அதோடு நடனமாட வேண்டும் பேச வேண்டும் சிரிக்க வேண்டும் ஏனெனில் இது ஒரு முக்கியமான காட்சி. சீதை ராமரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி. நான் இந்த காட்சியில் திறம்பட நடித்து காட்சி முடிந்து மேடைக்கு பின்புறம் சென்று ஒப்பனையைக் களையும் போது எனது குரு அங்கு வந்து என்னை செல்லமாக முதுகில் தட்டி நான் நன்றாக நடித்ததைப் பாராட்டினார்.
நான் ஒரு சிறந்த நடிகனாகி எனது பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டேன். எனது முதல் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுக்களால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனது நடிப்புத் தொழில் பல நல்ல கதாபாத்திரங்களினால் வெகுவாக முன்னேறியது. என்னை மாதிரி நாடக உலகில் ஏற்றம் கண்டது வேறு யாரும் கிடையாது என்று பெருமிதத்தோடு சொல்லுவேன்.
பெரும்பாலும் ஒருவர் பெண் வேடம் தரித்து நடிக்கத் துவங்கி விட்டால் அவருக்கு அதே மாதிரி வேடங்கள் தான் கிடைக்கும். நாளடைவில் அவரின் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே பெண்களைப் போல் ஆகிவிடும். என்னைப் பொறுத்த வரை இது நடக்கவில்லை ஏனென்றால் நான் பல விதமான கதா பாத்திரங்களை ஏற்று நடித்தேன். ராமாயணத்தில் மட்டுமே எனக்கு நான்கு வித கதாபாத்திரங்கள் கிடைத்தன. முதலில் சீதையாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றபின் பரதனாகவும் நடித்தேன். அந்த கதாபாத்திரத்திலும் எனது நடிப்பு நன்றாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன்.பின்னர் சம்பூர்ணராமாயணம் என்ற திரைப்படத்தில் பரதனாக நடித்தபோது அதைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி என்னைப் பாராட்டி "பரதனைக் கண்டேன்" என்றார். இதை விட புகழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடைக்க முடியாது. இது எனது குருவின் ஆசீர்வாதம் என்று கருதுகிறேன்.
நான் சூர்ப்பனையாகவும் நடித்தேன். சூர்ப்பனகை என்றவுடன் வெறும் அரக்கி என்று நினைத்து விடாதீர்கள். ராமரையும் லட்சுமணரையும் மயக்க ஒரு அழகு மங்கையாக உருவெடுத்தாள் அவள். நான் அந்த அழகு மங்கையாக நடித்தேன். அந்த நாட்களில் எனது தலைமுடி நீளமாக முழங்கால் வரை இருக்கும. நான் குறைந்த ஆடைகளணிந்து தலைமுடியை தொங்க விட்டுக் கொண்டு ஒரு அழகு பதுமையாக காட்சி அளித்தேன். ஷாம்பு ஹேர் ஆயில் விளம்பரங்களில் வரும் அழகு தேவதைகளைப் போல் இருந்தேன். நான் மேடையில் தலைமுடியை அவிழ்த்து அழகை வெளிப்படுத்தியதம் பார்வையாளர்கள் பல நிமிடங்கள் கை தட்டுவார்கள்.
டி.எஸ்.என்.: பிறகு வேறு எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தீர்கள்?
சிவாஜி: நான் ராவணள் மகன் இந்தரஜித் ஆகவும் நடித்தேன். ஒரே நாடகத்தில் வேறுபட்ட காட்சிகளில் பரதன் இந்தரஜித் ஆக இரண்டு ஆண் கதாபாத்திரங்களிலும் சீதை சூர்ப்பனகையாக இரண்டு பெண் கதா பாத்திங்களிலும் நடித்தேன். இவ்வாறு வேறுபட்ட கதா பாத்திரங்களில் நடிக்க கற்றுக் கொடுத்த எனது குருவிற்கே எனது புகழ் அனைத்தும் சேரும். அவரது ஆதரவால் தான் எனது நடிப்புத் திறமை வளர்ந்து ஒரு நல்ல நாடக நடிகனாக பெயர் பெற்றேன்.
டி.எஸ்.என்.: நீங்கள் ஆண் பெண் வேடங்களில் மாறி மாறி நடிக்கும்போது உங்களது குரலை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்குமே இதற்காக விசேட பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?
சிவாஜி: நான் இப்பொது உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது எனது சொந்த குரலில். ஆனால் ஒப்பனை தரித்து உடைகளை மாற்றிக் கொண்டவுடன் எனது குரல் அந்த கதா பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி மாறிவிடும். நாடகங்களில் குரலை மாற்றிக் கொள்வது இயற்கை. மகரக்கட்டு என்ற ஒரு 10 லிருந்து 15 வயது சிறுவனின் பருவத்தில் குரல் உடைகிறது. நான் நடிக்கத் துவங்கிய ஏழு வயதில் எனது குரலில் எந்த மாற்றங்களும் தெரியாததால் வேடத்திற்கு தகுந்த மாதிரி குரலை மாற்றிக் கொள்வது எளிதாக இருந்தது எனக்கு. நான் நிறைய குரல் வள பயிற்சியை மேற் பொண்டதால் தான் எனக்கு சிம்மக்குரலோன் என்ற பட்டம் கிடைத்தது.
குருகுலம்
டி.எஸ்.என்.: நாடகப் பள்ளிகள் ஒரு குருகுலம் மாதிரி நடந்தன என்று சொல்கிறார்களே உங்கள் நாடகப் பள்ளியைப் பற்றி கூறமுடியுமா?
சிவாஜி: எனது காலத்து நடிகர்கள் அனைவரும் தேர்ந்த நடிகர்கள். டி.ஆர. மகாலிங்கம் மதுரை பால கான சபா வின் மெம்பராக இருந்தார்.அந்த கால்த்தில் நாடகங்களில் நன்கு பாடக்கூடியவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தனர். ஒருவர் மராத்தி பாடகர் பால கந்தர்வ மற்றவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா. டி.ஆர. மகாலிங்கம் இவர்களுக்கு ஒரு படி கீழே தான் இருந்தார். நான் அவருடய சக நடிகனாக இருந்தேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். எம்ஆர் ராதா வும எங்கள் குழுவில் இருந்தார்.
நாடகப் பள்ளிகள் ஒரு தலை சிற்நத குரு குலம். புராணங்களில் நாம் ராமர் பாண்டவர்கள் ஆகியோர் குரு குலத்தில் கல்வி கற்றனர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். எனது குரு குலம் அவர்களது குரு குலத்திற்கு சற்றும் குறைந்தது இல்லை.
தினம் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்து கடவுளைத் துதிப்போம். அதன் பின் முதல் பகுதியில் பாடவும் நடனமாடவும் பயிற்சி பெற்றோம். அதன் பின்னர் அன்று இரவு நடக்க விருக்கும் நாடகத்திற்கான வசனங்களை ஒத்திகை பார்ப்பது ஆகும். என்னை ஒரு புத்தகப் புழு என்பார்கள். ஏனெனில் நான் எப்போதும் நாடக நம்பந்தமான் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். எனக்கு நாட்டிய சாஸ்திரங்களில் கூறியுள்ளது போல் நடனமாடவும் பாடவும் தெரியும்.
இப்படி உரக்க பேசுவதிலும் நடனமாடுவதிலும் பாடுவதிலும் தீவிர பயிற்சி பெற்றோம் என்றாலும் அதற்கு தகுந்த உணவு எங்களுக்கு தரப்படவில்லை;. சாதம் சாம்பார் ரசம் மோர் இவைகளுடன் நல்ல சாப்பாடு எங்களுக்கு கிடையாது. ஏழை சிப்பாய்களைப் பொல் சாப்பிட்டாலும் ஒரு கம்பீரமான அரசனைப் போல் கர்ஜிக்க வேண்டும். எங்களது குரு குல வாழ்க்கையில் பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு கடுதாசி போட வேண்டும் என்றோ கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. குரு குலத்தில் நான் கஷ்டப் பட்டேன். ஆனால் அனைத்தும் எதற்காக? விடை என்னுடய சாதனைகளில் இருக்கிறது. என்மேல் நீங்கள் வைத்துள்ள மரியாதைக்கும் இந்த எழுபது வயதிலும் என்னை பேட்டி கண்டு எனது நினைவுகளை பதிவு செய்கிறீர்களே அதில் விடை இருக்கிறது. இதைத் தான் நான் வாசகர்களுக்கு கூற விரும்புகிறேன்.
டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விட்டு வெளியெ வந்த பிறகு எப்போதாவது உங்களுடய குடும்பத்தினரை சந்திக்க சீங்கள் முயற்சித்ததுண்டா?
சிவாஜி: நான் நாடக கமபெனியில் இருந்த போது எனது மூத்த தமையனார் திருஞான சம்பந்த மூர்த்தி காலமானார். காக்கா ராதாகிருஷ்ணன் அவர்கள் எப்படியோ கெஞ்சி கூத்தாடி வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்று சென்று வந்தார். அவர் திரும்பி வந்தவுடன் தான் எனக்கு என் தமையனார் காலமான செய்தி கிடைத்தது. நாடகங்களை நடத்துபவர்களுக்கு நான் இன்றியமையாதவனாக இருந்தேன். நான் விடுப்பில் சென்றால் எனது இடத்தில் இன்னொரு பையனைத் தயார் செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் என்னை தாஜா பண்ணி விடுப்பில் செல்ல விடவில்லை.
டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விடும்போது உங்களுக்கு ஏழு வயது. உங்கள் பெற்றோர்களிடம் சொல்லிக்காமல் வந்து விட்டீர்கள். பின் எப்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது?
சிவாஜி: நான் வீட்டை விட்டு வந்த பின் என் பெற்றோர்கள் என்னைத் தேடியிருப்பார்கள். அந்த காலத்தில் தகவல் தொடர்பு வசதிகள் மிக்க் குறைவு. காக்கா ராதாகிருஷ்ணன் அவர் வீட்டிற்கு சென்ற சமயம் என் பெற்றோர்களிட்ம் நான் இந்த நாடக குழுவில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் " எங்கிருந்தாலும் அவன் நலமாக இருக்கட்டும்" என்றார
கதாநாயகனாக நடிக்கும் ஆசையில்
டி.எஸ்.என்.: தீவிர பயிற்சி நள்ளிரவில் நடித்தது போதிய உணவின்மை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுப்பு இவைகளுக்கு இடையே தொடர்ந்து நாடகங்களில் நடிக்க உங்களால் எப்படி முடிந்தது?
சிவாஜி: தலை சிறந்த நாடக நடிகனாக வேண்டும் என்ற எனது இலட்சிய வெறியில் நான் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். பொதுவாக ஒரு நடிகனின் வள்ர்ச்சி மெதுவாக சிறிய வேடங்களில் துவங்கி பெரிய கதா பாத்திரங்களுக்கு முன்னேறும். ஆனால் எனக்கு துவக்கத்திலேயே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பின் சிகரங்களை எட்ட வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. ராஜபார்ட் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக எனது ஆசிரியிரிடம் அரசர்கள் வேடங்களில் நடிக்க வேண்டிய எனது திறமையை உணர்த்தினேன். இப்படித்தான் நான் ஒரு ராஜபார்ட் நடிகனாக உயர்ந்தேன். ராஜபார்ட் ரங்கதுரை என்ற திரைப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
டி.எஸ்.என்.: ராஜபார்ட் ரங்கதுரை படம் உங்கள் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று நினைக்கிறேன். சரியா?
சிவாஜி: ஆம. அந்தப் படம் ஒரு நாடக நடிகனின் நாடக வாழ்வில் வரும் கஷ்ட நஷ்டங்களை பிரதிபலிக்கிறது. ரசிகர்கள் ஒரு நடிகனின் சொந்த வாழ்க்கையைப் பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள். " இவனுக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரியும் வேறு மொழிகள் தெரியாது" " இவன் கூலிக்கார நந்தனார் வேடத்தில் நடிக்க மட்டுமே லாயக்கு" " இவனுக்கு அர்சுனர் வேடத்தில் மட்டும் தான் நடிக்கத் தெரியும்" " இவனுக்கு அழத்தான் தெரியும்" என்றெல்லாம் கூறினர்.
ஒரு நடிகன் ஹாம்லெட்டாக மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். முதலில் ரசிகர்கள் அழுகிய முட்டைகளையும் காய் கறிகளையும் அவன் மேல் விட்டெறிந்தால் அவனது மன நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு நான் " இருப்பதா அல்லது இறப்பதா? வாழ்வதா அல்லது உயிர் துறப்பதா?" என்ற என் உண்மை நிலையயை பிரதிபலிக்கும் வசனத்தைப் பேசியவுடன் ரசிகர்களிடமிருந்து பலத்த கை தட்டல் எழுந்தது. இந்த வசனம் ராஜபார்ட் ரங்கதுரை படத்திலும் நான் பேசியிருக்கிறேன். எந்த நடிகனுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது?. நானும் அதை விரும்பினேன். கடவுள் அருளால் அதை அடைந்தேன்
அயர்ன ஸ்திரீ பார்ட்/அயர்ன் ராஜ பார்ட சிவாஜி
டி.எஸ்.என.: மேடையில் நன்றாக நடித்து அபளாஸ் வாங்கினீரகள். நாடகம் முடிந்தவுடன் அந்த அப்ளாஸ் தந்தவர்களை பாரக்கவும தலைமை தாங்கிய பிரபலஸதர்களின் பாராட்டக்களை கேட்கவும் முயன்றீரகளா?
சிவாஜி: எங்களுக்கு அந்த மாதிரி அனுபவங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது.எங்களை வீட்டிற்குள் திரை போடடு வைத்திருந்தார்கள். நாங்கள் வசித்த வீட்டை கம்பெனி வீடு என்று சொல்வார்கள். அது நாடகம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும். இரண்டு லைனாக அணி வகுத்து நின்று எங்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். இன்று ஒரு நடிகர் சினிமா ஹாலுக்குள் சென்றால் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள். அன்றும் அப்படித் தான் இருந்தது. நாங்கள் குழந்தைகள். அழகான குழந்தைகள். நாங்கள் வீதியில் சென்றால் எல்லோரும் எய்களைப் பார்த்து மகிழ்வார்கள். ஆனால் நாங்கள் வீட்டில் அடை பட்டு கிடந்தோம் குரு வின் முகத்தைப் பார்த்தவாறு. வெளியுலக மக்களைப் பார்ப்பது எங்களுக்க ஒரு டானிக் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.
டி.எஸ்.என.: எப்போதாவது நகரத்து பிரபலஸ்தர்கள் கம்பெனி முதலாளியையும் நடிகர்களுடய ட்ரூப்பையும் அழைத்து கௌரவித்திருக்கிறார்களா?
சிவாஜி: இது எப்போதாவது நடந்தது. நகரத்து முக்கியஸதர்கள் ட்ரூப்பில் இருந்த குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து தங்க வைப்பார்கள். அது எங்களுக்கு ஒரு விருந்து மாதிரி. சாதரணமாக வெறும் ரசம் சாதத்தையே சாப்பிட்டு வந்த எங்களுக்கு அங்கு வடை பாயசத்துடன் சாப்பாடு கிடைக்கும். அந்த நாட்களில் நாங்கள் காதி ஆடையே அணிந்தோம். எங்களுக்கு அவர்கள் காதி சட்டை காதி வேஷ்டி பரிசளிப்பார்கள். எங்களது சீனயர்களையும் மானேஜர்களையும் கௌரவிப்பார்கள். அது எங்களுக்கு எப்படி இருந்தது என்று விவரிக்க முடியாது.
டி.எஸ்என்: திண்டுக்கல் காம்பிற்கு பிறகு வேறு எங்கு சென்றீர்கள்?
சிவாஜி: நாங்கள் பழனிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் எங்களது முதல் நாடகமான கிருஷ்ண லீலாவை நடத்தினோம். அதில் நான் அரக்கி பூதணை பாத்திரத்தில் நடித்தேன். கோரமான அரக்கியாக இல்லை ஒரு நல்ல அழகான கிருஷணரை பராமரிக்கும் பெண்ணாக நடித்தேன். நான் பெரும்பாலும் பெண்கள் வேடத்திலேயே நடித்தேன். அந்த நாடகளில் புராண நாடகங்கள் மட்டுமில்லாமல் சமூக நாடகங்களான பதி பக்தி கதரின் வெற்றி பாம்பே மெயில் போன்றவற்றிலும் நான் பெண் வேடங்களில் நடித்தேன். சில நாடகங்களில் அண் பெண் இரண்ட வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.
டி.எஸ்.என்: அந்த நாடகளின் நாடக வழக்கில் அயர்ன் ஸ்திரீ பார்ட் அயர்ன் ரரி பார்ட் எனபார்களே அப்படி என்றால் என்ன என்று விளக்குவீர்களா?
சிவாஜி: அயர்ன் ஸ்திரீ பார்ட் என்றால் மிக முக்கியமான பெண் வேடம் என்றும் அயர்ன் ராஜ பார்ட் என்றால் மிக முக்கியமான அண் வேடம் என்றும் குறிக்கும். அயர்ன் ஸ்திரீ பார்ட்டில் நடிக்கும் நடிகர்களுக்கு விசேடமான மரியாதை உண்டு. எனக்கும்
அந்த மரியாதை கிடைத்தது
ஒரு நண்பனை இழந்தேன்
டி.எஸ்.என்.: பழனியிலிருந்து வந்த பிறகு பால கான சபாவின் வருவாய் அதிகரித்ததா? நாடக கம்பெனி வளர்ச்சியுற்றதா?
சிவாஜி: அப்படி ஒன்றும் உடனடியாக நிகழ்ந்து விடவில்லை. பழனியில் இரண்டாடுகள் இருந்த பிறகு நாங்கள் மதுரைக்கு சென்றோம். அங்கு தான் எங்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. மதுரையில் நாங்கள் கிருஷ்ண லீலா நாடகத்தை போட்டோம். அதில் வழக்கம்போல எனக்கு பெண் வேடம் தேவகியாக கிடைத்தது.
அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் ரதத்தில் ஏற்றி சென்று கொண்டிருக்கும்போது ஒரு அசரீரி குரல் ' தேவகியின் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய் கம்சா' என்று சொல்லும். நாடக கலையின் நுணுக்கமான உத்திகளை அந்த சீனில் கையாண்டனர். ஒரு நட்சத்திரம் விண்ணிலிருந்து கீழிறங்க வேண்டும் அதே நேரத்தில் ஒரு குரல் ஒலிக்க வேண்டும். நட்சத்திரம் தோன்றியது. அனால் குரல் ஒலித்த பின்னரும் அது கீழிறங்க வில்லை. எங்கள் குழுவிலிருந்த எலக்ட்ரீஷியன் சுப்பையா என்பவர் கம்பத்தில் ஏறி அதை சரி பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இறக்க அவரது சடலம் ஒரு வவ்வாலைப் போல கூறையிலிருந்து தொங்கியது.
உங்களால் நம்ப முடிகிறதா? நாங்கள் வசனங்களை பேசிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நல்ல நண்பனை இந்த மாதிரி கோர முறையில் இழந்தது என்னை வெகு வாக பாதித்து. என்னை விட எங்கள் குழுவில் இருந்த மலையாளிப் பையன் கிருஷ்ணன் இந்த பாதிப்பால் மூன்று நாட்கள் வரை ஒன்றும் சாப்பிடவில்லை. நண்பனை இழந்த ஏக்கத்தில் கிருஷணனும் இறந்தான். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பாரகள் என்று கேள்விப் பட்டிருந்தேன். இங்கு அது உண்மையில் நிகழ்ந்தது.
அந்த நாட்களில் நாடக குழவிலிருந்த பையன்களிடம் சாதி மத பேதமில்லாமல் இருந்தோம். எங்கள் குழுவில் முஸ்லிம் மதத்தவர், இந்துக்கள், கிருத்துவர்கள் அனைவரும் எவ்வித பேத மின்றி ஒன்றாக இருந்தோம். பிற் காலத்தில் நான் நடித்த பாரத விலாஸ் படத்தின் கரு இங்கிருந்து தான் வந்தது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட நடிகர்களுக்கிடையெ பேதங்கள் வந்தது சுதந்திரம் கிடைத்த பின்பு தான். தேசத்தை மொழி வாரி மாநிலங்களாக பிரித்தது ஒரு பெரிய தவறு என்று சொல்வேன். நான் பையனாக இருந்த போது இந்த பேதங்கள் இருந்ததில்லை. இது தான் குருகுலத்தின் மகிமை. நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரு தாய் மக்களாக வளர்ந்தோம்.
டி.எஸ்.என்.: மதுரையில் வேறு என்ன நாடகங்கள் போட்டீர்கள்? அங்கிருந்து எங்கு சென்றீர்கள்?
சிவாஜி: மதுரையில் நாங்கள் தசாவதாரம் நாடகத்தை தயாரித்து அரங்கேற்றினோம். அதில் பல கண் கட்டு வித்தைகள் புதிய நாடக உத்திகளைக் கொண்டு மக்கள் மனம் கவர்ந்தோம். மதுரையிலிருந்து நாங்கள் மேலூர் சென்றோம். மேலூரில் தான் தலைவர் கக்கன் வாழ்ந்து வந்தார். ஆனால் மேலூர் எங்களுக்கு மிக மோசமான இடமாக அமைந்தது.
ஒரு பொட்டல் வெளியை துப்புறவு பண்ணி கூடாரம் போட்டோம். ஆனால் மேலூரைப் போல பாம்பு தேள் நிறைந்த ஒரு இடத்தை காண முடியாது. நாங்கள் விக் அணியலாம் என்று அதை எடுத்தால் அதனுள் தேள் இருக்கும். எங்களது ஆடையை எடுத்தால் அதனுள் பல்லிகள் இருக்கும். சில சமயங்களில் விக் உள்ளுக்குள் சிவப்பு எறும்புகள் இருக்கும். ஆனால் அவை கண்ணுக்கு உடனே தென்படாது. நாங்கள் விக் அணிந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் போது இந்த சிவப்பு எறும்புகள் எங்களை கடித்து துன்புறுத்தும். இருந்தும் இவைகளை வெளிக்காட்டாமல் நாங்கள் நாடகத்தை தொடர்ந்தோம்.
நடிகர் திலகமும் நடிக வேளும்
டி.எஸ்.என.: மேலூரிலிருந்து எங்கு சென்றீர்கள்?
சிவாஜி: நாங்கள் பரமக்குடிக்கு சென்றோம். பரமக்குடியில் மறக்க முடியாதது எங்களை விட்டு பிரிந்து சென்ற எம்.ஆர். ராதா எங்களுடன் மீண்டும் இணைந்தது. ராதா அவர்கள் எங்களுக்கு தந்தையைப் போன்றவர். அவர் எங்களிடம் அளவு கடந்த பாசமும் நேசமும் வைத்திருந்ததால் நாங்கள் அவருக்கு எல்லா பணி விடைகளும் செய்தோம். அவரும் எங்களை பேணி பாதுகாத்தார். நாங்கள் உறங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்வார். எங்களுடய குழியலறையை கூட சுத்தம் செய்வார். எங்களுக்கு தலை வாரி விடுவார்.அவர் இதயத்தில் அனைவருக்கும் அன்பு இருந்தது.
பின்னாட்களில் எனக்கு வசதி இருந்த போது அவரிடம் எனக்கிருந்த நன்றியின் பிரதிபலிப்பாக திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அவர் குடியிருக்க வசதி செய்து கொடுத்தேன்.
டி.எஸ்.என்.: அவருடன் நாடகங்களில் நடித்த உங்கள் அனுபவங்களைக் கூற முடியுமா?
சிவாஜி: நாங்கள் இணைந்து நடித்த நாடகங்களில் நான் பெண் வேடம் ஏற்று நடித்தேன். பதி பக்தி என்ற நாடகத்தில் எனக்கு பெண் வேடம் அவருக்கு வில்லன் பாத்திரம். அந்த நாட்களில் நாடகத்திற்கு ஏற்றவாறு முழமையாக நடிக்க வல்ல ஒரே நடிகர் ராதா அண்ணன் தான். ஒரு சீனில் நான் அவரது முடியைப் பிடித்து இழுத்து அடிப்பதாக இருந்தது. எனக்கு அவர் தந்தை மாதிரி ஆனதால் நான் தயங்கினேன். அவர் ஸ்டேஜில் கீழே விழுந்து புரண்டு வலியால் துடிப்பது போல் நடித்து தன்னை உண்மையில் அடிக்க சொல்லி எனக்கு கண் காட்டியதால் நான் துணிந்து அவரை அடித்தேன். நான் அவ்வாறு செய்யாதிருந்தால் நாடகம் முடிந்தவுடன் என்னை கடிந்து கொண்டிருப்பார் அவர்.
ராதா அண்ணன் ஒரு அறிவாளியும் பல்வித்தை மன்னரும் நாடக கலையில் அனைத்தும் அறிந்தவருமாவார். அவருக்கு எலக்ட்ரிகல் வேலைகள் அனைத்தும் தெரியும். அவர் ஒரு காமெடியனாக வில்லனாக ஹீரோவாக இப்படி எல்லா வித பாத்திரங்களிலும் நடிக்கும் தேர்ச்சி பெற்றவர். வேறு எந்த சிரிப்பு கலைஞரும் ராதா அண்ணனை மிஞ்ச முடியாது. அதே மாதிரி பாலையா அண்ணனும் வி.கே. ராமசாமி அண்ணனும் நல்ல தேர்ந்த சிரிப்பு கலைஞர்கள். இவர்களுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.
Quote :
ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பல விஷியங்கள் மறுக்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.. இல்லைஎன்றால் கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கேட்காமல் போனதில் என்ன நியாயம்..
மகிழ்ச்சி + ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது குமுதத்தின் செல்வாக்கு மீட்டர்.
Thanks NOV.
'selvAkku meter' (that is too in 1990 when Rajini & Kamal where in peak and NT is about to retire) tells the silent story of NT's 'selvAkku' among the public.
Thanks NOV... thanks Kumudham.
Thanks 'abkhlabhi' ......
for your wonderful collection of informations, especially NT's achievements in USA trip in 1962.
The pity is Egyptian :clap: , American :clap: and French :clap: Governments know well about NT MORE THAN INDIAN GOVT :hammer: .
குமுதம் எடுத்த 'செல்வாக்கு மீட்டர்' சூப்பர்.
இத்தனைக்கும் 1989, 90 -ம் ஆண்டுகளில் நடிகர்திலகம் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. 1988-ல் வெளியான 'புதிய வானம்' படத்துக்குப்பின் 1991-ல் 'ஞானப்பறவை' படத்தில்தான் நடித்தார்.
அவர் நடிக்காத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட அவர்தான் செல்வாக்கில் முதலிடத்தில் இருந்துள்ளார் என்பதையறியும்போது, ஆச்சரியம் மேலிடுகிறது.
அதனை படத்துடன் இங்கு வெளிப்படுத்திய 'NOV'அவர்களுக்கு நன்றி.