In this Nakesh starrer Paththampasali too GG made his gracious presence!!
https://www.youtube.com/watch?v=yPhGrZXiHRM
Printable View
In this Nakesh starrer Paththampasali too GG made his gracious presence!!
https://www.youtube.com/watch?v=yPhGrZXiHRM
Gap filler : Song from GG starrer Ezhai Pangalan!ஏழை பங்காளன் !
https://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc
தாயாக மாறவா தாலாட்டு பாடவா ...
https://www.youtube.com/watch?v=QhciKW88d_s
Glimpses on Ezhai Pangalan 1963 a GG starrer!
ஜெமினி கணேசன் அளிக்கும் ஏழை பங்காளன் !
I think it is a rare title honor to GG who normally doesn't care for such prominence!!
https://www.youtube.com/watch?v=AzyVKg01bvY
தன்னை சுற்றி கதை பின்னுவதை தவிர்த்து கதை வளையத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு ஏற்ற பாத்திரத்திற்கு உயர்வான நடிப்பை இயல்பாக
நல்குபவர் காதல் மன்னர் !
பூவா தலையா திரைப்படத்திலும் ஜெயசங்கருக்கு ஸ்கோப் அதிகம் என்று தெரிந்தும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து தன் பாத்திரத்தின் கண்ணியம் கெடாது இனிமையான நடிப்பைத் தந்தார் ஜெமினி !
https://www.youtube.com/watch?v=o1Oa8X9bq0g
https://www.youtube.com/watch?v=xc__tSEQL8M
காவியத் தலைவி சௌகாருடன் காதல் காவிய நாயகர் ஜெமினி !
டீனேஜ் காதல்களை பார்த்து புளித்துப் போன கண்களுக்கு முதிர் கன்னியுடன் காதல் முத்துதிர்க்கும் கனிவான கண்ணியவான் ஜெமினி !!
https://www.youtube.com/watch?v=DahmBNGR8Dk
சக்கரம் திரைப்படத்தில் பந்தயம் திரைப்படத்திற்கு பின் ஜெமினியுடன் இணைந்தார் வளர்ந்து வந்த ஜெமினியின் பிரதிபலிப்பாக கருதப்பட்ட எ வி எம் ராஜன்
ஜெமினிக்காக சௌந்தரராஜன் பாடிய குளிக்கப்போனா குமரிப்பொண்ணு பிரபலமான பாடல் !!
https://www.youtube.com/watch?v=loRWztYqk3A
பந்தயம் ஜெமினி பாடல் !
https://www.youtube.com/watch?v=ffSyvKen-Fc
இரவு நடக்கின்றது
பந்தயம் ஜெமினி பாடல்
https://www.youtube.com/watch?v=bfzFIFcd8BI
A mediocre film Thapalkaran Thangai starring GG!
https://www.youtube.com/watch?v=Lr0gnhu6888
Gap filler song from GG's Malathi!
https://www.youtube.com/watch?v=f2hoKR5rdfE
Gap filler : Kairasi song
https://www.youtube.com/watch?v=tKBMmZkwuvc
https://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo
Sir Christopher Lee : the legendary British actor who epitomized Dracula and Scaramanga in the Man With the Golden Gun Moore/Bond is no more! Condolences on behalf of the elite GG thread for this international star contemporary to GG!!
https://www.youtube.com/watch?v=ssvgMHCa45s
https://www.youtube.com/watch?v=354T7lYGgXM
அமைதிக்குப் பின் புயல் நடிகர்திலகம் திரியின் இணைத்தொடர் காதல் மன்னரின் நினைவாக
Part 1 :
சுமைதாங்கி
Quote:
போருக்குப் பின்னும் புயலுக்குப் பின்னும் வரும் அமைதி இயற்கையானதே ஆனால் மனித வாழ்வியல் சுழற்சியில் இது சற்று மாறுபட்டு அமைதியாக வாழ்க்கைப் படகு சென்று கொண்டிருக்கும் பொது சில மனிதக் குறுக்கீடுகளால் சலசலப்பும் குழப்பங்களும் ஏற்பட்டு வாழ்வில் புயலடிக்க ஆரம்பிக்கும் ...சிலநேரம் மீண்டும் அமைதி திரும்பலாம் அல்லது வாழ்வின் இறுதிவரை நிரந்தர அமைதி கிடைக்கும் வரை புயல் தொடர்கதையாகலாம் !
சுமைதாங்கி திரைப்படம் இத்தகைய நிகழ்வுக்கு சிறந்த திரை எடுத்துக்காட்டாகும் !!
கவலையில்லாத வாலிபனாக உற்சாகத் துள்ளலில் அமைதி கலந்த மகிழ்வுடன் சென்றுகொண்டிருந்த காதல் மன்னரின் வாழ்வில் எதிரபாராத நிகழ்வுகளால் குடும்பச்சுமை தலையில் ஏற்றப்பட்ட கணம் முதல் அவரது காதலும் கானல் நீராகி மாறி மாறி துன்பப் புயல் சுழன்றடித்து இறுதியில் அவர் வாழ்க்கையை வெறுத்து கிறித்துவப் பாதிரியாராக மாறும் வரை புயலே !!
https://www.youtube.com/watch?v=KPCIoD48mvU
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc
The gradual transformation of mind set when surrounded by the real life family problems and inevitable commitments!!
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
Riveting climax with GG's calm expressions of a tortured man changing his mind color with this titration process of reaching an end point! Watch the calibre of Sreedhar in making the right use of GG!! In my opinion Sumaithaangi is the ace movie of GG rather than Naan Avanillai!!
https://www.youtube.com/watch?v=3uwKVwkrNCc
அமைதிக்குப் பின் புயல் பகுதி 2 : கல்யாணபரிசு
Quote:
காதல்மன்னரின் மறக்க முடியாத துன்பவியல் நடிப்பை வெளிப்படுத்தி கடைசி காட்சியில் ரோமன் ஹாலிடே கிரிகரி பெக்கின் (Roman Holiday starring Gregory Peck and Audrey Hepburn) க்ளைமாக்ஸ் நடிப்புக்கு இணையாக ஜெமினியின் விரக்தி நடை நமது மனதில் பசுமரத்தாணியாக பதிந்த படம்!
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் திறமையான கதை சொல்லும் வித்தையில் காதல் நாயகன் பாஸ்கராக ஜெமினி மின்னினார் ! நடிப்பில் பின்னினார்!!
அறிமுக சரோஜாதேவியின் காதல் வாழ்வில் அமைதி கண்டபோது விதியின் விளையாட்டில் அக்கா விஜயகுமாரியும் மன்னரால் ஈர்க்கப்பட ..என்னவொரு ட்விஸ்ட் ! இறுதிவரை புயலடித்து விட்டதே!!
https://www.youtube.com/watch?v=82Uo33RfLVY
https://www.youtube.com/watch?v=xhHKrNjgCaM
The unforgettable ending scene with Gemini's acting impact comparable only to that of Gregory Peck in the climax scene of Roman Holiday!!
https://www.youtube.com/watch?v=Fa-XuAxBCs8
GG walked away from us and the impact was felt by his body language even though he showed his back only! But Peck walks towards us...and we forget to winkle till the frames close!!
https://www.youtube.com/watch?v=kIxNV9DSEwA
Gap filler from Kalyana Parisu : Thangavelu's comedy is inseparable when we think of this movie over and above GG's impressive performance! Watch a piece of this evergreen immortal comedy sequence!!
https://www.youtube.com/watch?v=wRwJu2jROLc
https://www.youtube.com/watch?v=i5uh6yQ7gzw
https://www.youtube.com/watch?v=pMIKh5SwpGA
Gap filler : the evergreen immortal Deepaavali occasion song!! from Kalyana Parisu!
When peace prevailed...
காதல் தோல்வியுற்றாலும் மணவாழ்வில் அமைதி நிலவியதே !
https://www.youtube.com/watch?v=JzTjBqOJQbI
https://www.youtube.com/watch?v=-V5WNw-fDnU
When the cyclone crossed the shore...
புயல் கரையை கடந்த போது
https://www.youtube.com/watch?v=n3WnsDpHwA0
அமைதிக்குப் பின் புயல் குறுந்தொடர்
பகுதி 3 நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த பார்த்தால் பசி தீரும்!
காதல் மனைவி போர் சூழலில் இறந்து விட்டாள் என்ற காரணத்தால் ஒரு குடும்ப வற்புறுத்தலால் சௌகாரை மணந்து பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கைப் படகில் அமைதியாகப் பயணிக்கும்போது ஜெமினிக்காகக் காத்திருந்த கண்களை இழந்த சாவித்திரி நடிகர் திலகத்தின் பாசமலராக மீண்டு வருகிறார் !! பிறகு இறுதிவரை ஜெமினி புயலின் மையத்திலேயே குடும்பம் நடத்துகிறார்!..மீண்டும் புயலுக்குப் பின் அமைதியே!Quote:
ஜெமினிகணேசனின் திரைவரலாற்றில் அவர் நடிகர்திலகத்துடன் இணைந்து பெருமைப் படுத்திய அனைத்துப் படங்களிலும் அவரது மெருகேறிய நடிப்புத் திறன் வெளிப்பாட்டுக்கு மிகச்சிறந்த கதைக்களங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டமே !
இந்தப் படத்தைப் பொருத்தவரை காதல் மன்னருக்கு கதைப் போக்கின் காரணமாக பிரேம்கள் நடிகர்திலகத்தை விட சற்று அதிகமே !
https://www.youtube.com/watch?v=_rNYXE2197c
https://www.youtube.com/watch?v=vo2GLz4JHh8
https://www.youtube.com/watch?v=BDUSv16nvVc
Gap filler : காற்றடிக்கும் ஜெமினி பாடல்கள் !
https://www.youtube.com/watch?v=7EatF_2QMRw
https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo
Gap filler scenes from GG movies!
ஆடிப்பெருக்கு திரைப்படமும் ஜெமினியின் திரைவரலாற்றில் முக்கியமான வெற்றிப்படமே !
https://www.youtube.com/watch?v=fod_4MYB_yg
https://www.youtube.com/watch?v=MZgzebZ1Aqc
Gap filler song from the 1972 GG starrer Appa Tata!!
https://www.youtube.com/watch?v=YXD3aYC2-zA
Gap filler song of GG from Aayiram Roopaai!
https://www.youtube.com/watch?v=Vz2d25xIDD0
A very rare song sequence in a club environment with GG boozing among club dancers!!
Movie : Snehidhi!
https://www.youtube.com/watch?v=a9IYbmBoHjs
But in contrast another melody from the same movie!
https://www.youtube.com/watch?v=laqLmgog44w
Side Seater (Tandem) Scooter Race season!! Initiated by GG!!
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbAQuote:
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருந்தால் காளையர் Side Seater ஸ்கூட்டர் ரேஸ் விடுவார்களோ ?!
ஜெமினி சாவித்திரி (ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்) Vs டி ஆர் ராமச்சந்திரன் சகுந்தலா (படிக்காத மேதை)
https://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs
... ஜோடி கிடைக்கலேன்னா.......நோ ப்ராப்ளம்!!
Dharmendra-Amitabh too contest later!!
https://www.youtube.com/watch?v=l_hlBHE3c-A
Sean Connery -Harrison Ford too join the contest!!
https://www.youtube.com/watch?v=jIRxsCHViPk
ராமு- 1966.
சில சமயம் என் மனம் ஏங்கும். முதன்மை ஸ்தான நடிகராக நடிப்பு சக்ரவர்த்தி நடிகர்திலகம் கொலுவிருந்த காலத்தில் ஒரு ஆரோக்யமான போட்டியாளராக ஜெமினி இரண்டாவது இடத்தில் இருந்திருந்தால், தமிழில் நிறைய தரமான படங்கள் இந்த நடிகர்களிடமிருந்து கிடைத்திருக்க பொன்னான வாய்ப்பிருந்தது .அரசியல் தன் தரத்தை தாழ்த்தி கொண்டதுமல்லாமல்,நம் தமிழ் படங்களின் தரத்தையுமல்லவா தாழ்த்தி விட்டது???
ஏ.வீ.எம் மிடமிருந்து ,ஜாவர்-திருலோகசந்தர்-விஸ்வநாதன் இணைவில் ஒரு தரமான படம் ராமு.(நல்ல வேளை ,முதலில் ஒரு சில்லறை வெள்ளிக் கிழமை நடிகரை வைத்து எடுப்பதாக இருந்து,ஜெமினி ஈடுபாடு காட்டியதால் தப்பித்தது).
ராஜா(சிப்பாய்)-சீதா-மகன் ராமு-நாய் மணி நல்ல மகிழ்ச்சியான குடும்பம். கொள்ளை காரன் (சங்கிலி)வீட்டை கொளுத்த சீதா பலியாக ,பார்த்த ராமு ஊமையாகிறான்.மகனை அழைத்து வீட்டை விட்டு கிளம்பும் ராஜா, பணக்கார அனாதை (சிப்பாய் குடும்பம்)லட்சுமியால் ஆதரவு காண,ராமு தன் தாயை அவளுருவில் காண, லட்சுமி ,ராஜாவால் ஈர்க்க பட,ராஜா தன வாழ்வில் விரக்தியோடு கழிக்கிறான். மருத்துவரால் தீராத நோய்,லட்சுமிக்கு ஆசை படும் நெறியற்ற முறை பையனால் ,லட்சுமி அதே தீ விபத்தில் சிக்க ,ராமு திரும்ப பேசும் திறன் கண்டு,ராஜா-லட்சுமி-ராமு-மணி இணைவுடன் சுபம்.
ஒரு தோல்வியுற்ற கிஷோர் குமாரின் ஹிந்தி படம் ,ஜாவர்- ஏ.சி.டி இணைவில் மெருகூட்ட பட்டு தாய் மார்கள்-தந்தைமார்கள் ஏ.பீ.சி அனைத்து சென்டர்ளையும் கவரும் படமானது.(இசை ரசிகர்களையும்தான்). பச்சை மரம் ஒன்று,நிலவே என்னிடம் (பாகேஸ்வரி ராகம்,ராமு ராகமானது ),முத்து சிப்பி, கண்ணன் வந்தான் (மோகன கல்யாணி) என்று இசை விருந்து.சீரான ஓட்டத்துடன் படம்.
புஷ்பலதா (அருமை), கே.ஆர்.விஜயா (20% மட்டும் செயற்கை.மற்றபடி ஓகே), மாஸ்டர் ராஜ்குமார் (என்னவொரு performance !!!!) என்று ஜெமினிக்கு தோதான கூட்டணி. திருலோகசந்தரின் பட்டாள விருப்பம்,ஜாவரின் நாய் விருப்பம் ,கொஞ்சம் கற்பகம்,ஏ.வீ.எம் மின் சூத்திரம் எல்லாம் கலந்து கட்டியாய் .
செந்தமிழ் பேசும் அரை அல்லது முழு பைத்தியம் (பந்துலு formula சபாஷ் மீனா,பலே பாண்டியா )ஜாவரால் இந்த படத்தில் (எஸ்.வீ.சுப்பையா)தொடர பட்டு ,கோபு வரை வந்து கரை கண்டது .(உத்தரவின்றி உள்ளே வா) என்ன ஒரு தமிழ் பற்று நம் படங்களில்!!!!!நமது கதாநாயகர்கள் மொழி மாற்ற படங்களில் ஓடத்தில் வேற்றூர் போவார்கள்.
இனி நம் நாயகன் ஜெமினி. அவருக்கு அல்வா மாதிரி ஒரு பாத்திரம். கூடவே கொஞ்சம் காரம். அதையும் சமாளிப்பார்.காதல்,பாசம்,கடமை,சோகம்,விரக்தி,நம்பிக் கை,வீரம் என்று எல்லாவற்றையும் கலந்த அற்புத கூட்டாஞ்சோறு.விடுவாரா நடிப்பு செல்வம்?
முதல் காட்சியின் பொங்கலோ பொங்கல் சொல்ல சொல்லி மனைவியை சீண்டுவதில் இருந்து ,அப்பா வந்ததால் தூங்க மறுக்கும் மகனை வைத்து மனைவியை கொஞ்சல், மனைவி இழந்து மகனும் ஊமையான சோகத்தின் இறுக்கம்,தன் சுகம் நாடா விரக்தி (சுமைதாங்கி சாயல்), முதலில் கே.ஆர்.வியின் இணக்கத்தை நிராகரித்து,விரக்தியை வெளியிட்டாலும்,முத்து சிப்பி பாட்டில் கொண்டாட்டத்தில் இணைய மறுத்தாலும் 50 % மாற்றம் காட்டுவது .
சிகர காட்சி. மருத்துவரால் ராமுவுக்கு பேச்சு வரும் வாய்ப்பு குறைவு என்றுணர்ந்து ,நம்பிக்கையின்மையின் உச்சத்தில் பற்றற்ற விரக்தி கலந்த வெறுப்பை அவர் உணர்த்தும் விதம்.ஜெமினி மட்டுமே பண்ண முடியும் என்ற ரக காட்சி.முதலில் சாப்பிட கேட்கும் தோரணை, பணத்தை தொலைத்த சாக்கில் தன் வேதனையை கோபமாக்கி மகனிடம் காட்டிய பிறகு ,தன்னிரக்கத்துடன் மகனுடன் மன்றாடும் உருக்கம்,விரக்தியுணர்வு தொற்றி சாக விழையும் மகனை பார்த்து பதைப்பு ,தவிப்பு,இருவரும் சாகலாம் என்ற வாழ்க்கையின் விளிம்பு தவிப்பு,கண்ணன் வந்தான் பாடலில் வரும் அரை நம்பிக்கை என்று அத களம்.
விட்டாரா.... அன்று action hero என்ற போர்வையில் ,தன் stunt நண்பரின் படங்களை நம்பி காலத்தை ஓட்டிய ஒரு நடிகருக்கு சவால் விடுவது போல.ஜெமினி இந்த படத்தில் புது பரிமாணம் காட்டுவார். அசோகனி டம் சவால் விட்டு சண்டை காட்சி, வரும் சண்டையை விடாத பிடிவாதம்,தன் மனைவியை எரித்த சங்கிலியுடன் மோதும் மூர்க்கம், இறுதி காட்சி சிலம்பு சண்டை என்று ஜெமினி தன்னாலும் action hero வாக சுலபமாக (யார்தான் முடியாது) சோபிக்க முடியும் என்று காட்டி படத்தையும் ஜெயிக்க வைத்து,தானும் ஜெயித்தார்.
கோபால்
http://www.pksongpk.com/movieimages/Ramu%201966.jpg
நல்ல அலசல். சுருக்... நறுக்.
எங்கே அற்புதமான அந்த சிலம்பு சண்டைக் காட்சியை குறிப்பிடாமல் விட்டு விடுவீர்களோ காணோமே என்று வேக வேகமாகப் படித்தேன். நல்ல வேலையாக பதிவின் இறுதியில் எழுதி பால் வார்த்து விட்டீர்கள். அது இல்லையென்றால் பதிவு நிறைவு பெறாது. படமும்தான். என்ன ஒரு கோலோச்சல்!:)
சிவாஜி செந்தில் சார் இன்று தூங்கினாற் போல்தான். ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பார்.
ஜெமினியில் அற்புத கலவைகளில் 'ராமு' முதலிடம். 'சக்கரம்' கூட சென்டிமென்ட்டில் விழாமல் விறுவிறு ஆக்ஷனில் சுற்றும்.
இயல்பான சோக முகம் அவருக்கு இறைவன் தந்த வரபிரசாதம். காதலை நாயகிகளுடன் மென்மையாக உண்டாக்கும் பாணியில் அவர் கைதேர்ந்தவர் என்றால் அதே வேளையில் காதல் மறுப்பிலும் 'காதல் மன்னன்' மன்னர்தான். மனிதர் திரும்பவே மாட்டார். விரக்தியின் விளிம்பென்றால் ஓரே பிடிதான்.
ஆனால் பாசிட்டிவாக ஒரு நெகடிவ் பாயிண்ட் பொதுவாக இவரிடம் உண்டு. விரக்தியின் விளிம்பில் இவர் வசனம் பேசும் போது நமக்கு பாதி வார்த்தைகளே காதில் விழும். மீதி வார்த்தைகளே அவரே விழுங்கி விடுவார். பாதகமில்லை. அதுவும் சோகத்தை மேலும் பார்வையாளர்களிடம் திணிக்கும் தந்திரமாகக் கூட இருக்கலாம். :)
நான் அவனில்லை, கற்பகம் கலக்கலுக்குப் பிறகு ராமுவை தொட்டு எங்களை ராமு போலவே பேசா ஊமையாய் ஆகி விட்டீர்கள். கொஞ்சம் கடினத்தை குறைத்தால் தேவலை. எனக்கு, செந்திலுக்கு, இன்னும் ஒரு சிலருக்கு தேவாமிர்தம். மற்றவர்களுக்கு பஞ்சாமிர்தம். புரிகிறதா?:)
இல்லை எங்களுக்காக ஒன்று. எளிமைக்காக ஒன்று என்று ரெண்டு வேஷம் கட்டு. :)
நீங்கள் எந்த வேஷத்திலும் ஜமாய்ப்பீர்கள் என்று தெரியும். அதுவும் இப்போது நான் கொடுத்திருப்பது கள்ளவேஷம்.:)
கோ, செந்தில் சார்,
இதோ நம் மனம் கவர்ந்த 'ராமு' நிழற்படங்களாக.
http://padamhosting.me/out.php/i5787...h26m35s172.pnghttp://padamhosting.me/out.php/i5787...0h26m51s79.png
http://padamhosting.me/out.php/i5788...h26m57s140.pnghttp://padamhosting.me/out.php/i5788...h27m06s233.png
http://padamhosting.me/out.php/i5788...h27m20s117.pnghttp://padamhosting.me/out.php/i5788...0h28m05s53.png
68 ல் வந்த இதே 'ராமு' தெலுங்கு
என்.டி .ஆர் ஜெமினியிடம் அருகில் வர முடியாது. ஆனால் ஜமுனா இயல்பு 100 சதவீதம்.
https://i.ytimg.com/vi/JarduQNjW8M/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/BkmYNEik3j4/maxresdefault.jpg
இன்னும் சில நிழற்படங்கள். 'ராமு' படத்திலிருந்து
http://padamhosting.me/out.php/i84955_ramu7.pnghttp://padamhosting.me/out.php/i84952_ramu10.png
http://padamhosting.me/out.php/i84960_Ramu2.pnghttp://padamhosting.me/out.php/i84959_ramu3.png
http://padamhosting.me/out.php/i84958_ramu4.pnghttp://padamhosting.me/out.php/i84956_ramu6.png
http://padamhosting.me/out.php/i84954_ramu8.pnghttp://padamhosting.me/out.php/i84953_ramu9.png
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர்கள் வாசு சார் மற்றும் கோபால் சார்
என்னதான் திரியின் பக்கங்களை அதிகரிக்கும் முயற்சியில் துணுக்குக் கான்செப்ட்களை நான் தூவிக்கொண்டிருந்தாலும் உங்களைப் போல எழுத்துச் சித்தர்கள் புரியும் மாயமே தனிதான்!! ராமு அலசல் இத்திரியின் மாறாத கல்வெட்டுப் பதிவுப் பெருமை!! நடிகர்திலகம் அவர்தம் ரசிகர்கள் மூலம் என்றுமே தனது புரிதலுள்ள நண்பரான காதல் மன்னரைக் கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே கட்டியம் !
நன்றி மிக்க வணக்கங்களுடன் செந்தில்
Both NT and GG are expert horse riders with originality and dare devilry risk bearing in such scenes!
https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw
வாசு,
உனது பதிவு வரும் என்று தெரியும். ராமுவிற்கு நான் பதிவு போடும் போது நினைவிலிருந்த இருவர் நீயும், சிவாஜி செந்திலும்.
நீ ஜெமினியை பற்றி சொன்னது முழுக்க சரி. ஆனால் அவர் சில வரிகளை முழுங்கும் விதம் அவர் நடிப்பை மேலும் மெருகேற்றும்.
அதை விட நான் ஜெமினியிடம் ரசிப்பது. அவர் தங்கவேலுவின் கல்யாண பரிசு காமெடி யில் தோதாக எடுத்து கொடுக்கும் விதம். one liners ,ஆமோதிப்பு,கிண்டல் என்று. கிழிப்பார்.
நீ சொன்ன கடைசி வரி புரிந்தது.
சிவாஜி செந்தில்- நன்றி.நாங்களெல்லாம் ஜெமினியின் ரசிகர்களும் கூட.
அன்புள்ள கோபால்
உங்களிடம் எல்லோரும் மகிழத் தக்க அளவில் நிறைய மாற்றங்கள்
உங்களைப் போன்ற வாசுவைப் போன்ற எழுத்து விற்பன்னர்கள், சின்னக்கண்ணன் போன்ற எழுத்துக் கலைவாணர்கள், முரளி, ராகவேந்தர் போன்ற ஜாம்பவான்களை ரோல் மாடல்களாகக் கொண்டேஎங்களைப் போன்ற ஆரம்பகட்ட பதிவர்களும் எங்கள் முயற்சிகளை தொடர்கிறோம்.
செஞ்சோற்றுக்கடன் போல நடிப்பு கர்ணனின் பல படங்களில் தனது மனமுவந்த பங்களிப்பை நல்கிய காதல் மன்னருக்கும் நம்மால் முடிந்த மன அஞ்சலி செலுத்தும் நோக்கில்தான் என்னுடைய பதிவின் குறிக்கோள் இருந்தது.
இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! உங்கள் எழுத்து வன்மையை ரசித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த பாணியில் தொடர்கிறேன்
செந்தில்
தனிமையிலே இனிமை காண முடியுமா ?
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும் இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்
Dear Rajesh Sir.
கன்னடத்துப் பைங்கிளி என்ற புகழாரத்துடன் தமிழ் திரையுலகத்தில் நுழைந்து ஒரு நிரந்தரமான இடத்தைத் தனது பன்முக நடிப்பாற்றலால் தககவைத்துக் கொண்ட அழகும் திறமையும் மிக்க நடிகை அபிநய சரஸ்வதி என்றும் அறியப்பட்ட என்றுமே ஸ்லிம் சரோஜாதேவி அவர்கள்!!
வெறும் பொழுதுபோக்குப் பட கிளாமர் கேர்ல் ஆக முடிந்துவிடாமல் புத்திசாலித்தனமான முடிவின் மூலம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னரின் திரைப்படங்களில் கதாநாயகருக்கு இணையான குணசித்திர கதாநாயகியாகவும் பரிமளிக்க முடிந்தது!
கல்யாண பரிசு அவரது நிரந்தரமான அடையாளம் !
பாலும் பழமும், பாகப் பிரிவினை, புதிய பறவை, ஆலய மணி, இருவர் உள்ளம், பணமா பாசமா, தாமரை நெஞ்சம், ஆடிப்பெருக்கு ....அவரது மேலான நடிப்புத்திறனின் சாட்சிகள்! காதல் மன்னருடன் இணைந்து நடித்த எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!
கல்யாண பரிசு திரைப்படத்தில் காதல் மன்னருடன் அபிநயம் புரியும் சரஸ்வதி !
https://www.youtube.com/watch?v=xOt5e6nbYI8Quote:
ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும் இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்
by Rajesh
செந்தில் சார், ஜி
http://i.ytimg.com/vi/lyavIBHZ-Xc/maxresdefault.jpg
எனக்குப் பிடித்த சரோ ஜெமினி இணைவுப் பாடல்களில் முதன்மையானது 'கல்யாணப் பரிசி'ல் வரும்
'ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் குறையுது முகம்'
வெகு அழகான பாடல்! பாடல் மட்டுமா! ஜெமினி அழகு என்றால் சரோ அன்று பூத்த ரோஜா மலர் போல மென்மை சிந்தும் அழகு.
யதார்த்த காதலர்களின் தத்ரூப, எல்லை மீறாத, கொள்ளை கொண்ட காதல் விளையாட்டுக்கள். கூண்டை விட்டு அவிழ்த்து விட்ட சிட்டுக்குருவிகளாய் தனிமையாய் சிறகடித்துப் பறக்கும் இளஞ் சிட்டுக்கள்.
பின்னால் நேரப் போகும் துன்பம் அறியாது துள்ளிக் குதித்து இளமை கொப்பளிக்க இருவரும் கொஞ்சும் அழகே அழகுதான்.
http://i.ytimg.com/vi/NaL6SFp18H4/sddefault.jpg
ஒரு இடம் கூட நில்லாமல் சரோ அங்கும் இங்கும் சுழன்று சுற்றியபடியே சுறுசுறுப்பு காட்டுவார். சுசீலா முடிக்கும் ஒவ்வொரு வரிக்கும் ராஜா 'ஆஹா, ஓஹோ, ஐ சி, ரியலி, ஸாரி' என்றெல்லாம் பதிலுரைப்பது பாயசத்தோடு சேர்ந்த பாதாம்.
சரோ கண்களாலும் கைகளாலும் வெட்டும் விதம் இருக்கிறதே! ஜெமினி வீழ்ந்தாரோ இல்லையோ நாம் வீழ்ந்தோம்.:) ஜெமினி அவருக்கே உரித்தான பாலோ -அப் பில் சரோவைத் தொடர்வது, தொடுவது, தொங்குவது :)என்று ரகளைதான்.
'தேரில்லாத கொடிதனில்
வாலில்லாத ஒரு அணில்'
எனும் போது சரோ கொடிக்குத் தன்னையும், வாலில்லாத அணிலுக்கு வாலிப ஜெமினியையும் சுட்டிக் காட்டும் சுட்டித்தனம் சுவையோ சுவை. குறும்பும், குறுநகையும், 'குறுகுறு' பார்வையும் அப்படியே குந்திக் கொள்ளும் நம் இதயங்களில்.
காதல் வேகத்தில் தன் கையைப் பிடிக்க வரும் ஜெமினியிடமிருந்து சற்று விலகி,
'ஆளிலாத நேரம் பார்த்து தாவிப் பிடிக்குது கையில்'
என்று சரோ மென்மையாய் பொய்க் கண்டிப்பு காட்டி சுட்டிக் காட்டுகையில் ஜெமினி சரோவின் கையை விரல்களால் தொட்டு 'ஸாரி' என்று சிரிப்பதை யார் ரசிக்காமல் இருக்க முடியும்?
http://i1087.photobucket.com/albums/...144252.335.jpg
சரோ பின்னழகுக்கு மிகவும் புகழ் பெற்றவர் என்பது சகலரும் உணர்ந்ததே. அவரது பின்னழகு நடை பார்த்து பித்துப் பிடித்தவர் பல பேர். இந்தப் பாடலில் இன்னும் பிரமாதம். வழக்கமான நடை இல்லாமல்
'மாலை என்ற நேரம் ஒன்று
ஆளை மீறுதே'
என்று பாடியவாறு பின் பக்கம் நின்று ஒரு அபிநய போஸ் ஒன்று தருவார். அப்போது புரியும் இவர் ஏன் 'அபிநய சரஸ்வதி' என்று பட்டம் வாங்கியிருக்கிறார் என்று. இடது காலை பாதி மடக்கியவாறு இரு கைகளையும் மேலே தூக்கி, இடுப்பொடித்து, பின் பக்கமாக இவர் காட்டும் உடல் பாவம்....அடடா! அப்போதைய இளைஞர்கள் பாவம்.:) அற்புதமான போஸ் அது.
அது மட்டுமா? பாஸ்கர் வசந்தி இவர்களுடைய இரண்டு சைக்கிள்களும் கூட எவ்வளவு அழகாக ஜோடி போட்டு இவர்களைப் போலவே காதல் களிநடம் புரிகின்றன! பாருங்கள்.
உல்லாசபுரியில் உச்சக் காதலில் தனை மறந்து காதலர்கள் குறும்பு பேசும் கவிதை கானம்.
இளமை பொங்க இயக்கிய ஸ்ரீதருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
சர்க்கரைப் பாகைக் காதில் கரைத்து ஊற்றிய சுசீலாவிற்கும், ராஜாவுக்கும், காதுகளிலேயே தங்கி விட்ட இனிமையான இசைக்கும், வைர வரிகளுக்கும்
இன்னும் பாராட்டுக்கள்.
கிண்டி விட்ட 'ஜி'க்கும் தான்.:)
https://youtu.be/NaL6SFp18H4
https://upload.wikimedia.org/wikiped...isu_poster.jpg
செந்தில் சார்,
என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!
ராஜேஷ்
அருமையான கோணத்தில் தங்கள் கருத்து இத்திரியைப் பயணிக்க வைத்துள்ளது
ஜெமினி கணேசன் சரோஜா தேவி இணையில் வெளிவந்த படங்கள் எல்லாமே மறக்க முடியாதவை, குறிப்பாக பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் வகையில் அமைந்து இன்றும் நம் நெஞ்சில் தனி ஈர்ப்பை உண்டாக்குகின்றன.
இவர்கள் இணையில் வெளிவந்த சில பாடல்களைப் பார்ப்போமே..
இவர்கள் இணையில் எனக்கு மிக மிக பிடித்தவற்றில் கைராசி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், ஆடிப்பெருக்கு, வாழவைத்த தெய்வம் என பல படங்களில் பாடல்கள் அமைந்துள்ளன.
ஏனோ ஜெமினி சரோஜாதேவி என்றால் கல்யாண பரிசை தாண்டி யாரும் செல்வதில்லை. உண்மையிலேயே சொல்லப் போனால் அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைந்த படம் கைராசி. ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக செதுக்கப் பட்டிருக்கும். கோவர்த்தன் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லும் படம் கைராசி.
அதுவும் குறிப்பாக காத்திருந்தேன் காத்திருந்தேன் பாடல், இசையரசியின் ஈடு இணையில்லா குரலில் நம்மை அப்படியே கட்டிப் போட்டு விடும்.
https://www.youtube.com/watch?v=Y3PQeusAmP4
இதே போல் இன்னோர் சூப்பர் ஹிட் பாடல்...
இதுவும் இசையரசியின் குரலே.. திரை இசைத் திலகத்தின் இசையில்..
காதை தீட்டிக் கொள்ளுங்கள்.. காதல் கதை பேச வருகிறார் ... கேட்கக் கேட்க ஆனந்தமே..
வாழ வைத்த தெய்வம் படத்திலிருந்து..
https://www.youtube.com/watch?v=YjRfRxT2hCY
திரை இசைத் திலகத்தின் இசையில் அமைந்த சில வேகத் தாளக்கட்டுப் பாடல்களே இன்று குத்துப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்குகின்றன. இதோ பாருங்கள். இந்த குட்டியை ஜெமினி கணேசன் கலாய்ப்பதை..
வாழ வைத்த தெய்வம் படத்தில் சின்னாளப் பட்டி சேலையைக் கட்டி வந்தாளே ஒரு குட்டி..
பாடகர் திலகத்தின் குரல்... ஜெமினிக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன..
https://www.youtube.com/watch?v=SVv8ykcGf54
இந்த மாதிரி ஏகாந்தமான வேளையில் காதலர்களுக்கு ஆசை ஏன் மேவாது...
மனம் எனும் வானிலே மழை மேகமாகவே இவர்களுக்கு ஆசைகள் மேவிடுதாம்...
எல்லோரும் இந்நாட்டு மன்னர் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா இசையரசி குரல்களில் டி.ஜி.லிங்கப்பா இசையில்
https://www.youtube.com/watch?v=6hvmh7P7MoA