Quote:
Originally Posted by KCSHEKAR
Printable View
Quote:
Originally Posted by KCSHEKAR
அன்னை இல்லத்தின் நாயகிக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி
" 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு கண்ணதாசன் பாடுவாரே, அந்த 'வரம்' அண்ணனுக்குக் கிடைக்கணும்ங்கிறதுக்காகவே, நீங்க அவருடைய அக்கா மகளா ஒரு குக்கிராமத்துல அறுபத்தெட்டு வருஷங்களுக்கு முந்திப் பொறந்தீங்க.
'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று' - கண்ணதாசன் பாடுன இந்தப் பாட்டும் ஒங்களுக்குப் பொருந்திடுச்சு. உள்ளந்திறந்து சொல்றேன், 'மருமகளா... வீட்டுக்கு வந்த மகாலட்சுமி'னு சொல்வாங்களே, சத்தியமா அது நீங்க தான்.
1952-ல், பன்னன்டு அல்லது பதிமூணாவது வயசுல, இருபத்து மூணு வயசான அண்ணன் ஒங்க கழுத்துல மாங்கல்யம் புனைஞ்சு, ஒங்க கைய புடிச்சதுக்கப்பறந்தான், கமலாங்குற பேர்கொண்ட தாமரையான ஒங்க முகத்தைப் பாத்து, கணேசன்ங்கிற அந்த சிவாஜி உதிச்சு வெளிச்சத்துக்கு வந்தாரு! நீங்க அவர் வீட்டுக்கு வந்து விளக்கேத்தி வெச்சதுக்கப்பறந்தான் 'பராசக்தி' வந்து அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சா. நீங்க புன்னகை புரியப் புரிய அவருக்குப் புகழ் பொங்குச்சு! நீங்க சிரிக்கச் சிரிக்க அவருக்குச் செல்வம் சேந்துச்சு!
பொழுது விடிஞ்சதிலிருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் அவரு, 'கமலா, கமலா'ன்னு கூப்பிட்டதை எண்ணிப்பாத்தா, குறைஞ்சது நானூறு ஐநூறு தடவையாவது இருக்கும். எனக்குத் தெரிஞ்சு அவர் ஒங்களைக் கட்டிக்கிட்டதிலேந்து நிரந்தரமா ஒங்களை விட்டுப் பிரிஞ்சு போன அந்த நாள் வரைக்கும், நீங்க இல்லாம வீட்டுல அவர் இயங்கினதே இல்லை. இயங்கவும் அவரால முடியாது.
அவர் ஒங்களைக் கோவிச்சுக்கிட்டதை ஒருநாளும் நான் பார்த்ததே இல்லை. ஒங்களைக் குறை சொன்னதாகக் கேள்விப்பட்டதும் இல்லை. 'மாமா, மாமா'ன்னு எப்போ பாத்தாலும் ஒரு குழுந்தை மாதிரி அவரையே சுத்தி வந்துகிட்டிருப்பீங்க! ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி மட்டும் அமைஞ்சிட்டா, அவ பாதி தாய்க்குச் சமம்! நீங்க அவருக்குப் பண்புள்ள மனைவியா மட்டும் இல்லாம பாசமுள்ள தாயாவும் இருந்து கவனிச்சிக்கிட்டீங்க.
பேரன் பேத்திங்க எடுத்ததுலேர்ந்து பேத்தியோட கல்யாணம் வரைக்கும் பாக்க வேண்டியதையெல்லாம் பாத்து சந்தோஷப்பட்டு, அண்ணன் இல்லேங்குற ஒரே ஒரு குறையோட மட்டும் ஆறு வருஷங்களா வாழ்ந்துக்கிட்டிருந்த எங்கள் அன்புள்ள கமலா அம்மா! அண்ணனைப் பாக்குறதுக்காக ஆகாயத்துக்குப் போய்ட்டீங்க! போயிட்டு வாங்க...! ஒங்க பேரன்-பேத்தி யாரோட கருவுலேயாவது நீங்க ரெண்டு பேரும் உருவாகி, மறுபடியும் ஒங்க அன்னை இல்லத்துக்கு வாங்க. போயிட்டு வாங்கம்மா...!"
- திரை இலக்கிய விற்பன்னர் ஆரூர்தாஸ் 11.11.2007 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' இதழில் கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரையிலிருந்து (சில வரிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது).
இன்று 2.11.2010 நடிகர் திலகத்தின் மனைவி கமலா அம்மாள் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினம்.
பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
டியர் பம்மலார்,
ஆரூர்தாஸ் அவர்களின் அஞ்சலிக்கட்டுரை இதயத்தை நெகிழ வைக்கிறது. அதனைப்பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி.
ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் கலக்க வந்திருக்கும் பம்மலார் அவர்களை துள்ளலுடன் வரவேற்க்கிறோம்.
முரளி சார்,
வழக்கம்போல் தங்கள் ஆய்வுக்கட்டுரை மிகவும் அருமை.தாங்கள்தான் நடிகர்திலகத்தின் ரசிகர்திலகம் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நடிகர்திலத்தின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக மாநில சிவாஜி பிரபு ரசிகர்மன்றத்தின் சார்பாக கர்நாடக தமிழ் சங்கத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது.இதைப்பற்றிய விரிவான செய்தி மற்றும் புகைப்படத்தை அப்லோட் செய்யும்படி திரு.குமரேசன்பிரபு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
Dear NT Fans
Wishing you all a very Happy, prosperous and safe DEEPAVALI.
Pl dont miss Mr.Prabhu's program in Jaya TV at 3.30pm on Diwali day.
Regards
Shiv
:clap: :clap: எப்படி முரளி சாரால் மட்டும் இவ்வளவு நுணுக்கமாக Observe செய்ய முடிகிறது என்று நானும் வியக்கிறேன்.Quote:
Originally Posted by Murali Srinivas
Thanks Mr.Nov for posting the Tirunelveli Funtion Invitation.
MY DEAR NT FANS,
Hope the festival of lights enlightens your home and heart with peace and serenity..
May the Goddess of wealth and the God of Knowledge bless you all with their choicest blessings. On this Diwali and always!
On this auspicious festival of lights,
May the glow of joy,
Prosperity and happiness
Illuminate your life and all your homes.....
Wishing you loads of joy and happiness on Diwali......
JAIHIND
M. Gnanaguruswamy
There is another article in this week's Ju.Vi on S.A. Kannan's book. Very touching...
தீப ஒளித்திருநாளாம் இன்று நடிகர் திலகம் நம்மிடையே உயிருடன் இல்லையென்றாலும் அவர் நடித்த படங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை இவற்றுடன் நடிகர் திலகத்தின் புதுப்பட வெளியீடு என்பது தான் நமது கலாச்சாரம் என்றாகி விட்டது. இப்படி எத்தனை ஆண்டுகள். இன்றும் நாம் அவருடன் தீபாவளி கொண்டாடுவோமே
தாயெனும் செல்வங்கள்
தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி வீசட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்றென்னாத உள்ளம் உண்டு
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
பாவங்கள் இல்லையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ்கென்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நடிகர் திலகம் தீபாவளி கொண்டாடும் காட்சி
அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
REQUEST TO THE MODERATOR: PLEASE EMBED THE ABOVE VIDEO HERE IF POSSIBLE. THANK YOU.
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தங்க மீன் என்ற இணையதள இதழில் வெளியான ஒரு கட்டுரை. நன்றி ஜோ!
எப்பவும் எனக்கு 'சிவாஜி அங்கிள்'தான்
மைதிலி தேவி
அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் . என் தந்தையின் கைகளைப் பற்றியபடி விக்டோரியா அரங்க மேடையின் பின்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன் . 'அதுதான் அந்தச் சம்பவம்’ அரங்கேறிய மேடை . அங்கு கடுகடுப்பான முகத்தோடு ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தார் . நான் 'ஆட்டோகிராப்ஃ' நோட்டை இறுகப் பற்றியவாறு அவரை நோக்கி நடந்து, அவரிடம் நோட்டை நீட்டினேன். அந்த மனிதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
நடிப்பில் இமயம் . சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் பேசிய வசனங்கள் திரை அரங்குகளை அதிர வைத்து, வானையும் கிழித்துச் செல்லும் கரகோஷத்தைப் பெற்றுத் தரும் . அத்தகையவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் சில வரிகளைக் கிறுக்கிவிட்டுப் புத்தகத்தை என் கைகளில் திணித்தார்.
எட்டே வயதான எனக்கு அந்த எரிச்சல் ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ஆனால் , மீண்டும் நடிகர்திலகத்தை சந்தித்த போது , அவர் என்னை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டார் . “ ஸாரிம்மா, இந்த 'மேக்கப்'பால் முகத்தில் ஒரே அரிப்பு.. எரிச்சல். அதோடு மேடையில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன் . அது என்னைப் பார்க்க சரியான நேரமில்லைம்மா ,” என்று கூறிப் புன்னகைத்தார். அந்த அன்பில், புன்னகையில், நான் வாயடைத்துப் போனேன்
வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் நம்முடன் இரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோர் யார் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் . 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்று சொல்வார்கள். ஆனால் மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் , இரத்த சம்பந்தம் இல்லா விட்டாலும் , அத்தகைய உறவுகளை விதிவசமாக நாம் சந்தித்து அன்பு காட்டும் வாய்ப்பு கிட்டும் . அவர்கள் நம் மீது காட்டும் பாசத்தையும் நேசத்தையும் காண்கையில் , நம் உறவுகள் என்று கூறிக் கொள்வோர் கூட அவமானத்தில் தலை குனிவர் .
அப்பேற்பட்ட ஓர் அன்பு உள்ளத்தைச் சந்தித்த கௌரமும் பெருமையும் எனக்கு உண்டு. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அவர் . . . நடிகர் என்ற அந்நிய மனிதனாக அல்லாமல், 'சிவாஜி அங்கிள்' என்று என்னால் உரிமையோடு அழைக்கப்படுபவர். எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்புக்கும் சம்பாஷணைகளுக்கும் சான்றாகப் பற்பல சந்தர்ப்பங்கள் எழுந்திருக்கின்றன. அவருடைய அன்புக்குப் பெரும் சான்றாக, என் மனம் உருகிக் கண்கலங்க வைத்த ஒரு சம்பவம் குறிப்பாக உள்ளது.
அது தமிழகத்தில் நடந்த என்னுடைய திருமணம். அதற்காக நாங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா போயிருந்தோம். அது, என் தந்தை இல்லாத சமயம். என் குடும்பத்தில் எல்லோரும் அவர் இல்லாத வெறுமையை உணர்ந்தோம். ஆனால், சிவாஜி அங்கிள் அந்தக் குறையே தெரியாதவாறு எல்லா விசேஷங்களையும், தாலிப் படையலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வரை, முன்நின்று செய்தார். திருமணத்தன்று, நடிகர் திலகம் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக நாற்காலியில் அமரவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கல்யாண மேடையில் நின்றிருந்தார் . எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.
அதையும் விட , நான் மறக்கவே இயலாதபடி ஒன்று நடந்தது. திருமணத்துக்கு மறுநாள் காலையில், நடிகர் திலகம் எங்கள் வீடு தேடி வந்து, ஒரு தந்தையின் அக்கறையோடு என்னிடம்,” சந்தோஷமாக இருக்கிறாயாம்மா ?“ என்று நலம் விசாரித்துச் சென்றதை என்னால் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க இயலாது .
என் சொந்த பந்தங்கள்கூடச் சிங்கப்பூர் திரும்புவதில்தான் அதிகக் கவனத்துடனும் ஆர்வமாகவும் இருந்தார்கள் . இந்த சிவாஜி என்கிற இந்த அற்புத மனிதர் பெண் மனம் புரிந்து, அவருடைய முக்கிய அலுவல்களுக்கு மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்று தெரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால், அவருடைய உயர்ந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் மட்டும் சிகரமல்ல, குணத்திலும்தான்! அவர் என்றைக்குமே எனக்குச் சிவாஜி அங்கிள்தான் - அவர் மீது நான் கொண்டுள்ள நேசம் அத்தகையது
http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=67
அன்புடன்
Dear Mr.Murali,
Thanks for your information, I am not control my tear (கண்ணீர்)after your message.
இரு மலர்கள் பாடல் காட்சியைப் பற்றிய எனது பதிவை பாராட்டிய சந்திரசேகர், சுவாமி, சாரதா, செந்தில், மகேஷ் மற்றும் ராதாவிற்கு நன்றி.
சாரதா,
அன்னமிட்ட கைகளுக்கு பாடல் பற்றிய தங்கள் பதிவு மறக்க கூடியதா என்ன? அதை இரு மலர்கள் படத்தைப் பற்றிய எனது விமர்சனத்திலும் சொல்லியிருந்தேனே!
இந்த திரியிலும் மற்றும் இந்த ஹப்பிலும் பங்கு பெறும் அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
அன்னையின் ஆணை - Part I
தயாரிப்பு - பாரகன் பிக்சர்ஸ்
கதை,திரைக்கதை, இயக்கம் - Ch.நாராயணமூர்த்தி
வெளியான நாள் - 04.07.1958
முதல் காட்சி ஒரு மருத்துவமனை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என சொல்லும் டாக்டர். காட்சி மாற சிறைச்சாலை. கைதி சங்கர் தன் மனைவியை காண துடியாய் துடிக்கிறான். அனுமதி இல்லை. எனவே சிறையிலிருந்து தப்பிக்கிறான். போலீஸ் துரத்துகிறது. இறுதியில் மருத்துவமனையின் வாசலில் அவனை சுட்டு விட, அப்போதுதான் பிறந்த குழந்தையை பார்த்து விட்டு, தன் மனைவி தேவகியிடம் தன் மேல் விழுந்த களங்கத்தை தன் மகன் மூலமாக துடைக்க வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டு இறந்து போகிறான் சங்கர்.
ஊரில் பெரிய மனிதர் பரோபகாரம். வெளியில் பெரிய மனிதர் வேடம் போட்டாலும் நிழல் வேலைகளில் ஈடுபடுபவர் என்பது அடுத்த காட்சியில் பதிவு செய்யப்படுகிறது. தொழிலில் தன் பங்கை கேட்கும் கூட்டாளியை கூசாமல் சுட்டுக் கொள்கிறார் பரோபகாரம். அவருக்கு மனைவி இல்லை. ஒரே மகள் பிரேமா. அவருக்கு மிகுந்த செல்லம்.
கணவன் இறந்த பிறகு தையல் தொழில் செய்து தன் மகனை படிக்க வைக்கிறாள் தாய். மேற்படிப்பிற்காக மதுரை செல்ல வேண்டும் என்ற நிலையில் போக மாட்டேன் என்று சொல்லும் மகனை அவனின் தந்தைக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் அதற்காக போயே தீர வேண்டும் என்று தாய் தேவகி சொல்ல மகன் கணேஷ் ஒத்துக் கொண்டு படிக்க போகிறான்.
இப்போது கதையில் ஒரு புதிய பாத்திரம். பெயர் பாலு. ஒரு அலுமினிய தொழிற்சாலையில் லீகல் அட்வைசர் வேலையில் இருக்கும் அவர் டான்ஸ் பள்ளி நடத்தும் சுந்தரி வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். சுந்தரியின் அண்ணன் அவளுடன் வசிக்கிறான். பாலுதான் பரோபகாரத்திற்கு வக்கீல். அது மட்டுமல்ல கொடுக்கல் வாங்கல் மற்றும் நிழலான தொழிலில் பாலுவிற்கு பங்கும் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை அதட்டி மிரட்டுவது போல் பரோபகாரத்தால் பாலுவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனிடம் அமைதியாக நடந்துக் கொள்கிறார். அவரின் மகள் பிரேமா மேல் ஒரு கண் வைக்கிறான் பாலு.
பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி படிப்பு படிக்கும் போது கல்லூரி விழாவில் சாம்ராட் அசோகன் வேடத்தில் நடிக்கிறான் கணேஷ். விழாவிற்கு தலைமை தாங்கும் செல்வந்தர் கருணாகரன் கணேஷ் நடிப்பை பார்த்து பெரிதும் மனம் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைக்கிறார். அவர் வீட்டிற்கு செல்லும் கணேஷ் அங்கே தன் தந்தை சங்கரின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்த்து யாரென்று கேட்க, அவர் சொல்லும் விவரங்கள் மூலமாக காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய தன் தந்தையின் வீடுதான் அது என்றும், செல்வந்தர் கருணாகரன் தன் தாத்தா என்பதையும் புரிந்துக் கொண்டு அவருக்கும் அதை வெளிப்படுத்துகிறான். அவர், கணேஷின் தாயை அழைத்து வர சொல்ல தாயை பார்க்க வரும் மகனுக்கு தாயின் நோயாளி கோலம் அதிர்ச்சியளிக்கிறது. தான் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டோம் என்று உணரும் அன்னை தன் கணவன் சிறைக்கு எப்படி சதி செய்து அனுப்பப்பட்டான் என்பதை விவரிக்கிறாள்.
பரோபகாரத்திடம் வேலை செய்யும் சங்கரை அலுவலக வேலையாக வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு தனியே இருக்கும் அவன் மனைவியை காண வரும் பரோபகாரம், தன்னை காப்பாற்றிக் கொள்ள கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் தேவகி,பயந்து ஓடும் பரோபகாரம், ஊரிலிருந்து வந்தவுடன் நடந்ததை அறிந்து ஆவேசமாக பரோபகாரத்தை காண செல்லும் சங்கர், அங்கே ஏற்படும் தள்ளுமுள்ளு, சண்டையை விலக்கி விட வரும் கூர்காவை தானே சுட்டு கொலை செய்து விட்டு பழியை சங்கர் மேல் போடும் பரோபகாரம், நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, அதனிடையில் வரும் பிரசவம், சங்கர் தப்பிக்க முயற்சி செய்து போலிசின் குண்டடிப்பட்டு இறப்பது, இவை அனைத்தும் பிளாஷ் பாக்-ல் நம் கண் முன்னே விரிகின்றன. மரண தருவாயில் அவன் தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவனை பழி வாங்கிய பிறகே அவன் எந்த சுகத்தையும் தேட வேண்டும் என்று ஆணையிட்டு விட்டு உயிர் துறக்கிறாள் அவன் அன்னை தேவகி.
இதற்கிடையில் பரோபகாரத்தின் பெண் பிரேமா படிப்பை முடித்து விடுகிறாள். அவள் தாயில்லாப் பெண் என்பது முதலிலே சொல்லப்பட்டு அதன் காரணமாக அவள் மேல் அதிக பாசம் வைத்திருக்கிறார் அவள் தந்தை.அந்த ஊருக்கு வந்து சேரும் கணேஷ் வழியில் வைத்து பிரேமாவை கண்டு அறிமுகமாகிறான். பரோபகாரத்தை சென்று சந்திக்கும் கணேஷ் தன்னை ஒரு பிசினஸ்மானாக அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பரோபகாரத்தின் வீடு ஒன்றை அவரிடமிருந்து வாங்குகிறான்.இது பாலுவிற்கு பிடிக்கவில்லை. அதை பரோபகாரத்திடம் வெளிப்படுத்துகிறான்.
பிரேமாவிற்கு கணேஷை பற்றி மனதுக்குள் ஒரு காதல் எண்ணம் ஏற்படுத்துகிறது. கணேஷிற்கும் விருப்பம் இருந்தாலும் அன்னைக்கு செய்த சத்தியம் மனதில் இருப்பதனால் அதை கணேஷ் நிராகரிப்பது போல் நடந்து கொள்கிறான்.
இதற்கிடையில் பாலுவிடம் மனதை பறி கொடுத்த சுந்தரி தன்னை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்க அவளை அடைவதற்காக அவன் ஒப்புக் கொண்டு விட்டு ஆனால் சிறிது காலம் கழிந்த பிறகே திருமணம் என்று சொல்லி விடுகிறான்.
தன் பங்கு பணத்தை பற்றி பரோபகாரத்திடம் பேசும் பாலு அவர் மகள் பிரேமாவை கல்யாணம் செய்து தரும்படி பரோபகாரத்திடம் வற்புறுத்த அவர் மறுக்கிறார். அவன் அவரின் நிஜ முகத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்தி விடுவேன் என மிரட்டுகிறான்.
இந்நிலையில் கணேஷ் பரோபகாரத்திடம் போன் செய்து மாலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறான். தானே நேரில் வந்து அழைத்து செல்வதாகவும் சொல்கிறான். சொன்னது போல் வந்து கூட்டி செல்கிறான். அங்கே சங்கர் மற்றும் தேவகி புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் பரோபகாரம் அங்கிருந்து உடனே கிளம்ப முயற்சி செய்ய கணேஷ் தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறான். அத்துடன் பரோபகாரத்தை தன் வீட்டில் உள்ள பாதாள சிறையில் அடைக்கிறான். கணேஷ் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஊமை பெண்ணிற்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். அவள்தான் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை செய்வது. தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் பரோபகாரத்திடம் தன் தந்தை சிறையில் அனுபவித்த அதே 7 வருட தண்டனை காலத்தை அவரும் அனுபவித்தே தீர வேண்டும் என்று சொல்கிறான் கணேஷ்.
தந்தையை காணாமல் தேடுகிறாள் பிரேமா. அவளுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறான் பாலு. ஆனாலும் துப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. தந்தையின் டயரியை தற்செயலாக பார்க்கும் பிரேமா, அதில் மாலை கணேஷ் வீட்டிற்கு போகப் போவதாக எழுதி வைத்திருப்பதை படிக்கிறாள். உடனே கணேஷ் வீட்டிற்கு செல்கிறாள். அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் கணேஷ் அவள் தந்தை தன் வீட்டிற்கு வரவே இல்லை என்று சாதித்து விடுகிறான். ஏமாற்றத்துடன் திரும்ப செல்லும் அவள் மீது முதன் முறையாக கணேஷிற்கு காதலுடன் கூடிய ஈர்ப்பு வருகிறது.
தந்தையை காணாமல் தவிக்கும் பிரேமாவிடம் பாலு அவள் தந்தை சட்டத்திற்கு புறம்பாக பல வேலைகள் செய்ததாகவும் அதன் காரணமாக போலீஸ் அவரை தேடுவதாகவும் தன்னால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும், அதற்கு பதிலாக தன்னை பிரேமா கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.
கல்யாணத்தன்று விஷயம் தெரிந்து பாலுவை தடுக்கும் சுந்தரியையும் அவள் அண்ணனையும் உதாசீனப்படுத்தி விட்டு கல்யாணத்திற்கு செல்கிறான் பாலு. விவரம் அறிந்து சுந்தரியையும் கூட்டிக் கொண்டு கல்யாண வீட்டிற்கு வரும் கணேஷ் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதே மேடையில் பாலு சுந்தரி திருமணத்தை நடத்தி வைக்கிறான்.
தந்தையையும் காணவில்லை, திருமணமும் நின்று போய் விட்டது என கலங்கும் பிரேமாவை திருமணம் செய்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது கணேஷிற்கு. திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தாலும் தாயிடம் செய்த சத்தியம் காரணமாக உறவை தவிர்க்கிறான். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் தன்னால் அவளுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்று அதற்கு காரணமும் சொல்கிறான்.
பாதாள சிறையில் பரோபகாரத்தை தினசரி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கணேஷ் அவர் மகளை திருமணம் செய்தது பற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறான். மகளைப் பார்க்க ஏங்குகிறார் தந்தை.
வீட்டில் உள்ள ஒரு மேஜையை தற்செயலாக பிரேமா திறக்க அதில் காணாமல் போன அன்று அவள் தந்தை அணிந்திருந்த சட்டை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து விடுகிறாள். இதை பற்றி கணவன் வந்தவுடன் அவனை ஆத்திரத்தில் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க கணேஷ் அவளை அடித்து விடுகிறான்.
அந்த வீட்டிற்கு வந்தது முதல் ஏதோ ஒரு மர்மமான சூழல் தன்னை சுற்றி நிகழ்வது போல் அவளுக்கு தோன்றுகிறது. வீட்டிலேயே சில இடங்களுக்கு தான் செல்ல விடாமல் தடுக்கப்படுவது, ஊமை பெண்ணின் நடவடிக்கைகள் அவளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தன் கணவனை பிரேமா சந்தேகப்பட தொடங்குகிறாள். பூட்டி வைத்திருக்கும் அறைக்கு பக்கத்தில் அவள் செல்வதை பார்க்கும் ஊமை வேலைக்காரி சண்டை போட மிகுந்த கோவமும் வருத்தமும் அடைகிறாள் பிரேமா.
இதற்கிடையில் தான் அடைப்பட்டிருக்கும் சிறையிலிருந்து தப்பித்து செல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் பரோபகாரம் ஒரு நாள் தப்பித்து சென்று விடுகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கணேஷை தேடி போலீஸ் வருகிறது. தன் தந்தையை காணவில்லை என்றும் அதற்கு காரணம் தன் கணவன்தான் என்று பிரேமா புகார் கொடுத்ததன் பேரில் கணேஷ் கைது செய்யப்படுகிறான். அவன் மேல் பரோபகாரத்தை கொலை செய்ததாக வழக்கு தொடுக்கப்படுகிறது.
பரோபகாரத்தை கடத்தி சென்று அடைத்து வைத்ததை ஒப்புக் கொள்ளும் கணேஷ் ஆனால் அவரை கொலை செய்யவில்லை என்று வாதிடுகிறான்.
தப்பித்து சென்ற பரோபகாரம் என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா? அவரது சொத்துக்களை அபகரிக்க யாரவது கடத்தினார்களா? இதன் பின்னணியில் பாலுவின் பங்கு என்ன? தன் கணவன் உண்மையிலே நிரபராதியா? இதற்கு பதில் தேட புறப்படுகிறாள் பிரேமா. அந்த கேள்விகளுக்கான விடை வெள்ளித்திரையில்.
(தொடரும்)
அன்புடன்
அன்னையின் ஆணை- Part II
இதை ஒரு one dimension movie என்றே சொல்லலாம். revenge - பழி வாங்குதல் என்ற ஒரு உணர்ச்சியின் மேல் எழுப்பப்பட்ட ஒரு கதை-திரைக்கதை. இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்பு இப்படிபட்ட one dimensional படங்கள் வெகு அபூர்வமாய் மட்டுமே வந்திருக்கின்றன. அன்றைய சூழலில் பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய கதைகள் அமைந்த திரைப்படங்களே வெளிவந்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு கதையை படமாக்கியதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படும் உயர் தட்டு ரசிகர்கள் பலருக்கும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் இது என்றே சொல்லுவார்கள்.[ஆனால் நமக்கு நேரிடையான அனுபவம் மூலமாக நடிகர் திலகம் என்பவரை இந்த கிளாஸ் மட்டுமல்ல மாஸ் ஆடியன்ஸும் ஒரு போல ரசிப்பார்கள் என்பது தெரியும்].
இந்தப் படத்தில் இரண்டு வேடங்கள். அப்பா சங்கர், மகன் கணேஷ். அப்பாவின் ரோல் ஒரு சிறப்பு தோற்றம் என்ற அளவிற்கு மட்டுமே என்ற போதிலும் அதிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் நடிகர் திலகம். மனைவியிடம் தவாறாக நடந்தது கொள்ள முயற்சித்த முதலாளியிடம் ஆத்திரத்துடன் வந்து பேசும் காட்சியிலே அது தெரியும்.
மகன் கணேஷ் கதாபாத்திரம் படத்தின் உயிர் நாடி. முதலில் கல்லூரி மாணவனாக வரும் போது நார்மலாக இருக்கும் அவர் தன் தாயின் தவிப்பையும் செய்யாத தவறுக்காக தந்தை அனுபவித்த சிறை தண்டனையைப் பற்றி தெரிந்துக் கொண்டவுடன் அவர் முகத்திலும் அவர் உடல் மொழியிலும் வரும் மாற்றம், அந்த பழி வாங்கும் உணர்வின் தீவிரத்தை இறுதி வரை maintain செய்வதை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். ரங்காராவ் யார் தன் mission என்ன என்று தெரிந்தவுடன் அவர் முதலில் ரங்கராவிடம் காட்டும் மரியாதை, அவருக்கே உரித்தான அந்த பணக்கார கெத்து, ரங்காராவ் தன் மகளை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லும் போது அதை நாசூக்காய் தவிர்ப்பது, தன் வீட்டிற்கு சென்றவுடன் முதலில் இயல்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு அதன் பிறகு தன் தாய் தந்தை படங்களை பார்த்தவுடன் மிரள ஆரம்பிக்கும் ரங்காராவிடம் அவர் பேசும் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மாறும் இடத்தை சொல்வதா, ரங்காராவை பாதாள சிறையில் ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அந்த கண்களில் தெரியும் வெறி, வார்த்தைகளில் தெறிக்கும் குரூரம், இறுதி வரை அடங்காத ஆத்திரம் இவற்றை வர்ணிப்பதா இவை எல்லாமே நடிகர் திலகத்தின் வித்தியாசமான முகத்தைக் காட்டும்.
ரங்காராவுடன் அவரது interaction இப்படியென்றால், சாவித்திரியுடனான அவரது அணுகுமுறை blow hot blow cold என்று சொல்லுவார்களே, அது போல் இருக்கும். அவர்களின் முதல் சந்திப்பிலே ரிப்பேரான கார் சரியாவதற்கு உதவி செய்து விட்டு கிளம்பி சென்ற பிறகு மீண்டும் கார் ஹார்ன் அடிக்க ரிவர்சில் வந்து என்னவென்று கேட்க தேங்க்ஸ் சொல்லத்தான் அழைத்தேன் என்று சாவித்திரி சொல்லி விட்டு காரை கிளப்பிக் கொண்டு போக, what a mischievous girl என்று புன்னகைத்து விட்டு போகும் நடிகர் திலகம், பூவை பறிக்காதே என்று எழுதி வைத்திருக்கும் செடியிலிருந்து சாவித்திரி பூவை பறிக்க, Are you not educated என்று கோவத்தை காட்டும் நடிகர் திலகம், தந்தையை தேடி தன் வீட்டிற்கு வரும் சாவித்திரியிடம் திகைப்பை மறைத்துக் கொண்டு பேசும் நடிகர் திலகம், திருமணம் தன்னால் நின்று விட்டதே என்ற கழிவிரக்கத்தில் கல்யாணம் செய்து கொண்டு பிறகு தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கும் மனைவி மேல் வரும் காதலுக்கும் நடுவில் சிக்கி மனப் போராட்டத்தை சந்திக்கும் நடிகர் திலகம், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்லும் நடிகர் திலகம், மறு நாள் டைனிங் டேபிளில் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஏன் அப்படி செய்தேன் என்று விளக்கும் நடிகர் திலகம், தன் மனைவிதான் போலீசை வரவழைத்தது என்று தெரிந்தவுடன் போலீசார் முன்னால் மனைவியை ஒரு விதமான வெறுமையாக பார்க்கும் நடிகர் திலகம். இப்படி பல காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏராளமானவர்களுக்கு பிடித்த அந்த காட்சியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். தன் தந்தை காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையை டிரெஸ்ஸிங் டேபிளின் ட்ராயரில் பார்த்ததும் சாவித்திரி என் அப்பா எங்கே அவரை என்ன செய்தீர்கள் என்று உரத்தக் குரலில் சத்தம் போட்டு சிவாஜியை பிடித்து உலுக்கி அவரது நெஞ்சில் விரல்களால் பிராண்டி விட ஒரு வார்த்தை கூட பேசாமல் வழிகின்ற ரத்தத்தை வாஷ் பேசினில் சென்று கழுவி விட்டு டர்க்கி டவலால் அதை துடைத்துக் கொண்டே திரும்பி வந்து சாவித்திரியை அதே டவலால் மாறி மாறி அடிப்பார். வலி தாங்காமலும் தன் தவறை உணர்ந்தும் சாவித்திரி மன்னிப்பு கேட்க அப்போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாவித்திரியை அனைத்துக் கொள்ளும் நடிகர் திலகம். அற்புதமான காட்சி, அற்புதமான நடிப்பு!.
படத்தில் முதலில் இடம் பெறும் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம். நடிகர் திலகத்தின் அடுக்கு மொழி வசனம் பேசும் திறமையை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை என்றாலும் ரத கஜ துரக பதாதிகள் என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று பெரும்பாலோருக்கு சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம். இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் போர்க்களத்தில் சந்திக்கும் புத்த பிட்சுவைப் பார்த்ததும் ஆந்தைகளும் வௌவால்களும் அலைந்து திரியும் என்று வசனம் பேச ஆரம்பிக்கும் போது நடிகர் திலகத்தின் வலது கண் புருவம் மட்டும் மேலே ஏறி இறங்கும். வெகு இயல்பாக வரும் அந்த gesture-க்கு தியேட்டரில் செம அப்ளாஸ் விழும்.
நடிகையர் திலகத்தை பொறுத்த வரை ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகளெல்லாம் சோகம் இல்லை மர்மம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். திருமணம் முடிந்த பிறகு தன்னை சுற்றி என்னவோ நடக்கிறது என்று சந்தேகப்படும் காட்சிகளிலும், மேலே குறிப்பிட்ட நடிகர் திலகத்தை உலுக்கி பிராண்டும் காட்சியிலும் நடிகையர் திலகம் என்ற பெயருக்கு ஏற்றப்படி செய்திருப்பார். அவரது உடலும் பின்னாளில் அமைந்தது போல் பருமனாக மாறாமல் சரியான அமைப்பில் அமைந்திருந்ததனால் பாடல் காட்சிகளில் அவரை ரசிக்க முடிந்தது. படத்தின் இறுதிக் கட்டத்தில் நாயகன் சிறையில் இருக்க கிளைமாக்ஸ் நாயகியின் கைகளில் வரும். அதை சாவித்திரி குறைவின்றி செய்வார்.
வில்லன் பரோபகாரமாக ரங்காராவ். முதலில் வில்லன் பிறகு பரிதாபத்திற்கு உரிய கைதி. இரண்டையுமே ராங்கராவ் அவருக்கே உரித்த பாணியில் அழகுற செய்திருப்பார்.
இன்னொரு வில்லன் பாலுவாக நம்பியார். ஒரு படித்த வில்லன். பிற்காலத்தில் நாம் பார்த்த நம்பியராக இல்லாமல் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் வேலை. எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு செய்திருப்பார். நடன பள்ளி நடத்தும் சுந்தரியாக எம்.என்.ராஜம் அவரது அண்ணனாக குலதெய்வம் ராஜகோபால். கணேஷ் வீட்டு ஊமை வேலைக்காரியாக டி.பி.முத்துலட்சுமி கவனம் ஈர்ப்பார்.
முரசொலி மாறன் வசனம். மாமாவின் மொழியாற்றல் இவருக்கு இல்லை எனபது கண்கூடு. இருப்பினும் சாம்ராட் அசோகன் நாடகத்தில் அடுக்கு மொழியை முயற்சி செய்து பார்த்திருப்பார். சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் அப்போதே பிரபலமடைந்து விட்டது என்பது இந்த படத்தின் வசனம் மூலமாக தெரிகிறது. சாம்ராட் அசோகன் நாடகத்தை பாராட்டி பேசும்போது தலைமை விருந்தினர் சொல்லும் வசனம் " தம்பி கணேஷின் நடிப்பாற்றலை பார்க்கும் போது அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் மிக பொருத்தம். அறிஞர் சொன்னது போல இவர் மார்லன் பிராண்டோ போல் நடிக்க முடியுமா என்று கேட்பதை விட முயற்சி செய்தால் மார்லன் பிராண்டோ வேண்டுமானால் இவரைப் போல் நடிக்க முயற்சிகலாம்"
பழி வாங்கும் உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு வசனம் எழுதுவது சற்று கடினமான காரியம். குறிப்பிட்ட சில [கல்லூரி நண்பர்கள் தலைமை தாங்க போகிறவர் வித்தியாசமானவர் என்று சொல்லும் போது நடிகர் திலகம் கிண்டலாக வித்தியாசமானவர் என்று சொல்லிக் கொண்டே கை அசைவினால் உடல் குண்டாக இருப்பது மாதிரியும், தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருக்கும் என்று சைகை காட்டுவது, வீட்டிற்கு வரும் ரங்காராவிடம் சிவாஜி, டி.பி. முத்துலட்சுமியை அறிமுகப்படுத்தும் போது "பேர் என்ன தெரியுமோ தேன் மொழி"] இடங்களை தவிர நகைச்சுவைக்கும் வாய்ப்பில்லை.
பாடல்களை மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியன், கா.மு.ஷெரிப்,
கோபாலகிருஷ்ணன் [கே.எஸ்.ஜி?] எழுதியிருக்க இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடல்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத படம். இருப்பினும் சில நல்ல பாடல்கள் இருக்கிறது.
1.நீயே கதி ஈஸ்வரி - பண்டரிபாய் மகன் சிறுவனாக இருக்கும் போது பாடும் பாடல்.
2. கொல்லாதே இது போலே - தெருவில் யாசகம் கேட்டு பாடிக் கொண்டே வரும் தந்தையும் மகளும் பாடும் பாடல்
3. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை- படத்தில் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று. தாய் இறந்தவுடன் அதிர்ச்சியில் உறையும் நடிகர் திலகம் - பின்னணியில் அசரீரியாய் டி.எம்.எஸ். குரலில் ஒலிக்கும் பாடல். ஒரு சோக உணர்வை மனதில் விதைக்கும் பாடல்.
4. உள்ளம் நிலை மறந்து - சாவித்திரி சந்தோஷமாக இருக்கும் போது வரும் பாடல். பியானோ வாசித்துக் கொண்டே பாடுவது. சுசீலா பாடுவதற்கு கேட்க வேண்டுமா?
5. வாங்க வாங்க மாப்பிளை - நடிகர் திலகத்திற்கும் நடிகையர் திலகத்திற்கும் திருமணம் முடிந்தவுடன் ரிஷப்ஷன் போன்ற சடங்கில் நடன பெண்மணிகள் ஆடி பாடும் பாடல்.
6. கனவின் மாயா லோகத்திலே- படத்தின் ஹைலைட்டான பாடல் மற்றும் காட்சியமைப்பு. கதையின் போக்குப்படி காதல் டூயட் இடம் பெற வழி இல்லாததால் நடிகர் திலகத்தின் கற்பனையில் தோன்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகம் ஸ்டைல் சக்ரவர்த்தியாக பிய்த்து உதறியிருப்பார். இந்த படம் வெளி வந்த அதே 1958 ம் ஆண்டு வெளியான உத்தம புத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடலுக்கு எப்படி நடனம் ஆடினாரோ அது போல [இதிலும் ஹீராலால் தான் நடனம்] இந்த பாடலிலும் ஸ்டெப்ஸ் அமர்க்களமாக இருக்கும். பாடலின் ஆரம்பத்திலிருந்து அவர் சின்னதாக சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு விட்டு நிறுத்தி விடுவார். இன்னும் கொஞ்சம் அதை extend பண்ண மாட்டாரா என்று ஏங்க வைக்கும் நடிகர் திலகம் பாடல் முடியும் நேரம், சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு நடந்து ஒரு கை கொண்டு சாவித்திரியின் ஒரு கரம் பற்றி ஒரு கால் மடக்கி முழங்கால் அமர்ந்து போஸ் கொடுக்கும் போது தியேட்டரே அதிர்ந்து போகும்.
படத்தை இப்போது பார்க்கும் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய வெற்றியையும் மற்ற ஊர்களில் ஒரு ஆவேரேஜ் வெற்றியையும் பெற்றிருக்கும் என்றே தோன்றும். ஆனால் சென்னை மாநகரில் படம் 50 நாட்கள் படமாக போனது. காரணம், நடிகர் திலகத்தின் அடுத்த படமும் 50 -வது படமும் ஆன சாரங்கதாராவிற்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் சேலத்தில் 70 நாட்களும், நடிகர் திலகத்தின் படங்களுக்கு என்றும் பேராதரவு கொடுக்க கூடிய மதுரையில்,கல்பனா திரையரங்கில் 70 நாட்களும் ஓடியது இந்த படம். இந்த படத்தைப் பொறுத்த வரை எங்கள் மதுரையையும் மிஞ்சியது திருச்சி. திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 84 நாட்கள் ஓடிய அன்னையின் ஆணை, அடுத்த அரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டு 100 நாட்களை கடந்தது.
நடிகர் திலகத்தின் பட வரிசையில் என்றுமே சிறப்பாக பேசப்படும் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை என்பதில் மாற்று கருத்தில்லை.
அன்புடன்
இந்த படத்தின் விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட அன்பு சகோதரர் செந்தில் அவர்களுக்கு இதை dedicate செய்கிறேன்.
அன்னையின் ஆணை
முதல் வெளியீடு : 4.7.1958
லேட்டஸ்ட் வெளியீடு : 4.11.2010 [தீபாவளி ரிலீஸ்]
ஆம்! "அன்னையின் ஆணை"யை மறுவெளியீடாக, தீபாவளி ரிலீஸாக இத்திரியில் வெளியிட்ட முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!
வழக்கம் போல் இந்தத் திறனாய்வு / கண்ணோட்டமும் அருமை, அபாரம், அற்புதம்.
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!
[49வது திரைக்காவியமான "அன்னையின் ஆணை", 49வது பக்கத்தில் இடம்பெற்று தொடங்கியது 'ஆண்டவன் கட்டளை'யாலோ!]
அன்புடன்,
பம்மலார்.
அனைவருக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளியும் நடிகர் திலகமும்
தமிழ்த் திரைப்பட வரலாற்றில்,
தீபாவளி வெளியீடுகளாக 42 திரைக்காவியங்களையும்,
அவற்றில் 19 காவியங்களை 100 நாட்களுக்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றிக் காவியங்களாகவும்
கொடுத்த பெருமை தீபாவளி ஹீரோவான நடிகர் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்!
விவரங்களுக்கு : http://mayyam.com/hub/viewtopic.php?...asc&start=1065
அன்புடன்,
பம்மலார்.
hi everybody wishing you a happy diwali
டியர் முரளி,
'அன்னையின் ஆணை' வெகுநாட்கள் பார்க்கவேண்டும் என்று துடித்து, பின்னர் கல்லூரி நாட்களில் சென்னை ஓடியன் திரையரங்கில் ஒரு வாரம் மட்டும் திரையிடப்பட்டபோது, ஓடிச்சென்று பார்த்து மகிழ்ந்த படம். அதன்பிறகு பார்க்க முடியாததால், கிட்டத்தட்ட அதன் சம்பவங்கள் மறந்து போன நிலையில், தற்போது உங்கள் திறனாய்வுக்கட்டுரை படித்தபோது, முழுத்திரைப்படமும் அப்படியே மனதில் நிழலாடியது. பின்னே, விவரித்திருப்பது நீங்கள் ஆயிற்றே.
அப்போதைய திரைப்படங்களில் இடம் பெற்ற சாம்ராட் அசோகன் (இப்படம்), அனார்கலி (இல்லற ஜோதி), சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் (ராஜா ராணி) ஆகிய ஓரங்க நாடகங்கள் அப்போது பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களால் மேடைகளில் நடிக்கப்பட்டனவாம். (தகவல்: என் தந்தையார்). 1976-ல் ரோஜாவின் ராஜா படத்திலும் இதே 'சாம்ராட் அசோகன்' நாடகம் நடிகர்திலகத்தால் நடிக்கப்பட்டது. ஆனால் நடிகர்திலகத்தின் சாம்ராட் அசோகன் நாடகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக, சுருளிராஜனை விட்டு 'கட்டபொம்மன்' நாடக வசனம் பேச வைத்திருந்தபோது மனம் வலித்தது. அதேபோல 'விடுதலை' படத்தில் நடிகர்திலகமே மீண்டும் போலீஸ் அதிகாரி உடையில் 'கட்டபொம்மன்' வசனம் பேசியபோதும் சுவைக்கவில்லை.
அன்னையின் ஆணையில் நடிகர்திலகம், நடிகையர் திலகத்துக்கு அடுத்து நம்மைக்கவர்பவர் நம்பியார்தான். (இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச்சொல்ல வேண்டும். வழக்கமாக திரு எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லும்போது கூடவே நம்பியார் பெயரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அவர்கள் இருவரும் அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பதாகத்தான் பெரும்பாலோரது எண்ணம். ஆனால் சமீபத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரது படப்பட்டியலை (செம்மொழியில்: பிலிமோகிராபி) ஒப்பிட்டுப்பார்த்தபோது ஒரு ஆச்சரியம் கண்டேன். மக்கள் திலகத்தை விட நடிகர்திலகத்துடன்தான் திரு எம்.என்.நம்பியார் அதிகப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் நடிகர்திலகத்துடன் மிக அதிகப்படங்களில் இணைந்து நடித்திருப்பவர் என்ற பெருமை பெற்றவர் 'பெரியவர்' வி.கே.ராமசாமி அவர்கள்).
திருச்சி வெலிங்டன் என்றதும், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது, முதல் ப்டமான 'பராசக்தி'யை 245 நாட்கள் ஓடவைத்து மாபெரும் வெற்றிப்படமாக்கியதன் மூலம், தமிழ்த்திரையில் திருப்பம் ஏற்படக் காரணமாயிருந்த திரையரங்கம் என்பதுதான். அன்னையின் ஆணையும் அங்கேயே அதிக நாட்கள் ஓடியிருப்பது கூடுதல் சிறப்பு.
(திருச்சியில் ஒரே காம்பவுண்டுக்குள் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன், ராக்ஸி அரங்குகளில் (உரிமையாளர்கள் ஷம்சுதீன், பாஷா என்ற அண்ணன் தம்பிகள்) 1961-ல் வெலிங்டனில் நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீவள்ளி’யும், ராக்ஸியில் மக்கள் திலகத்தின் ‘சபாஷ் மாப்பிளே’யும் ஓடியபோது, இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறி, ரத்தக்களறி ஏற்பட்டு, போலீஸ் அதிகாரிகள் வந்து, இரண்டு நாட்கள் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் இரண்டு படங்களுமே வெவ்வேறு இடங்களிலுள்ள வேறு தியேட்டர்களுக்கு மாற்றப்பட்டு, வெலிங்டனில் ஜெமினி படமும் (பனித்திரை..?), ராக்ஸியில் எஸ்.எஸ்.ஆர். படமும் (பணம் பந்தியிலே...?) திரையிடப்பட்டன).
'அன்னையின் ஆணை'யை மீண்டும் எழுத்துருவில் திரையிட்டமைக்கு நன்றி.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 153
கே: இரு மலர்கள், ஊட்டி வரை உறவு இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகி நூறு நாள் ஓடியிருக்கின்றன. ஒரே கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி நூறு நாள் ஓடியதாக திரைப்படவுலக வரலாற்றில் வேறு ஒரு சான்று உங்களால் காண்பிக்க முடியுமா? (தா.அய்யப்பன், திருவனந்தபுரம்)
ப: பூக்காட்டில் மேலும் ஒரு புது மலர்!
(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 154
கே: ரஜினியின் 'சிவாஜி' தொடங்கும் முன்பே இவ்வளவு பேசப்படக் காரணம் என்ன? (எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்)
ப: 'பாபா'வின் தோல்வியை அடுத்து, 'ரஜினி இனி காணாமல் போய் விடுவார்' என்று சிலர் கனவு கண்டார்கள். ஆனால் 'சந்திரமுகி' அவர்களது கனவில் மண் அள்ளிப் போட்டு, 'மாப்பு! வைச்சுட்டாண்டா ஆப்பு' என டயலாக் பேசியது. இத்தனைக்கும் ரஜினியின் பிரத்யேக மேனரிஸம் அதிகம் இல்லாமலேயே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. சிவாஜி பிலிம்ஸ் கொடுத்த அந்த வெற்றியைத் தொடர்ந்து சிவாஜியையே கொடுத்த நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் இதற்கு 'டாக்' அதிகம்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 அக்டோபர் 2005)
குறிப்பு:
'சிவாஜி', ரஜினியின் 154வது திரைப்படம்!
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் படங்கள் குறிப்பாக பாடல்கள் காலங்கடந்து நிற்பதோடு எந்தக் காலத்திற்கும் ஒத்து வரக் கூடியவை என்பதற்கு மற்றொரு உதாரணம், மூன்று தெய்வங்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல். வெறும் பிரச்சாரப் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களில் அதிகம் பார்க்க முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படக் கூடிய பிரச்னைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அனைத்திற்கும் அவருடைய படங்களிலும் பாடல்களிலும் விடிவும் முடிவும் உண்டு. வாழும் கலையைப் பற்றிப் பல புத்தகங்கள், ஏடுகள், பிரசங்கங்கள் இன்று இடம் பெறுகின்றன. அவையனைத்தும் செய்யும் வேலையை நடிகர் திலகத்தின் இந்த ஒரு பாடல் செய்து விடுகிறது.
பாடல் - நடப்பது சுகமென நினைத்து
குரல் - டி.எம்.எஸ்-நடிகர் திலகம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்- முத்துராமன், சாய்பாபா - நாகேஷ்
பாடல் - கண்ணதாசன்
பாடல் காட்சி
பாடல் வரிகள்
நடப்பது சுகமென நடத்து – வரும்
நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து – நாம்
வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
ஹாஹாஹா....
லல்லல்லா...
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பேசாதே போலி வேதாந்தம்
பாராதே வெறும் பஞ்சாங்கம்
உனக்கொரு உலகத்தை
அமைத்து வளர்த்து எடுத்து நடத்து
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும்போது நி்ல்லாதே
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
----- நடப்பது சுகமென
கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
கண் போடு மெல்ல கைபோடு
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்ணோடு
செல்வங்கள் கைமாறி உருண்டோடும்
உள்ளங்கள் நிறம் மாறி விளையாடும்
----- நடப்பது சுகமென
அன்புடன்
ராகவேந்திரன்
எனது பனிவான வேண்டுகோளை ஏற்று அண்ணையின் ஆணை ஆய்வுகட்டுரையை முத்தாக பதித்த முரளிசாரின் கரங்களுக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள்.அதை எனக்கு டெடிகேட் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிக்ள்
Dear Mr. Raghavendra & Murali Sir & all my beloved NT fans,
Please take time to read my suggestions, if I'm wrong correct me.
We beloved diehard fans of NT, were are we heading. We know all about our NT, proof the articles in the Hub.
We the diehard fans of NT, we know each and everything about our legend.
So, what we can do and we are right people to do this..........
I have personally read the articles written by our fans which has lots & lots of in-depth info about our NT film careers and his personality and none can provide better info than our beloved fans.
The articles shared in the hubs should not just vanish by reading.
I want one of our senior person to take the ownership to compile all the articles written by our fans in the hub about our legend convert it in form of Book & e-print in a systematic way.
Believe me the articles so far if combined & compiled inform of a Book, can fetch a place in Gunnies Book of World Record. (for so much, is written about one person and for only our NT one can write like this)
We NT fans should be a pillar for a next generation, the articles should be made available in form of books.
Even the next generations to come will have an opportunity to read all about our NT and his devoted fans this legend had, even we can take one step forward to make it available in electronic media as well.
Please take this as one of our 2011 agenda, lets unite discuss and take this forward.
NOTE: No fans books has published so far for any actor. SO LETS DO THIS FOR OUR LIVING LEGEND, DR. SIVAJI STILL LEAVES IN US. HE WILL INSPIRE US AND WILL BLESS US THROGHOUT.
please advice.
JAIHIND
M. Gnanaguruswamy
'அன்னையின் ஆணை'யை மீண்டும் எழுத்துருவில் திரையிட்டமைக்கு திரு.முரளி அவர்களுக்கு நன்றி.
அன்னையின் ஆணை படத்தின் விமர்சனத்தினை இவ்வளவு விரிவாக தந்தமைக்கு நன்றி. பாடல்கள், நடிப்பு மற்றும் கதை குறித்து அழகுற எழுதியுள்ளீர்கள்.
ஆனால் தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்பப்படுவதாய்த் தெரியவில்லை.
அன்னையின் ஆணை திரைப்பட ஆய்வைப் பாராட்டிய சுவாமி, சாரதா, சந்திரசேகர், செந்தில் மற்றும் செல்வாவிற்கு நன்றி. தொலைபேசி மூலமாக பாராட்டிய ராகவேந்தர் சாருக்கும் நன்றி.
சாரதா,
திருச்சி வெலிங்டன்,ராக்ஸி பற்றிய குறிப்புக்கள் மற்றும் அரங்க வளாகத்தில் 1961-ல் நடந்த நிகழ்சிகளைப் பற்றி உங்கள் தகவல்கள் எனக்கு புதியவை. உங்கள் பதிவை படித்த போது வேறு ஒன்று நினைவிற்கு வந்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் நமது சுவாமி அவர்கள் மூலமாக 1962-ம் ஆண்டு அக்டோபர் மாத மதி ஒளி இதழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகம் திரையுலகில் பத்து வருடங்களை நிறைவு செய்வதையொட்டி [1952 அக்டோபர்-1962 அக்டோபர்] வெளியான சிறப்பு இதழ்.அதில் ஒரு கட்டுரையில் இரு தரப்பு ரசிகர்களின் மோதலைக் குறிப்பிடும் போது இந்த மோதல் சில சமயம் ரத்தம் சிந்தும் வன்முறையில் போய் முடிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த மோதல் போக்கு தற்போது சற்று குறைந்திருக்கிறது என்றும் அதில் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை நீங்கள் சொன்ன நிகழ்வைத்தான் குறிப்பிட்டார்களா என்று தெரியவில்லை.
செந்தில் உங்கள் அன்பிற்கு நன்றி.
செல்வா, நல்வரவு. நீங்கள் இந்த நடிகர் திலகம் திரியில்தான் உங்கள் முதல் பதிவை செய்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவங்களை பங்கிடுங்கள்.
Gurusamy,
As you had suggested this has been put forth by many a person within and outside this forum. Definitely all thses things would be brought out in the traditional book format, God willing. Let us do it at the opportune moment.
Regards
messege deleted
Dear Ragavendar sir, Mr.Murali sir, Pammalar sir and saaratha madam 1974இல் வந்த தாய் படம் பற்றிய திறனாய்வு செய்யும் படி வேண்டுகிறேன்.
படம் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது
கிட்டத்தட்ட மறந்து போன நிலைமை .
இதன் DVD கூட கிடைக்கவில்லை
டியர் முரளி சார்,
அன்னையின் ஆணை திறனாய்வு அருமை, இதை படிக்கும் போது Y.G.Magendiren அவர்களின் பேட்டி நினைவுக்கு வருகிறது, அவர் NTஅவர்களிடம் சாவித்திரியை துண்டால் அடிக்கும் சீன் அருமை என்று பாராட்டி இருக்கிறார் , அதற்க்கு NTஅவர்கள் எங்கோ பார்த்த ஒரு OBSERVATION தான் காரணம் என்று கூறி இருக்கிறாரர் .
THAT IS NADIGAR THILAGAM
இன்று நவம்பர் 7.
சரியாக இன்றைய தேதிக்கு 49 ஆண்டுகளுக்கு முன் [07.11.1961] அது வரை மக்கள் பத்திரிகைகளில் மட்டுமே படித்து தெரிந்து கொண்ட ஒரு சுதந்திர போராட்ட தியாகியை திரையில் தரிசித்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வகை போராட்டங்கள் பலரால் நடத்தப்பட்டது. வியாபாரம் செய்வதற்கு கிழங்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியா வந்தவர்கள் பின் இந்தியாவை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். வியாபாரம் செய்வதற்கு வந்தவர்களை அதே வியாபாரத்தில் போட்டியிட்டு தோற்கடிக்க தமிழகத்தின் தெற்கு பகுதியில் ஒரு வீரன் தோன்றினார். அதற்காக சுதேசி கப்பல் ஒன்றையே வாங்கி அதன் மூலம் சுதந்திர போராட்டத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
அப்பெருமகனாரின் வாழ்க்கை கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் செல்லுலாயிடில் சித்திரமாக செதுக்கப்பட்டது பந்துலுவின் மூலமாக. வ.ஊ.சிதம்பரனாராக நமது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார். சிதம்பரனாரின் மகன் படத்தைப் பார்த்து விட்டு என் தந்தையை மீண்டும் பார்த்தேன் என சொல்லியதை தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நடிகர் திலகம் கருதினார்.
அப்படிப்பட்ட ஒரு உன்னத படத்தின் பொன் விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. உண்மையும் நேர்மையும் தியாகமும் சீலமும் நிறைந்த தேசியம் கோலோச்சிய தமிழகத்தில் மீண்டும் அந்த பொற்காலம் வர வேண்டுவோம். இத்தகையான வரலாற்றுகளை நாம் என்று நினைவில் கொள்ள வழி வகுத்த நடிகர் திலகத்திற்கு நன்றி சொல்லுவோம்.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 155
கே: "சிவாஜி கணேசன் நடித்த படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த படம் எது?" என்று கேட்டால், உங்களால் பதில் கூற முடியுமா? (மு.சுகுமார், எலந்தம்பட்டு)
ப: முடிந்திருக்கிறதே, முடிகிறதே, முடியுமே! "கப்பலோட்டிய தமிழன்" படம் என்று. அன்றும் கூறினேன், இன்றும் கூறுகிறேன், என்றும் கூறுவேன்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)
இன்று 7.11.2010 தேசிய திலகத்தின் "கப்பலோட்டிய தமிழன்" திரைக்காவியத்தினுடைய பொன்விழா ஆண்டின் தொடக்கம்.
அன்புடன்,
பம்மலார்.
கலைதெய்வம் பாராட்டிய கலைஞானி
"என் மடியில் குழந்தையாகத் தவழ்ந்தவன் கமல். இன்று உலகம் போற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். விகாரமாக முகத்தை வைத்துக் கொண்டு நடித்து, உலகைக் கவர்பவன் தான் மிகச் சிறந்த கலைஞன். அந்த வரிசையில் கமலஹாசன் முன்னிலை வகிப்பவன். கமல் அழகானவன். என் மனதிலும், என் இதயத்திலும் இருப்பவன். அப்படிப்பட்ட கமல் பல்லாண்டு வாழ்ந்து, கலையுலகுக்கு நல்ல நடிகன் என்ற பெருமையை பெற்றுத் தர வேண்டும்."
- 30.4.1997 புதனன்று சென்னையில் நடைபெற்ற "அவ்வை சண்முகி" வெற்றி விழாவில் நடிகர் திலகம்.
இன்று 7.11.2010 கலையுலக மன்மதன் கமலஹாசன் அவர்களின் 57வது பிறந்த தினம்.
HAPPY BIRTHDAY KAMAL! MANY MORE HAPPY RETURNS!
அன்புடன்,
பம்மலார்.
நமது உயிரினுமினிய தேசத்தின் பெயர் பாரதம்.
வடபுலங்களில் இன்றும் நமது தேசம் அழைக்கப்படுவது பாரத் என்று.
அது போல் நமது அன்பிற்கினிய நெஞ்சில் நிறைந்த புரட்சிக்காரன் பாரத்.
வெளி நாடுகளில் வாழும்போது நமது தேசத்தையே நினைத்தவன் பாரத்.
நாட்டிற்கு வந்த போதோ எதேச்சதிகார ஆட்சியை வீழ்த்த போராடியவன் பாரத்.
மகிழ்ச்சி பீறிடும் உற்சாகத்தின் விளிம்பையும் தீமைக்கு எதிரான கோவத்தின் உச்சக்கட்டதையும் நம்மை உணர வைத்தவன் பாரத்,
ஒரு திரையரங்கின் சுற்றுப்புறங்களில் பார்க்கக் கூடிய அதிகபட்ச மக்கள் வெள்ளத்தை நான் கண்டதும் பாரத் மூலமாகத்தான்.
வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத அந்த 1969 நவம்பர் 9ம் தேதியையும் மதுரை சென்ட்ரல் சினிமாவையும் பற்றிய இனிய நினைவுகளையும் மீண்டும் அசை போட வாய்ப்பு கொடுத்த இன்றைக்கு 41 வயதை நிறைவு செய்யும் பாரத் மேலும் பல்லாண்டு வாழட்டும்!
வெள்ளித்திரை மூலமாக இது போல் எத்தனை முறை நம்மை வசீகரித்திருக்கும் நமது அன்புக்குரியவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் நம்மால் நிறுத்தவும் முடியுமா?
எப்போதும் அந்த இனிய நினைவுகளோடு!
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 156
கே: "சிவந்த மண்" படப்பிடிப்புக்காக வெளிநாடுகள் சென்ற நடிகர் திலகம் அங்கிருந்து வாங்கி வந்தவை என்ன? (ப.பூலோகநாதன், சென்னை-1)
ப: திறமைக்குப் பாராட்டு.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1969)
இன்று 9.11.2010, சிங்கத்தமிழனின் "சிவந்த மண்" திரைக்காவியத்தின் 42வது ஆண்டு ஆரம்ப தினம். ஆம், பார் போற்றும் 'பாரத்'துக்கு 42வது ஜெயந்தி.
HAPPY BIRTHDAY & MANY MORE HAPPY RETURNS, Mr.BHARAT!!!
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr.Murali Srinivas/Mr.Pammalar
Thanks for the news that Mr.Bharath is celebrating his 42nd birthday today. On the other side, its really awesome to know that 41 years have passed since this movie was released. Even today if we see the movie, its like a new movie, with our NT in all his glowing style and dress with original hair, MSV's all time great hits, splendid foreign locations and an action packed story.
Thanks once again for the same.
Shiv.
Happy (42nd) Birthday to 'Sivandha Mann' BHARATH.
Discussions about Sivandha Mann scenes here:
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1425
(pages 96, 97, 98 & 99)
Dear Mr.Ragavendar
I just happened to see Nadigar Thilagam MP4 in yor website. Hats off to you for posting the same. Beginning with Mr.Prabhu playing the sax, various shots of NT's close ups & walks from his all time great movies were shown in clippings with the song from "Asal" in the background.
It really made me emotional.....
Was this done by Mr.P.Anand whose name appears at the end?
Dear NT fans
The above MP4 in www.nadigarthilagam.com is a must view for all our fans brethen. Pl view, enjoy and relieve your emotions.
Shiv.