டியர் வாசுதேவன் சார்,
வாணி ராணி - 'சீதா அவுர் கீதா' என்று உங்களுடைய பதிவுகள் கலக்கல்.
சண்டைக்காட்சிகள் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
வாணி ராணி - 'சீதா அவுர் கீதா' என்று உங்களுடைய பதிவுகள் கலக்கல்.
சண்டைக்காட்சிகள் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. நன்றி.
டியர் ராகவேந்திரன் சார்,
நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' தொடர் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. அனைவரது எண்ணங்களிலும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அனைவரது பாராட்டையும் பெறும் என்பதில் துளியளவும் சந்தேகமே இல்லை. நடிப்பு கோட்பாடு கட்டுரை நடிகர் திலகத்தை தவிர்த்து யாரை வைத்து எழுத முடியும். அதுவும் அவரின் தீவிர ரசிகரால் எழுதப்படுவது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.
'இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?' என்பது நடிகர் திலகத்தை தமிழகம் பெற்றதற்கு மட்டுமல்ல தங்களையும் இத்திரி பெற்றதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
அன்புடன்.
இந்த திரியின் சிறப்பே, நடிகர் திலகத்தின் திரைப்படத்தின் கதையின் மூலம் என்ன, அது வேற்று மொழி திரைப்படமாயின் அது வெற்றிபடமா?, அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு எவ்வாறு இருந்தது?, மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு எப்படி? நடிகர் திலகத்தின் படம் பின்பு எந்த மொழியில் திரைப்படமாக்கப்பட்டது?, அதில் பங்கேற்றவர்களின் திறமை எப்படி? போன்ற விபரங்கள், ஒப்பீடுகள் - நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை பறை சாற்றுகிறது. வாசுதேவன் சாரின் 'வாணி ராணி' அலசல் இதை மீண்டும் நிரூபிக்கிறது.
நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். 'முல்லை பூ பல்லக்கு' மிகவும் பிரபலமான நல்ல பாடல். இதில் nt அவர்கள் கௌரவ வேடத்தை விட சற்றே பெரிய வேடத்தில் நட்புக்காக நடித்திருப்பார். இந்த படமும் நன்றாக 100-நாட்கள் ஓடி வெற்றி கண்டது. 'கல்கி' இதழின் பாராட்டிற்கு மேல் வேறு என்ன நான் சொல்ல?
டியர் பம்மலார்,
சந்திப்பு, செவாலியெ விருது விழா செய்திகள் தொடர்ச்சி, மற்றும் 'வாணி ராணி' - பேசும்படம் இதழின் சிறப்புப் பக்கம் என்று தஙகளின் ஆவணப் பதிவுகள் அருமை. பாராட்டுக்கள்.
கலக்கிட்டீங்க பம்மலாரே!!!
உங்கள் மற்றும் ரசிக சகோதரர்களின் பங்களிப்பு தொடராத அத்தருணத்தில், எல்லோரையும் வேண்டிக்கொள்ள அவ்வாறு அவதாரம் எடுத்துக்கொள்ள வேண்டியாதாகியது. நானும் 'பலே பாண்டியா' மருது-வின் மதராஸ் பாஷையில் எனது விண்ணப்பத்தை எழுதி பதிவிடும் போது, சில குறைகளை கண்டு, அவைகளை தவிர்த்து பின்னர் பதிக்கலாம் என்றெண்ணி, விட்டுவிட்டேன். பின்னர் இத்திரியை கண்டதால் தேவை இல்லாமல் ஆகிப்போனது. இப்போது நீங்கள், நான் விட்டுவிட்ட அதே பாஷையில் பதில் அளிக்கின்றீர். என்ன இருந்தாலும் மதராஸ்வாசி ஆயிற்றே நீர் - உங்கள் மதராஸ் பாஷை... ஆஹா அற்புதம்!!!
பம்மலார் அவர்களும், வாசுதேவன் அவர்களும் 'வாணி ராணி' படம் பற்றிய பல்வேறு ஆவனங்களைப் பதித்துவரும் இவ்வேளையில், வசந்த மாளிகை வெள்ளிவிழாவில் இரு கதாநாயகிகளுக்குள் நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. (நான் பத்திரிகையில் படித்தது. அது குமுதமா அல்லது பொம்மையா என்பது நினைவில் இல்லை).
'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதற்காக அதன் இந்திப்பதிப்பான 'பிரேம்நகர்' படத்தில் நடித்து வந்த ராஜேஷ்கன்னா மற்றும் ஹேமாமாலினி வந்திருந்தனர்.
அப்போது, ஏற்கெனவே வசந்தமாளிகையில் நடித்தவரும் அப்போது வாணிராணி படத்தில் நடித்து வந்தவருமான வாணிஸ்ரீயும், ஏற்கெனவே சீதா அவுர் கீதாவில் நடித்தவரும், அப்போது பிரேம்நகர் படத்தில் நடித்து வந்தவருமான ஹேமாமாலினியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வாணிஸ்ரீ கேட்டாராம் "அந்த சீலிங் ஃபேன் காட்சியில் எப்படி நடித்தீர்கள்?. நான் நடித்தபோது என் வெயிட் தாங்காமல் மூன்று முறை சீலிங்ஃபேன்களின் இறக்கை வளைந்து கீழே விழுந்து விட்டேன். நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக கீழே நிறைய ஸ்பாஞ்ச் போட்டு வைத்திருந்ததால் அடிபடாமல் தப்பினேன். நீங்க நடித்தபோது அப்படி ஏதும் நிகழ்ந்ததா?" என்று கேட்க...
அதற்கு ஹேமாமாலினி "எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்காக நல்ல கனமானதும் அகலமானதுமான ஒரு ஃபேனையே ஷூட்டிங்குக்காகவே தயார் செய்து விட்டார்கள். அதனால் நான் கீழே விழும் நிலை ஏற்படவில்லை. ஏன், இங்குள்ள தயாரிப்பாளரோ அல்லது டைரக்டரோ முன்பே இதுபற்றிக்கேட்டிருக்கலாமே" என்று கூலாக பதில் சொன்னாராம்.
டியர் கல்நாயக்,
தங்களுடைய பாராட்டுரை உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியினையும் அச்சத்தினையும் ஒரு சேர தருகிறது. தங்களுடைய அன்புரையும் பாராட்டுரையும் மேலும் ஊக்கமும் தெம்பும் தருகின்றன. அதே நேரத்தில் அதனைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சமும் உருவாகிறது. ஆனால் அந்த அச்சமே ஒரு வகையில் உந்து சக்தியாகவும் மாறி எண்ணத்தில் வலு சேர்க்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் கார்த்திக்,
தாங்கள் கூறியது போல் வாணி ராணி மின் விசிறி காட்சி மிகப் பிரசித்தம். குறிப்பாக ஹிந்தி திரைப்படத்தின் விளம்பரங்களில் கூட அந்தக் காட்சி இடம் பெற்றது பசுமையாக நினைவில் உள்ளது.
தொடர்ந்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
இன்று வந்த தகவலின் படி, திருவிளையாடல் திருக்காவியம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிகிறது. இன்று மாலை அப்படத்தின் சில காட்சிகள் சோதனையாக திரையிடப் பட்டதாகவும் தொழில் நுட்பம் மிக அற்புதமாக கையாளப் பட்டுள்ளதாகவும் தகவல். அதுவும் குறிப்பாக ஒலியமைப்பு மிகத் துல்லியமாக அமைந்துள்ளதென சொல்கிறார்கள். ஒளியமைப்புகள் ஜெர்மனியிலும் ஒலியமைப்பு லண்டனிலும் நவீனப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல். மேலும் சில காட்சிகள் கிராபிக்ஸ் அட்டகாசமாக செய்துள்ளார்கள் எனவும் கூறப் படுகிறது.
சுருங்கச் சொல்லின், கர்ணனை விட இன்னும் சிறப்பாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். சரியான முறையில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு promote செய்தால், கர்ணனை விட மேலும் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
ஆவலுடன் காத்திருப்போம்.
அன்பு கார்த்திக் சார்,
தொடர் மழையாக தாங்கள் அளித்து வரும் பாராட்டுக்களுக்கும், ஊக்கத்திற்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளை தொகுத்தளிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய அவா. ரசனை சிகரமான தாங்கள் உள்ளம் மகிழ்ந்து பாராட்டியுள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல நேரங்களில் உங்கள் ரசனையை கண்டு நான் வியந்து போய் இருக்கிறேன். என்ன இது நம் மனதில் உள்ளதை எல்லாம் (சொல்ல முடிந்தவற்றையும் சரி... சொல்ல முடியாதவற்றையும் சரி) இவர் கண்ணாடி போல் பிரதிபலித்து விடுகிறாரே என்று மலைப்பாகக் கூட தோன்றும். பொதுவாகவே நம் ரசிகர்களுக்கு நம் தலைவரைப் பற்றிய பொதுவான சில கண்ணோட்டங்கள் ஒத்துப் போகும். உதாரணமாக அவர் பட்டையை கிளப்பிய காவியங்களில் அவரது முக பாவங்கள், ஸ்டைல், நடை உடை பாவனை என்று ரசனை என்பது எல்லோரும் சிலாகிக்கும் அளவிற்கு ஒற்றுமை இருக்கும்.
ஆனால் சில விஷயங்களில் அதையும் தாண்டிய ரசனைகள், அவரைப் பற்றிய விருப்பு வெறுப்புகள், இது இப்படி இருந்திருக்கலாம்... இப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவரது விஷயங்களிலும், அவர் சார்ந்த அல்லது சாராத பல விஷயங்களிலும் தங்கள் கருத்துக்கள் அப்படியே என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதை நினைக்கையில் ஆச்சர்யமாக இருக்கும். உதாரணத்திற்கு உங்களுடைய இன்றைய பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிவந்த மண்ணில் தேங்காயுடன் தான் தலைவர் மோத வேண்டுமா? தேங்காய் சீனிவாசன் ஒரு சீரியஸான வில்லனா? அவ்வளவு எதிர்பார்ப்புகளுக்குள்ளான ஒரு படத்திற்கு ஒரு காமெடி நடிகருடன் சண்டைக்காட்சி, அதுவும் படத்தின் முதல் சண்டைக்காட்சி. எப்படி விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டியது? அவ்வளவு பெரிய இயக்குனருக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமே! அது போல பலூன் சண்டைக்காட்சி... தலைவரின் உழைப்பு வீணாக்கப் பட்டிருக்கும். பார்த்துப் பார்த்து படத்தை இழை இழையாக செதுக்கி முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விடுவார்கள். அது ஒரு ஆக்ஷன் ஓரியண்டட் படம். சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியத்துவம் உள்ள படம். அதில் போய் சொதப்புவார்கள். ஆனால் நீங்கள் கூறியுள்ளது போல அந்த ஜெயில் சண்டைக்காட்சியில் தலைவர் தூள் பரத்தி விடுவார் என்பது பெரிய ஆறுதல். அவர் எல்லாவற்றிக்கும் ரெடி... ஆனால் மற்றவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கு அவர் தலைதான் உருளும். சிவந்த மண்ணிற்காக டோட்டல் டீமும் செலுத்திய உழைப்பு அபாரத்திலும் அபாரம். ஆனால் இது போன்ற விஷயங்களில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சிவந்த மண் இன்னும் பல உச்சங்களைத் தொட்டிருக்கும் என்பது திண்ணம். இது போன்ற பல கருத்துக்களில் நம் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. எங்க மாமாவில் கூட நான் பலமுறை 'என்னங்க' பாடலில் (ஜெயலிதா அவர்களின் மேக்கப் மற்றும் டிரஸ்} நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்துக்களை அப்படியே மனதில் நினைத்தது தான்.
இன்னுமொரு உதாரணம். 'பாவை பாவைதான்' பாடல். அதைப்பற்றிய தங்கள் கருத்து அப்படியே என் மனதின் பிரதிபலிப்பு. கலைச்செல்வியின் உழைப்பு இப்பாடலில் அசாத்தியமானது. பாடலின் நடுவே வரும் ட்யூன்களில் அவர் தன்னுடன் நடனமாடும் அந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஈடு கொடுத்து அந்த மாஸ்டர் செய்யும் செய்கைகளை அப்படியே மாறாமல் அலட்சியமாக நெற்றியில் கைகளை வைத்து, எதையோ தேடுவது போல் தேடும் பாவனை காண்பித்து, பின் கிணற்றில் தண்ணீர் இறைக்க ராட்டினம் வழியே கயிறை இரு கைகளாலும் இழுப்பது போன்றதொரு மூவ்மெண்ட்டும், அதற்குப் பின் வாழைப்பழத்தை உரித்து அதை மேல் நோக்கித் தட்டி விடுவது போன்ற போன்ற மூவ்மென்ட்டும் அருமையாகச் செய்து காண்பிப்பார். மெல்லிசை மன்னர் வேறு இந்த இடத்தில் அதகளப் படுத்துவார். இந்தப் பாடல் என்றால் எனக்கு அப்படி உயிர். உங்களுக்குப் பிடித்தது போன்றே தலைவர் ஜெயலலிதா ஜோடி என்னையும் வெகுவாகக் கவர்ந்த ஜோடி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எழுத முடியாத விஷயங்களை துணிச்சலாக தாங்கள் பதியும் போது "அப்பாடா! நாம் நினைத்தோம்... இவர் எழுதி விட்டார்... என்று ஒரு திருப்தி உண்டாகும்.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் என்னுடைய பல எண்ணங்கள் அப்படியே தங்களுடன் ஒத்துப் போவதை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொள்ளத்தான். இரண்டு எண்ணங்கள் ஒன்றாக இருக்கும் போது (நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில்) அந்த சந்தோஷப் பரிமாற்றங்களுக்கு ஈடு இணை உண்டோ நடிகர் திலகத்தைத் தவிர.
அன்பு கார்த்திக் சார்,
ராணியும்,கீதாவும் 'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் சந்தித்து பேசிக் கொண்டதை பத்திரிக்கையில் படித்து, நினைவு வைத்து, அதை நீங்கள் இங்கே பதித்தது அருமை! அந்த சீலிங் ஃபேன் காட்சி பற்றி இரு நடிகைகளும் பேசிக்கொண்டது சுவையான ஒரு சம்பாஷனை. பாருங்களேன்! ஹேமமாலினி மற்றும் வாணிஸ்ரீ இருவரும் சீலிங் ஃபேன்களில் எப்படி தொங்குகிறார்கள் என்று!
http://im.rediff.com/movies/2009/may/25sl3.jpg http://i1087.photobucket.com/albums/...n31355/va1.jpg
டியர் வாசு சார்,
வாணி ராணி மின் விசிறி காட்சியினை இரு மொழி வடிவங்களிலிருந்தும் நிழற்படங்களாக பதித்து அசத்தி விட்டீர்கள். சூப்பர்.
அன்புடன்
கடந்த சில காலமாக encrypted முறையில் குறிப்பிட்ட பகுதிகள் / சந்தாதாரர்களுக்கு வழங்கப் பட்ட SUN LIFE என்கிற பழைய தமிழ்த் திரைப்பட சேனல் தற்போது விரிவு படுத்தப் பட்டு நேற்று முதல் சன் டிடிஹெச் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நேயர்களுக்கும் வழங்கப் பட்டு வருகிறது. முழுக்க முழுக்க தமிழ்த் திரைப்பட பழைய பாடல்கள் இடம் பெற்று வருகின்றன.
The one & only Nadigar thilagam.
என்றைக்குமே நான் தான் நெ.1 என்கிறாரோ நம் இதய தெய்வம்?
http://cineidentity.com/wp-content/u...JI_142837f.jpg
http://i872.photobucket.com/albums/a...mages/NS01.jpg
எவரெவர் மனதில் என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும் ...
--- வாணி ராணி படத்தில் கண்ணதாசன்
என்கிறாரோ நடிகர் திலகம்.
வாசு சார் தூள் கிளப்புங்க...
நடிகர் திலகம் சிவாஜியும், 'இசைக்குயில்' லதாஜியும்.(ஒரு நெகிழ்ச்சிப் பதிவு)
இந்தப் பதிவை அன்பு பம்மலார் அவர்களுக்கு dedicate செய்கிறேன்.
http://im.rediff.com/movies/2009/sep/14look2.jpg
"இந்தி பின்னணிப் பாடகி 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கர் அவர்கள் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நடிகர் திலகத்தின் குடும்பமும், லதாஜியின் குடும்பமும் மிக மிகப் பாசப் பிணைப்புகளால் இணைக்கப்பட்ட குடும்பங்கள். ஒவ்வொரு வருடமும் லதா மற்றும் அவரது தங்கை ஆஷா இருவரும் தலைவருக்கு சகோதர வாஞ்சையுடன் 'ராக்கி' கட்டி மகிழ்வது வழக்கம். இன்றளவில் கூட நடிகர் திலகம் மறைந்தும் கூட இரு குடும்பத்தாருக்கும் உள்ள நட்பு அப்படியே தொடர்கிறது. நடிகர் திலகத்தின் புதல்வர் திரு ராம்குமார் அவர்கள் கூறுவதாவது...
https://encrypted-tbn3.google.com/im...kxFiJSHM2FEIrg
"1950-களில் எங்களது சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் ஹிந்திப் படங்களை மட்டுமே தயாரித்தது. அந்தப் படங்களில் லதா மற்றும் ஆஷா சகோதரிகள் மிக அற்புதமாக பாடி வந்தனர். ஆனால் அவர்கள் அப்பாவை சந்தித்ததே இல்லை. ஒரு முறை ஆஷாஜி சென்னை வந்த சமயத்தில் நடிகர் திலகத்தின் "பாவ மன்னிப்பு" திரைக்காவியத்தை காண நேர்ந்தது. அப்பாவின் நடிப்பில் கிறங்கிப் போன ஆஷாஜி பம்பாய் சென்றதும் முதல் வேலையாக தன் குடும்பத்தாரிடம் நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையையும், 'பாவ மன்னிப்பு' திரைக்காவியத்தையும் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார். உடனே லதாவின் குடும்பம் நார்த் சென்ட்ரல் மும்பையில் உள்ள 'அரோரா' தியேட்டரில் 'பாவ மன்னிப்பு' காவியத்தைக் கண்டு வியந்து போயினர்..அவர்கள் பார்த்த முதல் தமிழ்ப் படமும் 'பாவ மன்னிப்பு' தான். படத்தின் இடைவேளையின் போது லதாஜியின் குடும்பத்தினர் அனைவரது கண்களிலும் கண்ணீர். லதாஜியின் குடும்பத்தினருக்கு தமிழ் வேறு தெரியாது. அப்படி இருந்தும் அப்பாவின் நடிப்பையே மொழியாகக் கொண்டு படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் விட்டனர். தங்களின் அப்பா திரு. தினாநாத் மங்கேஷ்கர் அவர்களை அப்படியே நடிகர் திலகம் ஞாபகப் படுத்துவதாக அவர்கள் அப்போது உணர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடிகர் திலகத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம் ஏற்பட்டது.
'இசைக்குயில்' சகோதரிகள்
http://1.bp.blogspot.com/_jWAYRoTKSU.../s1600/abc.jpg http://im.rediff.com/movies/2009/sep/14look1.jpg
அடுத்த நாளே HMV (His Master Voice) நிறுவனத்தின் உதவியுடன் நடிகர் திலகத்தை சந்திக்க சென்னைக்கு விமானத்தில் பயணமாகி விட்டார்கள் இசைக்குயில்கள். அன்னை இல்லம் வந்து நடிகர் திலகத்தை மனமகிழ்வுடன், சகோதர வாஞ்சையுடன் அணைத்து, 'ராக்கி' கயிறு கட்டி, அன்புப் பெருக்கில் கண்ணீர் பொழிந்தனர். அப்போது தொடங்கிய நட்பு ஆலவிருட்சமாய் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது. சகோதரிகள் இருவரும் அப்பாவை 'அண்ணா' என்றும் அம்மாவை 'அண்ணி' என்றும் உரிமையோடு அன்புடன் அழைப்பார்கள். அப்பா இப்போது நம்மிடையே இல்லாவிடினும் லதா குடுமத்தினருடனான எங்களது நட்பு அப்படியே நீடிக்கிறது. என்னுடைய ஆறாவது வயதில் நான் அவர்களை முதன் முதலில் சந்தித்திருக்கிறேன். ஆனால் சரியாக நினைவில்லை. பின் என்னுடைய பதிமூன்றாவது வயதில் அதாவது 1960-இல் சந்தித்தது நினைவில் இருக்கிறது. 1968-இல் என்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு இரு சகோதரிகளும் வந்தனர். அப்போது நான் பெங்களூர் போர்டிங் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய படிப்பு முடிந்த பிறகு 1970- களில் அவர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.
(தனது அன்பு மகள் சாந்தி அவர்களின் திருமணத்திற்கு வருகை புரிந்த 'இசைக்குயில்' சகோதரிகளை கூலிங் க்ளாஸ் அணிந்த படு ஸ்டைலான, ஸ்லிம்மான நடிகர் திலகம் குனிந்து ஜாலியான வணக்கத்துடன் வரவேற்கும் அழகைப் பாருங்கள்).
'இதயக்கனி' சினிமா ஸ்பெஷல் இதழில் வெளிவந்த நிழற்படம்.
http://i1087.photobucket.com/albums/...an31355/ln.jpg
ஆஷாஜி எப்போதும் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் லதாஜி ரிசர்வ்ட் டைப். ஆஷாஜி அவர்களை 'மாஜி' என்றும் லதாஜி அவர்களை 'தீதீ' (didi)என்றும் அழைப்பேன்.
மும்பையில் 'திரிசூலம்' ஷூட்டிங் நடந்த போது சகோதரிகள் இருவரும் நேரிடையாக செட்டுக்கு வந்து ஷூட்டிங் பார்த்து மகிழ்ந்தனர். ஷூட்டிங் முடிந்தவுடன் அப்பாவும், அம்மாவும் தெற்கு மும்பையில், பெடர் ரோட்டில் உள்ள அவர்கள் இல்லத்தில் தங்கி மகிழ்ந்தனர். லதாஜியும், ஆஷாஜியும் மராத்தியிலும், இந்தியிலும் அப்பாவிடம் பேச, அப்பா பதிலுக்கு தனக்குத் தெரிந்த இந்தியை அவிழ்த்து விட ஒரே வேடிக்கைதான். அப்பா மிகவும் திறமைசாலி மற்றும் புத்திசாலி. அவர்களுக்குள் உள்ள அந்த சகோதர பாசத்தைக் கண்டும், சந்தோஷமாக சிரித்துப் பேசி குதூகலிப்பதைக் கண்டு நான் மகிழ்ந்தும், வியந்தும் போய் இருக்கிறேன். அம்மாவுக்கு இந்தி தெரியாது. இருந்தாலும் அவர்கள் சகோதரிகள் இருவருடனும் தமிழிலேயே உரையாடி மகிழ்வார்கள். எங்களுடன் மன மகிழ்வுடன் ஏராளமான நாட்களை எங்களுக்காக செலவிட்டுள்ளார்கள் 'இசைக்குயில்கள்'.
தளபதி திரு ராம்குமார் அவர்களுக்கு நன்றி!
'தமிழில்' உங்களுக்காக அன்புடன் அளிப்பது
உங்கள் 'நெய்வேலி' வாசுதேவன்.
In Sivandha Mann Director Shridhar tried his hands in a different way to present NTs skills, particularly in stunt scenes like the helicopter chase which is in line with Sean Connery's original Bond flick From Russia with Love. Like Connery NT also tried without a stunt double for him particularly taking risk in the close shots of helicopter approaching him near to his heads. The flight fight was tried in line with Connery's Goldfinger climax fight but it proved futile in Sivandha Mann! and Thanga surangam was a copy mixture of many Bond movies and Dean Martin's Silencers! However, in both these movies NT's versatility was proved in many scenes by way of his characterizations!
டியர் ராகவேந்திரன் சார்,
அப்படிப் போடுங்க அருவாள. தெய்வ கடாட்சமாய் பழனி விபூதியுடன் காட்சியளிக்கும் மனித தெய்வத்தின் இந்த (தலைவர் கையொப்பமிட்ட) புகைப்படம் இப்போது என் டெஸ்க்டாப்பை பக்தி மனம் கமழ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. பழனி மலை அடிவாரத்தில் 'சித்தானந்தா' விபூதி ஸ்டால்களில் தலைவரின் இந்த புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தப் புகைப்படத்தைப் பார்த்து சில மணித்துளிகள் நின்று தலைவரை வணங்கிச் சென்றது நினைவுக்கு வந்து விட்டது. கோடி கோடியான நன்றிகள் தங்களுக்கு. அந்த பழனி ஆண்டவனும், நம் ஆண்டவரும் தங்களுக்கு நல்லாசிகளை அருள்பாலித்துக் கொண்டே இருப்பார்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
http://i1234.photobucket.com/albums/...ionChennai.jpg
அன்புள்ள வாசுதேவன் சார்,
எனது பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக மிக விரிவான விளக்கமான பதிவையளித்து, முடிவில் நம் இருவரின் எண்ணங்கள் பலவிதங்களிலும் ஒன்றாக ஒத்துப்போவதாக முடித்திருந்த விதம் அருமை. மிக்கநன்றி.
இசைக்குயில் லதாஜிக்கும் நடிகர்திலகத்துக்குமான பாசப்பிணைப்பை, பல்வேறு நிகழ்ச்சிகளுடனும், தங்கள் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு நிழற்படங்களுடனும் விவரித்த விதம் அற்புதம்.
நடிகர்திலகம் எப்போது பம்பாய் சென்றாலும் தங்கையின் இல்லத்துக்கு விஜயம் செய்யாமல் வரமாட்டார். அதுபோல லதாஜி சென்னை வரும் நேரங்களிலெல்லாம் உடன்பிறவா அண்ணனின் அன்னை இல்லத்துக்கு வராமல் செல்ல மாட்டார். அந்த அளவுக்கு 'பாசமலர்கள்' இருவரும்.
வாணி ராணியில் இடம்பெற்ற சீலிங்ஃபேன் காட்சியைப்பற்றி இரு கதாநாயகிகளும் உரையாடியதை நான் சொன்னதும், உடனடியாக இந்தி மற்றும் தமிழ்ப்படங்களின் ஸ்டில்களை, அதுவும் ஒரே போஸில் தேடிப்பிடித்து பதிப்பித்த தங்கள் வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :16
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 23.9.1983
[இந்த விளம்பரத்தில் இடதுபுறஓரம் உள்ள இளையதிலகத்தின் படம் 'கட்' ஆகி இருப்பதற்கு பிரபு ரசிகர்கள் மன்னிக்கவும்]
http://i1110.photobucket.com/albums/...GEDC6444-1.jpg
குறிப்பு:
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 100 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 100 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 100 நாட்கள்
4. மதுரை - சுகப்ரியா - 175 நாட்கள்
5. திருச்சி - காவேரி + ருக்மணி - 72 நாட்கள் + 28 நாட்கள் - 100 நாட்கள்
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :17
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 23.9.1983
http://i1110.photobucket.com/albums/...GEDC6447-1.jpg
குறிப்பு:
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 100 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 100 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 100 நாட்கள்
4. மதுரை - சுகப்ரியா - 175 நாட்கள்
5. திருச்சி - காவேரி + ருக்மணி - 72 நாட்கள் + 28 நாட்கள் - 100 நாட்கள்
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
'ராஜன்' fightஐ பதிவிட்டு 'ராஜராஜ பதிவாளர்' எனும் பட்டத்திற்கு சொந்தக்காரராகிவிட்டீர்கள்..!
நமது ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான சினிமா ரசிகர்களுக்கே, இந்த சண்டைக்காட்சி அவர்களது மனம் கவர்ந்த ஒன்றாகும். நமது அன்புச்சகோதரர் mr_karthik அவர்களின் இதயத்தில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் இந்த அதியற்புத சண்டைக்காட்சியை அவருக்கு Dedicate செய்தது சாலப்பொருத்தம். நமது நடிகர் திலகம் இக்காட்சியில் அழகுக்கிளி (அடிகளாரே, குஷிதானே..!) பாரதியுடன் பாந்தமாக பேசிக் கொண்டே சற்றே backsideல் handglovesகளை சரி செய்து கொண்டே நடக்கும்(நகரும்) அந்த ஸ்டைலோ ஸ்டைல் ஆஹா..அதன் பிறகு அநாயாசமாக எதிரிகளை மொத்தோ மொத்து என்று மொத்தும் மொத்து என்ன, மொத்திய பிறகு அழகுக்கிளியிடம் ஒரு அநாயாச கம்பீரக் குரலில் செய்யும் எகத்தாளம் என்ன..அழகுக்கிளியின் உடையில் தீக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அசாத்திய மிடுக்கு என்ன..Stupendous..! ஸ்டைல் சக்கரவர்த்தி to the core..!
அடியேனது பதிவுகளைக் கண்டு தாங்கள் வழங்கிய மனமுவந்த பாராட்டுக்களுக்கு, தங்களுக்கு எனது மலையளவு நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திர சேகரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் திலகம் சமூக நலப் பேரவை சார்பாக நடக்கவிருக்கும் மாணவ மாணவியர்க்கு கல்வி உபகரணங்கள் அளிக்கும் நலத்திட்ட விழா இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பு கார்த்திக் சார்,
பதிவுகளுக்கான தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி!
அன்பு பம்மலார் சார்,
தங்கள் மனமுவந்த 'ராஜ'பாராட்டுதல்களுக்கு ரகளையான என் நன்றிகள்.
'சந்திப்பு' 100ஆவது நாள் விளம்பரங்கள் செம தூள்மா. சும்மா பிச்சுகிட்டு ஓடுன படமாச்சே! விளம்பர கட்டிங்க பாக்கறச்சே என்ன ஒரு சந்தோசம் தெரியுமா... அட்டகாசமா பதிஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா. கீழ தந்திருக்கிற புள்ளி வெவரம் சும்மா அதிருதும்மா...ரொம்ப நன்றிம்மா. எல்லாம் ஒரு ஜாலிக்குதாம்மா...
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
http://www.goodlightscraps.com/conte...nce-day-38.gif
http://i1087.photobucket.com/albums/...355/bakath.jpg
சுதந்திர தின சிறப்புப் பாடல்.
"நான் யார்...
அன்று நான் யார்...
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்...
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்"...
http://www.youtube.com/watch?v=VF7VP...yer_detailpage
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பளபளக்கும் பாராட்டுக்கு எனது ஜொலிஜொலிக்கும் நன்றிகள்..!
தெய்வீக நடிகரின் 'பழனி எஸ். சித்தனாதன்' திருநீற்றுத் தோற்றம் அப்படியே என்னை கைகூப்பி வணங்கச் செய்துவிட்டது. தங்கள் மூலம் எங்களுக்கு நடிகர் திலகத்தின் 'தெய்வ தரிசனம்' சார்..!
[இந்த அரிய புகைப்படம் 14.4.1960 அன்று படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், ஃப்ரேம் போட்டு வடிவமைக்கப்பட்டது 1966 அல்லது அதற்கு பிறகுதான் இருக்கும். ஏனென்றால், 26.1.1966 அன்று தானே நமது நடிகர் திலகத்துக்கு நமது இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை வழங்குவதாக அறிவித்தது.]
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
'கல்கி'யில் வெளிவந்த "வாணி ராணி(1974)" விளம்பரம் மற்றும் விமர்சனம் மனதிற்கு இதம்..!
"வாணி ராணி(1974)" நிழற்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை அளித்ததோடு நில்லாது அக்காவியத்தின் மூலக்காவியமான ஹிந்தி "சீதா அவுர் கீதா(1972)"வின் ஸ்டில்களையும், வீடியோக்களையும் அளித்து இருபெரும் வெற்றிக்காவியங்களுக்கும் பெரும்பெருமை சேர்த்துவிட்டீர்கள்..! Dream Girlன் ரசிகர்களுக்கு செம treat..! தங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்..!
"சந்திப்பு" ஆவணங்களுக்கு அளித்த பாராட்டு டாப்டக்கர்மா..!
அன்புடன்,
பம்மலார்.
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!
http://i1110.photobucket.com/albums/...ionalFlag1.jpg
http://i1110.photobucket.com/albums/...abomman1-1.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் வாசுதேவன் சார்,
'நடிகர் திலகமும் இசைக்குயில்களும்' அற்புதப்பதிவை எனக்கு dedicate செய்தமைக்கு எனது தலையாய நன்றிகள்..!
பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் உணர்ச்சிமயம்..! தளபதி ராம்குமார் அவர்களே மிக உருக்கமாக இத்தகவல்களைக் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் வந்திருந்த இந்த அரிய தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
நிழற்படங்களும் படுஅமர்க்களம்..! அதிலும் 'லதாஜி குனிந்து மாலைகளை ஏற்றுக் கொள்ளும்போது அருகே கம்பீரத்திலகமாக வெள்ளைச் சிரிப்போடு நமது நடிகர் திலகம்' இருக்கும் அந்த நிழற்படம் அதியற்புதம்..!
இப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த பதிவினை வழங்கி அதனை எனக்கு dedicate செய்த தங்களுக்கு மீண்டும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
சிவாஜி பேரவை சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழா சிறக்க வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்
'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...'
http://www.youtube.com/watch?v=LiK_4pdcvv4
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
விடுதலை நாள் என்றாலே தேசியக் கொடியும் நடிகர் திலகமும் அனைவரின் நெஞ்சங்களும் நிழலாடும் வண்ணம் தன் படங்களை தேசீய உணர்வுடன் படைத்த வண்ணம் அமையும் படி செய்த நடிகர் திலகத்தின் படங்களை பதிவிட்டு விடுதலை நாளை கொண்டாட செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
face book இணைய தளத்தில் நண்பர் ஒருவரின் பதிவாக இடம் பெற்றுள்ள நாளிதழின் நிழற்படம் நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் சிறப்பை பாருங்கள்.
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...37132513_n.jpg
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் உரையாடும் ஒரு கற்பனை தொகுப்பு .
மதி ; சுதந்திர தின வாழ்த்துக்கள் தம்பி ..
நதி ; உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.அண்ணே .
மதி. இந்த நன்னாளில் சுதந்திர தியாக வரலற்று நினைவுகள் என்றால் உன்னுடைய படங்களில் இடம் பெற்ற வீர வசனம் மற்றும் பாடல்கள் மறக்க முடியுமா தம்பி .
நதி; நீங்க மட்டும் என்ன அண்ணே ... உங்கள் புரட்சிகரமான பாடல்கள் .. அதோ அந்த பறவை போல ... .தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை .. போன்ற பாடல்களை கேட்டல் நரம்பெல்லாம் முறுக்கேறும் அண்ணே.
மதி; தம்பி ..உனது புகழையே தங்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ள ரசிக உள்ளங்கள் உனது பெயரிலே வெற்றிநடை போடும் இந்த திரியில் கலந்து உனது படங்கள் மற்றும் உன்னை பற்றி எல்லா தகவல்களையும் தொடர்ந்து வருவது மிகவும் சந்தோஷம் தம்பி .
நதி; அண்ணே . நீங்க சொல்ற என் உயிர் பம்மலார், ராகவேந்திரன் , வாசுதேவன் ,சந்திரசேகரன் ,கார்த்திக் ,கோபால் ,முரளி ஸ்ரீநிவாஸ் ,கல்நாயக் சகோதரி சாரதா, joe மகேஷ் மற்றும் எண்ணற்ற அன்பு உள்ளங்களை எப்படி அண்ணே மறக்க முடியும் .
பசங்க திரியிலே சும்மா வெளுத்து தூள் கிளப்புகிறார்கள் .
மதி .தம்பி .. நானும் தினமும் படித்துகொண்டு வருகின்றேன் .ராகவேந்திரன் பிரமாதமாக உன்னை பற்றி ஆய்வு கட்டுரைகளை எழதி வருகிறார் .
உன் படத்தின் எல்லா தகவல்கள் அறிந்து கொள்ள பம்மலார் & வாசுதேவன் இருவரும் இரவு பகல் பாராது பதிவிட்டு வருவது சாதனைதான் .
நதி ;போங்க அண்ணே ... நீங்க மட்டும் என்ன ... உங்க சினிமா சாதனை என்ன சும்மாவா உங்க பசங்க திரியிலே கலக்கி பிரமாதமாக உங்கள் படங்கள் ,பாடல்கள் ,கட்டுரைகள் , சாதனைகள் என்று எங்கள் பசங்களும் சேர்ந்து உங்களை கெளரவம் செய்கிறார்களே .
மதி; இந்த ஒற்றுமைதான் நான் எதிர் பார்த்தேன் .நாம் திரை உலகில் இருந்த நேரத்தில் இரண்டு பிரிவுகள் தவிர்க்க முடியாத சூழ் நிலையில் இயங்கி வந்தது .
நதி; அண்ணே நீங்க பாடிய மாதிரி ஒரு தாய் மக்கள் நாமென்போம் .. ஒன்றே எங்கள் .. .
குலமென்போம் . என்ற வரிகளின் தாக்கம் இரண்டு ரசிகர்களின் உள்ளங்களிலும் குடி கொண்டுள்ளது ..
மதி; ஆமாம் .. தம்பி இந்த வருடம் உனது சாதனை படு பிரமாதம் ....
நதி; என்ன சொல்றீங்க அண்ணே .
மதி; என் தம்பி கர்ணன் ... நீ நடித்த வரலாற்று காவியம் .. மீண்டும் கர்ணனுக்கு உயிர் கொடுத்த தம்பியே ......
நதி ;அண்ணே ..உங்களின் இந்த வாழ்த்து எனக்கு கிடைத்த பாக்கியம் ...
எனது வெற்றிக்கு காரணம் எனது அன்பு பிள்ளைகளின் பாச பிணைப்பு .
மதி ; நமது இருவரின் புகழுக்கு பாடுபடும் நமது செல்வங்கள் எல்லோருக்கும் இன்று இனிய சுதந்திர வணக்கங்கள் .
நதி ;அண்ணே ..உங்களின் ஆசியாலும் எனது பசங்களின் ஆரவாரமான பதிவுகளும் நான் எல்லையில்லா ஆனந்தம் பெற்றுள்ளேன் .
மதி ; எல்லோருக்கும் விடை பெறுகிறேன் ....
நதி; மீண்டும் சந்திப்போம். சந்திப்பு விளம்பரங்கள் தூள் பம்மலாரே...................
http://i47.tinypic.com/2ywbn1l.jpg
அனைவருக்கும் இந்திய சுதந்திர திருநாள் வாழ்த்துகள்!!!
வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்.
மதியும் நதியும் உரையாடும் கற்பனை அபாரம்!!!
இருவரும் சந்தித்தால் நிச்சயம் இப்படித்தான் உரையாடுவர்
Dear esvee Sir,
Mathi- nadhi - sandhippu - urayadal
- Very nice one. Well done.
Dear Pammalar,
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்
'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...' - Very Fitting one for the situation. Thanks