http://i44.tinypic.com/2qtd8qt.jpg
Printable View
ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!
எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.
திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர். இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம். இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில் சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.
courtesy oneindia tamil
திருவாளர்கள் : தாமோதரன் , ஹயாத் , ஷங்கர் , செல்வகுமார் , குமார் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன் , பொன்னுசாமி , குப்பன் , மகாதேவன் , பாலகுரு மற்றும் பலர்
http://i58.tinypic.com/2cxhob4.jpg
சத்யம் அரங்கம் வளாகத்தில்
திருவாளர்கள் : ஹயாத் , செல்வகுமார் , சொக்கலிங்கம் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன்
http://i57.tinypic.com/2i8zn93.jpg
சத்யம் அரங்கம் வளாகத்தில்
திருவாளர்கள் : ஹயாத் , செல்வகுமார் , சொக்கலிங்கம் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன்
http://i58.tinypic.com/aaekux.jpg
புரட்சித்தலைவர் பேனருக்கு பக்கதர்கள் தீப ஆராதனை
http://i57.tinypic.com/20gyah0.jpg