-
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜெயம்ரவி?
அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த், ஆர்யாவை வைத்துப் படமெடுக்கவிருப்பதாகவும் அந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. விரைவில் அந்த அறிவிப்பு வருமென்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது வேறொரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் அடுத்து அந்தப்படத்தைத்தான் அவர் தொடங்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை கோகுலம்பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
என்னபடம்? எந்த நாயகன்? என்பதைத்தாண்டி கே.வி.ஆனந்தின் அடுத்தபடத்தை ஏ.ஜி.ஏஸ் நிறுவனம்தான் தயாரிக்கும் என்று உறுதியாகச் சொல்லப்பட்ட நிலையில் இப்போது இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. எது உண்மை என்பதை கே.வி.ஆனந்த்தான் சொல்லவேண்டும்.
-
'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம்
"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.
வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க ‘விசாரணை’ திரைப்படம் சிறப்பு விருது வென்றதையொட்டி, வெற்றிமாறனை இயக்குநர்கள் வாழ்த்திய நிகழ்ச்சி.
http://tamil.thehindu.com/multimedia...2_2573651i.jpg
http://tamil.thehindu.com/multimedia...3_2573645i.jpg
http://tamil.thehindu.com/multimedia...9_2573653i.jpg
http://tamil.thehindu.com/multimedia...5_2573657i.jpg
http://tamil.thehindu.com/multimedia...2_2573669i.jpg
http://tamil.thehindu.com/multimedia...2_2573673i.jpg
http://tamil.thehindu.com/multimedia...9_2573675i.jpg
http://tamil.thehindu.com/multimedia...3_2573680i.jpg
http://tamil.thehindu.com/multimedia...4_2573684i.jpg
http://tamil.thehindu.com/multimedia...2_2573685i.jpg
-
Singam 3 is under production ? :shock:
Enna Kodumai sravanan saar ithu ! :shaking:
-
நடிகை நக்மாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மிக உயர்ந்த பதவி
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் திரையுல் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து சாதனை படைத்தவர் நடிகை நக்மா. அவரது ஸ்டைல் பெண் நடிகைளில் தனி ஸ்டைல். இதனால், பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்தார் நடிகை நக்மா. அதையும் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.
அவ்வப்போது, காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வந்தார். தேர்தலின் போது, தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின் பேரில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
காதல் திருமணம் செய்கிறார் அனுஷ்கா?- vikatan
சுந்தர் சி. இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அனுஷ்கா. விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், ரஜினியுடன் லிங்கா என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தெலுங்குப் பட உலகிலும் இவர் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார், அதுவும் காதல்திருமணம் என்று செய்திகள் வருகின்றன.
அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், பிரபாஸ்.அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் இடையே ‘பாகுபலி’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் பேசப்படுகிறது.
‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வந்ததும், அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
இது உண்மையா? அல்லது வழக்கம்போல் வதந்தியா? என்பது தெரியவில்லை.
-
Vadivelu : Nadigar Sangathai Kanom - Comedy Speech | Vishal Sarathkumar Fight
https://www.youtube.com/watch?v=CvcSUsNjnhc
-
விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா? - VIKATAN
நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. அதில் நடிகை ராதிகா பேசும்போது, நான் சரத்தின் மனைவியாக இங்கு வரவில்லை, நடிகர்சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் வந்திருக்கிறேன் என்றார். ஆனால் அவர் பேச்சு முழுக்க சரத்குமார் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலளிப்பதாகவே இருந்தது.
அதோடு, நடிகர் விஷாலை பற்றிப் பேசும்போது, முதலில் விஷால் என்றவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு, 'விஷால் ரெட்டி' என்ற அழுத்தம் திருத்தமாகக் கூறினார். துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போதுதான் பிரச்னை தோன்றியது என்றவர், அப்போது. விஷால், சரத்குமாரைத் தரக்குறைவாகப் பேசினார் என்றும் அந்தநேரத்தில் அவர் நிதானமாக இல்லை என்றும் சொன்னார். விஷாலை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ராதிகா அடையாளப்படுத்துது ஏன் ? இங்கு தெரியவருவது ஒரு விஷயம்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஷால் எங்கிருந்து வந்தார், அவரது பின்புலம் என்ன, அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு நடிகர் நடிக்கிறார் அவ்வளவுதான்!
இதுவரை விஷால் தான் இந்தச் சமுகத்தைச் சார்ந்தவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. விஷாலும் அருமையாக தமிழ் பேசுகிறார். மூச்சுக்கு முன்னூறு முறை சரத்குமார் தரப்பு நடிகர் சங்கத்தில் சாதி புகுந்து விட்டது, அரசியல் புகுந்து விட்டது என்று சொல்கிறது. ஆனால் இங்கு விஷாலை ரெட்டி என்று அழைப்பதன் மூலம் நடிகை ராதிகா எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்?
இங்கு விஷாலை ரெட்டி என்று அழைக்கும் நடிகை ராதிகாவும் நாயுடு சாதியைச் சேர்ந்தவர்தானே என்கிற விமர்சனமும் வரத்தொடங்கிவிட்டது. விஷால் அணியினரால் சங்கத்துக்குள் சாதியும் அரசியலும் புகுந்துவிட்டது என்று சரத்குமார் அணியினர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இதுவரை விஷால் அணியினர் யாரையும் சாதிப்பெயர் சொல்லிப் பேசியதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ராதிகா, இப்படிப் பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, தமிழ்நாட்டு நடிகர்சங்கத்தில் தெலுங்குக்காரருக்கு என்ன வேலை? என்று சொல்வது ராதிகாவின் நோக்கமாக இருக்குமானால், அந்த அணியினர் இன்னும் பல சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். தென்னிந்திய நடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு நடிகர்சங்கம் என்று மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையை சரத்குமார் நிராகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தலைவராக ராதிகாவின் கணவரும், செயலாளராக அவருடைய சகோதரரும் இருந்து வருகின்றனர். பிரச்னை என்று வந்துவிட்டது. தேர்தலில் நிற்பது உறுதி என்று விஷால் தரப்பினர் தெரிவித்து விட்டனர். தேர்தல் நடக்கட்டுமே. தேர்தலைத் தெம்பாக எதிர்கொள்வதை விட்டுவிட்டு, சாதிப்பெயர் சொல்லி விமர்சனம் செய்வது அவர்களுக்கு நன்மையாக அமையாது என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர்.
-
அக்.21-ல் 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
சென்சார் பணிகள் முடிந்தவுடன் செப்டம்பர் 17-ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால், இதற்கு முன்பு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பாக்கியுள்ள கடனை அடைத்தால் மட்டுமே இப்படத்தை வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் செப்.17-ம் தேதி இப்படம் வெளியாகவில்லை.
ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தால் மட்டுமே இப்படம் வெளியாக தாமதமாகி வந்தது. இது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில், சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அக்டோபர் 21-ம் தேதி படத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
-
Hollywood...
'ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட தற்கொலையே மேலானது: டேனியல் க்ரெய்க் அதிரடி- Tamil HINDU
http://tamil.thehindu.com/multimedia...l_2576585f.jpg
"இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் தற்கொலையே செய்து கொள்ளலாம்" என்று நடிகர் டேனியல் க்ரெய்க் தெரிவித்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு வெளியான 'கேஸினோ ராயல்' படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் க்ரெய்க் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து 'குவாண்டம் ஆஃப் சோலஸ்', 'ஸ்கைஃபால்', தற்போது வெளியாகவுள்ள 'ஸ்பெக்டர் 'ஆகிய படங்களிலும் அவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இனிமேலும் இந்த பாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கூறியுள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள டேனியல் க்ரெய்க், "இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் கண்ணாடியை உடைத்து எனது மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன். நான் அந்த பாத்திரத்தைக் கடந்து வந்துவிட்டேன். நான் அதை விட்டு நகர வேண்டும். அடுத்த ரெண்டு வருடங்களுக்காவது அதைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறேன் என எதையும் திட்டமிடவில்லை.
இதுவரை யாரும் அடுத்த பாண்ட் படத்தைப் பற்றி என்னிடம் பேசவில்லை. இதற்கு மேல் நான் பாண்ட் வேடத்தில் நடித்தால் அது பணத்துக்காக மட்டுமே இருக்கும். எனது சிந்தனை எல்லாம் ஒன்று தான். இந்த வேடத்திலிருந்து நான் ஓய்வு பெறும் போது, அதை நல்ல நிலையிலேயே வைத்திருக்கிறேன். அடுத்து வருபவர்கள் இதை இன்னும் மேம்படுத்துவார்கள்.
எனவே அடுத்து வருபவர்கள் இந்த பாத்திரத்தில் சிறக்க வேண்டும். அது போதும். இது ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம், கண்டிப்பாக கடுமையான உழைப்புக்கு தகுந்த பாத்திரம்", இவ்வாறு டேனியல் க்ரெய்க் பேசியுள்ளார்.
'ஸ்பெக்டர்' இந்தியாவில் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது. 'ஸ்கைஃபால்' படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ், ஸ்பெக்டரையும் இயக்கியுள்ளார்.
-
3 Attachment(s)