22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!
காதலின் வலிமையையும் வலியையும் சலிக்காமல் நிலைப்படுத்திய ....காதல்மன்னவரே அழலாமா?!
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
Printable View
22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!
காதலின் வலிமையையும் வலியையும் சலிக்காமல் நிலைப்படுத்திய ....காதல்மன்னவரே அழலாமா?!
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
கற்பகம்-1963
எனக்கு தெரிந்து வாழ்க்கையில் என்னுடன் முரண் பட்டவர்கள் உண்டே தவிர ,கெட்டவர்களை நான் சந்தித்ததே இல்லை. ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற கதைகளை படிக்கும் போது,உலகத்தில் நல்லவர்களை தவிர யாருமே இல்லை ஆனாலும் மனித பிரச்சினைகளுக்கும் அளவே இல்லை என்ற ரீதியில்தான் இருக்கும்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மேல் அளவற்ற மதிப்பு கொண்டவன் நான் என்ற முறையில் ,அவரும் ஜெமினியும் இணைந்து,மற்ற திலகங்களை மீறி 1963 இல் பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த ,வாலியின் ,விஜயாவின் நுழைவு வாயிலான கற்பகம் பற்றி பேச போகிறேன். பார்க்கும் தோறும், இந்த மாதிரி ஒரு நல்லசிவத்துடன்,ஒரு சுந்தரத்துடன்,ஒரு கற்பகத்துடன்,ஒரு அமுதாவுடன் ,ஏன் மற்ற பண்ணையாட்களுடன் ஒரு நாளாவது வாழ முடியாதா என்ற எண்ணமே மிகும்.
100 சதவிகித புத்தி கூர்மையுள்ள படத்தை(nan avanillai) அலசி விட்டதால்,100 சதவிகித இதயத்துக்கு இதம் தரும் இந்த படத்தை அலசுவதில் ஒரு இனிய சுவை.சிலர் இது போன்ற படங்களை synthetic ஆன ஒரு wishful assembly என்று உதறுவார்கள்.இருக்கட்டுமே,வாழ்க்கையில் நாம் சந்திக்கவே வாய்ப்பில்லாத தீமைகள்,தற்செயல்கள்,தீயவர்கள்,நல்லவர்களாக நடித்த தீயவர்கள் எல்லாவற்றையும் சகித்த நமக்கு,இந்த சுகமான சகிப்பினால் சுகிப்புதானே?
என்னதான் சொல்லுங்கள்,கே.எஸ்.ஜி படம் பார்க்கும் போது நமது கலாச்சாரத்துடன் இணைந்து ,அதன் நீட்சியாக பண்பட்ட நல்லிதயங்களுடன் வாழ்ந்து,ஒத்து,முரண்பட்டு,பிரச்சினைகளை சந்தித்து ,தீர்வு கண்டு, இல்லம் திரும்பும் ஒரு இதத்திற்கு இணை இல்லவே இல்லை. (கிட்டத்தட்ட ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ஹென்றிக்கு எளிமையான இணை இப்பட சுந்தரம்)
இப்படத்திற்கு வேறு யாரையோ கே.எஸ்.ஜி தேர்வு செய்திருந்தாராம். நல்ல வேளை, அப்படி ஒரு விபத்திலிருந்து தமிழக ரசிகர்கள் தப்பி, ஜெமினி-ரங்காராவ் இணைவில் மெய்மறந்தோம்.
அதுவரை நல்லவனாக வாழ்வதே ஒரு தண்டனை என்றே தமிழ் படங்கள் நமக்கு போதித்து வந்தன.கண்ணோ,கையோ,காலோ இழப்பது நிச்சயம், போனஸ் ஆக சந்தேகம்,உதாசீனம்,மற்றவர்களால் உறிஞ்ச படுதல் என்றெல்லாம் உப-பிரச்சினைகள் வேறு.இறுதியில் அகால சாவும் உண்டு .அதை மீறி நல்லிதயங்களால் சூழ பட்டு நல்வாழ்வு வாழும் மனிதனுக்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் அவை மேலும் அவனை மெருகேற்றி ,நற்சூழலையே ஏற்படுத்தும் என்ற உணர்வை தந்த காவியம் கற்பகம்.இனி அதை விரிவாக அலசுவோம்.
விமர்சன ஆய்வு மரபின் படி கதை என்ற prelude தவிர்க்க முடியாதது என்பதால் அந்த மரபை பின்பற்றுகிறேன்.
மனைவியை இழந்த நல்லசிவம் பிள்ளை என்ற தர்ம சிந்தனை கொண்ட பெரும் பண்ணையார் ,தன் ஒரே மகள் கற்பகம் மற்றும் பட்டணத்தில் படிக்கும் மகன் ராஜாங்கம் என்ற இரு வாலிப செல்வங்களுடன் தனியாக,விசுவாசமான கணக்க பிள்ளையுடன் நல்வாழ்வு வாழ்பவர்.சுந்தரம் என்ற அநாதை சிறு விவசாயி ,தன்னுடைய தொழிலில் அக்கறை காட்டி நேர்வாழ்வு வாழ்பவன்.இந்த இரு நல்லிதயங்களும் கற்பகத்தை சுந்தரத்துக்கு மணமுடிப்பதில் வாழ்வில் இணைகிறது.மகன் ராஜாங்கம் ,தந்தையுடன் பிணங்கி,தாண்டவன் என்ற குணகேடு,மற்றும் சுயநலம் கொண்டவனின் பெண் பங்கஜத்தை திருமணம் செய்கிறான்.
நல்லசிவம் தன் பொறுப்புகளை சுந்தரத்திடம் ஒப்புவித்து அவனை வாரிசாகவே கருதுகிறார்.இதனால் கருத்து வேற்றுமை அதிகமானாலும்,பங்கஜம்-ராஜாங்கத்தின் பெண் குழந்தை கற்பகம்-சுந்தரத்தாலேயே போற்றி வளர்க்க படுகிறது.ஒரு மாடு முட்டி விபத்தில் கற்பகம் இறக்க,துயரத்தில் வாடும் சுந்தரத்தின் விருப்பமின்றியே தன் நண்பன் மகள் படித்த பண்புள்ள அமுதாவை சுந்தரத்திற்கு மறுமணம் செய்வித்து,குழந்தை மீனாட்சியின் அன்பை பெற்றால் சுந்தரத்தை அவள் மணவாழ்வில் நேர்செய்து விடலாம் என்றும் அமுதாவிற்கு,நல்லசிவம் ஆலோசனை சொல்கிறார்.சிறிது முரண்டுகள் மற்றும் பிரச்சினைகள் (தாண்டவன் உண்டாக்குபவை)முடிவில் சுந்தரம்-அமுதா-மீனாட்சி இணைந்து ,நல்லசிவத்தின் ஆசை படி நிறைவாக முடியும் படம்.
இந்த திரைக்கதையை படிப்பவர்கள் எப்படி இதனை சுவாரஸ்ய படமாக்க முடியும் என்று வியப்பர். சுவாரஸ்யம் மற்றுமல்ல இது ஒரு superhit படம்.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இன்று வரை ஒரு cult classic என்றே பேண படுகிறது.(இதன் சாயலில் வந்த முந்தானை முடிச்சும் மெகா வெற்றி)
இந்த படத்தின் highlights என்றால் கே.எஸ்.ஜியின் வசனங்கள்,ஜெமினி-ரங்கராவ் ஆகியோரின் அபார நடிப்பு,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பாடல்கள்(வாலி எழுத்தில்),நான்கு பாடல்களும் சுசீலா சோலோ(ஆண் பாடகரே கிடையாது),கர்ணனின் நல்ல படபிடிப்பு .புதுசாக இளசாக விஜயா.
இதன் தனி பட்ட சிறப்புகளை விரிவாக அலசுவோம்.
நடிகர்திலகம் நடிப்பு,அதன் வீச்சு,வேறு படும் நேர்த்தி இவையெல்லாம் அளவற்ற பிரமிப்பை தந்து ,அவரை உயர பீடத்தில் வைத்து தொழ செய்து விடும்.ஆனால் ஜெமினியின் நடிப்பு வேறு விதம்.உங்களுக்கு சிறு வயதில் உங்களை பார்த்து புன்னகைத்து,உங்களுக்கு அவ்வப்போது சாக்லேட் தரும் பக்கத்து வீட்டு பாந்தமான மாமாவை நினைக்கும் தோறும்,மனதில் ஒரு ரம்மிய உணர்ச்சி பெருக்கு உடைத்து வருமே?அந்த ரகம்.
அதுவும் இந்த படத்தில் ரங்காராவ் இணைவில் அவர் தந்த இதத்தை எழுத்தில் வடிப்பது இயலுமா?முயற்சிக்கிறேன்.
இந்த படத்தில் அவரை தவிர வேறு யாரேனும் பொருந்த முடியுமா என்று பார்த்தால்,எல்லோருமே நடித்து ஊதி விட கூடிய சாதாரண பாத்திரமே.ஆனால் இந்த பாத்திரத்திற்கு அவர் அளித்த அமரிக்கையான மெருகை,ஒளியை,உண்மை தன்மையை வேறொரு நடிகர் கனவு கூட காண முடியாது.ஒரு சாதாரண நல்லிதயம் கொண்ட விவசாயியாக,மற்றோருடன் மென்மையான அணுகு முறை,ஒத்திசைவு-சலசலப்பு சூழ்நிலையில் அவர் குடும்பத்தில் காட்டும் யதார்த்தமான இதமான அணுகுமுறைகள்,மனைவியிடம் ஒரு மென்மையான பரிவுடன் கூடிய நிஜ காதல்,குழந்தையை போற்றி அனைத்து வளர்க்கும் இயல்பான கொஞ்சல் கலந்த அன்பு,மனைவியை இழக்கும் அதிர்ச்சி,தொடர்ந்த பற்றற்ற விரக்தி,பெரியவருக்கும் மன சஞ்சலம் தராமல்,இரண்டாவது வாழ்க்கையில் ஒட்டவும் முடியாத தடுமாற்றம் என்று நண்பர்களே ,இந்த அற்புத நடிப்பை பார்த்து மட்டும் மகிழாதீர்கள் அதனுடன் உணர்ச்சி பூர்வமாக ஒன்றி அந்த நிமிடங்களில் உண்மையாக வாழ்ந்து பாருங்கள்.என் எழுத்தின் விகசிப்பு புரியும்.
ரங்கா ராவ் ,ஒரு மனைவியை இழந்து சொந்தங்களில் தோய்ந்து ,உண்மையை நேசித்து,ஊர் உறவுகளுக்கு உண்மையாய்,உபயோகமாய் நெறி வாழ்வு வாழும் நிஜ மனிதராய் அவ்வளவு நேர்த்தியாய் தன் இயல்பு நடிப்பை தந்து,படத்தினை நடத்தி செல்லும் சூத்திரதாரியாய் பரிமளிப்பார்.மற்ற பாத்திரங்களை ஒளியூட்ட வைக்கும் ரங்கராவ் அவர்களின் பங்களிப்பு.அவர் சூரியனாய் ,மற்ற நிலவுகளுக்கு ஒளி கொடுத்து பரிமளிக்க வைப்பார்.
பெண்ணிடம் காட்டும் பரிவு,உண்மை மனிதர்களை நேசிக்கும் நேர்மை,உண்மையற்றவற்றை சுடும் பிடிவாத நிராகரிப்பு,மகன் ஸ்தானத்தில் மருமகனை நேசித்து அவன் நலனில் காட்டும் பிடிவாத அன்பு,தன்னுடைய கொண்டு வந்த மருமகள் உறவை ஓட்ட வைக்க முயற்சிக்கும் தவிப்பு,அந்த முயற்சி தோற்கும் போது உருகியோடும் தன்னிரக்கம்,என்று வாழ்ந்திருப்பார்.என்னவொரு இதயத்தை பிளக்கும் இதமான வன்மையான தென்றல்!
கே.ஆர்.விஜயா நடித்து பரிச்சயம் காணா புது மொட்டு.ஆனால் இந்த கபடம் ,சூது தெரியாத கிராமத்து இள மொட்டு பாத்திரத்திற்கு,இந்த மங்கள கரமான rawness அவ்வளவு பாந்தம்.
வீ.கே.ஆர் இவ்வளவு நல்ல தன்மையுடன் இதமாக நடிக்கவும் செய்வாரா என்று ஆச்சரியம் தரும் ,இணைப்பு பாலமாய் செயல் படும் விசுவாச கணக்க பிள்ளை.
முத்துராமன்,ஷீலா இருவருமே வில்லத்தனம் இல்லாத குடும்ப பிணக்கத்தை ,வேறுபாடுகளை ,முரண்டுகளை காட்டுவார்கள்.எம்.ஆர்.ராதா வழக்கம் போல்.
இந்த படத்தில் ஒட்டாதவர்கள் நாகைய்யாவும் ,சாவித்திரியும்.பாத்திர படைப்பின் குழப்பத்தில்,நடிகையர் திலகத்தின் உழைப்பும்,தேர்ச்சியும் வீணாகி விடும்.
கற்பகம் படத்தில் மிக முக்கிய அம்சம் வசனம்.என்னதான் கே.எஸ்.ஜி படத்தில் வசனங்கள் அதிகம்,அவரே எல்லா பாத்திரத்தின் வாயிலாகவும் பேசி விடுவார்,எல்லா பத்திரங்களும் நல்ல தன்மையில் லீட் எடுக்கும்,அதிக பிரசங்கம் இருக்கும் என குற்றசாட்டுக்கள் வந்தாலும் நான் அதை கசக்கி தூக்கி எரிந்து விட்டு, அவர் வசனங்களில் வந்த தெய்வ பிறவி,படிக்காத மேதை,குமுதம்,சாரதா,கற்பகம்,கை கொடுத்த தெய்வம்,செல்வம்,பேசும் தெய்வம்,பணமா பாசமா ,சித்தி போன்ற படங்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்த்தும் ,கேட்டும் மகிழ்வேன்.
தமிழ் நாட்டில் வள வளவென்று உரக்க பேசும் மனிதர்கள்தானே அதிகம்?நம் படங்கள் அதைத்தானே பிரதிபலிக்க வேண்டும்?அதைத்தான் அருமையான லாஜிக் கொண்டு,சுவையாக ,சுத்தமாக,நற்தன்மையோடு கே.எஸ்.ஜி தந்தார்.
கற்பகம் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் என்றால் அனைத்துமே. குறிப்பாக ஆரம்ப ஜெமினி சம்பந்த பட்ட விருந்துக்கு வரும் காட்சி,கல்யாண சம்மந்தம் பேசும் காட்சி, ஜெமினி-விஜயா அன்னியோன்ய காட்சிகள்,குழந்தையை வைத்து வரும் காட்சிகள்,ஜெமினி மற்ற குடும்பத்தாருடன் அனுசரிக்கும் காட்சிகள்,ரங்கா ராவ் ஜெமினியை மறு கல்யாணம் செய்ய வற்புறுத்தும் காட்சிகள்,ரங்கராவ்-சாவித்திரி காட்சிகள் எல்லாமே ஒரு அன்பான நட்பான குடும்பத்துடன் வாழும் இதத்தை தருபவை.
சுசிலாவின் தேன் குரலில் மன்னவனே இதயத்தை துளைக்கும். ஆயிரம் இரவுகள் முதலிரவு மனநிலை இன்றும் தரும்.அத்தை மடி நம்மை குழந்தையாக்கி விடும்.பக்கத்து வீட்டு நல்ல பாட்டு.ஆனால் படத்தில் ஒட்டாது.(மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் பிடிச்சான்)
இந்த படத்தில் melodrama ,செண்டிமெண்ட் எல்லாமே நல்லிதயங்கள் சம்பத்த பட்ட ,நடக்க கூடிய ஒன்று என்பதால் படத்தில் ஒன்றுவதில் எந்த தடையும் இருக்காது.
கர்ணனின் கேமரா படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.படத்தின் தன்மை,மனநிலைகள் ஆகியவற்றுடன் ஒன்றும்.கருப்பு-வெள்ளை படங்களின் சுவை ,அவை நம் மனதிற்கு தரும் இதம் அலாதி.(ஒன்று தெரியுமா?நம் அத்தனை பேரின் கனவுகளும் கருப்பு-வெள்ளையே.பத்தாயிரத்தில் ஒருவருக்கே கலர் கனவு யோகம்)
நான் மிக விரும்பி ரசிக்கும் ஜெமினியின் படங்களில் ஒன்று.
Happy Birth day to Gemini Ganeshan. Best wishes to Shivaji Senthil. If possible evening I will come and write about GG.
Heartfelt thanks to the TV channels which have broadcast GG movies from yesterday in the fond memory of the King of Romance!
senthil
Rare songs!
Illarame Nallaram movie......with Anjali her home production!
https://www.youtube.com/watch?v=U6QDnrIg_xI