-
அன்பு கார்த்திக் சார்,
'தானே' புயலின் பாதிப்புகளை அருமையாகக் கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல முந்திரிக்கு பெயர் போன பண்ருட்டியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் முந்திரித்தோப்பு என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவுகள். வாழை மரங்கள், குறிப்பாக பலா மரங்கள், ஏராளமான பஞ்சு மரங்கள், மாமரங்கள் அனைத்தும் காலி. இயற்கையின் கோரத் தாண்டவத்தால் கடலூர் மாவட்டமே பொலிவிழந்து விட்டது. ஏற்கனவே சராசரிக்கும் கீழே இருந்த மாவட்டம் இப்போது அதல பாதாளத்தில் தள்ளப் பட்டுவிட்டது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலாளிகள், உயர் அதிகாரிகள், மற்றும் தன்னார்வ அமைப்புகள், சேவா சங்கங்கள், பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்று கூடி மீட்புப் பணிகளை செய்யும் போது உலகில் இன்னும் மனிதாபிமானம் அழிந்து விடவில்லை எனும் உணர்வு தோன்றுகிறது. வெளியிலிருந்து வந்து பணிகளை கவனிக்கும் தொழிலாளிகளுக்காக திருமண மண்டபங்களில் இரவு பகலாக உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியூர்களிலிருந்து மீட்புப் பணி புரிய வந்திருக்கும் தொழிலாளிகள் மண்டபங்களிலோ, அல்லது சொந்தக்காரர்களின் வீடுகளிலோ, நண்பர்களின் இல்லங்களிலோ தங்கி சேவை செய்கின்றனர். இரவில் கூட பணிகள் இடைவிடாது நடக்கின்றன. முக்கியமாக மின்சார சீரமைப்புப் பணிதான் உயிரை எடுக்கிறது. அனைத்து மின் கம்பங்களும் சாய்ந்து விட்டதனால் தேனி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மின்கம்பங்கள் (சிமெண்ட் போஸ்ட்) வந்து இறங்கியபடியே இருக்கின்றன. மின்துறை அதிகாரிகள் கொளுத்தும் வெயிலில் ஒப்பந்த மற்றும் மின்வாரிய தொழிலாளிகளை வைத்து மின்கம்பங்களை மாற்றி மின் இணைப்பு கொடுப்பதைக் காணும் போது இதயம் கனக்கிறது. எங்கெல்லாம் சிறு ஓட்டல்கள் இருக்கிறதோ அங்கே கிடைக்கும் உணவுப் பொட்டலங்களை அனைவரும் பாகுபாடின்றி பகிர்ந்து உண்ணுகின்றனர். மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்காக சிறப்பாக அரசாங்கம் ஏதாவது செய்தால் தேவலை. அரசாங்கத்தின் உதவி போதவில்லை என்று அனைவரும் புலம்புகின்றனர். மத்திய அரசு புயல் பாதிப்பு நிவாரணங்களுக்காக ஒதுக்கிய நிதி மிக மிக சொற்பம். நாங்களெல்லாம் தெருவாரியாக ஒவ்வொரு வீட்டிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு ஒரு தொகையை வசூல் செய்து நாங்களே ஒரளிவிற்கு எல்லாவற்றையும் சீரமைத்துக் கொண்டோம். மரம் அறுக்கும் சீனா மிஷினுக்கு ஏக கிராக்கி. கிட்டத்தட்ட ஒரு மிஷினின் விலை ஆறாயிரம் ரூபாய். மரங்களையும், வீடுகளில் விழுந்து கிடக்கும் மரக் கிளைகளையும் அறுத்துக் கொடுப்பதற்காக தொழிலாளிகள் சைக்கிளில் சுற்றியபடியே மிஷினுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். ஒரு கிளையை அறுத்துக் கொடுக்க ரூபாய் ஐந்நூறு வாங்குகின்றனர். இதற்கு நடுவில் மரங்களை அறுத்து திருடும் கூட்டமும் இதில் உண்டு. இதற்காக பல இடங்களில் சோதனைச் சாவடி போடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணி மந்த வேகத்தில் கூட நடைபெற வில்லை. எல்லோரும் களைத்து காணப்படுகின்றனர். யாரையும் குற்றம் கூற முடியவில்லை 'தானே'வைத் தவிர.
தங்கள் அன்புப் பிரார்த்தனைக்கும், எங்களுக்கு இயல்புநிலை திரும்ப வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு பார்த்தசாரதி சார்,
தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாக புதுவை மற்றும் கடலூருக்கு வந்து நிவாரணப் பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டமைக்கு எங்கள் கடலூர் மாவட்ட மக்களின் சார்பில் தங்களுக்கு என் கோடானுகோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கான தங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் வீண் போகாது. நமது உத்தமத்தலைவரின் ஆசிகளினால் எல்லாம் விரைவில் சுபமாகும். தங்களுடன் கூட வந்து எங்கள் பகுதிக்கு பேருதவி புரிந்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு நெஞ்சங்களுக்கு,
உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நம்முடைய அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி விவரங்களைத் தங்களுக்கு அளிப்பதில் பேருவகை அடைகிறோம்.
நாள் - 22.01.2012 ஞாயிற்றுக் கிழமை, நேரம் - மாலை 4.15 மணி
இடம் - Y.G.P. அரங்கம், பாரத் கலாச்சார் வளாகம், 17, திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், சென்னை 17
நிகழ்ச்சி
NTFANS - Nadigar Thilagam Film Appreciation Society துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் வெளியீட்டு 50வது ஆண்டு நிறைவு விழா
சிறப்பு விருந்தினர்கள்
திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி
திரு ஏவி.எம்.சரவணன்
திரு நல்லி குப்புசாமி
பார்த்தால் பசி தீரும் திரைக்காவியத்தில் பங்கு பெற்று அன்று பாராட்டப் பெறும் கலைஞர்கள்
திரு ஏவி.எம்.சரவணன் - தயாரிப்பாளர்
திரு ஆரூர்தாஸ் - வசனகர்த்தா
திருமதி சௌகார் ஜானகி - நடிகை
திரு எம்.எஸ்.விஸ்வநாதன் - இசையமைப்பாளர்
திரு டி.கே.ராமமூர்த்தி - இசையமைப்பாளர்
திருமதி பி.சுசீலா - பின்னணிப் பாடகி
திரு ஏ.எல்.ராகவன் - பின்னணிப் பாடகர்
திரு கமல்ஹாசன் அவர்களை அணுகியிருக்கிறோம். அவருடைய தேதி நிகழ்ச்சிகளைப் பொறுத்து அவருடைய வருகை இருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து பார்த்தால் பசி தீரும் திரைக் காவியம் திரையிடப் படும்.
அமைப்பில் சேர விரும்புவோர் சற்று முன்னதாக வந்தால் அதற்கான நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.
அமைப்பின் முக்கிய நிர்வாகிகள்-
திரு ஒய்.ஜி.மகேந்திரா - தலைவர்
திரு மோகன் ராமன், திரு ஆடிட்டர் ஸ்ரீதர், திருமதி மதுவந்தி அருண் - துணைத் தலைவர்கள்
திரு முரளி ஸ்ரீநிவாஸ் - பொருளாளர்
திரு ராகவேந்திரன் - செயலாளர்
விண்ணப்ப படிவத்தினை நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் தரவிறக்கிக் கொண்டு அன்று நேரில் சமர்ப்பிக்கலாம்.
தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
-
திரு ராகவேந்திரன்,
வாழ்த்துக்கள் ! இந்த திரியைப் பற்றியும் இங்கு நடக்கும் கலந்துரையாடல்களைப் பற்றியும் விழாவில் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
-
நடிப்புச் சக்கரவர்த்தியின் இரு நேரடித் தெலுங்கு திரைக்காவியங்கள்.
'பராசக்தி' (தெலுங்கு) (11-01-1957) மிக மிக அரிய புகைப்படம்.
பராசக்தி மைந்தனின் தெலுங்கு 'பராசக்தி' 11-01-1957 -ல் வெளிவந்தது.
நடிக மன்னனின் முதல் காவியமான 'பராசக்தி' (17.10.1952) வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் கழித்து தெலுங்கு 'பராசக்தி' வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலைவரின் முகம் மிக அழகாக மெருகேறி வைரம் போல ஜொலிப்பதைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/2-38.jpg
'பராசக்தி' தமிழ்க் காவியத்தில் அதே சீன். தெலுங்கு பராசக்தியில் நடிகர் திலகத்தின் உடை சற்று மாறியிருப்பதையும், பின்புறக் காட்சி அமைப்புகள் மாறியிருப்பதையும், S.S.R.க்கு பதிலாக வேறு ஒரு தெலுங்கு நடிகரும் இருப்பதைப் பார்க்கலாம். தெலுங்கில் S.V.சகஸ்ரநாமம் கண்ணாடி அணிந்துள்ளார்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-43.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
'பொம்மல பெள்ளி'(தெலுங்கு)(11-01-1958)கிடைத்தற்கரிய நிழற்படம்
http://4.bp.blogspot.com/-XS1vXjCrpg...i-1958.jpg.jpg
'பொம்மல பெள்ளி'(బొమ్మల పెళ్ళి)
http://i1087.photobucket.com/albums/...31355/4-22.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
பராசக்தி தெலுங்கு, பொம்மன பெள்ளி தெலுங்கு நிழற்படங்கள் என அசத்தி விட்டீர்கள். சூப்பர்.
அன்புடன்
-
அன்பு நண்பர்களே,
நமது சொஸைட்டி துவக்க விழாவினைப் பற்றிய ஒரு காணொளியினை அன்பு நண்பர் திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ளார். திரு மகேந்திரா அவர்கள் இந்த விழாவினைப் பற்றிய விரிவான செய்தியினை அளித்துள்ளார். அதனை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வுறுகிறேன். திரு நிகில், திரு மகேந்திரா மற்றும் திருமதி சுதா மகேந்திரா அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.
http://youtu.be/Q73BGnefWQM
-
டியர் ராகவேந்திரன் சார்,
திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ள திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் பேட்டியில் ntfans அமைப்பு உருவானவிதத்தையும், அதன் தொடக்க விழா பிரம்மாண்டமாக அமையப்போவது பற்றியும், விழாவில் கலந்து கொள்ளும் v.i.p க்கள் பற்றியும், நடிகர்திலகத்தின் பெருமைகளைப் பற்றியும் திருஒய்.ஜி.அவர்கள் தெள்ளத் தெளிவாக சிறு குழந்தைகள் கூட புரிந்து கொள்ளுமளவிற்கு பேட்டி கொடுத்திருந்தது அருமை. அமைப்பு உருவாகக் காரணகர்த்தாக்களாய் இருந்த தங்களையும், நம் அன்பு முரளி சாரையும் திரு ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தது அவருடைய பெருந்தன்மைக்கு ஒரு சான்று. அமைப்பைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அழகுற அவர் குறிப்பிட்டிருந்தது அழகு.
நீண்ட நாட்களாய் தங்களை சந்திக்காமல் இருந்த எனக்கு இந்தக் காணொளி மூலம் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. அதற்காக நிகில் முருகன் அவர்களுக்கும், அவருடைய வலைதளத்திற்கும் நன்றி.
நமது அமைப்பின் ஆரம்பம் பிரம்மாண்டமாகத் தொடங்க இருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அரும்பாடு பட்ட அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். நமது இதய தெய்வம் அடிக்கடி ஆசி கூறுவாரே..."ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி"..என்று. அது நமது ntfans அமைப்பிற்கு மிகவும் சாலப் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ?
'பராசக்தி' தெலுங்கு மற்றும் 'பொம்மல பெள்ளி' தெலுங்கு காவியங்களின் பதிவுகளுக்கான பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்தர் சார்,
Y G மகேந்திரன் அவர்களின் பேட்டியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, ntfans பற்றியும் , அதன் தொடக்க விழா பற்றியும், விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றியும், நடிகர்திலகத்தின் மீது அவருக்கு உள்ள பற்று பற்றியும் மிக அழகாக வெளியிட்டுள்ளார், அவர் பேட்டியில் மிக நகைச்சுவையாக "கலைவெறி எல்லாம் போய் கொலைவெறி நிறைய இருக்குற நாடு" என்று கூறும்போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் இன்னொரு பக்கம் தமிழனின் ரசனை தரம் இப்படி திசைமாறி போனதை எண்ணி வருத்தபடாமல் இருக்க முடியவில்லை.