VELLORE FORT SIGNEL
http://i46.tinypic.com/2nsgmw.jpg
Printable View
VELLORE FORT SIGNEL
http://i46.tinypic.com/2nsgmw.jpg
தங்கத் தலைவனின் நினைவுநாள் செய்திகள்இன்னும்
அதிகஅளவில் நாளை நமது ரத்தத்தின் ரத்தமான
உடன்பிறப்புக்கு
அதேபோல் வேறு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை
முடிந்தால் திரியில் வெளியிடவும்
நன்றி
MGR STATUE IN SAMADHI IN 3D - A TRIBUTE ON REMEMBRANCE DAY
http://i1146.photobucket.com/albums/...cal2013afw.jpg
ANAGLYPH IMAGE VIEW WITH 3D GLASSES
[QUOTE=esvee;991745]Dinamalar
http://i47.tinypic.com/14a90gj.jpg
திரையுலகிலும், அரசியல் வழியிலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர்; அனைவர் இதயத்திலும் குடியிருந்த கோயில்; ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை; தமிழகத்தின் நிரந்தர தலைவன்'- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும். கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும்; ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,' என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்தி ஆயுதம், "சிரிப்பு'.
அந்த வெள்ளந்தி சிரிப்பிற்கு, வெள்ளைக் கொடி காட்டிய கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், "நடிப்பு, அரசியல், ஆட்சி,' என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத மனிதர் அவர்.
நாளை (டிச.,24) எம்.ஜி.ஆர்., நினைவு நாள் : ரசிகர்களை ஏங்க வைத்து, தன் ஆத்மாவை தூங்க வைத்த, அந்த அற்புத மனிதரை, யாரும் நினைக்கவில்லை; ஆம், மறந்தால் தானே நினைப்பதற்கு! அவருடன் நெருக்கத்திலிருந்த மதுரை ரசிகர்களின் நினைவுகள் இதோ:
சோலை நாராயணன்: 1974ல், "புரட்சி பயணத்திற்காக' மதுரை வந்த தலைவர், அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றினார். கூடலழகர் கோயில் அருகே வந்த போது, அதிக நேரம் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், ஏற்ற வேண்டிய கொடியை சிக்கல் செய்து கொடுத்தோம். வாங்கிய வேகத்தில் சிக்கலை எடுத்து, கொடியை ஏற்றியவர், எங்கள் எண்ணத்தை புரிந்து, சிறிது நேரம் நின்று சென்றார்....' என, அன்பு காட்டியவர். தலைவரை சந்திக்க சென்ற நாட்களும், அவர் காட்டிய அன்பும், மறக்க முடியாதது. வி.கோட்டை: சென்னைக்கு தலைவரை பார்க்கச் செல்வோம். "வாங்கப்பா... எப்போ வந்தீங்க? சாப்டீங்களா? அடிக்கடி வர்றீங்க, எதுல வர்றீங்க?' என, எங்களிடம் கேட்டார். "லாரியில் வாறோம்...' என, சேர்ந்து பதில் சொன்னோம். அருகில் நின்ற குஞ்சப்பனிடம், "பார்த்தீயா... லாரியில் வாறாங்களாம்... உன்னையும் லாரியில் தான் அனுப்பணும்,' என, கிண்டலடித்தவர், "சாப்பிட்டு போங்கய்யா...' என, அன்பு கட்டளை வைத்து நகர்ந்தார். ஒரு முறை அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருந்தவரை, சந்தித்தோம். அப்போது அவருக்கு பால் கொண்டுவந்தனர். என்னுடன் வந்த நண்பர், "தனக்கு அந்த பால் வேண்டும்,' எனக்கேட்டார். சிரித்தபடி, தலைவரும் கொடுத்தார்; வாங்கிய வேகத்தில், தலைவரிடம் நீட்டினார், அந்த நண்பர். "என் வீட்டு பாலை எனக்கே தர்றீங்களா...' என, சிரித்தபடி, தலைவர் ருசித்தார். ரசிகனின் எந்த ஆசையையும், அவர் நிறைவேற்றத் தவறியதில்லை. தாய், தந்தை கற்றுக் கொடுத்ததை விட, தலைவரிடம் கற்றது அதிகம்.
கே.ஹமீது: கட்சி துவங்கிய உடன், மதுரையில் எம்.ஜி.ஆர்., நடத்திய கூட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்பு; "மைக் செட்' மறுக்கப்பட்டது. மைக் செட் அமைப்பாளரான என்னிடம், ஐந்து ஒலிபெருக்கிகள் தான் இருந்தன. வெளியூரிலிருந்து, 50க்கு மேல் வாடகைக்கு வாங்கி, ஏற்பாடு செய்தேன். அந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, அரசியல் திருப்பம் தந்தது. அன்று முதல், தென் மாவட்டத்தில் எந்த கூட்டம் நடத்தாலும்,
"திருப்பரங்குன்றம் "மைக் செட்'டை "புக்' பண்ணுங்க...' என, கூறிவிடுவார். அவர் குரலுக்கு, நான் தான் பொருத்தமானவன், என்பதை, பலமுறை கூறுவார். திருச்சி விழா ஒன்றில் "மைக் செட்' போட்டுக்கொண்டிருந்த என்னை அழைத்தவர், "உனக்கு என்ன உதவி வேண்டும்...' எனக்கேட்டார். "எதுவும் வேணாம் தலைவரே...' என, நான் கூறியதும், "எல்லாரும் இப்படியே சொல்லுங்க... காளிமுத்துவை கூட்டிட்டு என்னை வந்த பாரு...' என, கட்டளையிட்டார். தன் விசுவாசிகளை கைவிடக்கூடாது என்பதில், அக்கறை காட்டுபவர் அவர். இவ்வாறு மனம் திறந்தனர். தன்னைச் சார்ந்தவர்களுக்கு, உதவுவதை, கடைசி வரை எம்.ஜி.ஆர்., பின்பற்றினார். அது தான், மறைந்த பிறகும் அவரை, அனைவர் மனதிலும் பிறக்க வைத்தது.
article - net
1977 ல பெரிய வெள்ளம் வந்தது, நாங்கள் இருந்தது 3 வது மாடி, காலையில் பார்த்தால் , ஒரே தண்ணி, 10 அடிக்கு மேல், முதல் மாடி வரை வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது , வீட்டுக்கு முன் 50 அடி தள்ளி ஓடி கொண்டிரிந்த அடையாறு நதி , வழிந்து, ஊர் வழியாக ஓடியது. கண் முன்னே, மாடுகள், குடிசைகள், ஒரு சில பொனங்கள்...எல்லாம் போனது,... காலை நேரம் என்பதால், எல்லாரும் வீட்டில், அப்பா என்னை பிடித்து ஒரு ரூம்ல் அடைத்து தாழ் போட்டாச்சு, நான் அண்ணாவின் சைக்கிள் சாவியை எடுத்து, ரூமை திறக்கலின்னா சாவியை வெள்ளத்தில் தூக்கி போட்டுடுவேன்னு பயமுறுத்தினேன்., கதவு திறந்தது ...3 வது மடியில் இருந்து ஒரே ஜம்ப், நீஞ்சி கொஞ்சம் தள்ளி உள்ள எதுத்த பில்டிங்க்கு போனேன், அங்கிருந்து ஹெலிகாப்டர் வந்து ஆட்களை எடுத்து போவதை பாத்தேன், தண்ணி தேங்கிய தண்ணி இல்லை, நன்றாக ஓடுகிற வெள்ளம், மாலை வரை அங்கேயே தங்கி, தண்ணி சற்று வடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பி வந்தேன்... அடுத்த நாளே எல்லாரும் கோட்டூர் புரத்தை விட்டு , மாமா வீட்டுக்கு போனோம்.
ஒரு வாரம் கழித்து வந்த பொழுது , MGR கோட்டூர்புரம் வந்தார். , . நானும் இன்னும் சில பசங்களும் MGR இன் நீல அம்பசிடர் காரை பின் தொடர்ந்து ஓடி, அவரிடம் கை கொடுத்தோம் , தம்பி... பாத்து பாத்து ,என்று சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது. MGR பற்றி சொல்லவேண்டுமானால், நீங்கள் எந்த கலர் வேண்டுமானலும் கற்பனை செய்து கொள்ளுங்கள் , பால் வெண்மை , ரோசா பூவு மாதிரி சிவப்பு , ..அல்லது தங்க நிறம் ..... ஆனால், MGR நேரில் , கற்பனையை விட ஒரு 50 % அழ்காக வசீகரமாக இருந்தார். .
MGR கூட போட்டோ எடுக்க முடியலை,