-
-
-
-
விடுதலை-- டிரம்ஸ்
http://i1087.photobucket.com/albums/..._003964064.jpg
லக்ஷ்மி வந்தாச்சு-- தபேலா
http://i1087.photobucket.com/albums/..._001357308.jpg
பூப்பறிக்க வருகிறோம்-- பெரிய புல்லாங்குழல்
http://i1087.photobucket.com/albums/..._001684208.jpg
அன்பு நண்பர்களே!
என்னால் இயன்ற அளவு நடிகர்திலகம் அவர்கள் இசைக்கருவிகளுடன் இணைந்திருக்கும் நிழற்படங்களைத் தொகுத்துத் தந்துள்ளேன். அன்புப் புனிதர் எனதருமை நண்பர் திரு.ராகவேந்திரன் அவர்களும், அன்பு நண்பர்,அருமைச் சகோதரர் திரு 'ஜீபூம்பா'
ஜித்தர் பம்மலார் அவர்களும், மற்ற மரியாதைக்குரிய உயிரான அனைத்து ஹப் அங்கத்தினர்களும் பெருமகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறேன். குற்றம் குறைகள் இருந்தால் உரிமையோடு சுட்டிக் காட்ட வேண்டுகிறேன், நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன்,
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பு ஒரு அசுர சாதனை.
வெறுமனே பட்டியலிடுவதோடு நிறுத்தாமல் அத்தனை ஸ்டில்களையும் தேடிக்கொணர்ந்து குவித்த விதம் அருமையோ அருமை.
எப்படித்திரட்டினீர்கள் என்று நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
இன்னும் என்னவெல்லாம் செய்து அசத்தப்போகிறீர்களோ தெரியவில்லை.
-
சிறப்பு நிழற்படம்.
நடிகர் திலகம் முதன் முதலாக 'அன்பு' திரைப் படத்தில் பியானோ வாசிப்பதாக அமைந்த காட்சியாதலால் இது சிறப்பு நிழற்படமாகிறது.
http://i1087.photobucket.com/albums/...n31355/111.jpg
(இத்தகவலை அளித்த பம்மலாருக்கு அன்பு நன்றி).
அன்புடன்,
வாசுதேவன்.
-
மரியாதைக்குரிய சாரதா மேடம்,
தங்களின் மேலான..ஆழ்ந்த.. அன்புக்குத் தலை வணங்குகிறேன். நன்றிகள் மேடம்!.
தங்கள் மாணவன் என்பதில் பெருமையடையும்,
வாசுதேவன்.
-
மிக அரிய அற்புதமான போனஸ் புகைப்படம்..
'எங்கமாமா' திரைப்படத்தில் 'நம் தங்கராஜா'அக்கார்டியன் இசைக்கருவியுடன்.
http://i1087.photobucket.com/albums/...sudevan144.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன்,
'உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள்' என்று நீங்கள் கேட்டிருப்பதால் ஒரு சின்ன சுட்டல்...
படித்தால் மட்டும் போதுமா திரைக்காவியத்தில், 'நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை' பாடலின்போது, பீரோவின் மேலிருந்து ஒரு சின்ன கிடாரை (அல்லது மேண்டலின்..?) எடுத்து, பாடிக்கொண்டே தந்திகளை 'டைட்' பண்ணி, பின்னர் இடையிசையில் வாசிப்பார். அந்த ஸ்டில்லையும் இணைக்கலாமே.
-