- 
	
	
	
	
		சிரஞ்சீவி letter  ல் இருக்கும் கையெழுத்து யார் உடையது என்று ஆராய்ச்சி செய்கிறார் , அப்பொழுது அவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமா இருவரையும் சந்திக்கிறார் (இருவரும் ஜோசியக்காரர்கள் )
 இவர்கள் கையெழுத்து ஒத்து போகததால் வெளியே வரும் சிரஞ்சீவி மீண்டும் அந்த கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அதை துரத்தி போகும் பொது அது நித்யா என்று தெரிய வருகிறது , அதுவும் அவர் பைத்தியம் இல்லை என்றும் தெரிய வருகிறது , மேலும் அவரும் தினேஷும் காதலர்கள் என்றும் அவர் கொலை செய்ய வில்லை என்றும் நித்யா சொல்லுகிறார் (தினேஷ் காலேஜ் ல் நடந்த கொலைக்கு குற்றம் சாட்ட படுகிறார் , ஆனால் அந்த நேரத்தில் அவர் நித்யா உடன் இருந்து இருக்கிறார் )
 
 D souza வின் உடல் நலம் மோசம் ஆகவே  தன் வசம் உள்ள வைர பொட்டியை சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்.
 சிரஞ்சீவி திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் .
 பெட்டியை தேடி வரும் நபர்களின் கையில் D souza வின் டைரி கிடைகிறது
 
 D souza அழைக்கவே அவரை பார்க்க செல்லும் சிரஞ்சீவியிடம் பாவ மனிப்பு  கேட்கிறார்  (தன் இளமை காலத்தில் தவறு செய்ததாகவும் அதில் ஒரு குழந்தைக்கு தாய் ஆனதையும் , அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய  பாவத்துக்கு தான் பாவ மனிப்பு )
 
 இதை கேட்ட சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி , என் என்றால் அவர் தான் அந்த குழந்தையை கண்டு எடுத்து ஆனதை ஆஸ்ரமத்தில் சேர்கிறார்  , அந்த குழந்தையின் முதுகில் ஒரு மச்சம் இருப்பதும் அவருக்கு ஞாபகம்.
 
 டைரியை படிக்கும் சத்யராஜ் மற்றும் அவர் ஆட்கள் ரேகாவை D Souzaவின் மகளாக நடிக்க சொல்லுகிறார்கள் , பதிலுக்கு அவர்கள் தினேஷை விடுவிக்க உதவி செய்வதாக சொல்ல ரேகா சம்மதிக்கிறார்
 
 
- 
	
	
	
	
		நித்யாவை கெடுக்க வரும் சத்யராஜ்யிடம்   இருந்து அவரை காப்பாற்றும் சிரஞ்சீவி அவர் முதுகில் இருக்கும் மச்சத்தை பார்க்கிறார்  
 நித்யா உடன் பேசும் சிரஞ்சீவி அவர் தான் உண்மையான D souza வின் வாரிசு என்று தெரிய வருகிறது
 
 இதற்குள் கப்பலில்  இருக்கும் அனைவரும் D souzavin அறைக்கு செல்ல அங்கே அவர் ரேகா தான் தன் மகள் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார் . பாவ மனிப்பு கொடுக்கும் நபர் உண்மையை சொல்ல கூடாது என்பது கோட்பாடு , அதை மீற முடியமால் தவிக்கிறார் சிரஞ்சீவி.  D souza  வின்  இறுதி சடங்கை நடத்த கப்பலின் கேப்டன் சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்
 ஆனால் வில்லன் ஆட்களால் வைர பொட்டியை கண்டுபிடிக்க முடியமால் திண்டாடுகிறார்கள் ,
 வாரிசு கிட்ட கொடுக்க வேண்டிய D Souza வின் சொத்தை தர மறுக்கிறார்
 ரேகா உண்மையான வாரிசு இல்லை என்பதை மட்டும் சொல்லும் அவர் அதை எப்படி சொல்லுகிறார் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார் ,
 (மத கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு )
 
 கப்பல் கேப்டன் கேட்டு  கூட  வைர பொட்டியை தர மறுக்கிறார் சிரஞ்சீவி , நடவடிக்கைக்கு உள்ளாகிறார் .
 சிரஞ்சீவி எல்லோர் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் , ரேகா மணியிடம் பெட்டியை கேட்க மணியோ இந்த பெட்டியால் தான் சிரஞ்சீவிக்கு பிரச்சனை என்று பொட்டியை கொடுத்து விடுகிறார் , அதை கொண்டு பொய் சத்யராஜிடம் கொடுத்து , தினேஷ் விடுதலைக்கு உதவ கேட்கிறார்
 சத்யராஜ் மறுக்கிறார் . வேறு வழி தெரியாமல் ரேகா நித்யாவிடம் தான் தான் unmai கொலைகாரி என்றும் தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள தான் தான் கொலை செய்ததாகவும் , மேலும் சத்யராஜின் தூண்டுதலின் பெயரில் தான் தான் D souza வின் வாரிசு என்று பொய் சொன்ன விஷியதையும் அனைவரின் முன்னணியிலும் சொல்லுகிறார்
 
 
- 
	
	
	
	
		தேங்காய் ஸ்ரீநிவாசன் கொலை செய்ய பட்ட நபரின் அண்ணன் என்று தெரிய வருகிறது , அவரின் இலக்கு தினேஷின் உயிர் , தன் தம்பி மேல் தான் தவறு என்று தெரிய வந்ததும்  பழி வாங்கும் என்னத்தை மாற்றி கொளுகிறார் 
 
 
 சிரஞ்சீவி  வந்து பொட்டியை காண வில்லை  என்று தேட மணி அதை ரேகாவிடம் கொடுத்த விஷியத்தை சொல்ல சிரஞ்சீவி கப்பலின்  மேல் தலத்தில்  பெட்டியை மீட்கும் முயற்சியில்   இறங்குகிறார்
 சண்டை போடும் பொது தாக்க படுகிறார் , அனைவரும் மேலே வந்து வில்லன் ஆட்களை கைது செய்கிறார்கள் ,பலத்த தாக்குதலுக்கு சிரஞ்சீவியின் உயிர் பலியாகி விடுகிறது
 
 தன் உயிரை கொடுத்து அனைவருக்கும் நன்மை செய்யும் சிரஞ்சீவியிடம் அனைவரும் தங்கள் தப்புக்கு மனிப்பு கேட்கிறார்கள்
 
 
- 
	
	
	
	
		படத்தின் கதையை பற்றி விரிவாக பார்த்தோம் , இனி படத்தை பற்றி analysis 
 
 முதலில் சிரஞ்சீவியை பற்றி :
 
 நான் வருத்த  படுகிறேன் இதை போன்ற படத்தை பார்த்து ,
 
 wait நடிகர் திலகத்தின் choice of roles பற்றி அல்ல
 
 ஆனால் 80 s  பிறகு நடிகர் திலகத்தின் படங்களின் தரத்தை பற்றி விமர்சிக்கும்  நபர்களை பார்த்து , அந்த நபர்கள் வைக்கும் குற்றச்சாட்டு 80 ல்  வயதுக்கு  எற்ற வேடத்தில் நடிகர் திலகம்  நடிக்க  வில்லை , ஆடல் பாடல் என்ற கதை அம்சம் இல்லாமல் , படத்தில் நடிக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு
 
 அவர்களுக்கு பதில் பல படங்கள் மூலம்  நம் நடிகர்திலகம் சொல்லி உள்ளார் , மேலும் நம் திரி நண்பர்களும் பல தடவை , பல உதாரணங்களை காட்டி விலகி உள்ளார்கள் ,  குற்றச்சாட்டை வைக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்கலாம் , பார்த்தல் கண்டிப்பாக தங்கள் நினைப்பை மாற்றி கொள்வார்கள் என்று நினைக்கிறன்
 
 ஒரு முழு படத்தையும் ஒரு கப்பலில் எடுத்து முடித்து இருக்கிறார்கள் , பல படங்கள் கப்பலில் எடுக்க பட்டு இருந்தாலும் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் முழு படமும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது என்ற காரணம் தான் அதுவும் உட்புறம் காட்சிகள் கூட அழகாக படம் பிடிக்க பட்டு உள்ளது  உபயம் MC சேகர் அவர்களின் ஒளிபதிவு
 
 படம் ஆரம்பித்ததும் ஒரு குரல் படத்தின் அணைத்து கதாபாத்திரங்கள் பற்றியும் சிறு குறிப்பு தருகிறது , அதன் மூலம் எடுத்த உடன் நாம் கதைக்கு உள்ளே செல்லே வெகு வசதியாக  இருக்கிறது
 
 டேவிட் சிரஞ்சீவி - நடிகர் திலகம் ஏற்று நடித்த மிகவும் கடினமான பாத்திரங்களில் ஒன்று ஆனால் it went un noticed . இந்த பாத்திரம் என்ன கடின பாத்திரம் என்று கேட்கலாம் , முதலில் இது கடலில் எடுக்க பட்ட படம் என்பதினால் ஏற்படும் physical stress , kindly remember படம் வரும் பொது நடிகர் திலகத்தின் வயது 57 இருக்கும் என்று நினைக்கிறன் , கூடவே அரசியல் டென்ஷன் வேறு , இதை அனைத்தையும் தாண்டி தான் நடித்து இருக்கிறார்
 
 சரி இது exaggeration என்று சொல்லும் நண்பர்கள் இந்த படத்தில் வரும் இரு காட்சிகளில் நம் நடிகர் திலகத்தின் புதிய பறவை மற்றும்
 VIETNAAM வீடு படங்களில் வரும் சுழ்நிளைல்கள் போல் வரும் காட்சிகளில் அந்த படத்தின் சாயல்கள் கொஞ்சம் கூட வராமல் பார்த்து கொண்டு இருக்கிறார் என்றால் அதை என்னவென்று சொல்லுவது
 (அந்த இரு சுழ்நிளைல்கள் வைத்து ஒரு compare and contrast செய்து இருக்கிறேன்)
 
 
- 
	
	
	
	
		இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நடிகர் திலகத்தின் பிரிவு உபசாரம் பாடல் அன்பு எனும் ஒளியாக என்ற மிகவும் அற்புதமான பாடல் , கப்பல் கேப்டன் ஜெய் கணேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் பியானோ வாசிக்க சொல்ல , முதலில் வெக்க படும் நம்மவர் பிறகு வசிக்க ஆரம்பிக்கும் பொது என்னையும் அறியாமல் என் நினைவுகள் புதிய பறவை படத்தில் வரும் உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு செல்லுகிறது , அந்த படத்தில்  நாயகன் கோபால் பியானோ வாசிக்கும் விதத்தில் ஒரு ராயல் டச் இருக்கும் , மேலும் பணக்கார தோரணை முகத்திலும் , நடனத்திலும் இருக்கும் 
 
 இந்த படத்தில் சிரஞ்சீவி சாதாரன தொழிலாளி , வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து உழைத்து வரும் நபருக்கு இன்று மிக பெரிய கெளரவம் தர பட , அதை அவர் எப்படி எடுத்து கொள்ளுகிறார் , தன் வாழ்கையை பற்றி எப்படி பாடுகிறார் என்பது தான் இந்த பாடல் , வரிகளும் நடிப்பும் இந்த காட்சியை எங்கோ கொண்டு செல்லுகிறது
 
 retirement பற்றி பேச சிவாஜி சாரை வர சொல்லும் கேப்டன் ஜெய் கணேஷை பார்க்க போகும் பொது , அவர் நாங்கள் uncle சிரஞ்சீவிடம் பேச வேண்டும் என்றதும் கலர் டிரஸ் போட்டு கொண்டு , ஸ்டூல் ல் ஒரு ஓரமாக அமரும் பாங்கும் , தன்னை பற்றி கேப்டன் உயர்வாக சொல்ல சொல்ல , அதற்கு அவர் எதற்கு இது  என்பதை போன்ற முக பாவத்துடன் வெட்க படுவதும் , தன்னை பற்றி பேச பேச உட்கார சங்கோஜம் படுவதும் டாப் , அதுவும் close up காட்சிகளில் அவர் reactions பிரமாதமாக இருக்கிறது
 
 
- 
	
	
	
	
		அவர்கள் தன் retirement  பற்றி சொன்ன உடன் வெளியே சென்று குதிக்க முயற்சிக்கும் பொது , அவர் மனசாட்சி பேசும் வசனம் சாட்டை அடி , மனசாட்சிக்கு மிஞ்சிய எஜமானர் இல்லை என்பதை பறை சாற்றும் காட்சி 
 
 இதை பார்க்கும் பொது VIETNAAM வீடு  படத்தில் வரும் prestige பத்மநாபன் தான் நினைவுக்கு வருகிறார் , because  இரண்டு படத்திலும் ஒரே சூழ்நிலை , நடித்தவர் ஒரே நடிகர் , பத்மநாபன் படித்த சற்று economic status உள்ள நபர் , குடும்பஸ்தன் , தனக்கு  retirement  என்றதும் இவரும் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அதை வெளியே காட்டமல் வந்து , விசன படுகிறார்
 
 சிரஞ்சீவி அதிகம் படிக்காதவர் , வாழ்கையை அந்த கப்பலில் கழித்தவர் , ஆனதை , அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை ,கப்பலை தவிர ,  , he is  emotionally  attached  to  that ship and  those people in  the ship  (unlike prestige பத்மநாபன் , அவருக்கு இன்னும் family settle ஆக வில்லை என்பது பெரிய கவலை ) அதனால் சாக துணிகிறார் , மனசாட்சி வந்து இளரத்தம் பாய வேண்டாமா , வழி விட வேண்டாமா ,  கர்த்தருக்கு தான் உயிர் சொந்தம் என்று சொல்லவே   தன் பணியை கடைசி தடவையாக தொடர அனுமதி கேட்கிறார்
 
 
- 
	
	
	
	
		கடவுள் அவருக்கு தான் சோதனையை வைத்து விடுகிறார் , சௌகார் ஜானகிக்கு பாவ மனிப்பு வழங்கி அதனால் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டி கொண்டு யாரிடம் எல்லாம் நல்ல பெயர் எடுத்தாரோ அவர்களின் கண்களில் எல்லாம் கெட்டவராக காட்சி அளிக்கிறார்  , அந்த காட்சியில் தான் அவர் முகத்தில் எத்தனை கருணை
 
 ஸ்ரீ பிரியா வை காப்பாற்ற சண்டை போடும்  காட்சி  ஸ்டைல் + காமெடி
 
 ஸ்ரீ பிரியா தான் உண்மையான வாரிசு என்று சொல்ல முடியமால் , நிரூபிக்க முயற்சி செய்து தோற்கும் போதும் , கடைசியில் உதவி செய்ய போக வம்பில் மாட்டி உயிரை விடும்போதும் அவர் பேசும் வசனத்தில் நம்மளை நெகிழ வைக்கிறார்   , மேலும் அவர் crucify செய்ய பட்டது போல நிற்க வைக்க படும் காட்சி காணும் பொது கண்களில் கண்ணீர்
 
 மொத்தத்தில் படத்தின் lively performance நம்மவரிடம் இருந்து தான்
 
 ஸ்ரீ பிரியா :
 
 முதலில் பைத்தியமாக  நடித்து , பிறகு தன் காதலரை காப்பாற்ற வந்தவர் தன் தாய் யார் என்று தெரியமால் அலைவதும் , சிவாஜி கூட சேர்ந்து உண்மையை நிலை நாட பாடு படுவதும் என்று   நன்றாக நடித்து இருக்கிறார்
 மாஸ்டர் சுதர்சன் :
 மணி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசினாலும் மனதில் நிற்கிறார்
 
 சரத்பாபு :
 வழக்கம் போலே  dignifed ரோல் : டாக்டர் , பையனை காப்பாற்ற முயற்சுக்கும் காட்சியில் மட்டும் நன்றாக நடித்து இருக்கிறார்
 
 சத்யராஜ் , விஜயகுமார்
 
 வில்லன் பாத்திரங்களுக்கு சரியான தேர்வு
 
 தேங்காய் - மனோரமா :
 
 எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , சிரிப்பு தான் வர வில்லை
 
 படத்தின் குறை என்று பார்த்தால் - தேவை இல்லாமல் வந்த silk ஸ்மிதா பாடல் , நகைச்சுவை இல்லாதது
 
 மொத்தத்தில் - சிவாஜி சாரின் வித்தியாசமான நடிப்புக்காக பார்க்கலாம்
 
 
 அடுத்தது - வசந்தத்தில் ஒரு நாள்
 
 
- 
	
	
	
	
		School Master :  
 
 இப்படி நன்றியை காண்பித்து பெருமை பட வைத்தவரிடம் புறமுதுகு காட்டி ஓடியவரின் ஒரு screen - படம் ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) - இந்த ஸ்க்ரீன் மூலம் நம் தெரிந்துகொள்வது - நன்றியை மறந்து வாழ்பவர்கள் - வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை - அவர்கள் பூமிக்கு பாரமே - கர்ணனையும் , கும்பகர்ணனையும் மிகவும் போற்றக்கூடிய நபர்களாக்கினது அவர்களது செய்நன்றி மறவாத குணம் - இருந்த இடம் நல்ல இடம் இல்லை - ஆனால் பெற்ற குணம் அவர்களை அந்த இதிகாசங்களின் ஹீரோக்களை விட மிக உயர்வில் கொண்டு சென்று விட்டது - வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம் செய்நன்றியை மட்டும் இழக்கவே கூடாது - அப்படி இழந்தால் நம் வினை நம்மை சுட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது -------
 
 http://youtu.be/q8vxKpQy2RM
 
 
- 
	
	
	
	
		சில வாழ்க்கை தத்துவங்களும் அதை நிரூபிக்கும் NT யின்  படங்களும் 
 
 NT ஒரு  தங்க சுரங்கம் - எவ்வளவு விஷயங்கள் அவரிடமும் , அவர் படங்களிலும்  புதைந்து கிடக்கின்றன - கீழ்கண்ட அருமையான "quotes " அவரின் படங்களுடன் எப்படி ஒத்துபோகின்றன என்று பாருங்களேன் !! - இது  சற்றே மாறுதலான பதிவு -------
 
 
 Quote 1 :
 " Life is the most difficult exam . Many people fail because they try to copy others , Not realizing that every one has a different question paper !"
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  "நெஞ்சிருக்கும் வரை "; மோட்டார் சுந்தரம் பிள்ளை ;;  இல்லற ஜோதி
 
 
 Quote 2 :
 
 It is a long journey between human being and being human -
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  'ஆலயமணி ; வசந்தத்தில் ஓர் நாள்
 
 
 Quote 3
 
 F-E-A-R has two meanings
 
 1.  F - Forget ; E -Everything ; A -And ; R -Run
 
 2.  F - Face ; E - Everything  ; A - And ; R - Rise
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  ' வீரபாண்டிய கட்ட பொம்மன் " ; நாம் பிறந்த மண்
 
 Quote 4
 
 "Happiness will never come to those who don't appreciate what they already have "
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  ' எங்க மாமா " ;  சுமதி  சுந்தரி ;  கலாட்டா கல்யாணம்
 
 Quote 5
 
 "Two things define you . Your patience when you have nothing ; and your attitude when you have everything "
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  ' அவன் தான் மனிதன் "  சவாலே சமாளி
 
 Quote 6
 
 "when your nail grows long , we cut nails not fingers ; similarly when misunderstanding grows up cut your ego not  your relationship "
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் -  ' கர்ணன் " ; பழனி ,
 
 Quote 7
 
 "We still love ourselves after doing many mistakes - then how can we hate others for their single mistake? Strange but true !"
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள்  -  ' பாபு  " , குலமா குணமா " , "பச்சை விளக்கு " , படித்தால் மட்டும் போதுமா ?"
 
 quote 8
 
 Respect people who find time for you in their busy schedule but love people who never look at their schedule when you need them
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள்  - -  உனக்காக நான் ; உயர்ந்த மனிதன் , கை கொடுத்த தெய்வம்
 
 Quote 9
 
 “There no market for your emotions – so never advertise your feelings , just show your attitude
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள்  :  - மூன்று தெய்வங்கள் ;  எத்தனை ராமனடி ; படிக்காத மேதை
 
 
 Quote 10
 
 Relationships never dies a natural death. They are murdered by EGO , IGNORANCE , ATTITUDE
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள்  : முதல் மரியாதை ; பார்  மகளே பார்
 
 Quote 11
 
 "When you're Happy you enjoy the Music,
 But When you're Sad, you Understand The Lyrics "
 
 இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : ஆண்டவன் கட்டளை ; விடிவெள்ளி , இரும்புத்திரை
 
 அன்புடன் ரவி
 :smile2::smokesmile:
 
 
- 
	
	
	
	
		அன்புள்ள ராகுல் - அருமையான அலசல் - மிகவும் கவனமாக கையாண்டதிற்கு நன்றி - படம் ஒரு " titanic " ஆக இருந்தாலும் ( நமக்கு தான் மழுப்ப வராதே !!) NT யின் நடிப்பில் அனைவரும் நீந்தி பத்திரமாக கரை  சேர்ந்தனர் . 
 
 நீங்கள் எடுத்துகொள்ளும் அடுத்தபடமும் நல்ல படம் -   போதிய இடைவெளி கொடுத்து அதை பதிவிடுங்கள் - மற்றவர்கள் படித்து ரசிக்க சிறிது அவகாசம்  வேண்டும் - நீங்கள் எடுத்துகொள்ளும் படங்களை பற்றி இன்னும் நன்றாக தெரிந்தவர்கள் இருக்கும் திரி இது - அவர்கள் கருத்துக்களையும் பதிவிட நாம் வாய்ப்பு கொடுக்கவேண்டும் .
 
 மற்றவர்கள் அவர்களுடைய  பதிவுகளை போடவும் , உங்கள் பதிவுகள் மேலும் மேலும் சிறப்பாக வரவும் என்னுடைய சிறிய வேண்டுகோள்  இது !!
 
 அன்புடன் ரவி