ஆயிரத்தில் ஒருத்தி ... மெல்லிசை மாமணி குமாரின் இசையில் இனிமையான பாடல்
http://youtu.be/KU8oD0JgzXE
Printable View
ஆயிரத்தில் ஒருத்தி ... மெல்லிசை மாமணி குமாரின் இசையில் இனிமையான பாடல்
http://youtu.be/KU8oD0JgzXE
பொங்கும் பூம்புனல்
இந்த நிகழ்ச்சி சிலோன் ரேடியோவில் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. பழைய அபூர்வமான இனிய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இது நம் நினைவில் நிழலாடும். இந்தத் தலைப்பிலேயே சிலோன் ரேடியோவில் நாம் கேட்டு மகிழ்ந்த இனிமையான பாடல்களை நினைவு கொள்வோமா?
தொடக்கமாக வீட்டுக்கு வந்த வரலட்சுமி திரைப்படத்திலிருந்து மதனோடே ரதி என்று தொடங்கும் பாடல். ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய இப்பாடல் நாகின் பட மெட்டில் அமைந்துள்ளது.
http://youtu.be/xdLjnRjdZfk
தரவேற்றிய நண்பர் மணிவண்ணனுக்கு நன்றி.
திருத்தம்.
இப்பாடலைப் பாடியவர் பி.சுசீலா, ஜிக்கியல்ல. தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் ராஜேஷுக்கு நன்றி.
பொங்கும் பூம்புனல்
1940களில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல். வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா தேவியும் ரஞ்சனும் நடித்த இப்படம் சூப்பர் ஹிட். மங்கம்மா சபதம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றைக்கும் பல முதியவர்களின் நினைவுகளைத் தட்டி எழுப்பும். பியானோ மட்டுமே பிரதானமான இசைக்கருவியாய் ஒலிக்கும் இப்பாட்டைப் பாடியவர் பானுமதி என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் காலத்திய பிரபல ஆங்கிலப் பாடலை நினைவூட்டும்.
http://youtu.be/smLTyd2cuLo
நன்றி ராஜேஷ். திருத்தம் செய்யப் பட்டு விட்டது.
முரளி சார்,
நன்றி!
நிச்சயமாக அப்படியெல்லாம் இல்லை சார். ஸ்டில்களா இல்லை? 'நாடாள வந்தாரு' பாடலுக்கு அந்தப் பாடலில் நடிகர் திலகம் தோன்றும் காட்சியின் ஸ்டில் பொருத்தமாக இருக்கும் என்பதனால் அதைப் பதிவிட்டேன்.
நீங்கள் தாரளமாக எந்த ஸ்டில்களையும் போடலாம். எங்கள் முரளி சாருக்கு இல்லாத ஸ்டில்களா?
உள்ள[த்]தை அள்ளித்தா
நம்மிடம் இருக்கும் பாடல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு கேட்டு இன்புறுவதும் தனி இன்பம் தான். கங்கா யமுனா காவிரி உமர் கய்யாம் பாடலைத் தொடர்ந்து நண்பர்களுக்காக, இணையத்தில் கிடைக்காத பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். தங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தொடர்ச்சியாக
மதுர கீதம் திரைப்படத்தில் பாடகர் திலகம் குரலில் சந்திரபோஸின் இசையில் எஸ்.டி.பர்மனின் இசையமைப்பை நினைவூட்டும் தாளக் கட்டில் இனிமையான ஒரு பாடல்.
https://www.mediafire.com/?bg5zavjb8y9hit8
கேட்டு விட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்
Madhu
Happy to see you here. Shall try to find the Arunagirinathar song if I am having
உத்தம புத்திரன் திரையில் அனைத்து பாடல்களுமே அருமை.. பல பல கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் இடம்பெற்றன ..
முல்லை மலர் மேலே, உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே,யாரடி நீ மோகினி என அமர்க்கள பாடல்கள் .. அதே போல் இன்னுமொரு நாட்டிய பாடல்
லீலாவின் குரலில் “காத்திருப்பான் கமலக்கண்ணன் “ பாடல்
இதை எழுதியவர் டி.கே.சுந்தரவாத்தியார்.
இதோ என் கட்டுரை அவரைப்பற்றி
டி.கே.சுந்தரவாத்தியார்.
மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்திற்கு பாடல்கள் எழுதியது சுந்தரவாத்தியார் அவர்கள்.
தேயிலை தோட்டத்திலே பாரத சேய்க்ள், ராட்டினமே கதர் பூட்டினமே என்ற பாடல்கள் எல்லாம் மிக பிரபலம்.
கைச்சுவை மன்னன் திரு டி.ஆர் ராமசந்திரன் அவர்களுக்கு புகழ்தேடி தந்த சபாபதி படத்தை மறக்க முடியுமா
காளி.என்.ரத்னத்தின் நகைச்சுவையை மறக்க முடியுமா. இந்த திரையிலும் சுந்தரவாத்தியார் பாடல் இயற்றியுள்ளார்
அதே போல் அபிமன்யு,பிழைக்கும் வழி என பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
பிழைக்கும் வழி படத்தின் கதை, பாடல்கள் இரண்டையும் எழுதியது இவரே.
இப்படி பல பாடல்கள் இவர் எழுதியிருந்தாலும் இன்றும் சுந்தரவாத்தியார் என்றால்
பளிச் என நம் நினைவில் வரும் பாடல் உத்தமபுத்திரன் படத்தில்
கானக்குயில் பி.லீலாவின் குரலில் ஒலித்த “காத்திருப்பான் கமல கண்ணன்” என்ற பாடல்தான்.
காரண்ம் ஜி.ராமனாத ஐயரின் இசை, லீலாவின் குரல், நாட்டியப்பேரொளியின் அபிநயம் என்று எல்லாமும் சேர்ந்து இந்த பாடலை
காலத்தால் அழியாப்பாடலாக்கியது என்றால் அது மிகையில்லை.
சுந்தரவாத்தியாரின் அழகுத்தமிழ் வரிகள் நம்மை கொள்ளை கொள்ளும் பாடல் இது.
தமிழ் திரையுலகில் இப்படியும் ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
https://www.youtube.com/watch?v=Y76YxmaE7u8
இன்றைய ஸ்பெஷல் (30)
பல அரிய பாடல்களை இத்திரியில் அளித்து வரும் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு இப்பாடலை மகிழ்ச்சியுடன் அளிக்கிறேன்.
இன்று ஒரு பழைய பாடல். ஆனால் இளமை மாறாமல் இன்றும் புதிதாகவே இருக்கிறது. பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றால் கோபால் சண்டைக்கு வருவார். இந்தப் பாடலை அவரே அறிந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
http://www.yadsi.in/img/records/big/d79/891ab0.jpg
இந்தியில் 1958 இல் 'ஜிம்போ' என்றொரு படம் வந்தது. ஆசாத், சித்ரா நடித்திருந்த இப்படம் காட்டிலேயே எடுக்கப்பட்ட 'ஜங்கிள்' டைப் படம். ஆசாத் 'ஜிம்போ' என்ற காட்டு மனிதனாகவும், சித்ரா டார்ஜான் சுந்தரியாகவும் நடித்திருந்தனர். கேவா கலரில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஹோமி வாடியா தயாரித்து இயக்கியிருந்தார். சித்திரகுப்தா இசை அமைத்திருந்தார்.
'பசந்த்' பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடலகள் மிக, மிக இனிமையானவை.
இப்படத்தில் 'ஜிம்போ' ஆசாத்த்துடன் இணைந்து சித்ரா அழகான வனப்பகுதிகளில் சுற்றி பாடி வருவது போன்ற ஒரு அருமையான பாடல்.
'ஏ பியாதுனே கைஸே ஜாது' என்ற அந்தப் பாடலை ஆஷா போன்ஸ்லே அற்புதமாகப் பாடியிருந்தார்.
இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் ஆனபோது இப்படத்தின் பாடல்களுக்கு நம் விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார்.
நான் மேற்குறிபிட்டுள்ள பாடலை தமிழில் கூவும் குயில், 'கண்ணியப் பாடகி' நம் சுசீலாம்மா பாடியிருந்தார்கள்.
இந்தியில் ஆஷா போன்ஸ்லே அற்புதமாகப் பாடியிருந்தார். அதுவும் ஒரிஜினல் வெர்ஷன். ஆனால் நம் 'தென்னகத்து இசைக்குயி'லோ ஒரிஜினலைவிட மிக அருமையாகப் பாடி இந்தப் பாடலை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. ஆஷா இந்தியில் தடுமாறும் ஒரு சில இடங்களில் தமிழில் நம் சுசீலாம்மா படு அசால்ட்டாக வைப்ரேஷன்ஸ் தந்து இந்தப் பாடலை என்னுடைய அவருக்கான டாப் 10-இல் இடம் பெறச் செய்து விட்டார். இத்தனைக்கும் சுசீலா அவர்கள் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டு வந்தார். ஆனால் மொழி உச்சரிப்பு! சான்ஸே இல்லை.
அந்த குரல் ஜாலத்தைக் கேளுங்கள். சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். இசையோடு பின்னிப் பிணைந்து அவர் செய்யும் குரல் மேஜிக்கை என்னவென்று புகழ்வது. எப்பேற்பட்ட திறமைசாலி!. ஆனால் லதாவுக்கும், ஆஷாவுக்கும் கிடைத்த உலக அளவிலான அங்கீகாரம் தென்னகத்தில் இருந்ததனால் வழக்கம் போல கிடைக்காமல் போனது.
'என் நெஞ்சு உன்னை அகலாது'
என்பது முதலில் தொடங்கும் வரி. 'அகலாது' என்று அவர் உச்சரிக்கும் போது தமிழ் டப்பிங்கிற்கு ஏற்றவாறு அந்த 'து' என்று முடியும் போது அந்த எழுத்தை 'தூ'...........என்று உச்சரித்து இழுக்கும் அழகு சொர்க்கத்திற்கு இணையானது.
அகலாதூ.............தூ
முடியாதூ...........தூ
http://i1.ytimg.com/vi/k1blYVJeVKI/maxresdefault.jpg
இந்தப் பாடல் காட்சியும் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கும். செம்மண் போர்வை போல கேவா கலரில் இருந்தாலும் அதில் பார்ப்பதே ஒரு தனி இன்பம்தான். அந்தக் காலத்துக்கே சென்று அப்படியே ஒன்றி விடுவது போல் ஒரு பிரமை.
அதே போல இந்திக்கு தகுந்த வார்த்தைகள் தமிழில் அழகாகக் கொடுத்திருப்பார்கள்.
'மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே'
என்ற வரியில் யானையை மத்தகஜம் என்று குறிப்பிட்டு அழகாக வார்த்தைகளை போட்டிருப்பார்கள்.
என் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத பாட்டு.
சுசீலா மிக மிக அழகான குரலில், இளமையான குரலில் பாடிய இப்பாடலைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
என் நெஞ்சு உன்னை அகலாது (தூ......)
அன்பை அசைக்க முடியாது (தூ......)
ஆ ஆ ஆ ஆ
என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது
'அன்பை அசைக்க முடியாது' என்று பாடுகையில் 'அன்பை' உச்சரிக்கும் போது 'அன்' என்று உச்சரித்து இழுத்தவாறே 'பை' என்பதை சிறிது இடைவெளி விட்டு (அன்...பை) தருவார் பாருங்கள். வாவ்!
அருவியில் ஆடி நாமே
ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா
ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விரிந்தே
நல்ல மணத்தைப் பரப்பும்
என் நெஞ்சு உன்னை அகலா (தூ ஊஊ ஊஊஊஊஊ)
அன்பை அசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னை அகலா (தூ ஊஊ ஊஊஊஊஊ)
அன்பை அசைக்க முடியாது
மிக மிக முக்கியமாக கவனியுங்கள். 'அகலாது' என்று பாடி முடித்தவுடன் அதியற்புதமாக 'து'வுடன் சேந்து ஒரு வைப்ரேஷன் கொடுப்பார். இந்தியில் ஆஷா போன்ஸ்லே இதே இடத்தைக் கோட்டை விடுவார்.
மத்தகஜத்தில் ஏறி குல
மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங்கானகம் ஆள்வோமே
மத்தகஜத்தில் ஏறி குல
மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங்கானகம் ஆள்வோமே
ஆரமுதே நீ எனையே
அள்ளி நிதம் பருகு
என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது
http://www.youtube.com/watch?v=vg0EvRqfO9M&feature=player_detailpage