http://i1065.photobucket.com/albums/...psv8f2lhw4.jpg
http://i1065.photobucket.com/albums/...psnilamrox.jpg
Printable View
டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன
நினைப்பார்? - சிவாஜி
''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின்
'கௌரவம்' படத்தில் மெல்லிசை
மன்னரின் இசையில் ' கண்ணா
நீயும் நானுமா? என்ற
பாடலைப் பாட வந்த போது,
படத்தின் கதை,அந்தப் பாடலைப்
பாடப் போகும் கதா
பாத்திரத்தின் குண நலன்கள்
,மற்றும் மனோ பாவம்,
ஆகியவற்றைப் பற்றி நன்கு
கேட்டுத் தெரிந்து கொண்டு
அந்தக் கதா பாத்திரமாகவே
தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால்
கூடு விட்டுக் கூடு
பாய்வது போல அந்தக் கதா
பாத்திரத்தின் உடலில்
புகுந்து கொண்டு உணர்வு
பூர்வமாகப் பாடிக்
கொடுத்தார் டி.எம்.எஸ். அந்தப்
பாடல் காட்சியில்
நடிப்பதற்காக படப் பிடிப்புத்
தளத்துக்கு வந்த நடிகர் திலகம்
சிவாஜி கணேசனிடம்
பாடலைப் போட்டுக்
காட்டினார்கள். 'இன்னும் ஒரு
தடவை போடுங்கள்...இன்னும்
ஒரு தடவை'...என்று...பல
தடவை...திரும்பத் திரும்ப
அந்தப் பாடலை மிக
உன்னிப்பாகக் கேட்டுக்
கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும்
மிகுந்த ஆச்சரியத்தைக்
கொடுத்தது! காரணம்,
பொதுவாக சிவாஜி ஒரு
பாடல் காட்சியில் நடிப்பதற்கு
முன்பு ஒரு தடவை அல்லது
மிஞ்சிப் போனால் இரண்டு
தடவை தான் அந்தப் பாடலின்
ஒலி நாடாவை ஒலிக்க விடச்
சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர்
பத்துத் தடவைக்கு மேலாக
கண்களை மூடிக் கொண்டே
மறுபடியும் மறுபடியும்
கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே
கவனித்துக் கொண்டிருந்த
வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர்
திலகதின் அருகே சென்று
அவரிடம் மிகவும் பணிவான
குரலில் தமது சந்தேகத்தை
வெளிப்படுத்தினார். 'ஒரு
தடவை, அல்லது இரு தடவை
பாடலைக் கேட்டு விட்டு
உடனே நடிக்க வந்து விடும்
நீங்கள் இந்தக் குறிப்பிட்ட
பாடலை மட்டும் பத்து
தடவைக்கு மேல் திரும்பத்
திரும்பக் கேட்பதன் ரகசியம்
என்ன?'... 'சுந்தரம்!...டி.எம்.எஸ்
அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த
உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி
இருக்கின்றார்.
பல்லவியில்...ஒரு விதமான
பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த
சரணத்தில்..இன்னொரு
விதமான..தொனி.மற்ற
சரணத்தில்...இன்னொரு
பரிமாணம்...என குரலால்
அற்புதமாக நடித்துக்
கொடுத்திருக்கிறார்
டி.எம்.எஸ். ஒரே வரியையே
இரண்டு இடத்தில் 'ரிபீட்'
பண்ணும் போது இரண்டு
விதமான தொனிகளில்
பாடுகிறார். உதாரணமாக '
நீயும் நானுமா?' என்ற வரியை
ஒவ்வொரு முறை உச்சரிக்கும்
போதும் ஒவ்வொரு பாவத்தில்
அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்..அற்புதமாக
அவர் பாடிக் கொடுத்த
பாட்டை கவனமாக நான்
நடித்துக் கொடுகா விட்டால்
இதைப் பாடிய டி.எம்.எஸ்
என்னைப் பற்றி என்ன
நினைப்பார்? என்றாராம்
சிவாஜி. நடிகர் திலகத்தின்
செய் தொழில் நேர்த்திக்கும்,
ஆத்மார்த்தமான தொழில்
ஈடுபாட்டுக்கும்
,தன்னடக்கத்திற்கும் ,சக
கலைஞர்களின் திறமைகளைப்
பகிரங்கமாக மதிக்கும் பரந்த
தன்மைக்கும் ஒரு சிலிர்க்க
வைக்கும் எடுத்துக் காட்டு
https://scontent-sin.xx.fbcdn.net/hp...69&oe=55CB02C3
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...9bd63ec3ce4190
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...44&oe=560D9EAF
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i1087.photobucket.com/albums/...art%20-2/k.jpg
வாழ்த்துக்கள் சுந்தரராஜன், தங்கள் புதல்வருக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அவர் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கி கல்விக்கண் தந்த பெருந்தலைவர் ஆசியுடனும் மக்கள் தலைவரின் ஆசியுடனும் வாழ்வாங்கு வாழ்ந்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பேரும் புகழும் ஈட்டுவார் என்ற வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...9b3532be6798df
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...8f&oe=55C47A76
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...9ea71f6a0b629e
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நன்றி:
Tamilexplorer.com
''தில்லானா மோகனாம்பாள்''
படத்தில் உண்மையாக
நாதஸ்வரம் வாசித்தவர்கள்
மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர
வித்வான்களான எம்.பி. என்.
சேதுராமன், பொன்னுசாமி
சகோதரர்கள்.
அவர்களில் இளையவரான
பொன்னுசாமியை
பத்தாண்டுகளுக்கு முன்பு
சந்தித்தபோது எடுத்த
பேட்டியிலிருந்து சில
பகுதிகள்:
''தில்லானா மோகனாம்பாள் '
படத்திற்கு நாங்கள் தான்
நாதஸ்வரம் வாசிக்கப்
போகிறோம் என்று
முடிவானதும் ஒன்றைத்
தீர்மானமாகச் சொன்னார்.
''நாதஸ்வர இசை ரிக்கார்டிங்
நான் இல்லாம நடக்கக் கூடாது''
என்று சொல்லிவிட்டு
கே.வி.மகாதேவன்
குழுவோடு ரிக்கார்டிங்
நடக்கும்போது கூடவே
இருப்பார் சிவாஜி.
நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது
எங்களுடைய முகபாவங்கள்,
அழுத்தம் கொடுக்கிற
விரலசைவு, நாதஸ்வரத்தை
நாங்கள் தாங்கிப் பிடிக்கிற
போக்கு இவற்றையெல்லாம்
நுணுக்கமாகக் கவனித்துக்
கொண்டிருந்தார். படத்தைப்
பிறகு பார்த்தபோது தான்
அவருடைய கவனிப்பின் அர்த்தம்
புரிந்தது.
சென்னையில் இருபது
நாட்களுக்கு மேல் ரிகர்சல்
நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில்
ரிக்கார்டிங். நகுமோ,
தில்லானா, ஆயிரம் கண்
போதாது, நலந்தானா என்று
பலவற்றை எடுத்திருந்தோம்.
ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம்
நாங்கள். இன்னொரு புறம்
சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,ப
ாலையா, சாரங்கபாணி
குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள்
வாசிக்கிற மாதிரி அபிநயிக்க
வேண்டும்.
''எப்படி இருக்கு?'' என்று
எங்களிடம் கேட்டார் சிவாஜி.
'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த
நாங்கள் நகல்ன்னு சொல்ற
அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க''
என்று நாங்கள் சொன்னதும்
சிவாஜிக்கு மகிழ்ச்சி.
பிளாட்டிங் பேப்பர் மாதிரி
எங்களுடைய முகபாவங்களைப்
பார்வையிலேயே
உறிஞ்சிவிடுவார்.
நாதஸ்வரத்தை அழுத்தி
வாசிக்கும்போது கழுத்து
நரம்பு புடைப்பதைக் கூட
அழகாகப் பண்ணியிருப்பார்.
பாலையா அண்ணன் எங்கள்
குழுவில் இருந்த
தவில்காரரிடம் வாசிக்கவே
கற்றுக் கொண்டு தவிலை
எங்களுக்கு வாசித்தே
காண்பித்தார். படத்திலும்
அமர்க்களப்படுத்திவிட்டார்.
அவ்வளவு அற்புதமான
கலைஞர்கள்!''
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ea&oe=55C8C305
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.