-
Quote:
Originally Posted by
MAHALINGAM MOOPANAAR
மக்கள் திலகம் 1960-களில் மற்ற நடிகர்களை விட அதிகமான சொத்துக்களை வாங்கிவிட்டார். இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு விடயமா? சரி அதையும் பார்ப்போம்.
இவரை விட அதிக படங்களில் எண்ணிக்கையில் அதிகமாக நடித்த ஜெமினி கணேசன் போன்றவர்களை விட குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடித்த மக்கள் திலகம் அதிக சொத்துக்கள் வைத்திருந்தார்.
அதற்கு காரணம் என்ன?
மற்ற நடிகர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர் மக்கள் திலகம். அதனால்தான் மற்ற நடிகர்களை விட குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடித்தும் கூட அதிக சம்பளம் வாங்கியதால், நிறைய சொத்துக்களை வாங்க முடிந்தது. அதிலும் அவர் மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் கூட ஊழல் பணம் என்று கூற முடியாது. தனது சொத்துக்களை வாங்கும் போது திமுகவில்தான் இருந்தார். தனிக்கட்சி தொடங்கவில்லை. ஆட்சியிலும் இல்லை. அண்ணா தலைமையில் இருந்த திமுகவே அப்போது ஆட்சிக்கு வரவில்லை. புரட்சித் தலைவர் முதல்வரான பிறகு எந்த சொத்தும் வாங்கியது இல்லை. திரையுலகில் இருக்கும் வரை அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகர் மக்கள் திலகம்தான்.
மீனவ நண்பன் படத்தில் நடிப்பதற்காக மக்கள் திலகம் 45 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். 1977-ல் தங்கம் பவுன் விலை ஏறக்குறைய 300 ரூபாய். இன்னிக்கி மதிப்பில் ஒரு பவுன் சராசரியாக 24,000 ரூபாய். (24 காரட் ஒரு பவுன் மதுரையில் இன்று சந்தை நிலவரப்படி 23,152 ரூபாய். கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து சராசரியாக 24,000 ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது)
40 வருசங்களில் தங்கம் விலை 80 மடங்கு அதிகமாகி இருக்கிறது. அந்தப்படி பார்த்தால் அன்றைய தேதியில் மக்கள் திலகம் வாங்கிய சம்பளம் 45 லட்சம் ரூபாயை 80 மடங்காக பெருக்கினால், 36 கோடி ரூபாய் சம்பளம் வருகிறது. இன்றும் இந்த அளவுக்கு தொகை எந்த நடிகரும் சம்பளம் வாங்குவதாக தெரியவில்லை.
அதிலும் தான் நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை தனக்கு மட்டும் இல்லாமல் ஏழைகளுக்கும் பொது நலனுக்கும் அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.
தான் நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்தவை (இது முழுமையான பட்டியல் இல்லை. உதாரணத்துக்காக ஒருசிறுதுளி மட்டும்) அடுத்த பதிவில்.
-
மக்கள் திலகம் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் ராமாவரம் தோட்டத்தை வாங்கும் முன்பாகவே லாயிட்ஸ் ரோடு வீட்டை வாங்கிவிட்டார். 1952-53 காலத்தில் அந்த வீட்டிலேயே நடிகர் சங்கம் செயல்பட அனுமதித்தார். (பிறகு நடிகர் சங்கம் இடம் வாங்க பெரும்பகுதி பணத்தை கொடுத்தார்) லாயிட்ஸ் ரோடு வீடுதான் இப்ப அதிமுக கட்சி ஆபிசாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இதில் உரிமை இல்லை. (இன்று யார் யாரோ உரிமை கொண்டாடுகிறான். வயிறு எரிகிறது)
சென்னையில் உள்ள சில வணிக இடங்களை (டி.நகர் சத்யா பஜார் மாதிரி) கடை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை கட்சிக்கு வரவு வைக்க ஏற்பாடு செய்தார்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்கள் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் செலவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வைத்தார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டில் ஒரு பகுதியை ஊமை குருடர் செவிடர் பள்ளி ஆக்கினார். இப்பவும் அங்கே பள்ளி நடக்கிறது. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சாப்பாடும் போட்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி படிப்பு சொல்லித் தருகிறார்கள்.
தியேட்டர் கட்டலாம் என்று எல்லாரும் யோசனை சொன்னபோது எத்தனை பேருக்கு அதில் வேலை கிடைக்கும் என்று கேட்டுவிட்டு, ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி சத்யா ஸ்டூடியோ ஆக்கினார். தொழிலாளிகளை பங்குதாரராக சேர்த்தார்.
நினைவு இடத்துக்காக யாரையும் தன் ரசிகர்கள் தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது என்று நமக்கெல்லாம் தனது சென்னை மாம்பலம் அலுவலகத்தையே எழுதிவைத்தார். அங்குதான் நமது கோயிலான புரட்சித் தலைவரின் நினைவு இல்லம் உள்ளது.
சென்னை வடபழனியில் வாங்கிய இடத்தை ஏழை குழந்தைகள் பள்ளிக் கூடம் அமைத்தார். இன்னிக்கும் அந்தப் பள்ளியில் ஏழை சாதாரண குழந்தைகள் படிக்கிறார்கள். ஜானகி அம்மாளின் உறவினர் நிர்வகித்து வருகிறார்.
தனக்குப் பிறகு தனது சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று புரட்சித் தலைவர் தெளிவாக உயிலே எழுதிவிட்டுச் சென்றார். மேலே சொன்ன விவரங்கள் உயிலில் குறிப்பிடப்பட்டவை. அந்த உயிலின் வாசகங்கள் புரட்சித் தலைவரின் வக்கீல் என்.சி. ராகவாச்சாரி மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்ததில் இந்தப் பட்டியல் சிறுதுளிதான்.
தனது உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களை எத்தனை நடிகர்கள் இப்படி மக்களுக்கு எழுதி வைப்பார்கள்? அதனால்தான் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் என்று அழைக்கப்படுகிறார்.
http://i66.tinypic.com/2lm8mwy.jpg
இதையெல்லாம் பாராட்டக் கூட வேண்டாம். உண்மை தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள மனம் இல்லாதவர்கள் புரட்சித் தலைவரை குறை கூறாமலாவது இருக்கலாமே?
யாராவது ஒரு அரைவேக்காடு முகநூலில் வாந்தி எடுத்ததை எல்லாம் நம்புகிறார்கள்.
என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.
-
-
http://i66.tinypic.com/4rrot5.jpg
சுந்தர பாண்டியன் சார்,
புரட்சித் தலைவர் பற்றி தவறாக எழுதுபவர்கள் பேசுபவர்கள் அவரது செல்வாக்கையும் புகழையும் பார்த்து பொறாமை கொண்டவர்கள்.
விடுங்கள்... அந்தக் காலத்திலேயும் அப்படித்தான் எழுதினார்கள்.
நாத்திகம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார். ராமசாமி என்ற அந்த நபர் ‘நாத்திகம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்ததால் நாத்திகம் ராமசாமி என்று அறியப்பட்டார். புரட்சித் தலைவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுவார். 1974-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் வீட்டில் கருப்பு பண சோதனை நடந்ததாக தன்னுடைய நாத்திகம் பத்திரிகையில் எழுதினார்.
நாத்திகம் ராமசாமி மீது புரட்சித் தலைவர் மான நஷ்ட வழக்கு போட்டார். அதில் நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கோர்ட் கூறிவிட்டது.
அதன்படி நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார். 50 ஆயிரம் அந்தக் காலத்தில் பெரிய தொகை. அதைக் கட்ட தனக்கு வசதி இல்லை என்று கோர்ட்டில் நாத்திகம் ராமசாமி கெஞ்சினார்.
உடனே, புரட்சித் தலைவர் கருணை காட்டினார். இந்த மாதிரி விஷயங்களில் நம்மாளு மேலே எனக்கு கொஞ்சம் கோவம் வரும். யாருக்கு கருணை காட்டறது, மன்னிக்கிறது என்பதற்கெல்லாம் ஒரு தகுதி இருக்கிறது. நம்மாளு எல்லாரையும் மன்னித்து விடுவார். அவரது பெரிய மனசு நமக்கு இல்லை. இதுக்கெல்லாம் அந்தப் பொம்பளைதான் (புரிகிறதா?) சரி. சும்மா டப்பா டான்ஸ் ஆட வைக்கும்.
புரட்சித் தலைவர் தனது கருணயால் நாத்திகம் ராமசாமி அடையாள அபராதமாக ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார். அதன்படி ஒரு ரூபாயை புரட்சித் தலைவருக்கு அபராதமாக கட்டினார் நாத்திகம் ராமசாமி.
என் தந்தை உட்பட எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள், முன்னோர்கள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த ஐயா ஜி.கே.மூப்பனார் மீது எங்கள் குடும்பத்துக்கு மரியாதை உண்டு. நான்தான் புரட்சித் தலைவர் படங்களை பார்த்து ரசிகனாகி அவர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்தேன். சொல்ல வெட்கமாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நாத்திகம் ராமசாமியும் ஒரு காங்கிரஸ்காரர்.
புரட்சித் தலைவருக்கு எதிராக பொறாமையால் எழுதுபவர்கள், பேசுபவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. இவர்களுக்கும் உண்மைக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இவர்களில் பலருக்கு ஏற்கனவே மோட்ச சம்பந்தம் (சந்தேகம்தான்?) நரக சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் சிலர் அதை நெருக்கத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
http://i63.tinypic.com/1oakd4.jpg
-
மகாலிங்கம் மூப்பனார் ஐயா அவர்களுக்கு,
அரிய தகவல். ஆவணத்தை பதிவிட்ட உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
-
புரட்சித் தலைவர் மேலே உள்ள காழ்ப்புணர்ச்சியால் முகநூலில் வாந்தி எடுப்பவர்களைப் பற்றி சொன்னால் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது என்று தெரியவில்லை. நாம் சொன்னதை நமக்கே சொல்கிறார்கள். பாவம்.
புரட்சித் தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லாத நல்ல புத்தியை அவர்களுக்கு (ஐயய்யோ… தெளிவாக சொல்லிவிடுகிறேன்) அதாவது முகநூல் வா(வியா)திகளுக்கு இறைவன்தான் கொடுக்க வேண்டும்.
எப்பதான் திருந்துவார்களோ? நம்பிக்கை இழக்கக் கூடாது. பார்ப்போம்.
-
http://i68.tinypic.com/qrmasp.jpg
பல்லாண்டு வாழ்க...
அங்குலம் அங்குலமாக நமக்கு மனப்பாடம் ஆன காவியம்...
இதில் நம் மக்கள் திலகம்...
"சிறைக் கைதிகளை... அன்புக் கைதிகளாக..." மாற்றும் முயற்சியில் இருக்கும் போது...
சமைப்பது போன்ற ஒரு காட்சி வரும்...
மரியாதைக்குரிய அய்யா. நம்பியார் அவர்களுடன் ஒரு முறை பேசும் போது அந்த படம்... பற்றி பேச...
அவர் குறிப்பிட்டார்... அந்த காட்சியை பின்வருமாறு...
"தம்பி... அவரு மாதிரி ஒரு மனுஷனை பாக்கவே முடியாது...
பல்லாண்டு வாழ்க னு ஒரு படம்... அதுல
நானு... மனோகரு... வீரப்பா அண்ணன் - தேங்காய் - வி.கே.ஆரு. - எல்லாரும் கைதிகளா வருவோம்... பாத்திருப்பே... அதுல எங்க கொடச்சல் தாங்காம சமையக் காரன் ஓடிடுவான்... எம்.ஜி.ஆர் சமைக்கணும் இது தான் சீனு... டைரக்டர் சங்கர் சார் அந்த மனுஷன் கிட்டே நோகாம ஒரு ஷாட் சொன்னாரு... அதுக்கு அந்த மனுஷன் என்ன பண்ணுனாரு தெரியுமா...?
"நான் சொல்ற மாதிரி நீங்க செய்யுங்க... இன்னும் ரியலா வரும்...!" - னு சொல்லீட்டு... சமயக்கட்டு செட்ல சோறு வடிக்கிறது... அம்மில அரைக்கிறது... அப்போ வேர்வையை தொடைக்கிறது..னு மனுஷன் கொன்னுபுட்டாரு...
"ஏன் ராமச்சந்திரா... இத்தனை சிரத்தை...?" - னு கேட்டேன்...
"எத்தனையோ போலீஸ் காரங்க உண்மையாவே இது போல இருக்காங்க உங்களுக்கு தெரியாததா...? அதுக்கும் மேல பாக்குற மக்கள் நிஜமாவே நம்பி பாக்கணும்... கதை சொல்லும் போது...எம்.ஜி.ஆர் வந்தாரு... சோறு பொங்குனதா சொன்னாருன்னு ஒருத்தரும் சொல்லக்கூடாது... சோறு பொங்குவாரு பாரு... அப்படின்னு சொல்லணும்.. அப்போதான் பீல் ஆகும்..."
- என கண் சிமிட்டி அவர் ஸ்டைலில் ஒரு துள்ளல் துள்ளினார் அதுல பாருங்க... படம் வந்தவுடன் தியேட்டர்ல பாத்தா அவர் வேர்வையை தொடைக்கும் போது இங்கே அவ்ளோ பெரும் "உச்..." கொட்டுறாங்கப்பா...
அதான் எம்.ஜி.ஆர். அதே மாதிரி அந்த சீன்ல இன்னொரு விஷயம் பத்தி நாங்க ரொம்பவே நெகிழ்ச்சியோட பேசிக்கிட்டோம்... அத அடுத்த தரம் மீட் பண்ணும் போது சொல்றேன்... ஞாபகமா கேளு " - என சொல்லி ஒரு ட்விஸ்ட் வச்சுட்டு ட்ரைன்ல ஏறிட்டாரு நம்பியார் அய்யா...
மறுமுறை பார்த்து கேட்டே விட்டேன்...
ஆனால்... அது இன்னொரு நாளில் தான் உங்களுக்கு...
நான் காத்திருந்தேன்ல... நீங்களும் காத்திருப்பது தானே நியாயம்...?
மேலும்... என்னைப்போலவே நீங்களும்... "என்னவாக இருக்கும்னு...?" ஒரே பரபரப்பாக யோசியுங்கள்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
குறிப்பு :இது ஏப்ரல் 27ம் தேதி பதிவிடப்பட்ட பதிவு.
-
குறிப்பு : இது மே 14ம் தேதி பதிவு.
நேற்று இரவு 01.10. மணி ...
போன் அடித்தது ...
பதறி அடித்து எழுந்தேன் ...
" ரயிலில் ஏறிய நம்பியார் தலைவர் பத்தி என்ன சொன்னாருன்னு சொல்லவே இல்லையே மயில்...? "
உண்மையில் நெகிழ்ந்தே போனேன் ...
" காலை பகிர்கிறேன் அய்யா... " என்றேன்...
குட் நைட் சொல்லி போன் கட் செய்தார்...
12.45 மணி வரை நம் "பொன்மனம்" தொடர்பான படத்தொகுப்பில் இருந்து விட்டு படுத்து... எழுந்த எனக்கேது இனி குட் நைட்...
விடிய விடிய... ராமாயணம் தான்...
ஆம்... நம்ம "ஸ்ரீ எம்.ஜி.ராமா" யணம்தான்...
சில வருடங்கள் பின்னோக்கி போனது ஞாபக அடுக்கு...
மதுரையிலிருந்து ரயில் போய்...
மறுமுறை நம்பியார் அய்யா... வருவதோ... வேலூருக்கு...
ஆம்...அங்கே ஒரு விழாவுக்கு வந்தவரை நான் போய் பார்க்கிறேன்...
வணக்கம் அய்யா... நல்லா இருக்கீங்களா...?
வாயா...என்ன... இங்கே...?
"சும்மா... தான்... தலைவர் அம்மி அரைச்ச கதையை பாதிலேயே விட்டுட்டு போய்ட்டீங்கள்ள... அதை கேட்டு தெரிஞ்சுட்டு போலாம்னு..."
"அடே...செல்ல கிறுக்கா... இதை கேக்க மதுரைல இருந்து வேலூர் வந்தானா... இந்த மதுரை வீரன்...?"
"அய்யா...அது தலைவர் படம்... அதை யாருக்குமே சொல்ல கூடாது...!"
- என சிரித்த என்னை தோளோடு அணைத்துக் கொண்டு...
முருங்கைக்கீரை சூப் கொடுத்து ருசித்த படியே என்னை பார்த்த அய்யாவிடம்... "ம்ம்ம்... சொல்லுங்க...!" என்றேன்...
"சொல்கிறேன்..." என்பதாய் தலையை மட்டும் அசைத்த அய்யா...
தொடர்ந்தார்...
"எதோட விட்டேன்..."
"தலைவர் அம்மி அரைச்சது...அதுக்கு ரசிகர் ரெஸ்பான்ஸ் என எல்லாம் பேசிட்டோம்... இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம்னு சொல்லீட்டு ட்ரெயின் ஏறுனீங்க..." - என்றேன்...
ம்ம்ம்..ம். அவர் அம்மி அரைக்கும் போது..பாரு அவ்ளோ நேர்த்தியா இருக்கும்... அப்படியே வீட்ல பொம்பளங்க அம்மில அரைக்கும் போது எப்படி அந்த மசாலாவ...சட்னிய...வழிப்பாங்களோ... அப்படியே செய்வார்... அதை பார்த்துட்டு...
"என்ன ராமச்சந்திரா... வீட்ல சமையல் வேலையும் நீ தானா...? அப்படியே செய்யுராப்ல இருக்கே... - என்ற என்னை கலங்க வைத்து விட்டார்...
அவரோட தோள்ல இருந்த ஒரு சின்ன டவலாலா முகத்தை தொடச்சுட்டு...
"சின்ன வயசுல நான் அம்மா செல்லம்... அவங்கள விட்டு பிரியவே மாட்டேன்... அவங்க அம்மில அரைக்கும் போது... அவங்க கழுத்த கட்டிக்கிட்டு பின்னாடி இருந்து அவங்க அரைக்கும் போது நானும் ஆடுவேன்... சமயத்துல அதையே தூளினு நினைச்சு தூங்கவும் செஞ்சுடுவேனாம்... அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... அந்த நினைப்பு வந்துட்டுது... அம்மா... இப்போ இருந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்னு..." - சொல்லீட்டு ஒரு கூலிங் கிளாஸ் எடுத்து போட்டுட்டு டவலை எடுத்து கிளாஸ் கேப்ல விட்டு தன் கண்ணீரை துடைத்தார்... எனக்கு தெரிஞ்சு அம்மா மேலயும்... அறிஞர் அண்ணா மேலயும் அவர் வச்சு இருந்த பாசம் - மரியாதை...." - என மௌனமானார் நெகிழ்ச்சியில் ...நானும் தான்...
அன்னையர் தினத்தில் இந்த பதிவினை பதிவிட வாய்ப்பளித்த அந்த அலைபேசி அன்பு அய்யாவுக்கு என் நன்றிகள்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
http://i66.tinypic.com/11hebzl.jpg
-
சர்ச்சைகளுக்கு விளக்கம் தந்தே உனக்கு வயதாகி விடப்போகிறது...?
- என்பான் என் நெருங்கிய நண்பன்...
என்ன செய்வது நமக்கு தெரிந்த நிஜங்களை பகிராமல் போனால் அந்த பாவத்தை எங்கே போய் தொலைப்பது...?!
நிஜம் என்கிற போர்வையில் - அரைகுறையாக தகவல்களை திரட்டி - சில நகாசு வேலைகள் செய்து... ஆங்காங்கே தன் கற்பனை சேர்த்து காலம் தள்ளும் துர்பாக்கியநிலையிலா...? நாம் உள்ளோம்...
சரி... விஷயம் இதுதான்...
அருமை நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களுக்கும் நம் மக்கள் திலகத்துக்கும் ஏதோ பயங்கர பிரச்சினை போலவும்... அசோகனை திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் வீழ்த்தியதே... நம் மக்கள் திலகம் தான் என்பதாய் ஒரு பரவலான கருத்து நிலவ...
உரியவரிடம் உரிய தகவல் திரட்டியே பழக்கப்பட்ட நமக்கு அதற்கான வாய்ப்பு 2008 - ஆம் ஆண்டு கிடைத்தது...
வேலூர் வி.ஐ.டி.பல்கலையின் நிறுவனர் திரு.விஸ்வநாதன் அவர்களின் துணைவியார் மறைவின் போது...
வி.ஐ.டி. பல்கலையின் ஓரங்கத்தில் நானும் பணியிலிருந்த நிலையில் அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லம் சென்றிருக்க...
முன்னாள் மாணவர் என்று சிலர் சொல்ல - இல்லை குடும்ப நண்பர் என சிலர் சொல்ல - ஏதோ ஒரு அடையாளத்துடன்...
நடிகர் அசோகன் அவர்களின் புதல்வர் திரு.வின்சென்ட் அசோகன் அவர்கள் அங்கே வருகிறார்...
http://i64.tinypic.com/4ui0sg.jpg
அஞ்சலி முடிந்து வெளியே வந்து சற்று ரிலாக்சாக நின்ற அந்த சில நிமிடங்களில்...
என் நிருபர் பணி - மக்கள் திலகம் மீதான சர்ச்சையின் விளக்கம் தேடி... அன்பு சகோதரரை அன்புத்தொல்லை தந்தேன்...
இருக்கும் இடம் மீறி சற்று மெல்லிய புன்னகையோடு...
சகோதரர் எனக்களித்த பதில் மிக சில வார்த்தைகளே...
அதன் பின் அவர் சில மேடைகளிலும் இதனை விளக்கமாக பதிந்ததாக தகவல் உண்டு...
நான் கேட்டறிந்த வார்த்தைகள்... உங்களுக்கு...
" இல்ல...நண்பா... அப்பாவுக்கும் - எம்.ஜி.ஆர் அங்கிள் அவருக்குமான அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப கிளீயர் கட் ஆனது... அதுல நிறைய பாலிடிக்ஸ் விளையாடிடுச்சு... இங்கே அத பத்தி பேசறது... ஐ திங்க் சரியா வராது... பட் எம்.ஜி.ஆர் அங்கிள் எனக்கும் எங்க குடும்பத்துக்கும் நிறைய சப்போர்ட்டிவா இருந்து இருக்கார்... இன்பாக்ட் அப்பாக்கு நேற்று இன்று நாளை படத்தப்போ பண உதவியெல்லாம் செஞ்சு இருக்கார்... படம் டிலே ஆனது மட்டுந்தான் உண்மை... அது அரசியல் சூழல்... பட் அதையே சிலர் பாலிடிக்ஸ் ஆக்கிட்டாங்க...
நாம பிரீயா இன்னொரு நாள் பேசுவோம்... சாரி... நண்பா..."
- இது தான் அவர் என்னிடம் சொன்னது...
கல்லெறியும் கூட்டமே...
அந்த கூட்டத்துக்கு தீனி போடும் கூட்டமே...
"இனியாவது எறிவது யார் மேல்...?" - என ஆராய்ந்து எறியுங்கள்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
http://i63.tinypic.com/rw29g0.jpg
-