-
சாரதா மேடம்,
நீங்கள் குறிப்பிட்டு சுட்டிக் காட்டியிருந்த 'படித்தால் மட்டும் போதுமா' படத்தில் நடிகர் திலகம் மேண்டலின் இசைக்கும் காட்சி. (தங்கள் சுட்டிக் காட்டலுக்கும், ஞாபக சக்திக்கும் ஒரு சபாஷ்!)
http://i1087.photobucket.com/albums/..._003543506.jpg
நன்றியுடன்
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி !
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்த பாராட்டு மழைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
விகடன் விஷமங்களை வீறுகொண்டு விளம்பிய முரளி சாரின் பதிவுகளைப் பாராட்டியதோடு மேலதிக விவரங்களாக தாங்கள் வழங்கியுள்ள பதிவு மணியனின் மகோன்னதங்களைத் தோலுரித்துவிட்டது. நான் முன்பே ஒருமுறை தங்களுக்கு வழங்கிய பாராட்டு எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது என்பதை நினைத்து மெய்சிலிர்க்கிறேன். அதாவது அடித்து ஆடுவதில், முரளி சார் 'கவாஸ்கர்' [Soft Touch] என்றால், தாங்கள் 'ஸ்ரீகாந்த்' [Hard Hitting]. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர்', ஈடு-இணை சொல்லமுடியா அற்புத-அபார-அட்டகாசத் தொகுப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் ஆகியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகீரதப் பதிவுகள் ! தங்களது உழைப்பு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது, மலைக்க வைக்கிறது.
இதுபோன்ற ஈடு-இணையற்ற எண்ணற்ற பதிவுகளை இங்கே நீங்கள் இடவேண்டும். எங்களுக்கு இன்பங்களை அள்ளித்தர வேண்டும். அதற்கு தங்களுக்கு இதயதெய்வத்தின் அருளும், இறையருளும் என்றென்றும் துணை நிற்கும் !
பாசத்துடன்,
பம்மலார்.
-
Jr சார்,
இங்கே நான் கண்ட காட்சியான அநேகமான சிறந்த தொண்டர்களை, என் சிந்தனையில், 'நமது தெய்வம்' நடித்த திருவருட்செல்வரில் வரும் "திருத்தொண்டர் நாயனார்" போல், இங்கு காணும் எல்லா பக்தர்களுக்கும் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
நன்றிகள்.
அன்புடன்,
ஆனந்த்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்(தொடர்ச்சி)
செப்டம்பர் 20 கல்யாணியின் கணவன்
வெளியான நாள் 20.09.1963
தயாரிப்பு - பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் (பக்ஷிராஜா ஸ்டூடியோஸின் கடைசித் தயாரிப்பு)
இயக்கம் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
கதை- வேலவன்
இசை - எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு
ஒளிப்பதிவு - ஷைலன் போஸ்
படத்தொகுப்பு - வேலுச்சாமி
நடனம் - ஹீராலால்
கல்கி 22.09.1963 இதழில் வெளிவந்த விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...vanAdkalki.jpg
ஸ்டைல் சக்கரவர்த்தியின் மற்றொரு கலக்கல்
எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு இசையில் சௌந்தர்ராஜன் சுசீலா குரலில் மெய் மறக்க வைக்கும் பாடல்
http://www.dailymotion.com/video/xel...sabaiyile_auto
அன்புடன்
-
டியர் வாசுதேவன் சார்
நடிப்புச் சக்கரவத்தியை இசைச் சக்கரவர்த்தியாக உருமாற்றிய உங்களுக்கு பல்லாயிரம் கோடி பாராட்டுக்கள்! நன்றிகள்!! வாழ்த்துக்கள்!!!
ஸ்டில்ஸ் சூப்பர்
அன்புடன்
-
-
-
டியர் பம்மலார்,
சகோதரி சாரதா மற்றும் வாசுதேவன் அவர்களது பதிவுகளை நீங்கள் பாராட்டிய விதம் சூப்பர்...
பாராட்டிலும் நீங்கள் ஜீபூம்பா ஜித்தர்....
கீப் இட் அப்
அன்புடன்