http://www.youtube.com/watch?v=mY3uab4C3bo
Printable View
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.
மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.
அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, 'எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.
'ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, 'தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற 'நாளாம் நாளாம் திருநாளாம்' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.
அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். 'தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.
பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.
இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.
இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.
தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, 'தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?' என்று கேட்டார்.
ஆமாம்' என்று பதிலளித்தார், பாலு.
'மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?' என்று எம்.எஸ்.வி. கேட்க, 'தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.
'இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. 'ஓட்டல் ரம்பா' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.
முதன் முதலாக அவர் பாடிய 'ஓட்டல் ரம்பா' படம் வெளிவரவே இல்லை!
சில நாள் கழித்து 'சாந்தி நிலையம்' படத்தில், 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.
தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.
அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய 'அடிமைப்பெண்' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.
அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.
பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். 'தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.
சாந்தி நிலையத்துக்காக, 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) 'அடிமைப்பெண்' வெளிவந்துவிட்டது!
எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.- Courtesy Malaimalar
2014 - தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i62.tinypic.com/ncfa6b.jpg
எல்லா கட்சி தலைவர்களும் இந்த நாடாளுமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகத்தின் பெயரையும் பாடலையும் சொல்லி ஒட்டு கேட்டு வருவதின் மூலம் அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் அழியாப்புகழும்
செல்வாக்கும் நிலைத்திருப்பது உணர முடிகிறது .அரசியல் உலகில் மக்கள் திலகத்தின் புகழ் ஒரு ஓட்டு வங்கியாக
இருப்பது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தாகும் .
பிரச்சார மேடை மற்றும் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஜெயாவின் கட் அவுட் .துரும்புக்கு கூட எம்ஜிஆர் படமோ , கட் அவுட்டோ வைக்க வில்லை .இதை ஜெயாவும் கண்டு கொள்ள வில்லை .மாவட்ட செயலாளர்களும் மந்திரிகளும்
எம்ஜிஆரை முற்றிலுமாக மறைத்து விட்டு தலை இல்லாத உடலாக வலம் வருகிறார்கள் .
மக்கள் திலகத்தின் பாடலை மட்டும் [அச்சம் என்பது ......] ஜெயா பாடி மக்களை பார்த்தது ஒட்டு கேட்பது சிரிப்பாக உள்ளது .
மற்ற கட்சிகாரர்கள் தங்கள் பிரச்சாரத்தில் எம்ஜிஆரின் பெயர சொல்லி , படத்தை காட்டி , அவருடைய அரசியல்
பெருமைகள் பற்றி நாகரீகமாக தைரியமாக பேசி ஓட்டு கேட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது .
1957ல் தேர்தலில் பங்களித்த மக்கள் திலகத்தின் அரசியல் பணி 57 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் எம்ஜிஆரின்
பெயர் இடம் பெற்றிருப்பது வரலாற்று சாதனையே .
அதே போல அவருடைய திரைப்படங்களும் 64 ஆண்டுகளாக திரை உலகில் ஓடிகொண்டிருப்பது இமாலய சாதனை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் - சினிமாவில் .
மக்கள் திலகம் வாழும் மனித தெய்வம் - கோடிக்கணக்கான உள்ளங்களில் .