அதே அதே சபாபதே
10 நிமிடத்தில் மீண்டும் வருகிறேன்.
Printable View
அது என்ன லெக்*ஷ்மி?:)
'மன்னிப்பு' செம படம் ஜி! ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் கொன்னுடுவார். கொலை செய்து விட்டதாக நடுநடுங்கி... வியர்த்து விருவிருத்து... சஸ்பென்ஸ் ஜோர். நாகேஷ் ஷேவிங் செய்பவராக தத்ரூபமாக நடித்திருப்பார். அவர் பயந்து நடுங்கிப் புலம்பும் காட்சிகளில் சிரித்து நம் வயிறு புண்ணாகி விடும்.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 24)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
https://dozeu380nojz8.cloudfront.net...poggumrail.jpg
அடுத்து ராஜாவின் தொடரில் 'கிழக்கே போகும் ரயிலை' விட்டு விட்டேன். அத்தனை பேரும் அந்த ரயிலில் சுகமாகப் பயணித்ததால், அந்த ரயிலைப் பற்றி எல்லோருக்கும் அக்கு வேறாக ஆணி வேறாக தெரிந்திருக்கும் என்பதால் இந்த 'ஸ்கிப்' முடிவு.
http://cdn.raaga.com/r_img/250/t/t0001694-no-cd.jpg
http://i.ytimg.com/vi/q4oeYOBffNM/hqdefault.jpg
அடுத்ததாக ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ் அளிக்கும் 'மாரியம்மன் திருவிழா'. இதுவும் 1978ல் வெளி வந்து காணமல் போன படம்தான்.
வழக்கம் போல் அன்றைய ஜோடி சிவக்குமார், சுஜாதா, டெல்லி கணேஷ், எஸ்.வி.சுப்பையா, தங்கவேலு, ராஜசுலோச்சனா, பேபி நித்யா (பின்னாளைய குமாரி நித்யா) நடித்த வெங்கடேஷ் இயக்கிய இந்த கருப்பு வெள்ளைப் படத்திற்கு ராஜா இசை என்று பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
'துணையிருப்பாள் மீனாட்சி' என்று ராஜா இசையமைத்த படத்தைப் பற்றி முன்னம் தொடரில் எழுதியிருந்தேன். எனவே அந்தப் படமும், இந்தப் படமும் பெரும் குழப்பம். இதிலும் அதே ஜோடி. இதுவும் கருப்பு வெள்ளை.
சரி! இந்தப் படத்தைப் பற்றி கதையோ அல்லது மற்ற விஷயங்கள் பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால் ஒன்றுமே தெரியாது. நான் இந்தப் படம் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் பாடல்கள் தெரியும். தப்பித்தேன்.
இந்தப் படத்திலும் ஒன்றிரண்டு குறிப்பிடத் தகுந்த பாடல்கள் உண்டு. ராஜாவாச்சே! விட்டுடுவாரா?
"அறுக்காதே! பாடலை சொல்" என்கிறீர்கள். சரி! சொல்கிறேன்.
1. "ஆத்தாடி ஆத்தா! இந்த அழகான தங்கக் கட்டி... பார்த்தாக்கா கட்டுப் பெட்டி... பாய்ஞ்சாக்கா சிங்ககக் குட்டி... ஏண்டிக் கண்ணு...என்னடி அச்சச்சோ"
என்ன விழிக்கிறீகள்? பாடலே இப்படித்தான் ஆரம்பிக்கும்.
ஆரம்பிப்பவர் இசையரசி. (ராஜேஷ்ஜிக்கு 'குளுகுளு' ன்னு இருக்குமே) உடன் வந்து 'மாப்பிள்ளை பார்த்துக்குங்க' என்றபடி ஜாய்ன் செய்வார் ராஜாவின் ஆஸ்தான பாடல் நாயகி ஜானகி. ஆமாம். சுசீலாவும், ஜானகியும் இணைந்து இப்பாடலைத் தந்திருப்பார்கள். இரு பிரபல பாடகியர் பாடியும் இப்பாடல் ஹிட் அடிக்க வில்லை 'கூண்டுக்கிளி' படம் போலவே. வீடியோவும் நஹீ. 'ஜானகி' என்று ஜானகியே பாடி நிறுத்தி பின் 'ஜானகி ராமன் போல் வந்த பாசம்' என்று தொடர்வது ஜானகி அந்த நேரத்தில் பெரிய ஆளாகிக் கொண்டு வருகிறார் என்பதை சொல்லாமல் நமக்கு சொல்லும்.
2. பொழுது எப்ப புலரும்?
பூவும் கூட எப்ப மலரும்?
மலரை எப்ப பறிப்பே கன்னையா?
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா?
ஜானகி கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு ஆரம்பிப்பார் இப்பாடலை. 'பூ முல்லைக் கொடியே... புதுப் புனல் நதியே' என்று மலேஷியா வாசுதேவன் தொடர்வார். அஸ் யூஷுவல் ஜானகி, மலேஷியா டப்பாங்குத்துப் பாடல். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
பாடல்களின் ஆடியோவிற்கு
http://play.raaga.com/tamil/album/ma...vizha-t0001694
3. இரண்டு சுமார் பாடல்கள் சோதித்த நிலையில் இது பாடகர் திலகம் காமெடிக்காக தேங்காய் சீனிவாசனுக்காகப் பாடிய பாடல். கர்நாடக சங்கீத பாணிப் பாடல். ஓரளவிற்குப் பிரபலம்.
'சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே'
சற்று வித்தியாசமான முயற்சி என்று கூட சொல்லாம். பாடகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் உருகிப் போவார்கள். ராஜ உடையில் தேங்காயும், மனோரமாவும் அடிக்கும் கூத்து. நிறைய செட்டிங்க்ஸ் வேற. மனோரமா பரதம் வேறு ஆடுகிறார்.:)
https://www.youtube.com/watch?featur...&v=eru0xTbsUNM
4.ஆஹா! மாட்டுச்சு சூப்பர் ஹிட் பாடல். ஜெயித்தவர் நம்ம ராஜேஷ்ஜி. ஆமாம் இசையரசி பாடிய அற்புத பாடல். அந்தக் குரலின் காந்த சக்தியை அப்படியே உணரலாம்.
சுஜாதா குழந்தையைத் தூங்க வைக்கும் அருமையான தாலாட்டுப் பாடல். 'வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா' என்று 'துணையிருப்பாள் மீனாட்சி' திரைப்படத்தில் வருமே... அது போலவே இந்தப் பாடலும் இருக்கும். இரண்டிலும் சுஜாதா. இரண்டுமே இசையரசி பாடியவை.
'தங்கக் குடத்துக்குப் பொட்டும் வைத்தேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்'
சுஜாதாவின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வில்ல குரூப்( ராஜ சுலோச்சனா?) முயற்சி செய்ய, சிவக்குமார் செய்வதறியாது திகைக்க, சுஜாதா தான் கற்பில் நெருப்பானவள் என்று பாடுவது போல வருகிறது. வரிகள் மிக நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக
'தேவகி கொண்டது சிறைவாசம்
கண்ணன் பிறந்ததும் தீர்ந்ததடா
சீதை புரிந்தது வனவாசம்
திருமகன் வந்ததும் மறைந்ததடா
நெருப்பினையே அவன் சாட்சி வைத்தான்
நானே நெருப்பல்லவோ'
அருமை. 'ராமன் சீதையை நெருப்பில் குதிக்க வைத்து அவள் கற்பை நிரூபித்தான்... ஆனால் இங்கு நானே நெருப்பு அல்லவோ' என்று சுஜாதா அருமையான தீர்க்கமான பார்வையில் அருமையான முகபாவம் காட்டுவார். அதைவிட இசையரசி தன் தன்னிகரில்லாக் குரலில் அந்த கற்பின் ஜ்வாலையை குரலில் தீயாகவே காட்டுவார். மிகப் பிரமாதமாக பாடியிருப்பார் இசையரசி. கதைக்கேற்றபடி பாடலின் வரிகளும் பொருளோடு இருக்கும். எழுதியவர் பஞ்சு அருணாச்சலாமா? அப்படித்தான் நினைக்கிறேன்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q4oeYOBffNM
வணக்கம் வாசு ஜி ராஜேஷ் ஜி
//அடுத்ததாக ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ் அளிக்கும் 'மாரியம்மன் திருவிழா'. இதுவும் 1978ல் வெளி வந்து காணமல் போன படம்தான். // சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி இது மட்டும் தான் தெரியும்.. தாங்க்ஸ் வாசு சார்..
கல் நாயக் அவர்களுக்காக என்ன பாட் போடலாம் என யோசித்து யோசித்து.. சரின்னு இந்த ரெண்டு பாட் போட்டுட்டேன்..
இது எல்லாருக்கும் தெரிந்த பாடல்..
பைம்பொழிலாய்க் கண்களின் பார்வையினால் இப்பாவை
ஐம்புலனை ஆட்கொண்டாள் ஆம்..
http://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8
நாயகன் அவன் ஒருபுறம் அவள் விழியில் மனைவி அழகு.. நான் இந்த ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படமும் பார்த்ததில்லை.. பாடல் கேட்கமட்டும் செய்திருக்கிறேன்..பார்த்ததில்லை..யார் அந்தப் பெண்..? மீரா ஷோபா என்றிருக்கிறது..ஆனால் இவர் மீரா இல்லை..
ஆனபடி காத்திருக்க ஆடிவந்து நின்றுவிட்ட
வானவில்லே நானணைக்க வா..!
http://www.youtube.com/watch?v=XP7zCEqrAYs
எஸ்ஸ்கேப்! :)
வாசு,
'கிழக்கே போகும் ரயில்' எல்லோரும் சுகயாத்திரை செய்திருந்தாலும், நீங்கள் அழைத்துச் செல்லும்போது கிடைக்கின்ற அனுபவம், அனுபவிக்கின்ற எங்களுக்குத்தான் தெரியும். இப்போதைக்கு பரவாயில்லை. வேறொரு வாய்ப்பு 'கிழக்கே போகும் ரயில்'-க்கு கிடைக்காமலா போய்விடும்.
மாரியம்மன் திருவிழா எங்களூரில் பார்த்ததுதான் - வேறு எந்த ஊரின் தியேட்டரில் கூட பார்த்ததில்லை. ஆம் நான் திருவிழாவைப்பற்றிதான் சொல்கிறேன் - திரைப்படத்தைப் பற்றியல்ல. நீங்கள் கொடுத்திருப்பது நல்ல அறிமுகம். எங்கேயிருந்துதான் இவ்வளவு தகவல் திரட்டுகிறீர்களோ!!!
சி.க.,
எனக்காக நீங்கள் கொடுத்திருக்கின்ற 2 பாடல்களும் அருமை. முதல் பாடல் - பலமுறை திரையிலும், டீவியிலும் பார்த்து கொண்டிருந்தாலும், எப்போதும் என் கவனத்தை ஈர்க்கின்ற பாடல். 2வது பாடல் எங்கேயோ நான் கேட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இனிமையாக உள்ளது. மறக்க மாட்டேன். நன்றி.
சி. க.,
உங்களுக்காக இந்த நகைச்சுவை காட்சி - விஜயனின் 'வள்ளி மயில்' படத்திலிருந்து.
https://www.youtube.com/watch?v=ZUXk-qL0jAE