http://i61.tinypic.com/2v8n8ya.jpg
Printable View
மறு வெளியீடுகளில் சரித்திரம் படைத்தது வரும் மாமன்னரின் படங்கள் ''நாடோடி மன்னன் '' - ''என்கடமை '' 12.12.2014 அன்று கோவை நகரில் ஒரே நேரத்தில் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
கோவை நகர எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ..நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
என் அனுபவத்தில் [1969-1975 ] சென்னையில் பார்த்தமக்கள் திலகத்தின் படங்களின் பிரமாண்ட முன்பதிவு -ரசிகர்கள் வெள்ளம் - முதல் நாள் மக்கள் வெள்ளம் - ரசிகர்களின் ஆரவாரம் - வெற்றி செய்திகள் .
1. அடிமைப்பெண் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .
2. நம்நாடு - சித்ரா - கிருஷ்ணா - சரவணா - ஸ்ரீனிவாசா
3. மாட்டுக்கார வேலன் - பிளாசா - பிராட்வே - சயானி - கிருஷ்ணவேணி
4. என் அண்ணன் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .
5. ரிக்ஷாக்காரன் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா - சரவணா
6. நீரும் நெருப்பும் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா- மேகலா
7. நல்ல நேரம் - சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .
8. இதய வீணை - குளோப் - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - ராஜகுமாரி
9. உலகம் சுற்றும் வாலிபன் - தேவிபாரடைஸ்- அகஸ்தியா - உமா - ராயல் - லக்ஷ்மி
10.நேற்று இன்று நாளை - பிளாசா - மகாராணி - சயானி - கிருஷ்ணவேணி
11.உரிமைக்குரல் - ஓடியன் - மகாராணி - உமா - கிருஷ்ணவேணி
12.சிரித்து வாழ வேண்டும் - பிளாசா - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - கிருஷ்ணவேணி
13.நினைத்ததை முடிப்பவன் - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா
14.இதயக்கனி - சத்யம் - மகாராணி - உமா - கமலா
15.பல்லாண்டு வாழ்க - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - சரவணா
தொடரும் .....
கோவையில் ராயல் திரையரங்கில் மே மாதம் திரையிடப்பட்டு 11 நாள் வெற்றிகரமாக ஓடி, 3 மாதங்களுக்குள்ளாகவே அருகிலேயே அமைந்துள்ள டிலைட் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக 14 நாட்கள் ஓடி, மீண்டும் 4 மாதத்தில் ராயல் திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தலைவர் படமாக மட்டுமே இருக்க முடியும். இன்றும் கூட, தலைவரின் இந்த பாக்ஸ் ஆபிஸ் பவரையும் மக்களை கவர்ந்திழுக்கும் திறனையும் என்னவென்று சொல்ல?.... சாதனைகளுக்கு சொந்தக்காரர் தலைவரே என்பதைத் தவிர. கொங்கு மண்டல தளபதி திரு.ரவிச்சந்திரனுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.
எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.
மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.
வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.
http://i60.tinypic.com/339oxef.jpg