-
மனசாட்சி! அரசாட்சி!
மக்கள் திலகம் மந்திரச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட மக்கள்தானே, பலரது மனக்கோட்டைகளுயும் தகர்த்தெறிறிந்துவிட்டு அவரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலே முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தனர்.
அத்தகு மாமனிதர் சொல்லக்கூடிய சொல் நயங்களை, கவியரசர் கவிநயத்தில் கேட்போமா!
“கடவுள் ஏன் கல்லானான்? – மனம்
கல்லாய்ப் போன மனதர்களாலே!”
கல்லாய்ப் போன மனித மனதைப் பார்த்துத்தான் கடவுளே கல்லாகி விட்டானா? இதுவென்ன நியாயம்? பொறுத்துப் பார்ப்போம்!
“கொடுமையைக் கண்டவன் கண்ணை இழ்ந்தான்! – அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்!
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்! – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!”
நியாயங்களை மீறிய அநியாயப் பட்டியல் பாரீர்!
கொடுமையைக் கண்டவனுக்கோ
கண்கள் போயின!
கொடுமைகளைக் கோபித்துத் தடுத்தவனுக்கோ
பேசும் சக்தி போயின!
இரக்கத்தை இதயத்தால் நினைத்தவனுக்கோ
பொன்பொருள் போயின!
இவை கூடப் பரவாயில்லை! இந்தப் பூமியில் எல்லோர்க்கும் நல்லவனாய் இருந்தவனோ தன்னையே இழந்து போனான்!’
இத்தனைக்கும் காரணங்கள்!…..
“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
நீதிதேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி!”
காரணங்கள் புரியாத புதிரானதோ?
‘நெஞ்சுக்குத் தேவை மனசாட்சிதான்! அந்த மனசாட்சியே நீதிதேவனின் அரசாட்சியாம்! உலகில் நடக்கும் அனைத்து உண்மைகளுக்கும் அவனே, ஆம்! அந்த நீதிதேவனே சாட்சி!
ஆனால் மக்கள் அரங்கத்திற்கு வராதாம் அந்த நீதிதேவனின் சாட்சி!
அப்புறம் மனசாட்சி ஏன்? நீதிதேவனின் அரசாட்சி ஏன்? அந்த நீதி தேவனின் சாட்சிதான் ஏன்? ஏன்?
இனியென்ன பாக்கியோ?
“சதிச்செயல் புரிந்தவன் புத்திசாலி – அதைச்
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்!….”
அடப் பாவமே!
‘உலகில் சதிச்செயல்களைப் புரிந்தவன் புத்திசாலி! அந்தச் சதிச் செயல்களைச் சகித்துக் கொண்டிருந்தவனோ குற்றவாளி! உண்மையைச் சொல்பவனோ சதிகாரன்!’
இதுவெல்லாம் யார்வகுத்த அதிகாரமாம்! உலகத்தில் ஆண்டவன் வகுத்த அதிகாரமாம்!
அப்படியானால் அந்த ஆண்டவனாம் கடவுள், கல்லானது சரியோ? கல்மனத்தவர் செய்த செயலுக்காக அவனை நோவதில் என்ன இலாபம்?
இத்தகு உலகநீதியைச் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்காட்சியைக் கண்டு உள்ளம் உருகியோர் ஏராளம்! ஏராளம்!
courtesy - kannadasan
-
-
-
இயற்கை நடிகரே, யாருண்டு இறைவா உங்களை வெல்ல, இன்றும் நீங்கள் உண்டு உலகில் உள்ள எல்லா நடிகர்களையும் வெல்ல.உம்முடைய சாதனையை இன்றும் நெருங்ககூட முடியாமல் தவிக்கும் இந்த நடிகர்களின் பாடு இருக்கிறதே அப்பப்பா பெரும் பாடப்பா......
http://i1170.photobucket.com/albums/...psmskxpyix.jpg
courtesy fb
-
BANGALORE - NEWCITY THEATER EN ANNAN RELEASED IN THIS THEATER DURING FIRST RELEASE IN MAY 1970
PIC COURTESY - VINOD SIR
http://i59.tinypic.com/4l4zo.jpg
-
Quote:
Originally Posted by
Varadakumar Sundaraman
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் திரைப்படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் இது.இதை நிறுவ 70 கிலோ ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த கட் அவுட் கீழே நிற்கும் மக்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும்.
http://i62.tinypic.com/15plpns.jpg
courtesy face book
நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில்தான். என் அண்ணன் படத்தை சேலம் அலங்கரில்தான் பார்த்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது இருக்கும். அலங்கார் தியேட்டரின் முன்புள்ள காலி இடத்தில் தலைவர் வாளைதாருடன் நிற்கும் ஸ்டில் மிகவும் உயரத்தில் இருக்கும். மிகவும் பெரியதாக இருக்கும். அனால் இந்த ஸ்டில்லை நான் என் நினவு தெரிந்து பார்த்ததில்லை. அப்போது திருவள்ளுவர் பஸ் நிலையத்திற்கு அருகில் எந்த இடமும் காலியாக இல்லை. தியேட்டருக்கும் பஸ் நிலையத்திற்கும் தூரம் அதிகம். நம்புவது கடினமாக உள்ளது.ஆனால் நான் பார்த்த அந்த ஸ்டில் உண்மை என்பதை இப்போது தியேட்டரில் விசாரித்து உறுதி செய்துகொண்டேன். நான் பார்த்த ,எங்கள் ஊரில் நூறு அடிக்குமேல் வைத்த ஸ்டில் என் அண்ணன் ஸ்டில் ஒன்றுதான் என்பது சரித்திர சாதனை. என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.
-
-
இனிய நண்பர் திரு குமார் சார்
என் அண்ணன் - படம் பற்றிய பதிவுகள் , நிழற் படங்கள் , மற்றும் திண்டுக்கல் சரித்திர சாதனை செய்திகள் எல்லாமே சூப்பர் .
-
உலகம் சுற்றும் வாலிபன் & திண்டுகல் -1973
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு ரசிகர்களும் வாக்காளர்களும் வாரி வழங்கியஆதரவும் , வசூலும் ,
கண்டு அகிலமே வியந்தது .அதிமுக 100 நாள் கட்சி என்று எதிர் கட்சியினர் கிண்டல் செய்தனர் .அதிமுக துவங்கிய
215வது நாளில் நடைபெற்ற தேர்தலில் மதுரை மாவட்ட திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் தங்களுடைய
பொன்னான வாக்குகளை புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்திற்கு முத்திரையிட்டு வெற்றி கனியை தந்தார்கள் . முன்னதாக வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு திரைப்பட ரசிகர்கள் பேராதரவு தந்து இமாலய வெற்றி அடைய செய்தார்கள் .
ஒரே நேரத்தில் அரசியல் - சினிமா என்று இரண்டு துறைகளிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்திய
சரித்திர நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
-
பிரபல தயாரிப்பாளர் ஜி .என் .வேலுமணி தயாரித்து மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் .
பணத்தோட்டம் -1963
படகோட்டி -1964
கலங்கரை விளக்கம் -1965
சந்திரோதயம் -1966
குடியிருந்த கோயில் -1968
நான் ஏன் பிறந்தேன் -1972