Kamal paandavar aninu thane sonnaaru.
Printable View
https://www.youtube.com/watch?v=IuqjuA2Gr0k
Radharavi / Sarathkumar - vandavaalam thandavaalam aanadhu
புகையை ஜெயித்த கதை! மனோபாலா... மனோபலம்!
குச்சி மாதிரி... ஸாரி, குச்சியேதான்!மூங்கில் ஒன்று புல்லாங்குழலானதுபோல், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் வித்தகன் மனோபாலா. மனோபலம் கூடிய மனோபாலா, 13 வருடங்களுக்கு முன்பு செத்துப் பிழைத்தவர் என்றால், நம்ப முடிகிறதா?''யப்பா... அந்த நாட்களை இப்ப நினைச்சாலும் கசப்பா இருக்கு தம்பி. வழக்கமா எல்லோருக்கும் நண்பர்களாலதான் சிகரெட் பழக்கம் வரும். வலியப்போய், அந்தப் பழக்கத்துக்கு அடிமையான ஆளு நானாத்தான் இருப்பேன். 17 வயசுல, காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப, முதன் முதலா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். அந்த டேஸ்ட்டும் ஸ்மெல்லும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான், நாளாக நாளாக அதிகமாப் புகைக்க ஆரம்பிச்சேன். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனப்ப, நான் ஒரு செயின் ஸ்மோக்கர். அப்பவே சுதாரிச்சிருந்தா, பெரிய பாதிப்புலேர்ந்து மீண்டு இருந்திருப்பேன்'' என்று மூச்சை இழுத்துவிட்டபடியே, பாதிப்பின் வீரியத்தைச் சொன்னார்.''கை நடுக்கம் வர ஆரம்பிச்சது. எப்பவும் சோர்வா இருக்கும். அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். சாப்பாடு எறங்காது. முகமெல்லாம் கறுத்துப்போச்சு. டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணேன். அதிகமா சிகரெட் பிடிச்சதால், நுரையீரல் முழுக்க சிகரெட் புகை அடைஞ்சு இருக்குன்னு சொன்னார். டெஸ்ட் ரிசல்ட்லகூட, எலும்புகள் அரிச்சுப்போயிருக்கிறதா வந்துச்சு. 'சிகரெட் பிடிச்சா இவ்வளவு பாதிப்பு வருமா டாக்டர்?’னு அப்பாவியாக் கேட்க, அதுக்கு டாக்டர், 'புகையோட இயல்பான பண்பே படிதல்தான். வீட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சிருக்கீங்களா? சுவர் முழுக்கப் புகை படிஞ்சு இருக்கும். அது மாதிரிதான் தம்பி நம்ம உடம்பும். நீங்க உள்ள இழுத்த புகை, உங்க உடம்பு முழுக்கப் படிஞ்சுகிடக்கு. அதனால் நுரையீரல், நரம்பு, எலும்பு எல்லாம் பாதிச்சிருக்கு. இன்னும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிச்சீங்க, நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க, அப்புறம் உங்க இஷ்டம்’னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்.ஒரு நிமிஷம் என் மனைவி, குழந்தைகளை நினைச்சுப் பார்த்தேன்.குடும்ப எதிர்காலத்தைவிட கருமம் பிடிச்ச இந்த சிகரெட் முக்கியமா? பலரது சிரிப்புக்குக் காரணமாயிட்டு, என் குடும்பத்தைச் சோகத்துல தள்ளலாமா?’ அப்படினு என் மனசாட்சி கேள்வி கேட்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன். எக்கச்சக்கமா செலவு செஞ்சு, புது மனோபாலாவா வீட்டுக்குத் திரும்பினேன். அதுக்கு அப்புறம் சிகரெட் பக்கமே போகலை. எத்தனையோ படங்கள்ல சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிச்சேன். ஆனால், திரும்ப அந்த கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகலை. அந்த அளவுக்குக் கண்டிப்பா இருந்தேன். சிகரெட் பிடிச்சப்ப 42 கிலோவா இருந்த நான், இப்போ 62 கிலோ இருக்கேன். இப்ப என் உடம்பும் ரொம்ப நல்லா இருக்கு. சந்தோஷமா இருக்கேன்.'' - சிரித்தபடியே சொன்ன மனோபாலா, சிகரெட் பழக்கத்தில் இருந்து மீண்டுவருவருவதற்கான சீக்ரெட் டிப்ஸ்களையும் தந்தார்.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg பெரும்பாலும், சாப்பாடு, டீ சாப்பிட்ட பிறகுதான் அதிகமா சிகரெட் அடிப்பாங்க. அந்த நினைப்பு வந்தால், உடனே திசை திருப்ப முயற்சி பண்ணுங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க. எழுந்து ஒரு ரவுண்ட் நடந்துட்டு வாங்க.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg சாப்பாடு சாப்பிட்டதும், சும்மா உட்கார்ந்து இருக்காமல், ஏதாவது ஒரு வேலையில் உங்க கவனத்தைச் செலுத்துங்க. கொஞ்ச நேரத்தில் சிகரெட் புகைக்கணும்கிற எண்ணம் போயிடும்.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg சிலருக்கு சிகரெட் பிடித்தால்தான் டாய்லட் போக முடியும் என்ற நிலை இருக்கும், இதைக் காரணமாககொண்டே சிலர் சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவே நன்கு கனிந்த பூவன்பழம் மாதிரியான மலமிளக்கிகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். மறுநாள் சிகரெட்டின் தேவை இருக்காது.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg சிகரெட் தரும் பாதிப்புகளை உங்க வீட்டிலோ, தனி அறையிலோ கண்ணில் படும் இடத்தில் பெரிதாக எழுதிப் படங்களுடன் ஒட்டிவைக்கலாம்.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg பெட்டிக் கடைப் பக்கம் தயவுசெஞ்சு போகாதீங்க.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpgஉங்க கண் எதிர்ல ஒருத்தர் சிகரெட் பிடிக்கிறார்னா, அவர் நிக்கிற திசைக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பிச்சிடுங்க.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg 'ரொம்ப நாளாச்சே... ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிப்போமே...’ அப்படிங்கிற வேலையே கூடாது. ஒண்ணு நூறாயிடும். ஜாக்கிரதை!http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg சிகரெட் பிடிக்கத் தூண்டும் நண்பர்களின் சகவாசத்தையே துண்டிச்சிருங்க.http://img.vikatan.com/doctor/2013/0...dot%281%29.jpg சிகரெட் பிடிக்கத் தோணுச்சுன்னா, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்க. இது உடம்புக்கும் நல்லது. சிகரெட் பிடிக்கணும்கிற எண்ணத்தையும் மறக்க வெச்சிடும்.தியானம், யோகா போன்ற நல்ல பழக்கங்கள்ல கவனத்தைத் திருப்புங்க. மனசை ஒருமுகப்படுத்தி, நீங்க எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு பக்க பலமா இது இருக்கும்.
சிகரெட் பழக்கம், வாழ்க்கையைச் சீரழிச்சிடும் கண்ணுங்களா! விட்டுடுங்க!
இப்பதான் ஒருவழியா தீ அணைந்தது என்றால்.. மறுபடியும் பத்த வச்சிட்டாங்க அம்மணி...
https://twitter.com/realradikaa/stat...92026032353280
ட்விட்டர் மறுபடியும் பத்திகிச்சி..
தேர்தல் தோல்விக்கு காரணங்களாக நான் விகடனில் படித்தது..
1. சரத் அணியினரின் எல்லை மீறிய பேச்சுக்கள். கமல்,சிவகுமார் போன்றோரை தேவையில்லாமல் சாடியது நடுநிலையாளர்களை விஷால் அணி பக்கம் சாய்த்தது.
2. அதிமுக கடைசி நேரத்தில் நடிகர் சங்க தேர்தலில் பங்குபெற வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டது
3. ஜே.கே ரித்தீஷ் நாடக நடிகர்களை 'கவனித்தது'
4. விஷால் அணியினரின் கடைசி நேர கேன்வாசிங். பூத்துக்குள் வாக்காளர்கள் செல்லும் வரை விஷால் அணியினர் அவர்களை விடவில்லை. சரத் அணியினர் இதில் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்
Sent from my SM-G531F using Tapatalk
https://www.facebook.com/sve.shekher...96?pnref=story
குரலைத் தாழ்த்தி நீலிக்கண்ணீர் வடித்தவுடன் மீடியாக்கர் மீடியாவினரும் நம்பி கைத்தட்டினார்கள்.. ஒப்பந்த ரத்து என்பதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் பாண்டவர் அணியினர் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக கொண்டாடியிருப்பார்கள் என்று சொல்வதில் இருக்கும் மோசடித் தனமான எண்ணங்களை, தர்க்கப் பிழைகளை எண்ணி எதிர் கேள்வி கேட்க திராணியில்லாமல் நடந்து கொண்டார்கள் மீடியாக்கர் மீடியாவினர்.
தனுஷ் தயாரிப்பு, முதல் முறையா விஜய் சேதுபதி இணைய, நயன்தாரா,விக்னேஷ் சிவன், அணிருத்னு ஒரு கலர்புல் கூட்டணி,அதிலும் எல்லா பாடல்களுமே ஹிட்டு ரகம். படம் அதை திருப்திபடுதியதானு பார்க்கலாம்.
நானும் ரவுடி தான் – படத்தின் தலைப்பிற்கேற்ப தன்னை ரௌடியாக பாவித்து வளர்கிறார் விஜய் சேதுபதி.சிறுவயதில் அம்மா ராதிகாவை போல போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் பாண்டியனிடம்(விஜய் சேதுபதி) ரௌடிசம் தான் கெத்து என்று மொட்டை ராஜேந்த்ரன் சொல்கிறார்.கூடவே கிள்ளிவளவன் (பார்த்திபன்) என்ற பெரிய தாதாவின் கதையையும் சொல்கிறார்.இந்த கதையில் ஒரு போலீஸ் கிள்ளிவளவனை எதிர்க்கிறார்.அதனால் தன் மனைவியை இழக்கிறார்.தன் சிறிய மகளோடு இடம்மாற்றம் பெற்று செல்கிறார்.
விஜய் சேதுபதி வளர்ந்த பிறகு அம்மாவின் ஆசைக்காக போலீஸ் தேர்ச்சிக்கு சென்றாலும் தன்னை ரௌடி என நினைத்து டம்மி கெத்துடன் வாழ்கிறார் சேதுபதி .இந்நிலையில் காதம்பரி(நயன்தாரா) என்ற பெண்ணை சந்திக்கிறார்.அவள் தன் தந்தை ஒரு பிரச்சனையில் இருப்பதை சொல்கிறார்.விஜய் செத்துபதி உதவ வருகிறார்.பின்னர் காதம்பரியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் .இந்நிலையில் காதம்பரியின் தந்தை கொலை செய்யபடுகிறார்.இதை பாண்டியன் காதம்பரியிடம் மறைக்கிறார்.ஆனால் காதம்பரி ராதிகாவின் மூலம் தந்தை இறந்ததை அறிந்து கொள்கிறார்.பின்னர் சேதுபதியிடம் தன் தந்தையை கொலை செய்தவனை தான் கொன்ற பிறகு தான் காதல் என்று சொல்ல பயத்துடனே டம்மி ரௌடியான சேதுபதி தயாராகிறார்.பின்னர் எவ்வாறு பார்த்திபனை கொலை செய்கிறார் என்பது தான் மீதி கதை.இறுதியில் பார்த்திபனை சாகடிக்கும் வரை அனைத்தையுமே டம்மியாகவே செய்து முடிக்கிறார் சேதுபதி.
http://www.tamilmoviecritic.com/movi...um-rowdy-dhaan