அன்பு நண்பர்களுக்கு,
எந்த வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வெறும் வாழ்த்து செய்தி பதிவிட்டதற்கு இந்த அளவிற்கு பெரிய பிரச்சினை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பல முறை சொல்லிய படி எனக்கென்று தனிப்பட்ட சார்பு எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஒரே சார்பு நடிகர் திலகம் மட்டும் தான். என்னுடைய ஒரே தலைவர் நடிகர் திலகம் மட்டும் தான். நடிகர் திலகத்தைப் பற்றிய திரியில் அவர் வாழ்வில் ரசிகர் என்ற முறையில் நாம் சந்தித்த அல்லது கேள்விப் பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருடைய இயக்கமே அவருடைய முதுகில் குத்திய போது அவருடைய ரசிகர்கள் உள்ளம் நோகாமல் இருந்திருக்க முடியாது. அதே போல் அவருடைய வாழ்வில் பல விதமான ஏளனங்கள், ஏச்சுக்கள், கேலிகள் அத்தனையும் தாண்டி எதிர் கொண்டு தான் அவர் வளர்ந்திருக்கிறார். அரசியலில் தூய்மையான வராக நடந்து நிரூபித்திருக்கிறார். அவர் சந்தித்த பிரச்சினைகளை இங்கு சொல்லாமல் வேறு எங்கு சொல்வது. நடிகர் திலகமும் அரசியலும் பிரிக்க முடியாதவை. அவர் ஒரு தேச பக்தராக நடித்தது மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். இளைஞர்களையும் மக்களையும் நல்வழியில் திருப்ப உழைத்திருக்கிறார். இவையெல்லாம் தவறா. அல்லது இவற்றைப் பற்றிப் பேசக் கூடாதா. அவரை பல இயக்கத்தினரும் தான் ஏசியிருக்கிறார்கள். கலை உலகில் பலர் அவரை ஏசியிருக்கிறார்கள். பின்னர் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். சினிமாவை வெறும் பணத்திற்கான இயந்திரமாக அவர் பயன் படுத்த வில்லை. இந்த நாட்டின் தேச பக்தி, விடுதலைப் போராட்டம் போன்ற பல நல் விஷயங்களைப் பற்றிப் போதித்திருக்கிறார். அப்படி தன்னுடைய அரசியலை இந்த நாட்டிற்காக பயன் படுத்திய அந்த மகானின் நாட்டுப் பற்றையும் மேன்மையையும் அவர் சந்தித்த பிரச்சினைகளையும் விவாதிக்கக் கூடாதென்றால்,
வருத்தத்துடன் நானும் இந்தத் திரியிலிருந்து விடைபெற வேண்டிய மன நிலைக்குத் தான் ஆளாக வேண்டியிருக்கும்.
இவர் அவர் என்று பாராமல் நடிகர் திலகத்திற்கு மேன்மை செய்யும் யாராயிருந்தாலும் பாராட்டுவதும் அவருடைய புகழுக்கு மாசு கற்பிக்கும் நிலை வரும் போது எதிர்புக்குரல் கொடுப்பதும் என்னுடைய கடமையாக நான் எண்ணுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகம் மட்டும் தான் என்னுடைய ஒரே தலைவர்.
அன்புடன்