-
Mr Vasu Sir,
NT is the only actor in this world to fly during that time for makeup which is unbreakable
record and also got the Super Star Status in his first film which is also another record.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
thank you vasu sir and friends. I have leftmy memries of VM iincomplete. soon i will continue.
you can include AKKARAI SEEMAIYELE AND ZAYIRUM THINGALUM IN THE LIST of movies not compeled- not released. some of the stills taken for AKKARAI SEEMAIYLE were utilised for KUNGUMAM titles.
pleasant memories.
-
வாசு சார்,
வெளிவராத நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய paper cutting -க்கு நன்றி. ஆனால் அதில் சில திருத்தங்கள். ஜீவா பூமி அறிவிப்போடு நிறுத்தப்படவில்லை. படப்பிடிப்பு நடந்து அந்தப் படத்தின் ஸ்டில்-கள் கூட வெளியாகின. வெளி வந்திருந்தால் அந்தப் படம் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல சரித்திரப் படத்தில் நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி ஜோடி சேர்ந்து நடித்ததில்லை என்ற பெயரும் மாறியிருக்கும்.
அது போல் ராம் ரஹீம் பூஜை போடப்பட்டது 1979-ல் அல்லவா? நடிகர் திலகமும் பிரேம் நசீரும் இணைந்து நடிப்பதாக இருந்த அந்தப் படத்தின் பூஜைக்கு தலைமை தாங்கியவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்..ஜி.ஆர். அவர்கள்.
வெளிவராத படங்களைப் பற்றிய ஒரு பதிவை இன்று கூட நமது நடிகர் திலகம் திரியில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் பலரும் குறிப்பிட மறக்கும் படம் ஒன்று உண்டு. அது 1976 காலக் கட்டத்தில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அமலில் இருந்த போது நடிகர் திலகம் நடிப்பில் கருப்பு வெள்ளை திரைப்படமாக உருவான சிவப்பு விளக்கு எரிக்கின்றது என்ற படம். படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து நடிகர் திலகம் நடிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் 1977-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்தப் படம் வெளியிடப்படாமலே போய் விட்டது.
அன்புடன்
-
நன்றி முரளி சார். ஜீவபூமியின் ஸ்டில்களை பம்மலார் அவர்களும், ரசிக வேந்தர் அவர்களும் ஏற்கனவே திரியில் அளித்திருக்கிறார்கள். நீங்கள் கூறியுள்ளது போல் 'விளக்கு எரிகின்றது' படத்தின் நிழற்படங்களை அப்போது 'பேசும்படம்' பத்திரிக்கையில் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நடிகர் திலகம் கிட்டத்தட்ட அதிக மேக்-அப் இல்லாமல் வேட்டி ஷர்ட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். உருவங்கள் மாறலாம் கெட் அப்பை ஓரளவிற்கு ஒத்திருக்கும். அதே போல 'பூப்போல மனசு' என்று பெயரிடப்பட்ட படம் ஒன்றில் நடிகர் திலகம் மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் அவர்களுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தின் ஸ்டில்லை கீழே அளித்துள்ளேன். 'லட்சியவாதி' என்ற படமும் வெளிவராத படங்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. அந்த படத்தின் ஸ்டில்லையும் இங்கே காணலாம். இது இல்லாமல் கலாகேந்திராவின் 'வயசு அப்படி' என்ற படத்தின் ஸ்டில் ஒன்று பேசும்படத்தில் வந்தது. தலைவர் மீசையில்லாமல் ராதாவுடன் நிற்பது போன்ற ஸ்டில் அது. முஸ்லீம்கள் அணியும் தொப்பி அணிந்து நடிகர் திலகம் தங்கவேலு, சாவித்திரி ஆகியோருடன் நிற்கும் ஸ்டில்லையும் பதிவிட்டுள்ளேன். அந்தப் படம் ராம் ரஹீமா அல்லது அப்துல்லாவா என்று நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என நினைக்கிறேன்.
அன்பு பம்மலார் அவர்கள் அளித்திருந்த 'ஜீவபூமி' விளம்பர கட்டிங்.
http://i1110.photobucket.com/albums/...GEDC5892-1.jpg
நமது ராகவேந்திரன் சார் பதித்திருந்த 'ஜீவபூமி' பேசும்படம் நிழற்படங்கள்.
http://i872.photobucket.com/albums/a...boomip01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip02fw.jpg
http://i872.photobucket.com/albums/a...oomip03faw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip04fw.jpg
ராம் ரஹீம் (or)அப்துல்லா?
http://i1087.photobucket.com/albums/...t%20-2/3-6.jpg
பூப்போல மனசு
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-13.jpg
லட்சியவாதி
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-11.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
WOW!!! Huge Thanks to the 100,000 viewers
http://hazellcottrell.files.wordpres...if?w=245&h=300
அன்புடன்,
வாசுதேவன்.
-
https://encrypted-tbn0.gstatic.com/i...DxC8HCpNvEnrcw
http://3.bp.blogspot.com/-s7baP4u6JL...san-745885.jpg
அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று ஒரு லட்சம் பார்வையாளர்களை சந்தோஷப்பட வைத்து சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தன்னுடைய இருநூறாவது பக்கத்தையும் காண இருக்கிறது. அன்பு பம்மலார் அவர்களின் கடின உழைப்பும், அற்புத அரிய பதிவுகளும், திரியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம். அது போல ரசிகவேந்தர் திரு.ராகவேந்திரன் சாரின் அபரிமிதமான பங்களிப்பு திரியின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 22nd July 2012, காலை 4:06 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று 193-ஆவது பக்கத்தை நிறைவு செய்ய இருக்கிறது. அதே போல திரு.கார்த்திக் சாரின் அற்புதமான பதிவுகள் திரிக்கு மேலும் பலத்தையும், புகழையும் சேர்த்துள்ளன. மரியாதைக்குரிய மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், திரு வினோத் அவர்களின் பங்களிப்புகள் அற்புதமானவை. திரு.சந்திரசேகரன், திரு.பார்த்தசாரதி சார், திரு.சுப்பு, திரு. ரவிச்சந்திரன், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.கல்நாயக், 'கோல்ட் ஸ்டார்' திரு.சதீஷ், திரு.செந்தில், திரு. ராகுல், புதிதாக மய்ய உறுப்பினராகியிருக்கும் சித்தூர் வாசுதேவன் சார், திரு சிவாஜி செந்தில், vankv சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன அத்துணை அங்கத்தினர்களுக்கும் இத்திரியின் வெற்றியில் பங்குண்டு. அத்துணை பேருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் திரி ஆரம்பிக்கப்பட்ட இந்த 108 நாட்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது நம் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை. அங்கீகாரம். ஆகவே திரியை கண்டு மகிழும் அத்துணை பார்வையாளர்களுக்கும் நம் திரியின் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவினை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
-
The NT's movie Vilakku Erigindrathu has been almost completed. If someone take the
initiative we can see the movie in theatre.
-
Mr Vasu Sir.
The landmark achievement is possible due to the efforts of you,Pammalar & Mr Raghavendra and other
NT's fans.