கல்நாயக்
தங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன்.
கிழக்கே போகும் ரயிலில் மீண்டும் பயணம் செய்வோம் நிச்சயமாக.
'வள்ளி மயில்' நகைச்சுவை காட்சிக்கு நன்றி சிரித்து ரசித்தேன்.
Printable View
கல்நாயக்
தங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன்.
கிழக்கே போகும் ரயிலில் மீண்டும் பயணம் செய்வோம் நிச்சயமாக.
'வள்ளி மயில்' நகைச்சுவை காட்சிக்கு நன்றி சிரித்து ரசித்தேன்.
சி.க சார்,
நன்றி! இரு பாடல்களும் ஹா ஹா ஹா அருமை. ஆமாம்! அந்தப் பெண் யார்?
மாலை மதுரம்
'வக்த் னே கியா
கியா ஹசி சித்தம்'
'நைட்டிங் கேர்ள் ஆப் இந்தியா' கீதா தத் 'Kaagaz Ke Phool' படத்தில் பாடிய இன்னொரு மனதை உருக்கும் பாடல். உடன் குருதத். என்ன வாய்ஸ்! அப்படியே மெழுகாக உருகுகிறதே!
இந்தப் பாடலில் ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அப்படியே நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விடுகிறது. வஹீதா ரஹ்மான் மைண்ட் வாய்ஸ் பாடல்.
ஒரே வார்த்தை! அட்டகாசம்.
https://www.youtube.com/watch?v=MZ3S...yer_detailpage
மாரியம்மன் திருவிழா .. நல்ல படம்
முகனூலில் திரு டெல்லி கணேஷ் பற்றி எழுதிய போது வந்த போதே அன்றைய முன்னணி மற்றும் திறமைசாலி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தார் என்று எழுதியிருந்தேன் ஆம் சுமித்ரா சுஜாதா என பல நல்ல நடிகைகள் அவருக்கு ஜோடி. அவரும் அதை படித்து விட்டு மகிழ்ந்து பாராட்டினார்.
சரி மாரியம்மன் திருவிழாவில் எனக்கு பிடித்த பாடல்கள் ஆத்தாடி ஆத்தா மற்றும் தங்க குடத்துக்கு பொட்டும் இட்டேன்.
ஆத்தாடி ஆத்தா பிரபலமான பாடல் தான். சிலோன் ரேடியோ அடிக்கடி ஒலிபரப்பிய பாடல் காலத்தின் போக்கால் மறைந்தே போனது.
ராஜசுலோசனாவிற்கு இசையரசி மீராவிற்கு ஜானகி .. பட்டய கிளப்பும் பாடல்
ஆனாலும் நெஞ்சை வருடும் பாடல் தங்க குடத்துக்கு பொட்டும் பாடல் ஆஹா ஆர்பாட்டமில்லாத இசை குரல் வரிகள் என எல்லாமே கன கச்சிதம்
உங்கள் விமர்சனம் அருமை வாசு ஜி.
வாசு ஜி
மாரியம்மன் திருவிழாவில் சுஜாதா டெல்லி கணேஷின் மனைவி
சிவகுமாருக்கு மீரா ..
மாலை மதுரம்
அடுத்து செம ஜாலியாக ஒரு காமெடி பாட்டு. உங்களுக்கு இந்தி தெரிகிறதோ இல்லையோ புரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக இப்பாடலைப் பார்த்துத்தான் தீர வேண்டும். என்ன ஒரு ஜாலி. விஸ்வஜித் பெண் வேடமணிந்து அடிக்கும் கூத்து. உடன் ஆண் வேடத்தில் பபிதா கபூர்.
'கஜ்ரா மொகபத் வாலா'
'கிஸ்மத்' திரைப்படத்தில் ஷம்ஷத் பேகமும், ஆஷாவும் இணைந்து கலக்கோ கலக்கு என்று கலக்க குஜாலான இசை தந்தவர் ஓ.பி.நய்யார்.
விஸ்வஜித்
http://memsaabstory.files.wordpress...._biswajeet.jpghttp://www.filmyfriday.com/wp-conten..._Biswajeet.JPG
இந்தப் படத்தின் ஹீரோ விஸ்வஜித் இருக்கிறாரே! அப்படியே நம்ம ஊர் நம்பியார் மாதிரியே முகம். மீசை இல்லாத நம்பியார் 'மக்களைப் பெற்ற மகராசி' திரைப்படத்தில் வருவாரே. அதே போன்ற முக அமைப்பு. இவருக்கு அதிகமாக நடனம் வராது. அவரே இந்தப் பாட்டில் நடனத்தில் அசத்தியிருப்பார்.
'கிஸ்மத்' ஒரு துப்பறியும் கதை அம்சம் கொண்ட காமெடி கலந்த படம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kItK3kQlyko
ஒ! நன்றிஜி. நான் இந்தப் படம் பார்த்ததில்லை. இப்போது தங்களால் மேலும் விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி! சுஜாதா மிகவும் கவர்ந்தார்.