இந்தப் பாடல் பிடிக்காது
என்பவரை தேட வேண்டும்....! அப்படி எவரும்
சொல்லியிருந்தா அவர் அதற்க்கான
காரணத்தையும் தேடிக்கொண்டேயிருப்பார்.....!
ஏன் பிடிக்கிறது என்பதற்கு....
நம்மிடம் பாடல் ஆரம்பத்திலிருந்து
முடிந்த பின்னரும் கூட மனம்
நிறைய காரணங்கள் வழிகிறது......!
பாடல் ஆரம்பித்த 0:06 நொடியில்
தொடங்கும் அந்த இசை பற்றி எனக்குள்
எந்த தகவலும் கிடையாது......!
(அது ஆரோகண தொடக்கமா,
அவரோகன தொடக்கமா, அல்லது
இரண்டும் கலந்த ஒரு .புதுமையா..?)
இதை அவர் விளக்கணும் .....!
Key Board என்பதும் அந்த நோட்டை
ஆர்மோனியம் போல் இசைக்க
செய்திருப்பதும் புரிகிறது.....!
அதன் பெயர் விதம் அது என்ன மாதிரியான
பாண்டித்தியம்....? இதை அறிய நான்
படிக்கவில்லையே......! வெட்கப் படுகிறேன்!
தொடரும் குழல் வாசிப்பு, key board
முத்தைப்புகளைத் தொடர்ந்து, சௌந்து
கொஞ்சி தொடங்க, ....." ஆனந்த மேகங்கள்...
பூச்சூட" என சுசீலா தொடர ஆரம்பித்ததுமே
இந்தப் பாடலில் சௌந்துவிற்கு Second Place
தான் என்பது முடிவாகிவிட்டது.....!
முதல் சரணத்திற்கு முந்தைய Interlude ,
ஒவ்வொரு வரிகளுக்கும் இடைஇடையேயான
fillings, (குறிப்பாக அந்த group வயலின் fillings ......)
உலகத் தரத்தில் ஒரு பாடல் அதற்கான இசை......!
சுசீலா தன குரலில் இந்தப் பாடலுக்கான அனைத்து
உணர்வுகளையும், குரலிலும், வார்த்தை உச்சரிப்புகளிலும்
பாவங்களிலும், அவரை விட மிக அனுபவம் வாய்த்த
சௌந்து அவர்கள் கூட போட்டியில் அவரை முந்த
முடியாமல் செய்து விடுகிறது.....!
கவியரசர் தமக்கு பிடித்த தெய்வங்களின் பெயர்களை
அநேகமாக அந்த காலக் கட்டத்தில் அநேகமாய் நடிகர்
திலகத்தின் டூயட்களில் லாவகமாய் கொணர்வது
விதியாகவே .இருந்தது.......! இந்தப் பாடலும்...இவர்களது
காதலுக்கு.....ஆண்டாளும் ....மீனாளும் துணைக்கு
விளிக்கப்பட்டிருந்தனர் .......! இருந்தாலும் அது அவருக்கு
மட்டுமே கைவந்த அழகு .சொல்லாடல்....!
எத்தனை முத்துக்கள்,வைரங்கள், என நவரத்தினங்களும்
இருப்பினும், அதை கண்டு பிடித்து தெரிந்தெடுத்து, அழகிய
மாலையாக மெட்டு என்னும் தங்கத்தில் பதித்து....நம் போன்ற
அவருடைய பக்தர்களுக்கு வழங்கும் தெய்வதிற்கே ......
அனைத்து வந்தனங்களும்....நன்றிகளும்......!
https://youtu.be/Xuqcf72OPdo
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.