-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
சகோதரர் திரு. முத்தையன் அம்மு கைவண்ணத்தில், உருவான நம் மக்கள் திலகத்தின் "எங்கள் தங்கம்" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" காவிய கட்சிகள் வெகு அற்புதம்.
அதிலும் குறிப்பாக, நம் தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவம் தாங்கிய பத்திரிகையை வைத்திருக்கும் காட்சி மிக மிக மிக மிக............................. அருமை !
-
[QUOTE=vasudevan31355;1261040][B]ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
கொஞ்சம் வித்தியாசமான பாடல்.
http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg
நம் பொன்மனசெம்மலின் "ராமன் தேடிய சீதை" காவியத்தை பற்றி, சகோதரர் திரு. வாசுதேவன் அவர்களின் தொகுப்பு வெகு அருமை. பாராட்டுக்கள் கலந்த நன்றி !
-
http://i57.tinypic.com/1runn4.jpg
மறைந்து ஆண்டுகள் பல கடந்தும், மக்களால் இன்றும் பூஜிக்கப்படும் கடவுள், மதிக்கப்படும் தலைவர், மக்கள் நலனே தன் நலன் என்று கருதி அவர்களுக்காகவே வாழ்ந்த உண்மைத் தலைவர் உத்தமத் தலைவர், நம் இதய தெய்வம் தோற்றுவித்த அனைந்த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44வது ஆண்டு துவக்கத்தையொட்டி, பதிவுகள் வழங்கிட்ட, மக்கள் திலகம் திரி அன்பர்களுக்கு நன்றி ! !
-
http://i61.tinypic.com/2l96cz.jpg
தற்போது முரசு தொலைக்காட்சியில், நம் மன்னவனின் "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளி பரப்பாகி கொண்டிருக்கிறது.
-
இன்று மக்கள்திலகம் அட்டகாச வாள் வீச்சில் கலக்கலோ கலக்கல் --- என வியாபித்த "நீரும் நெருப்பும்" வெளியாகி ரசிகர்கள் உள்ளம் கவர்ந்த நாள்...இந்த காவியம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை விடவும் ஸ்ரீ லங்காவில் மகோன்னத வசூலை கண்டது..."b" &" c" சென்டர்களில் அமோகமாக வெற்றியை ருசித்தது...
-
மக்கள்திலகம் - பல்முனை மாண்புகளை விவரித்திருக்கும் அருமை சகோதரர் பொன்ராஜ் அவர்களின் கட்டுரையை இங்கே அளித்திருக்கும் பாச நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...
-
நடிகர் சங்கத்தை துவக்கிய காலத்தில் மன்னாதி மன்னன் - ஆக திகழ்ந்த மக்கள்திலகம் அந்த அமைப்புக்கு என்னவொரு பொருத்தமாகவும், பெருந்தன்மையாகவும் " தென்னிந்திய நடிகர் சங்கம் " என்று பெயர் வைத்தார்கள்... இன்று அதன் பெயரைத்தான் மாற்ற முயல்கிறார்களே தவிர அதனால் சக நடிக,நடிகையருக்கு என்ன நன்மை விளைந்திடும் என எண்ணி பார்க்க வேண்டும்... அதுவே மக்கள்திலகம் அவர்களின் முயற்சிக்கு பெருமை சேர்க்கும்...
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
இதய தெய்வம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 43 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 44வது ஆண்டு காணும் இந்த நாளை மறக்க முடியுமா ?
பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலுக்கு புகழாரம் சூட்டும் அவரது சிறப்புக்களை, இந்த பொன்னாளில் பதிவிடுவதில், பெருமிதம் கொள்கிறேன் :
1. மக்களின் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்
2. பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றவர்களை அமர வைத்து அழகு பார்த்தவர்
3. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டவர்
4. பக்தியுடன் கூடிய மரியாதை வைத்திருந்த தொண்டர்கள் கொண்டிருந்தவர்
5. தொண்டர்களை அரவணைத்தவர். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்.
6. மக்களின் நலன் மட்டுமே பெரிது எனக் கருதி குளு குளு வாச ஸ்தலம் செல்லாதவர்
7. தனது காலத்தில் புதுவையில் ஆட்சி கண்ட புதுமைப்பித்தன். {அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் முதல்வர் என்ற பெருமையை புதுவை ராமசாமி அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தவர். -
தான் நினைத்திருந்தால், 1974ல் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்து, அந்த கூட்டணி கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்க வைத்து அதன் மூலம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை தான் அடைந்திருப்பார் }.
8. கட்சியின் மூத்த தலைவர்களை மதித்தவர் அமைச்சர்களை அவர்களது அலுவலக நாற்காலியில் அமரவைத்து தான் நின்று கொண்டு, அவர்களை வாழ்த்திய
பொன்மனம் கொண்டவர்.
http://i58.tinypic.com/24m9mq1.jpg
9. : பொய் என்பதையே அறியாதவர்
10. : மந்திரிசபையில் மந்திரிகளை மாற்றியது கிடையாது.
11. : இவரது ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தவர் கிரிமினல் குற்றத்துக்காக கைது செய்யப்படவில்லை.
12. : தொடர்ந்து முதல்வாராக, அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
13. : தனது பலத்தை மட்டுமே நம்பி மாபெரும் வெற்றி கண்டவர்.
14. : சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு செல்லாமலேயே படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு
15. : மக்களை எல்லா காலங்களிலும் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.
16. : அரசு விழாக்களில் சளைக்காது கலந்து கொண்டவர். நாட்டு மக்களுக்கு நற்பயனளிக்கும் திட்டங்களை துவக்கி வைப்பதில் பேரின்பம் கண்டவர்.
17. : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நேர்மையான நெறியாளராக ஆட்சி புரிந்தவர்.
Excellent Prof Selvakumar sir.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.
http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg
பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்
ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...
நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.
http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg
கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.
விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.
'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,
ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.
இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.
'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'
'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'
அடேயப்பா! என்ன வரிகள்!
அடுத்த வரி டாப்.
தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,
'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)
மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.
அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,
எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,
'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)
என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.
எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,
'படார் படார் படார்
படார் படார் படார்'
என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,
எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,
'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார்
படார் படார் படார்'
என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.
'படார் படார் படார்
படார் படார் படார்
எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...
(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'
என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,
'நிப்பாட்டு'
என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)
'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.
நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)
http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg
தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.
'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)
எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!
நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.
'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.
'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'
இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.
'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'
மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,
இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,
இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.
ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.
'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'
என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!
'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'
எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.
'லவ்லி பியூட்டி கமான் சார்!'
எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்
'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'
என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)
அப்படியே இசை மாறும்.
ஈஸ்வரி,
'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'
எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)
பதிலுக்கு எம்.ஜி.ஆர்,
'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'
இப்போது மேடம் டர்ன்.
'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'
(அப்படிப் போடு அருவாள!):)
எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.
'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'
ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.
'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'
(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)
இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.
'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'
மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.
'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே
வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.
அப்பாடா!
பாடல் முடிவடையும்.
எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.
பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.
எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.
பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.
'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!
நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.
நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!
https://youtu.be/B86Gk92C7MM
Arumai Thiru.Vasudevan Sir
Nandri
-
http://s1.postimg.org/t4r2pjr3j/SCAN0000.jpg
MAKKAL THILAGAM - M.A. THIRUMUGAM - DEVAR
Courtesy : Dinamalar Vaaramalar.