Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று ஒரு லட்சம் பார்வையாளர்களை சந்தோஷப்பட வைத்து சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தன்னுடைய இருநூறாவது பக்கத்தையும் காண இருக்கிறது. அன்பு பம்மலார் அவர்களின் கடின உழைப்பும், அற்புத அரிய பதிவுகளும், திரியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம். அது போல ரசிகவேந்தர் திரு.ராகவேந்திரன் சாரின் அபரிமிதமான பங்களிப்பு திரியின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 22nd July 2012, காலை 4:06 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று 193-ஆவது பக்கத்தை நிறைவு செய்ய இருக்கிறது. அதே போல திரு.கார்த்திக் சாரின் அற்புதமான பதிவுகள் திரிக்கு மேலும் பலத்தையும், புகழையும் சேர்த்துள்ளன. மரியாதைக்குரிய மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், திரு வினோத் அவர்களின் பங்களிப்புகள் அற்புதமானவை. திரு.சந்திரசேகரன், திரு.பார்த்தசாரதி சார், திரு.சுப்பு, திரு. ரவிச்சந்திரன், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.கல்நாயக், 'கோல்ட் ஸ்டார்' திரு.சதீஷ், திரு.செந்தில், திரு. ராகுல், புதிதாக மய்ய உறுப்பினராகியிருக்கும் சித்தூர் வாசுதேவன் சார், திரு சிவாஜி செந்தில், vankv சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன அத்துணை அங்கத்தினர்களுக்கும் இத்திரியின் வெற்றியில் பங்குண்டு. அத்துணை பேருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் திரி ஆரம்பிக்கப்பட்ட இந்த 108 நாட்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது நம் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை. அங்கீகாரம். ஆகவே திரியை கண்டு மகிழும் அத்துணை பார்வையாளர்களுக்கும் நம் திரியின் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவினை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.