https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...b2&oe=5B049409
Printable View
sekar.p
நடிகர் திலகம் 1989 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இன் அதிமுக ( ஜானகி அணி)வுடன் கூட்டணி அமைத்து பெரும் சரிவை சந்தித்தார் என்பது நாம் அறிந்ததுதான், நடிகர் திலகம் முதல்வர் பதவிக்காக போட்டியிடவில்லை என்பது கூட அன்றைய நாளில் நாட்டு மக்களுக்கு தெரியாது, நடிகர் திலகம் போதுமான கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அவசர ரீதியில் தேர்தலை சந்தித்தாலும் கூட உண்மை ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர், நடிகர் திலகம் தெளிவுபட பல மேடைகளில் நம் பின்னால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றே பேசி வந்தார், ஒரு போதும் அதிமுக வினரின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை, நடிகர் திலகத்தின் கணக்குப்படி அந்த தேர்தலில் த.மு.மு, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 22.5 லட்சம் அது அந்த தேர்தலின் 10% வாக்குகளாகும், அதிமுக வின் ஒட்டுமொத்த வாக்குகளும் ஜெயலலிதா அணிக்குத் தான் சென்றது,
நடிகர் திலகம் குறிப்பிட்ட மூன்று லட்சம் மன்றப் பிள்ளைகள் போராடிய போராட்டம் அது தான் 20 லட்சம் வாக்குகள் பெறக் காரணமாக அமைந்தது, உண்மையில் அந்தத் தேர்தலில் த.மு.மு தோல்வியை தழுவவில்லை என்று தான் கணக்கில் கொள்ள வேண்டும், ஆனால் நடிகர் திலகத்தின் சரிவை மட்டுமே எதிர் நோக்கியிருந்த கூட்டத்திற்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரும் வரப் பிரதாட்சமாய் அமையப் போக தேர்தல் தோல்வியை ஊதிப் பெரிதாக்கின, அவை சில காலங்கள் மட்டுமே பேசப்பட்டன, அந்தப் பேச்சுக்கள் ஏறக்குறைய 90 லிருந்து 2016 வரையிலும் பேசப்படவில்லை என்பது நிதர்சனம் ஆனால் தற்போது ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் பிளவுபட்ட அதிமுக காரணத்தினால் நடிகர்களின் அரசியல் பிரவேசம் எனக் காரணம் காட்டி மீண்டும் நடிகர் திலகத்தின் தேர்தல் சரிவை தூசித் தட்டி எடுக்கிறார்கள் ஊடக பெருமக்கள், அதே சமயம் அப்போதைய தேர்தல் சரிவுகளுக்கு பிறகும் கூட நடிகர் திலகம் திரைப்படங்கள் அன்றைய புதிய படங்களைக் காட்டிலும் கூடுதல் வசூலைக் குவித்து வந்தன என்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவில் கொள்ள மறுக்கின்றனர்,
அன்றைய நாட்களில் என்னதான். நடிகர் திலகத்தின் புகழை சீர்குலைக்க முயன்றாலும் கூட. நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்ட வண்ணமே இருந்தன,
பின்னாளில் திரையரங்குகள் டிஜிட்டல் Qube தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்த காரணத்தால் நடிகர் திலகம் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடுவது குறைந்து வந்தன, பின்னர் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மீண்டும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து வெற்றி வாகை சூடி வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் * நவராத்திரி" ஒளி பரப்பாகிறது
இந்தச் செய்தியை அறிந்தவுடன் எனக்கு நவராத்திரியை முதன் முதலாக பார்த்து மகிழ்ந்த அந்த நாளைப் புரட்டிப் பார்த்தேன, நவராத்திரியை நம் வாழ்வில் காண்போமா? என ஏங்கித் தவித்த காலம் அது, நடிகர் திலகத்யின் 100 வது படத்தை இன்று வரையில் நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சை விடாத நாள் இருக்காது, அந்தச் சூழலில் தான் எனக்கு திரையிட்ட இந்தத் தியேட்டர் சொர்க்கப் புரியாகப் போனது.
அந்த இனிமையான நாளைக் குறிப்பிடும் அந்த அதி முக்கியமான பேப்பர் விளம்பரம் தான் இணைப்பில் உள்ளது, சில மாதங்களுக்கு முன் முகநூலில் நண்பர்கள் பதிவேற்றம் செய்து இருந்ததை உஷாராக பிடித்துக் கொண்டேன்.
கல்லூரியில் படிக்கும் போது முதன் முதலாக நவராத்திரியை பார்த்தேன், இத்தனைக்கும் தேர்வுகள் நடந்துக் கொண்டிருந்த நிலையிலும் முதல் நாள் நான் பார்த்து விட்டு மறுநாள் நண்பர்களையும் அழைத்துச் சென்று காண்பித்தது, பார்த்த அனைவரும் அளவிலாத மகிழ்ச்சிக் கடலில் திகைத்துப் போனது என்றென்றும் நினைவை விட்டு நீங்காத ஒன்று,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9c&oe=5B076D1B
athavan ravi
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e6&oe=5B00EB60
.................................................. .................................................. ....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5B08E993
vaannila vijayakuimar
உங்களுக்குத் தெரியுமா?
1931 அக்டோபர் 31 அன்று வெளியான
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' முதல் கறுப்பு-வெள்ளைப் படங்களின் காலக்கட்டம் முடிந்த 1979 ஆம் ஆண்டுவரை, தமிழில் (இந்தியாவிலேயே)
கறுப்பு-வெள்ளையில் முதன்முதலாக 100 படங்களில் நாயகனாக நடித்து, அதில் 50க்கும் மேற்பட்ட வெற்றிக் காவியங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே....
இந்த யுகம் முடியுமட்டும் எவராலும் இனி வெல்ல முடியாத வரலாற்றுச் சாதனையை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.
அடுத்தத் தலைமுறை அறிய வேண்டிய செய்தி இது. அதிகம் பகிருங்கள் தோழர்களே ...
வெற்றிப் படங்களின் பட்டியல் மட்டும்....
1. பராசக்தி 294 நாட்கள்
2. மனோகரா 156 நாட்கள்
3. சம்பூர்ண ராமாயணம் 165 நாட்கள்
4.பாகப்பிரிவினை 216 நாட்கள்
5. படிக்காத மேதை 153 நாட்கள்
6. பாவமன்னிப்பு 177 நாட்கள்
7. பாசமலர் 176 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா 182 நாட்கள்
8அ. SCHOOL MASTER (Kannada) 188 Days
9. திரும்பிப்பார் 116 நாட்கள்
10. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி 105
11. தூக்குதூக்கி 103 நாட்கள்
12. எதிர்பாராதது 100 நாட்கள்
13.காவேரி 100 நாட்கள்
14. மங்கையர்திலகம் 100 நாட்கள்
15. தெனாலி ராமன் 101 நாட்கள்
16. பெண்ணின் பெருமை 105 நாட்கள்
17. அமரதீபம் 125 நாட்கள்
18. மக்களைப் பெற்ற மகராசி 122 நாட்கள்
19.வணங்காமுடி 100 நாட்கள்
20. தங்கமலை ரகசியம் 105 நாட்கள்
21. பாக்கியவதி 106 நாட்கள்
22. உத்தமபுத்திரன் 140 நாட்கள்
23. பதிபக்தி 100 நாட்கள்
24. அன்னையின் ஆணை 101 நாட்கள்
25. சபாஷ் மீனா119 நாட்கள்
26. காத்தவராயன் 105 நாட்கள்
27. தங்கப்பதுமை 102 நாட்கள் ( சேலம் மற்றும் மதுரையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியது)
28. மரகதம் 100 நாட்கள்
29. இரும்புத்திரை 156 நாட்கள் (ஷிப்டிங்கில்
230 நாட்கள்)
30. தெய்வப்பிறவி 121 நாட்கள்
31. விடிவெள்ளி 104 நாட்கள்
32. பாலும் பழமும் 139 நாட்கள்
33. கப்பலோட்டியதமிழன் 102 நாட்கள்
34. பார்த்தால் பசிதீரும் 105 நாட்கள்
35. படித்தால் மட்டும் போதுமா 112 நாட்கள்
36. பந்தபாசம் 100 நாட்கள்
37. ஆலயமணி 105 நாட்கள்
38. இருவர் உள்ளம் 126 நாட்கள்
39. அன்னை இல்லம் 104 நாட்கள்
40. பச்சை விளக்கு 105 நாட்கள்
41. கை கொடுத்த தெய்வம் 108 நாட்கள்
42. நவராத்திரி 108 நாட்கள்
43. சாந்தி 100 நாட்கள்
44. மோட்டார் சுந்தரம்பிள்ளை 100 நாட்கள்
45. இருமலர்கள் 100 நாட்கள்
46. கலாட்டா கல்யாணம் 106 நாட்கள்
47. என்தம்பி 103 நாட்கள்
48. எங்க ஊர் ராஜா 105 நாட்கள்
49. உயர்ந்த மனிதன் 105 நாட்கள்
50. தெய்வமகன் 105 நாட்கள்
51. திருடன் 98 நாட்கள்
52. வியட்நாம் வீடு 111 நாட்கள்
53. ராமன் எத்தனை ராமனடி 103 நாட்கள்
54. குலமா குணமா 118 நாட்கள்
55. பாபு 114 நாட்கள்
56. ஞானஒளி104 நாட்கள்
57. தவப்புதல்வன் 100 நாட்கள்
இவை தவிர்த்து பணம், அன்பு, புதையல், தங்கை, தங்கைக்காக,குறவஞ்சி உள்ளிட்ட பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 83 முதல் 91 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன.
இதையெல்லாம் முறியடிக்க இனி எந்த நடிகரின் படங்களாலும் முடியாது என்பது உறுதியான ஒன்று.
ஒருவேளை நம் அய்யனே மறுபடியும் அவதாரமெடுத்து வந்தால் முடியுமோ!?
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...93&oe=5B4B137D
abdul khadar abdul salam
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...46&oe=5B13904F