http://i50.tinypic.com/24ffmuw.jpg
நம்நாடு படத்திலிருந்து
Printable View
http://i50.tinypic.com/24ffmuw.jpg
நம்நாடு படத்திலிருந்து
கோவையில் நமது தலைவரின் படங்கள் குறித்த தகவல்கள் நண்பர் திரு ஹரிதாஸ் அவர்களிடம் இருந்து அலைபேசியில்.
ராயல் திரை அரங்கில் தாய்க்கு பின் தாரம் இன்று மட்டும் வசூல் 25,000/-.
(தினசரி நான்கு காட்சிகள்)
டிலைட் திரை அரங்கில் தொழிலாளி அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது.
(தினசரி மூன்று காட்சிகள்)
http://i46.tinypic.com/xx7gm.jpg
மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக எம்.ஜி.ஆருக்கு சென்னையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியாக சீர்காழி சிவ சிதம்பரத்தின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடைக்கு வந்த எம்.ஜி.ஆர். சிவசிதம்பரத்தின் அருகில் போய் அமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே சிவசிதம்பரம் பண்டு தமிழ் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன் என்ற பாரதிதாசன் பாடலை எம்.ஜி.ஆரைச் சுட்டிக்காட்டி பாடியது வள்ளுவர் கோட்டம் ஆரவாரத்தில் அதிர்ந்தது. இசைக் கச்சேரிகளில் எம்.ஜி,ஆர். தரையில் அமர்ந்து ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார் என்பதற்கு இச்சம்பவம் ஒர் உதாரணம்.
ஆனந்தவிகடனில் இருந்து
மதுரை சுந்தரபாரதி ஓர் சிறந்த கவிஞர். இவர் தொழுநோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். தொழுநோயின் கொடுமையை நன்கு உணர்ந்த அவர், அந்த நேயினால் பீடிக்கப்பட்ட இதர நோயாளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய திட்டமிட்டார். தான் சிகிச்சை பெற்ற அதே செங்கல்பட்டுக்கு அடுத்த பாரதபுரத்தில் அன்பு தொண்டு நிலையம் என்ற பெயரில் ஓர் நிறுவனத்தை 1942ல் ஸ்தாபித்தார். அதோடி தனது உடல் நோயுடனே அந்நிலையத்தை வெகு சிரமத்துடன் நடத்தி வந்தார். தமிழக அரசு வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது. இது குறித்து 1978ல் கவிஞர் சுந்தரபாரதி தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு விண்ப்பித்த ஓர் கடிதத்தில்
ஆட்சியினர் எம்மட்டில்
ஆதரித்தாலும் பணத்தைக்
காட்சிதரும் நோயினருக்குக்
கஞ்சி தரும் மாட்சிமிகு
தொண்டுக்கே ஆக்கவேன்
சொந்தமா யான் ஏதும்
உண்டுகளிக்கக் கொள்ளேன் - ஓம்
என மனம் திறந்து குறிப்பிட்டார்.
http://i49.tinypic.com/16baaon.jpg
1979 ஜனவரி 15ஆம் தேதி வள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சுந்தரபாரதிக்கு பரிசளிக்க வந்தபோது மேடைக்கு தொழுநோயுடன் பிடித்து அழைத்து வந்த கவிஞரின் செயலாளர் எம்.ஆர். நரசிம்மன் புரட்சித் தலைவரிடம், கவிஞர் சுந்தரபாரதி தேசபக்தர் சுப்பிரமண்ய சிவாவின் பிரதம சீடர் என அறிமுகப்படுத்தியதுமே, எம்.ஜி.ஆர் அவர்கள் கவிஞரை கட்டித் தழுவி பரிசளித்தபோது அனைவருமே வியப்படைந்தனர்.