யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1958ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா?
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.
1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.
இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.
இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.
அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.
தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.