-
நாளை திருவோணம் (ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தில் தமிழ்நாடு தீபாவளி பண்டிகை போல் கொண்டாடப்படும் ) . இந்த மாநிலத்தையே god 's own country என்று சொல்வார்கள் . மகாபலி சக்கரவர்த்தி எல்லா வீடுகளுக்கும் வருவதாக ஐதீகம் .
Onam Special Show | Mahabali [1983]
பிரேம் நசிர், ஜெயபாரதி ,சோமன் ,தேசிய நடிகை உன்னிமேரி (தீபா),ராஜ்குமார் (ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் மற்றும் நடிகை லதாவின் அன்பு தம்பி ) போன்ற பெருங்கூட்டம் கொட்டம் அடித்த படம்
https://oldmalayalamcinema.files.wor...film.jpg?w=665
this was one of the rare movies where you saw Actor MG Soman in a mythological role. Sree Murugalaya Films banner, the movie had its Screenplay written by Palani Swami and Dialogues by the one and only N Govindankutty. The best part of the movie? MG Soman as Narada ! :) .
https://oldmalayalamcinema.files.wor...ng?w=300&h=226https://oldmalayalamcinema.files.wor...oned.png?w=665https://oldmalayalamcinema.files.wor...gdom.jpg?w=665https://oldmalayalamcinema.files.wor...atue.jpg?w=665
மாதுரி குரலில் ச்வர்ணங்கள் பாடல்
http://www.youtube.com/watch?v=1PTMtyT7s3Q
வாணி ஜெயராம் கிருஷ்ணசந்தர் குரல்களில்
http://www.youtube.com/watch?v=AmWpUJ63vZ0
-
எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் இருந்து எண்பதுகளின் முற்பகுதிவரை தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர்களில் நடிகை சுஜாதாவும் பாடகி ஜென்ஸியும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவருமே மலையாளத்திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் இருவரையும் சுவீகரித்துத் தக்க அங்கீகாரத்தைத் கொடுத்ததென்னவோ தமிழ்த்திரையுலகம் தான். அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதாவும் திரிபுர சுந்தரி மூலம் ஜென்ஸியுமாக தமிழ்த்திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்கள். இருவரையும் இணைத்த புள்ளியாக "பூந்தளிர்" என்ற படத்தில் வரும் "ஞான் ஞான் பாடணும்" பாடலைச் சொல்லலாம். இதற்கு முன்போ பின்போ சுஜாதாவுக்காக ஜென்ஸி பாடியதாக நினைவிலில்லை. இந்த விசேஷம் மட்டுமல்ல பாடல் முழுதுமே மலையாள வரிகளைத் தாங்கி வந்த சிறப்பையும் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு.
ஜெமினி தயாரித்து நடித்த கே.பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் வரும் "மந்தார மலரே " தவிர மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாடல்களைத் தவிர " நெஞ்சினிலே நெஞ்சினிலே" (உயிரே) , "லாலா நந்தலாலா" ( நரசிம்மா), திருவோணம் திரு நாளும் (கும்பகோணம் கோபாலு) பாடல்களிலும் ஒரு சில மலையாள வரிகளை உள்ளடக்கி வந்திருக்கின்றன.
இசைஞானி இளையராஜாவின் இசையில் "பூந்தளிர்" படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியே சிலாகிக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. "ஞான் ஞான் பாடணும்" பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார்.
இளையராஜாவின் ஆரம்பகாலப்படங்களில் கணிசமான பங்களிப்பை எம்.ஜி.வல்லபன் வழங்கியிருக்கிறார். எம்.ஜி.வல்லபனே இயக்கிய தைப்பொங்கல் போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் இவர் கொடுத்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை. ராஜா நினைத்தால் ஒரு மலையாளக் கவிஞரை எழுத வைத்திருக்கலாம். எம்.ஜி.வல்லபனுக்கான விசேட அழைப்புக்குக் கண்டிப்பாகக் காரணமிருக்கும். அந்த வாய்ப்பையும் நிறைவாகவே வழங்கியிருக்கிறார் இவர்.
"மரத்தைச் சுற்றிப் பாடும்" மரபோடு சரி சமமாகப் பயணப்பட்டது காதலியோடு "ஒளித்துப் பிடித்து தேடி விளையாடும்" பாடல்கள். குறிப்பாக இந்தப் பாடலை ஒத்த பாடல்களாக சம காலத்தில் வந்த "கண்டேன் எங்கும்" (காற்றினிலே வரும் கீதம்), மற்றும் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" (உல்லாசப் பறவைகள்) வகையறாவில் அடக்கக்கூடியது இந்தப் பாட்டு.
ஜென்ஸிக்குக் கிடைத்த இந்த இரண்டு பாடல்களில் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" இன்னொரு திசையில் உச்ச ஸ்தாயியில் பயணப்படும் போது இந்தப் பாடல் அடக்கமாக வந்து மனதைக் கவர்கின்றது. இந்த இரண்டு பாடல்களையும் இன்னொருவருக்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றால் அவர் ஸ்வர்ணலதா ஒருவர் தான். ஓணம் பண்டிகை நாளில் இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்.
http://www.youtube.com/watch?v=0PXGyomZF9M
-
சிங்களப் படவுலகின் புகழ் பெற்ற நடிகை கீதா குமாரசிங்கே படங்கள். (ஸ்ரீலங்கா பத்திரிக்கைகளிலிருந்து)
இவர் 'மோகனப் புன்னகை' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக கவர்ச்சியாக வருவார்.
'தென் இலங்கை மங்கை' என்ற அருமையான பாடல் இவருக்கு உண்டு. நல்ல அழகான நடிகை. இவரது பெண் நதி குமாரசிங்கே இப்போது நடிகையாகவும் மாடலாகவும் கலக்குகிறார்.
http://1.bp.blogspot.com/_Kqm3dfxyOi...k/s1600/z1.jpg
http://3.bp.blogspot.com/_Kqm3dfxyOi...tha%2B(10).jpg
http://3.bp.blogspot.com/_Kqm3dfxyOi...etha%2B(7).jpg
http://1.bp.blogspot.com/_zvjc7jPvmt...he%2B-%2B1.jpg
http://www.geethakumarasinghe.com/site/covers/l.jpg
-
-
நடிகர் திலகத்துடன் கீதா 'மோகனப் புன்னகை' படத்தில்.
http://i.ytimg.com/vi/GQJw_CQm8WY/maxresdefault.jpg
'தென் இலங்கை மங்கை
வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள்'
https://www.youtube.com/watch?v=f6ef...yer_detailpage
-
பாடல்: தென் இலங்கை மங்கை
திரைப்படம்: மோஹனப் புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: janaki
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல்
என் மீது பாய்கின்றதோ
ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல்
தானென்று எண்ணி தரை வந்து சேரும்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம்
தாய் போல தாலாட்டுதோ
ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம்
பூம்பாவை நெஞ்சில் புதுக்கோலம் போடும்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
-
-
திரு கார்த்திக் சார் அவர்கள் நடிகர் திலகம் திரியில் பதிவு இட்ட மோகனபுன்னகை - மீள் பதிவு
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.
-
-