viswajeet my fav.. enna romance .. wow..
Printable View
viswajeet my fav.. enna romance .. wow..
பொங்கும் பூம்புனல்
ஆஹா...ஆஹா.. அந்த கிராமஃபோன் இசைத்தட்டைக் கேட்பதில் இருக்கும் சுகமே தனி... என்று நாம் அனைவருமே இன்புறுவோமே.. அந்த நினைவை மீட்டும் வண்ணம் இதோ..
நமது பேராசிரியர் சேக்கரக்குடி கந்தசாமி அவர்களின் தயவில்..
துவக்க இசையுடன் அத்திக்காய் அத்திக்காய் பாடல்... 78 கிராமஃபோன் இசைத்தட்டு வடிவத்தில்..
http://www.mediafire.com/download/j7...+RECORDING.mp3
பேராசிரியர் சார் மிக்க நன்றி. மீண்டும் மீண்டும்..
From kaalam maari pochchu(1955)
yEru pootti povaaye aNNe chinnaNNe....
http://www.youtube.com/watch?v=9RJfMjq3fcU
From Rojulu maaraayi(1955)
http://www.youtube.com/watch?v=4uWIX1pSt_0
From Bombai ka Babu (1960)
http://www.youtube.com/watch?v=-0dPCZencLo
yEru pootti povaaye aNNe chinnaNNe.. could have been yeru pootti povaaye paiyaa chinna paiyaa... where I am the chinna paiyan. As I mentioned earlier I used to visit my ancestral villages during summers. One summer I stayed till the beginning of the farming season. For some unknown reason the village gave me the honour of inaugurating the season. That meant ploughing the land. The problem was that the handle of the plough was as tall as I was. I held it with both hands. An adult was standing by me and escorting me to make sure the handle did not slip from hands. I went round the paddy field once just scratching the surface! :)
I visited the village three years back. No yEru! :( I saw tractors and other farm equipment. What surprised me more was a minibus dropping kids attending an English medium school three miles away! :) That brought back memories of my debating medium of instruction in colleges during my engineering college years (1958). My team supported English medium in colleges and Tamil medium till college. When I finished my opening statement the leader of the opposition made this comment about me: " paal maNam maaRaa baalakan" ! :lol: I took it as a compliment ! :)
Next time I visit India I will meet him and as him about Tamil medium! :lol:
குட்மார்னிங்க் ஆல்
ராஜ் ராஜ் சார்.. நாஸ்டால்ஜியா சுவையோ சுவை
கல் நாயக் ஜி.. நன்றி.. நேற்று ந.காட்சி பார்க்க முடியவில்லை..இன்று பார்க்கிறேன்..
வாசு சார்.. நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்களே..எங்கே க்ருஷ்ணாஜி..
Rajesh Ji / Vasu Ji,
He is Biswajeet. Apart from the song you have posted, there will be another superhit song - of course sung by the inimitable Mohd. Rafi - Pukarta Chala Hoon from Mere Sanam. Two songs from Bees Saal Baad - sung by another Bengali (Biswajeet also is a Bengali) - the great Hemant Kumar, Singer-cum-Composer
Vasu Ji - In fact, Biswajeet was once used to be called poor man's Shammi Kapoor (like Vijayakant once used to be called as poor man's Rajini). He, Uttam Kumar and Sourav Ganguly will look almost alike!
Regards,
R. Parthasarathy
A rare song to hear. IRs music. Malaysia Vasudevan & Uma Ramanan Singers. Film: Anbe Odi Vaa.
https://www.youtube.com/watch?v=dsIS...E1F23443CA8AF5
‘எங்கே போய்விடும் காலம்?..’
திரு.வாசு சார், திரு.ஜி.கிருஷ்ணா சார், எப்படி இருக்கிறீர்கள்?
நண்பர்களோடு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்து விட்டு, சாலையோர கடையில் டிபன் சாப்பிட்டு, ஆள் அரவமற்ற சாலையில் மூடியிருக்கும் ஏதாவது ஒரு கடை வாசலில் அமர்ந்து படத்தை பற்றி அலசி, அதிகாலையில் டீக்கடையில் பால் குடித்தபின், இனிய நினைவுகளோடு படுக்கச் சென்ற, இழந்து விட்ட அந்த சுகமான அனுபவங்களை இங்கே மீண்டும் பெற முடிகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி.
இங்கே உள்ள எல்லாருமே சிறப்பாக எழுதுகிறீர்கள். எந்த பயிற்சியோ, வாய்ப்போ இல்லாத நிலையில் நீங்கள் அற்புதமாக எழுதுவது வியப்பளிக்கிறது. திரு.வாசு சார், பொய் கலப்பற்ற அபரிமிதமான நினைவாற்றல் உங்கள் எழுத்துக்களுக்கு கூடுதல் பலம். திரு.ஜி.கிருஷ்ணா சாரின் அனுபவங்கள் அருமை. திரு.சின்னக் கண்ணன் சாரின் அட்டகாசம் தாங்க முடியல. குறிப்பாக, பல் டாக்டரிடம் அவர் சென்றபோது, ‘தாச்சுக்க சொல்லி ஆ காட்டு...’, இன்னொரு பல்லில் கேவிட்டி இருந்ததைப் பார்த்ததும் (வருமானத்தை நினைத்து) டாக்டரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி, ‘பெண்களை விட ஆண்களே அதிகம் உருகுவார்கள் போலிருக்கிறது... ஸோ, நான் என்ன சொல்ல வர்றேன்னா......’ என்று அவர் இடைவெளி விட்டதும், என்ன சொல்லப் போகிறார்? என்று ஒரு விநாடி மனத்துக்குள் கேள்வி எழும்போதே, கண்கள் அடுத்த வார்த்தையில் பாய, அங்கே ‘அதான்..உங்களுக்கே தெரியுமே’ என்று இருந்ததைப் பார்த்ததும் வாய்விட்டு சிரித்தேன். கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடற்றவை என்றாலும் நண்பர் திரு.கோபாலின் எழுத்துக்களும் எனக்கு பிடிக்கும்.
திரு.சின்னக் கண்ணன் சிரிக்க வைக்கிறார் என்றால் திரு. ஐதராபாத் ரவி அவர்கள் பெருந்தலைவர் பற்றிய கட்டுரையை வெளியிட்டு கண்கலங்க வைத்து விட்டார். (மக்கள் திலகம் திரியில் ‘தரை மேல் பிறக்க வைத்தான்... பாடலுக்கு தங்கள் விமர்சனம் சூப்பர் சார். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்) அந்த கட்டுரையை வெளியிடும்போது பாடல்களில் இருந்து சற்று விலகி அதை எழுதுவதாக தெரிவித்துள்ளார். இல்லை திரு.ரவி சார். அருமையான பாடலை தெரிவு செய்ய நீங்கள் வழிகாட்டியிருக்கிறீர்கள்.
நேற்று (டிசம்பர் 3) போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 30வது ஆண்டு நினைவுநாள். 1984ம் ஆண்டு இதே நாளில் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து வெளியான நச்சுவாயுவால் இறந்தோர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். பார்வை இழந்தும் ஊனமடைந்தும் பாதிக்கப்பட்டோர் லட்சக்கணக்கில். இந்த துயரம் நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக தப்பிய (தப்ப வைக்கப்பட்ட) யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சனும் சமீபத்தில் காலமாகி விட்டார். ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதைவிட கொடுமை, போபாலில் பூட்டியுள்ள அந்த நிறுவனத்தில் இன்னும் நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருக்கின்றன. சுற்றுச் சூழலுக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் இப்போதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, முதல்வராக பதவியேற்ற பின், ‘கொல்லைப்புற வழியாக (சட்ட மேலவை) வர விரும்பவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறி குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திரு.காமராஜர். அந்த தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்று கூறி காமராஜருக்கு முழு ஆதரவு அளித்தார் பேரறிஞர் அண்ணா. இப்படி மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக, அய்யா பெரியாரால் ‘பச்சைத் தமிழர்’ என்று புகழப்பட்டவராக, ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று புரட்சித் தலைவரால் போற்றப்பட்டவராக.... அன்று ஒரு மண்ணாங்கட்டியின் கண்ணீரைத் துடைக்க ஒரு பெருந்தலைவர் இருந்தார்.
இன்று, தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை அறியாதவர்களாக, ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணராதவர்களாக, கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் இந்த நாட்டிலே இருக்கும் கோடிக்கணக்கான ‘மண்ணாங்கட்டி’களின் துயரைத் துடைக்க எந்தத் தலைவர் வரப் போகிறார்? காலம் பதில் சொல்லட்டும்.
அதுவரை.. இந்தப் பாடல் நம்மை ஆற்றுப்படுத்தட்டும். மக்கள் திலகம் நடித்த ‘தாழம்பூ’ படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். டி-ஷர்ட்டில் மக்கள் திலகம் மட்டுமின்றி, கே.ஆர்.விஜயாவின் பொய்க்கோபமும் அழகு. எனக்கு பாடல்களை தரவேற்றத் தெரியாது. நண்பர்கள் தரவேற்றினால் அனைவரும் பார்த்து ரசிக்கலாம். திரு. டி.எம்.எஸ்.சின் கம்பீரக் குரலில், திரு. கே.வி.மகாதேவனின் இசையில், வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளில், கேட்போருக்கு நம்பிக்கையூட்டும் பாடல்...
‘எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்...’
நம்பிக்கையுடன் காலம் வரும்வரை காத்திருப்போம்..... நம்பிக்கைதானே வாழ்க்கை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Here's another one of (my favorite) Biswajeet songs...
https://www.youtube.com/watch?v=p2MWlgXYAzU
RD kalakittel
my fav and ur fav... super :thumbsup: