http://i61.tinypic.com/4jlumq.jpg
Printable View
brammapuram
http://i62.tinypic.com/mm4vnd.jpg
aruparuthi
http://i60.tinypic.com/10zv6lv.jpg
அருமை திரு.செல்வகுமார் சார். ஒவ்வொரு ரசிகரின் எண்ணத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். ஆண்டுதோறும் தலைவர் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவது அதை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிக்கும் கூட வர்த்தக ரீதியில் லாபகரமானதுதான். வேந்தர் டி.வி.யில் சமீபத்தில் தடம் பதித்தவர்கள் நிகழ்ச்சியில் தலைவர் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தலைவர் பிறந்த நாளன்று தனியார் தொலைக்காட்சிகளில் தலைவரின் 12 படங்கள். இதிலும் யாரும் செய்யாத புதிய சாதனை படைத்துள்ளார் தலைவர். அதைத் தவிர சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு. திமுக குடும்பத்தை சேர்ந்த சன் லைப் சேனலில் கூட தலைவரின் 2 படங்கள் மற்றும் பாடல்கள். 30 நிமிடத்துக்கு ஒருமுறை தலைவரின் குரலில் அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை அவரே சொல்வதை ஒலிபரப்பியதோடு ‘என்றும் நம் நினைவில்’ என்று போட்டு மரியாதை செய்தனர். தொலைக்காட்சிகளில் இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு, வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் படங்களை சிரமம் பார்க்காமல் அலைந்து படம் பிடித்து தரவேற்றியதற்கும் தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பை காட்சிப்படுத்தியதற்கும் மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
விஜய் டி.வி. மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை தமிழகம் கண்டு களித்தாலும் யு டியூப் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அதை தொடர்ந்து பார்த்து வருவதற்கு அவர்களது உற்சாகமான பின்னூட்டமே சான்று. 18 வயதான பெண்களைக் கூட தலைவர் கவர்கிறார் என்னும்போது அவர் புகழ் தலைமுறைகள் கடந்தும் வாழும். உலகத் தமிழர்களின் கருத்துக்களை பதிவேற்றியதற்கு நன்றி திரு.எஸ்.வி.சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மன்னாதி மன்னன் - 3
‘நம்பிக் கெட்டவர் இல்லை’
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் எல்லாரது பேச்சுமே நெகிழ வைத்தது, கவர்ந்தது என்னும்போது இயக்குநர் கரு.பழனியப்பன் மட்டும் விதிவிலக்கா என்ன?
புரட்சித் தலைவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார், மக்கள் நெஞ்சில் மன்னாதி மன்னனாக வாழ்கிறார் என்பதை தலைப்பே உணர்த்துவதாக குறிப்பிட்ட அவர் கூறிய ஒரு செய்தி, தலைவர் எப்படி நன்றி மறக்காதவர் என்பதையும், அவரை நம்பி அவருடன் சேர்ந்து விட்டால் எப்படி அவர்களை உயர்த்துவார் என்பதையும் சுட்டிக்காட்டியது.
சாலிவாஹனன் என்ற படத்தில் தலைவர் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் கதாநாயகன் வேறொருவர். படத்தில் கத்திச் சண்டை காட்சியில் கதாநாயக நடிகரைவிட தலைவர் சிறப்பாக கத்திச் சண்டை போட்டிருக்கிறார்.(தெரிந்ததுதானே). இது அந்த கதாநாயகனுக்கு பொறுக்கவில்லை. இயக்குநரிடம் சொல்லி குறைபட்டிருக்கிறார். இயக்குநர் உடனே அந்தக் கதாநாயகனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
திறமை இருந்தும் ஒடுக்கப்படுகிறார் என்றால் தலைவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு தடைகளை, ஒதுக்கப்படுதலை, அவமானங்களை மீறி தலைவர் உயர்ந்திருக்கிறார் பாருங்கள். தனது வேதனையை அந்த படத்தில் பணியாற்றிய ஸ்டன்ட் நடிகர் ஒருவரிடம் சொல்லி குறைபட்டுள்ளார் தலைவர்.
அந்த ஸ்டன்ட் நடிகரும் ‘கவலைப்படாதீர்கள். உங்களுக்கு திறமை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. நீங்கள் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார். காலம் ஓடுகிறது. ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க தலைவர் ஒப்பந்தமாகிறார். அந்தப்படத்தில் தலைவருக்கு கத்திச் சண்டை காட்சி. ஒரு குறிப்பிட்ட ஸ்டன்ட் நடிகரை அந்தக் காட்சியில் தன்னுடன் நடிக்க வைக்கலாம் என்று தலைவர் சிபாரிசு செய்திருக்கிறார். அதன்படி, அந்த ஸ்டன்ட் நடிகரும் சண்டைக்காட்சிக்காக ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்தான் தலைவருக்கு சாலிவாஹனன் படத்தின்போது ஆறுதல் கூறியவர்.
இப்படி தான் உயரும்போது (இத்தனைக்கும் அதுதான் கதாநாயகனாக முதல் படம்) தனக்கு ஊக்கம் கொடுத்து, ஆறுதல் சொல்லியவருக்கு வாய்ப்பு வழங்கி அவரையும் உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறாரே. அவர்தான் பொன்மனச் செம்மல்.
அந்த ஸ்டன்ட் நடிகர் யார் தெரியுமா? சாண்டோ சின்னப்பா தேவர். தொடர்ந்து படங்களில் ஸ்டன்ட் நடிகர் வாய்ப்பு பெற்றதோடு, தலைவரை வைத்து தாய்க்குப் பின் தாரம் படத்தை எடுத்து பட முதலாளியாகவும் உயர்ந்தார் சின்னப்பா தேவர். இப்படி தன்னை அண்டியவர்களை உயர்த்துபவர் தலைவர்.
தலைவரோடு தொடர்புடைய சிலர் கெட்டிருக்கலாம். மறுக்கவில்லை. நாடோடி மன்னனில் தலைவரே கூறுவார். ........... ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை’
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://s27.postimg.org/suecs2uab/151237921.jpg
MAALAIMALAR
http://s16.postimg.org/ko4i48v9h/DSC00915.jpg
VARIETY HALL ROAD, COIMBATORE
கோவையில் தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தலைவர் மீதுள்ள பற்றின் காரணமாக திருப்பூரில் இருந்து கோவை சென்று புகைப்படங்கள் எடுத்து அவற்றை தரவேற்றும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்