-
கவிஞருக்கு (கவியரசு கண்ணதாசன் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவுக்கு என்னையும் கூப்பிட்டார் கவிஞர். ஆனால் என்னால் போகமுடியவில்லை. என்னுடைய மகன்கள் எல்லாம் நல்லா வரணும்கிறதுக்காக நான் சில படங்கள் எடுத்து நஷ்டமடைந்து மனநிம்மதி இல்லா ஒரு சூழ்நிலை அப்போது.
கவிஞர் அமெரிக்கா போய் இயறங்கினதுமே, என்னங்க நீங்க மட்டும் வர்றீங்க. எம்.எஸ்.வி யை அழைச்சுகிட்டு வரலியான்னு ரொம்ப பேர் கேட்டாங்களாம். இந்த கதவலை போன் மூலமாக என்கிட்ட சொன் கவிஞர் உனக்கு விசால்லாம் போட்டு வச்சிருக்கேன். உடனே கிளம்பி வான்னாரு. வரமுடியாத சூழ்நிலையை தயக்கத்தோட சென்னேன்.
அங்கே ஆஸ்பத்திரியில அவரோட குடும்பத்தினர் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட போதிலும், என்னைப் பத்தியே இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுகிட்டு இருந்திருக்கார். இங்கேயிருந்து கவிஞரோடு போன டாக்டர் அப்போ முதல்வராயிருந்த எம்.ஜி.ஆரோடு உடனே தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் என்னோடு தொடர்பு கொண்டார்.
விசு நீங்க அமெரிக்காவுக்கு உடனடியா போறீங்களா போகமுடியுமா என்று எம்.ஜி.ஆர் கேட்டார். இல்லீங்க இப்ப போகமுடியாத சூழ்நிலையில் இருக்கேன்னு நான் சொன்னேன்.
உடனே எம்.ஜி.ஆர் அப்ப ஒரு காரியம் பண்ணுங்க விசு. நீங்க பாட்டுக்கு ட்யூன் போடற மாதிரியும் கம்போஸ் பண்ணு மாதிரியும் கவிஞரோட தமாஷா பேசி விளையாடற மாதிரியும் ஒரு காஸெட் ரெடி பண்ணி அனுப்புங்கன்னு சொன்னார். அதே போல ஒரு காஸெட் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சோம். எங்களோட துருதிர்ஷ்டம் அந்த காஸெட் போய் சேர்றதுக்குள்ள கவிஞர் போய் சேர்ந்துவிட்டார்.
ஆனந்த விகடன் இதழில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் எழுதிய நான் ஒரு ரசிகன் தொடரிலிருந்து.
-
எம்.ஜி.ஆர் கூட நான் ரெண்டு படத்திலதான் நடிச்சிருக்கேன். ஆனா அவரைப் பத்தி சொல்லணும்னா எவ்வளவு வேணும்னாலும் செல்லிக்கிட்டே இருக்கலாம். அவரைப்பத்தி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். அவரு அமெரிக்காவுல இருந்து சிகிச்சை முடிஞ்சு வந்தவுடனே நான் அவரைப் பார்க்கப் போனேன். அப்ப அவரு ஒளிவிளக்குல இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு பாட்டை நீ பாடுற மாதிரி வர்ற சீனை அங்கே பார்த்தேன். நல்லா இருந்துச்சு. இங்க கூட எங்க பார்த்தாலும் அந்தப் பாட்டுதான் ஒலிச்சிகிட்டு இருந்துதாமே. என்று ஒரு குழந்தையைப் போல் கையால் சைகை செய்து கொண்டே கேட்டப்போ நான் நடிச்ச படம் அப்பத்தான் ரிலீசாகி அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கற மாதிரி மகிழ்ச்சி தாங்க முடியலை. அவரு உடம்பு நல்லா இருந்த சமயம் ஒரு முறை அவரை மீட் பண்ணினேன். அந்த டைம்ல நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். அதை எப்படியோ எம்.ஜி.ஆர் தெரிஞ்சுகிட்டு நான் ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லுங்கன்னார் அவர் திடீர்னு அப்படி கேட்டவுடன் அவருகிட்ட எதுவுமே எனக்கு கேக்கத் தோணலை. என் கஷ்டமே குறைஞ்சிட்ட மாதிரி ஆயிடுச்சு. அதை நினைவுல வச்சிருந்து , உடம்பு சரியில்லாத அந்த நிலையில் கூட அன்னைக்கு மாதிரியே ஏதாவது கஷ்டம்னா சொல்லிட்டுப் போன்னாரு. அப்பவே கேட்க சங்கடப்பட்ட நான் இந்த நிலையிலா கேட்கறதுன்னு திரும்பி வந்துட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அவரை இன்னொருத்தர்கூட ஒப்பிடவே கூடாதுங்க. அவர் ஒரு தனிப்பிறவி.
பாக்யா வாரஇதழுக்கு சௌகார் ஜானகி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.
-
ஒரு நடிகன் எப்படி எல்லாம் நடிக்க முடியும் என்பதை விட மக்களுக்காக என் என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் தான் நடித்த படங்கள் மூலம் தன் கொள்கைகளைத் தெரிவித்தவர். முன்பெல்லாம் நடிகர்கள் என்றால் கூத்தாடிகள் என்று இழித்துப் பேசப்படுவதோடு பெண் கூட கொடுக்க மாட்டார்கள். அந்த நிலையை மாற்றி நடிகர்களுக்க தனிப்பெருமை ஏற்படச் செய்த எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
சினிவிசிட் இதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த்
-
எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிக்க அருகதை இருக்க வேண்டும். அந்த மனப்பக்குவம் இருக்கிறதா என்பதும் முக்கியம். தனக்கென்று ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் ஒரு கலைஞனின் ஆசை, பேராசையாக இருக்க வேண்டும். நான் எனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர் இடத்தை பிடிக்க முடியாது என்பதும் உண்மை. பிடிக்கக் கூடாது என்பது எனது நம்பிக்கை.
கமல்ஹாசன். சினிவிசிட் இதழுக்கு அளித்த பேட்டியில்
-
ராணி லலிதாங்கி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. நாடக மேடைகளில் பிரபலமாக இருந்த கதை அது. அதில் புரட்சி நடிகரைக் கதாநாயகராகவும், பானுமதியை கதாநாயகியாகவும் ஏற்பாடு செய்திருந்தனர் படத்தயாரிப்பாளர். ஆனால் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். ஏதாவது நடிப்பு ஊதியம் குறித்து தகராறா? டைரக்டரிடம் கருத்து வேறுபாடா? பானுமதியிடம் வருத்தமா? என்று பல கேள்விகள் பரபரப்போடு எழுந்தன. அவை எதுவும் இல்லை. கதையமைப்பில் கோளாறு என்று பிறகு தெரியவந்தது. ராணி லலிதாங்கி என்னும் பெண்ணுக்கு அடிமையாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம் எம்.ஜி.ஆருடையது. அதை அவர் விரும்பவில்லை. ஒரு பெண்ணுக்கு நான் எப்போதும் அடிமையாக இருக்க மாட்டேன் .எனவே இந்தப்படத்தில் நடிப்பதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். திருப்தி இல்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மறுத்துவிடுவார் எம்.ஜி.ஆர் .
சத்யா நாவல் வெளியிட்ட சத்யாவின் செல்வன் இணைப்பிலிருந்து.
-
சௌகார் ஜானகி நீண்ட நெடுங்காலமாகத் தன்னுடைய இளம் வயது முதல் ஒரு குணச்சித்திர நடிகையாக தமிழ்த்திரைப்படங்களிலும், வேறு மொழிப் படங்களிலும் நடித்து அழியாத புகழைப் பெற்றிருப்பவர். அவர் மெரிக்க நாட்டில் இருந்தாலும் கூட, இந்தப் பரிசைப் பெறுகின்ற முனைப்புடன் தமிழகத்திற்கு வந்திருப்பதும், கலையுலகத்திலே அவர் கொண்டுள்ள அந்த நல்ல தொடர்பும் அவர் படங்களில் எந்த பாத்திரம் ஏற்றாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி நடிக்கின்ற திறமையின் காரணமாக எம்.ஜி.ஆர் விருதினைப் பெறுகிறார். திரைப்படத் துறையில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமே இல்லை. எனவே அவருடைய பெயரால் விருதைப் பெறுகின்ற அவரை நான் வாழ்த்துகின்றேன்.
தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழாவில் கலைஞர் கருணாநிதி.
-
-
http://i50.tinypic.com/2hx0lg8.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து
-
http://i48.tinypic.com/16ou1w.jpg
வெளிவராத சாயா படத்திலிருந்து ஒரு காட்சி
-
http://i48.tinypic.com/i36j3r.jpg
மக்கள் திலகத்துடன் ஒப்பனையாளர் ராமதாஸ் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ராமதாஸ்