Originally Posted by
MGR Roop
MGR's benevolence
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
= கதிரவன் தொகுத்த ' வள்ளல் என்.எஸ்.கே. நூலிலிருந்து . புகைப்படம் : அண்ணன் Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து .
The article is from facebook.