http://cinema.dinamalar.com//tamil-n...-celebrate.htm
Printable View
50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!
அமரர் எம்ஜிஆரின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளைக்கு பொன்விழா எடுக்கிறார்கள். வரும் மார்ச் 15-ம் தேதி இந்த விழாவினை நடத்த எம்ஜிஆரின் ரசிகர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.
இனிய பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.
வசூல் மழை இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.
பொன்விழா தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.
சரோஜா தேவி இதில் ‘எங்க வீட்டு பிள்ளை' படத்தில் நடித்த சரோஜா தேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.
courtesy one india tamil
எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை 50–வது ஆண்டு விழாவை கொண்டாட திரளும் ரசிகர்கள்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ் போன்றோரும் நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே’ 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 1965–ல் இப்படம் வெளியானது.
தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15–ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் ஹாலில் இவ்விழா நடக்கிறது.
உரிமைக்குரல் மற்றும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தினர் இவ்விழாவை நடத்துகின்றனர். இதில் ‘எங்க வீட்டு பிள்ளைங படத்தில் நடித்த சரோஜாதேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.
உரிமைக்குரல் பி.எஸ்.ராஜூ, எம்.ஜி.ஆர். பிரதீப், எம்.எஸ்.மணியன், ஆர்.இளங்கோவன், கே.எஸ்.மணி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
courtesy malaimalar
http://i1170.photobucket.com/albums/...psibedivqu.jpg
நியாயமான கோபம்!!.......................
1966 - என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன். பிளட் பேங்கில் இருந்து பிளட் வரவேண்டும். கல்யாணி ஆஸ்பத்திரியில் கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்.
அன்னமிட்ட கை படத் தயாரிப்பாளரில் ஒருவரான சிவசாமி அய்யர் போன் செய்கிறார்.
“வாலி சார், கே.வி. மகாதேவன், கிருஷ்ணன் நாயர் எல்லாரும் வெயிட்டிங். ராமாவரத்தில் இருந்து சின்னவரும் புறப்பட்டு விட்டார்.பாட்டு நாளைக்கு ரிக்கார்டிங், மறுநாளே தேவிகுளம், பீர்மேடு புறப்படுகிறோம்..நீங்க உடனே வந்தாத் தேவலே”
“என்னால வரமுடியாது சார்! மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் நடக்கப் போறது, நான் டென்ஷன்ல இருக்கேன்” என்றேன்.
உடனே சிவசாமி அய்யர், “ஆபரேஷன் நீரா பண்ணப்போறீர்?” என்று சற்று நக்கலாகக் கேட்டதும், நான் கோபத்தின் உச்சிக்குப் போனேன்.
“போனைக் கீழே வையுடா; நான் கறி திங்கற பாப்பான், எங்கிட்ட வெச்சுக்காதே...உன் பாட்டும் வேணாம்,, ஒரு ம.....ம் வேணாம்” என்று கத்தினேன்.
“சின்னவர் வந்துட்டார்” என்றார் அவர்.
“நான் சொன்னதை வரிவிடாம அவர்கிட்ட சொல்லுய்யா! நான் யாரையும் நம்பி சென்னைக்கு வல்லே” என்று சீறினேன்.
மறுநாள் என் வீட்டுக்கு எம்ஜிஆர் போன் செய்து,”உங்க கோபம் நியாயமானது, அவர் அப்படிப் பேசியது தப்புத்தான்...ஆனா எனக்கு உங்க பாட்டு வேணும்..அவசரமில்லே” என்று சொல்லி விட்டு
மாலை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு வந்து என் மனைவியையும், குழந்தையையும் பார்த்துவிட்டு,குழந்தை கையில் ஒரு பவுன் காசை திணித்து விட்டுப் போனார்.
சான்றோர் சான்றோரே!!
.....”நினைவு நாடாக்கள்”.................கவிஞர் வாலி!!