தேவரின் செல்ல மகன்.
http://farm4.static.flickr.com/3361/...56cf87d4a7.jpg
வெள்ளிவிழா நாயகரிடமிருந்து 'வெற்றிவிழா' கேடயம் பெறும் கமல்
http://sphotos-a.xx.fbcdn.net/hphoto...89647376_n.jpg
தேவரின் செல்ல மகன்.
http://farm4.static.flickr.com/3361/...56cf87d4a7.jpg
வெள்ளிவிழா நாயகரிடமிருந்து 'வெற்றிவிழா' கேடயம் பெறும் கமல்
http://sphotos-a.xx.fbcdn.net/hphoto...89647376_n.jpg
நாயகனுக்கு மணமுடித்து மகிழும் தெய்வத் தம்பதியர்.
http://4.bp.blogspot.com/_5U8v84bnUy...0/image009.jpg
கோபால் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்... இணையத்தில் மிகவும் அபூர்வமாக...
http://www.youtube.com/watch?v=wjH6b...lcLpnIKC2q3h3A
Dear gopal sir,
wish you many more happy returns of the day.
நடிகர் திலகத்துடன் கமல் இணைந்த படங்களின் காட்சிகள்.
பார்த்தல் பசி தீரும்
http://padamhosting.com/out.php/i56647_PPT5.jpg
http://i1087.photobucket.com/albums/...art%20-2/p.jpg
சத்யம்
http://i1087.photobucket.com/albums/...%20-2/sa-1.jpg
நாம் பிறந்த மண்
http://i1087.photobucket.com/albums/...%20-2/naam.jpg
தேவர் மகன்.
http://www.shotpix.com/images/40102044197325487869.png
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
நடிகர் திலகத்தின் evergreen வெற்றிக் காவியமான "வசந்த மாளிகை" படத்திற்குத் தனித் திரி துவங்கி, வெற்றி நடை போட்டு வருகிறீர்கள்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன், "பொம்மை" இதழில், மாதா மாதம் ரசிகர்களின் கேள்விகளுக்கு, நடிகர் திலகத்தின் பதில்கள் இடம் பெற்ற போது, தங்களுடைய படங்களில், உங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற முதல் படம் என்ன என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, பளிச்சென்று "வசந்த மாளிகை" என்று பதில் அளித்தார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
'காத்தவராயன்' என்ற காந்தப் புயல்.
முதன் முறையாக இணையத்தில் 'காத்தவராயன்' ஸ்டில்களுடன்
1.யானையின் மேல் அமர்ந்து "ஜாதியில்லை... மத பேதமில்லையே" என்று கம்பீர சிங்கமாய் கட்டிளங் காளையாக அறிமுகமாகி காட்டுலா வருவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k18.jpg
2. மதயானை போன்ற மல்யுத்த வீரருடன் அனுபவம் தோய்ந்த மல்யுத்த வீரனாக சரிக்கு சரியாக டூப்பே இல்லாமல் கட்டுமஸ்தான உடலுடன் மோதுவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k16.jpg
3. தன்னைப் பெற்றவள் யார் என்ற உண்மையை கொல்லிமலை சகோதரிகளிடம் அறிந்து ஓட்டமும் நடையுமாக நதியை தாண்டி 'அம்மா' என்று அன்போடு அழைத்துக் கொண்டே தாயின் பாதங்களைப் பணிவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k15.jpg
4. உலக அனுபவம் பெற தாயிடம் அனுமதி பெற்று கோயில்களையும், புண்ணியத் தலங்களையும் கண்டு ரசித்து மகிழ்வது
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/22.jpg
5. மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மலையாள மந்திரவாதியிடம் போட்டியிட்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று நையாண்டியுடன் கரகம் எடுத்து தலை வெட்டி நளின அழகுடன் ஆடுவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k10.jpg
6. மானுக்கு காட்டில் விரித்த வலையில் மங்கைமான் மாட்டியதும் ஏதும் சொல்லத் தோன்றாமல் வெட்கம் தாக்க வெகுளியாய் காதல் பார்வை வீசி தான் விரித்த வலையில் வந்து விழுந்த மாலா (ஆரிய) வலையில் மாட்டிக்கொண்டு இன்ப வேதனையுறுவது.
http://i1087.photobucket.com/albums/...-DVD5D-MP4.jpg
7. தாய் காதலை மறந்தே தீர வேண்டும் எனக் கட்டளையிட்டவுடன் காதலை மறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் இன்னலடைவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k13.jpg
8. தாடி தரித்த தாத்தா வேடம் பூண்டு துந்தனாவை சுண்டியபடியே ஆரியமாலா...ஆரியமாலா என ஜெபம் செய்து விடாக் கண்டனாகத் துரத்துவது.
அரண்மனையில் காவலர்களிடம் பிடிபட்டு சாக்கு மூட்டையில் அடைபட்டு கண்டவரும் நடுங்கும் குடுகுடுப்பைக்காரனாக கொட்டமடிப்பது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k8.jpg
9. சிறையில் இருந்தபடியே அரண்மனையின் யானையை உசுப்பிவிட "பாஹிமா...உத்திஷ்டா"...என குரலை உயர்த்தி அந்த யானையைக் கொண்டே தப்பிப்பது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k6.jpg
10. காதலி தன்னை நினைத்து காதல் நோயால் வாடிக்கொண்டிருக்கையில் தாய் தனக்களித்த உருமாறும் வரத்தின் மூலம் பச்சைக்கிளியாய் அவள் கையில் தவழ்ந்து சட்டென அழகு மன்மதனாய் மாறி 'எனதாசை வனமோகினி' என ஏற்புடன் பாடல் தொடங்குவது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
11. ஆரியமாலாவை காதலித்தால் ஏற்படக்கூடிய விபரீதமான விளைவுகளை தாய் எடுத்தியம்ப காதலை மறக்க என்னாலாகாது என்று "என் காதலுக்கு வேலி போடாதீர்கள்... அன்பிற்கு அணை போடாதீர்கள்" என கண்ணீர் வடித்து கதறுவது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/21.jpg
12. ஆரியமாலாவை சிறையெடுக்க வளையல்காரனாய் வேடம்பூண்டு தோழிப் பெண்களிடம்"மானாமதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே" என குத்தாட்டம் போட்டு கும்மாங்குத்து ஆடுவது.
http://i1087.photobucket.com/albums/...%20-2/k3-1.jpg
13. மன்னனிடம் மாட்டி சங்கிலியால் கட்டப்பட்டு சங்கடங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மன்னனின் கத்தி மகள் மேல் அறியாமல் பட்டு விட அருமைக்காதலி ஆரியமாலை (அப்படித்தான் அழகாக உச்சரிப்பார்) மடிந்துவிட்டாள் என்றெண்ணி பொங்கு கடலாய் பொங்கி எழுந்து வெறிகொண்ட வேங்கையாய் சங்கிலி அறுத்து சண்டமாருதமாய் நாட்டையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்குவது.
http://i1087.photobucket.com/albums/...%20-2/k2-1.jpg
14. பின் மறுபடி தாய் சொல்லுக்கடங்கி மன்னனால் கழுமரம் ஏற்றப்பட்டு தன்னைக் காப்பாற்றக் கெஞ்சும் தாயின் சொல்லை மதிக்காத மன்னனை பழிதீர்க்க தாயின் ஆணைக்கேற்ப ஆக்ரோஷத்துடன் தன்னை சங்கிலியால் பிணைத்திருக்கும் அந்த பிரம்மாணடமான சாமி சிலையை தன பலத்தால் விழவைத்து நொறுக்கி அந்த இடத்தையே போர்க்களம் போல ஆக்கி ஆத்திரத்தை தணித்துக் கொள்வது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k1.jpg
என்று காத்தவராயன் காவியத்தை காத்து ரட்சிக்கிறார் கலைக் கடவுள். வாளிப்பான உடல்வாகினாலும், மதிவதன முகத்தினாலும், சிங்க முழக்கத்தாலும், தங்கத் தமிழ் உச்சரிப்பினாலும் காலம் உள்ளவரை காத்தவராயன் நம்மைக் கட்டி ஆள்வார்.
அன்புடன்,
வாசுதேவன்.
Kathavarayanai darisikka seydha thiriyin nayagarukku nandri