water falls ல் கால்களை நினைக்கும் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே நடக்கும் ராஜசேகர் அவர்களின் காலில் அடிபட்டு விடுகிறது , அதை சரி படுத்த பக்கத்தில் இருக்கும் சிங் சிங் வீட்டுக்கு வழி சொல்லுகிறார் அந்த பெண் , ராஜசேகர் அங்கே சென்ற உடன் தான் தெரிகிறது சிங் சிங் என்பவர் தமிழர் என்றும் அவர் முழு பெயர் சிங்கபட்டி சிங்காரம் என்றும் , waterfalls ல் சந்தித்த பெண் தான் சிங் சிங்கின் மகள் நீலா என்றும் தெரிய வர , ராஜசேகர் அவர்களுக்கு நன்றாக வைத்தியம் நடக்கிறது , அப்புறம் நன்றாக சாப்பாடு சமைத்து தர பட அவர் வீட்டின் ஒரு அங்கத்தினர் ஆக அங்கே தங்குகிறார் . நீலா , ராஜசேகர் இருவரும் காதலிக்கிறார்கள்
கட்
ராஜசேகர் மீண்டும் நீலாவை தேடுகிறார் ,பக்கத்துக்கு எஸ்டேட் ல் விசாரிக்கும் பொது , நீலா தன் தந்தை இறந்த உடன் இங்கே வேலை செய்த விவரமும் ,சிங் சிங்க்கு மூலிகை பறித்து தரும் வில்சன் தான் அவர்களுக்கு அடிக்கலாம் கொடுத்த விவரமும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்த விவரமும் , பித்து பிடித்த பெண்ணாக நீலா இருக்கும் விவரமும் தெரிய வர அங்கே செல்லும் ராஜசேகர்க்கு கிடைக்கும் செய்தி நீலா இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது என்பதும் , ஷாப்பிங் சென்ற ராஜி (நீலாவின் மகள் ) மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என்பதும் , ஆனால் மாச மாசம் பணம் மட்டும் வந்து விடுகிறது என்று செய்தி தான் (வில்சன் மகன் சொல்லும் விபரம் ). மேலும் நீலாவின் பெட்டியை கொடுக்கிறார் வில்சனின் மகன் , அதில் ஒரு வெள்ளை மாலை(சங்கு போன்ற டிசைன் ல் ) இருக்கிறது .
கட்