http://i1300.photobucket.com/albums/...psa3sxrigp.jpg
Printable View
இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே
தங்களுடைய பதில் பதிவு படித்தேன். மகிழ்ச்சி.
முதற்க்கண் வாழ்த்துக்கு நன்றி சொல்லாதது மனபூர்வம் அல்ல. அதற்க்கு பிறகு பல பதிவுகள் பதிவாகியதால் சரிவர நான் கவனிக்கவில்லை. என்றாலும் தவறு தவறுதான். மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தக்க சமயத்தில் நினைவு படுத்திய தங்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.
இரெண்டாவது - தர்மம் எங்கே வசூல் மற்றும் பெரிய இடத்து பெண் வசூல் பற்றிய திரு செல்வகுமார் அவர்களுடைய இரெண்டாவது பதிவு பற்றியது மற்றும் தாங்கள் எழுதிய அதனைப்பற்றிய பத்தியை பற்றியது.
முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
சென்ட்ரல் திரையரங்கில் போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சியில் பதவியில் இருக்கும் நண்பரும் போஸ்டர் வசனம் எழுதிய ரசிகரும் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் வாசகம் எழுதியது முற்றிலும் தவறு. அதுவும் உண்மைக்கு புறம்பான கேவலமான காழ்புணர்ச்சியில் பொய் புனைந்து போஸ்டர் ஒட்டியது அதைவிட வருந்தத்தக்க ஒரு செயல். அவர்கள் கூறியது பொய் என்பதை ஆதாரபூர்வமாக திரை அரங்கின் உள்ளும் புறமும் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்த பதில் அது.
அந்த போஸ்டர் எதேச்சையாக உங்கள் திரியில் பதிவிட்டது என்று சொன்னால் ஏற்புடையதாக எப்படி இருக்கும் ? சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருந்தால் அந்த இரண்டு போஸ்டர் படத்தை பதிவு செய்யாமல் மற்றவைகளை பதிவு செய்திருக்கலாம்.!
என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.
வசூலை ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் நான் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் தாயை காத்த தனயன் திரைபடவசூலுடன் தர்மம் எங்கே மற்றும் சின்னத்தம்பி வசூலை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம். காரணம், தாயை காத்த தனயனை விட ( ரூபாயை இங்கு நான் இரு திரியின் மாண்பு கருதி குறிப்பிடவில்லை என்றாலும் ) கணிசமான ஒரு தொகை "தர்மம் எங்கே" மற்றும் "சின்னத்தம்பி" திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதை திரு செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதை போல திரு பாலமுருகன் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
நான் எழுதிய பதில் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்டது, அதை புனைந்த, ஒட்டிய, ஊக்கப்படுத்தியவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. அனால் அவசரப்பட்டு திரு செல்வகுமார் அவர்கள், தவறான தகவல் சொல்லவேண்டும் என்பதற்காகவே 200 டிக்கெட் வாங்கி இலவசமாக விநியோகம் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் அவருக்கு தெரிவித்தது என்று தொலைக்காட்சி செய்திகளில் கூறுவதை போல கூறி உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்தார். உணர்ச்சி வசப்படுதல் அனைவருக்கும் உள்ள ஒரு பலஹீனம் தான் இல்லை என்பதற்கில்லை.
அவர் எப்படி பக்தர் என்கிறாரோ அதே போலதானே நாங்களும். வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் அந்த போஸ்டருக்கு பதில் பதிவு செய்தது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்பதே என் நிலைப்பாடு.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி
rks
தாயை காத்த தனயன் எவ்வளவு வருட இடைவெளி ( இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இருக்கலாம் ) நீங்கள் குறிப்பிடும் தர்மம் எங்கே எனக்கு தெரிந்து இப்பொழுது தான் மறு வெளியிட்டில் வருகிறது சின்ன தம்பி எத்தனை வருட இடைவெளி விட்டு திரைக்கு வருகிறது என்று திரு rks விலக்கினால் நன்றாக இருக்கும் . மேலும் தாங்கள் பெரிய இடத்து பெண் வசூலை பற்றி கூறவில்லை இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் பெரிய இடத்து பெண் வசூல் தர்மம் எங்கே படத்தின் வசூலை மிஞ்சியதா ? நண்பர் விளக்கவும் நாங்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் தீர விசாரித்து விட்டோம் உங்கள் பதிலை எதிர் நோக்கும் அன்பு நண்பன்
அன்பு நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களே
சர்ச்சைக்காக நான் பதிவு செய்யவில்லை. திரு கலைவேந்தன் அவர்களுக்கு அவர் பதிவிற்கு விளக்கம் தான் கூறினேன்.
அன்புடன்
rks
50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!
எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.
இனிய பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.
வசூல் மழை இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.
பொன்விழா தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.
Read more at: http://tamil.filmibeat.com/news/gold...rticle-fbshare