http://i61.tinypic.com/2w3rx2o.jpg
Printable View
Makkal Thilagam MGR movies title -postings really a great job. Thanks Muthaiyan sir
மக்கள் திலகம் நடித்த காவியங்களின்
தலைப்புக்களை தொகுத்து மிக அழகாக
வெளியிட்ட திரு முத்தையன்
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
திரு முத்தையன் - இரண்டு திலகங்கள் திரியிலும் பங்கு கொண்டு ஒரு பாசப்பிணைப்பை , 1000 வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு சில புகைப்படங்கள் மூலம் உருவாக்கிக்கொண்டு வருகிறீர்கள் - உங்கள் உழைப்பையும் , ஈடுபாட்டையும் பற்றி எழுத வார்த்தைகள் மிகவும் குறைவாகவே உள்ளன . உங்கள் உடல் நலத்திலும் கவனம் இருக்கட்டும் .
அன்புடன்
ரவி
திரு. குமார் சார்,
ஜி.என். வேலுமணியின் தயாரிப்பில் தலைவர் நடித்த அனைத்து வெற்றிப் படங்களில் இருந்தும் நீங்கள் பதிவிட்ட பாடல்கள் அருமை. என் அண்ணன் படத்தில் ஜஸ்டினுடன் தலைவர் மோதும் அற்புதமான சண்டைக் காட்சியை பதிவிட்டதற்கும் நன்றி.
திரு. லோகநாதன் சார்,
கோவையில் வேகமாக கார் ஓட்டி வந்தவர்களை தலைவர் அன்போடு கண்டித்து அவர்களை பற்றி விசாரித்திருக்கிறார். அதில் ஒருவர் தயாரிப்பாளர் (பின்னாளில்) மாதம்பட்டி சிவக்குமார் என்பதை அறிந்ததும், தலைவர் ‘நீ பட்டயக்காரர் துரைசாமியின் வழியா?’ என்று கேட்கிறார் என்றால், தமிழகம் முழுவதும் தனது தொண்டர்களை எந்த அளவுக்கு நினைவில் வைத்திருக்கிறார் தலைவர். சூரியன் உதிக்க மறந்தாலும், பத்திரிகை பதிவுகளை பதிவிட மறக்காத உங்களுக்கு நன்றிகள்.
திரு. ரூப் குமார், திரு. முத்தையன்
தலைவர் படத்தின் காட்சிகளையும் டைட்டில்களையும் ஸ்டிரிப்பாக போட்டு அசத்திய உங்கள் தொகுப்புக்கும் உழைப்புக்கும் என் வணக்கங்கள். திரு.முத்தையன் கூறியிருப்பது போல நாம் எல்லாருமே ஒரே அலைவரிசையில் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி.
திரு.யுகேஷ் பாபு,
ஸ்டைல் சக்ரவர்த்தியின் அட்டகாச போஸை பதிவிட்டமைக்கு நன்றி.
திரு.ரவிச்சந்திரன்,
கோவை டிலைட்டில் விரைவில் நம்நாடு திரைப்படம் வெளியாகும் தகவலை பதிவிட்டமைக்கு நன்றி.
நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். பணிகள் கைகளை கட்டிப்போடுகின்றன. இருந்தாலும் அடுத்த பதிவு விரைவில். நன்றி
திரு.முத்தையன் மீது அக்கறையுடன் கூடிய அன்பைக் காட்டும் தங்களின் உயர்ந்த பண்புக்கு நன்றி திரு.ரவி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்