http://i59.tinypic.com/os66ae.jpg
Printable View
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! எம்.ஜி.ஆர். நடித்து வெளியான கடைசித் திரைப்படமிது என்கிற பெருமையும் இதற்கு உண்டு! சரித்திர காலப் பின்னணியில் கவித்துவ பலத்துடன் புலவனாக – கதையின் நாயகன் இடம்பெற இடம்பெற்ற இரண்டு காதல் பாடல்களும் உயிர்பெற்று நம் கண்முன்னே உலவுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை!
அமுதத் தமிழில் எழுதும் கவிதை படைத்த புலவர் புலமைப்பித்தன் வரைந்தளித்த மற்றுமொரு தென்றல் காற்று இந்தப் பாடலில் கூந்தலில் ஆடுகின்ற காட்சி.. மெல்லிசை மன்னரால் வடித்தெடுக்கப்பட்ட இசை ஆபரணமிது என்று சொன்னாலும் அது மிகையாகாது!
தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம் ?
மன்னவன்உங்கள்பொன்னுடலன்றோஇந்திரலோகம்? அந்தி
மாலையில்இந்தமாறனின்கணையில்ஏனிந்தவேகம்ஏனிந்தவே கம்?
பாவையுடல்பாற்கடலில்பள்ளிகொள்ளநான்வரவோ?
பனிசிந்தும்கனிகொஞ்சும்பூவிதழில்தேன்பெறவோ?
மாலைவரும்நேரமெல்லாம்மன்னன்வரப்பார்த்திருந்தேன ்
வழியெங்கும்விழிவைத்துப்பார்த்தவிழிபூத்திருந்த ேன்
ஆலிலையின்ஓரத்திலேமேகலையின்நாதத்திலே
இரவென்றும்பகலென்றும்காதல்மனம்பார்ப்பதுண்டோ?
கள்ளவிழிமோகத்திலேதுள்ளிவந்தவேகத்திலே
இதழ்சிந்தும்கவிவண்ணம்காலைவரைகேட்பதுண்டோ?
காலைவரைகேட்பதுண்டோ?
தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம்
கற்பகத்துச்சோலையிலேபூத்தமலர்நீயல்லவோ?
விழியென்னும்கருவண்டுபாடவந்தபாட்டென்னவோ?
காவியத்துநாயகினின்கட்டழகின்மார்பினிலே
சுகமென்னசுகமென்றுமோகனப்பண்பாடியதோ?
மோகனப்பண்பாடியதோ?
தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்ன நாணம்
புலவர்தம் கற்பனையின் உச்சங்கள் கைதட்டி அழைக்க காதலின் ஊர்வலம் நடந்தேறுகிறது! அன்பின் அரங்கேற்றம் என்பதால் அணைப்பு அவசியமாகிறது! கண்கள் நடத்திடும் தேர்வு என்பதால் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன! கவிதைப் பாற்குடம் கரைபுரண்டு காதல் சாம்ராஜ்ஜியத்தில் வழிந்தோடுகிறது.
மெல்லிய தென்றல் தாலாட்டும் முன்னிரவில் அன்பே உன் மடியில் தலைசாய்த்து இப்பாடலைக் கேட்டால் சுகம்! சுகம்! சுகமே!!
courtesy -
கவிஞர் காவிரிமைந்தன். vallamai
FRANCE
https://youtu.be/iMFPb7JUYyk